Tuesday, June 22, 2010

என் இதயத்திலிருந்து... வடக்கு கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் தோழர் வரதராஜப்பெருமாள் அவர்கள்,



தோழர் பத்மநாபாவை நீங்கள் நன்கு அறிவீர்களாயினும், அவரோடு கடந்த பதினெட்டு ஆண்டுகளாக மிவும் நெருக்கமாகப் பழகியவன் என்ற வகையிலும், அவரின் தலைமையின் கீழ் கடந்த ஒரு ஏழு ஆண்டுகளுக்கு மேல் அவரின் மிக நெருங்கிய ஒரு தோழனாகப் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தவன் என்ற முறையிலும் அவரைப் பற்றிய - அவரிடமிருந்து நாம் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டிய விடயங்களை நான் உங்களுக்குக் கூற வேண்டியது எனது வரலாற்றுக் கடமை - பொறுப்பு என நான் நினைக்கிறேன்.

தோழர் எஸ்.ஜி.யின் பூதவுடல் இன்று எம்மோடு இல்லையெனினும், அவர் எம்மோடு வாழ்கிறார் எப்பொழுதும் நிரந்தரகமாக வாழுவார் அவரது எண்ணங்கள், கருத்துக்கள், சிந்தனைகள் எம்மோடு வாழ்கின்றன.

அவர் தன்னோடு மிகச் சில நாட்கள் பழகியவர்கள் மீது கூட தன் நினைவுகளை மிக ஆழமாகப் பதிக்கும் ஆளுமை மிக்கவர். அவர் மற்றவர்களோடு பழகும் தன்மையானது அவருக்கேயுரிய ஒரு தனிப்பாணி - தனித்திறமை. ஒரு சிறந்த தோழனுக்கும், ஒரு சிறந்த தலைவனுக்கும், ஒரு சிறந்த மனிதனுக்கும் இருக்க வேண்டிய மிகச்சிறந்த குணாம்சங்கள் - பண்புகள் அவரிடம் மிக நிறைவாகவே குடிகொண்டிருந்தன.

அவரது பெயர் - தோழர்

பத்மநாபா என்பது அவரது சொந்தப் பெயராயினும் அவரது குடும்பத்தவர்களும் நெருங்கிய உறவினர்களும் அவரை பத்தன் என்றே அழைப்பார்கள். நண்பர்களும் மற்றவர்களும் அவரை நாபா என்று அழைத்தார்கள். 1977க்குப் பின்னாலேயே அவரது அரசியல் தலைமறைவு வாழ்க்கையில் பரவலாக அவரது பெயர் தோழர் ரஞ்சன் என்றே வழங்கிற்று. 1982ஆம் ஆண்டும் 1983ஆம் ஆண்டின் முற்பகுதியிலும் அவர் கொழும்பிலுள்ள சிங்கள முற்போக்கு சக்திகள் மத்தியிலும் மலையக இளைஞர்கள் மத்தியிலும் புரட்சிப் பணிகளில் ஈடுபட்டபோது தமது பெயரை சேரன் எனப் பயன்படுத்தி வந்தார். ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தோழர்கள் மத்தியில் அவரது பெயர் நீண்ட காலமாக தோழர் எஸ்.ஜி என்றே வழங்கப்பட்டு வந்துள்ளது.

ஸ்தாபனத்தில் அவர் கொண்டிருந்த செயலாளர் நாயகம் (Secretary General) பதவிப் பெயரின் ஆங்கில ஆக்கத்தின் முதலெழுத்துக்களே எஸ்.ஜி. என்ற பெயராகும். இது அவரின் பதவிப் பெயரைக் குறிப்பதாக இருந்த போதிலும் நாளடைவில் தோழர்கள் மத்தியில் எல்லோராலும் அழைக்கப்படும் பெயராகியது. ஸ்தாபனத் தோழர்கள் மட்டுமல்லாது ஸ்தாபனத்தோடு மிக நெருக்கமாக நட்புக் கொண்டு உழைத்தவர்களும், பழகியவர்களும் கூட அவரைத் தோழர் எஸ்.ஜி. என்றே அழைத்தனர்.

இதற்கு அடிப்படைக் காரணம் ஸ்தாபனத்தில் தனக்கு வழங்கப்பட்ட பதவியை அவர் ஒரு அதிகாரமாகக் கருதாமல் அதனைத் தமது பொறுப்பாகக் கருதி அதற்குரிய வகையில் பொறுப்புணர்ச்சியோடு செயற்பட்டது மட்டுமல்லாமல், தோழர்களினதும் ஸ்தாபன நண்பர்களினதும் அன்பையும் பாசத்தையும் சொத்தாக அவர் சேர்த்ததனாலேயே தோழர் எஸ்.ஜி. என்னும் அன்புப் பெயரும் அவருக்குரியதாயிற்று.

ஸ்தாபனத்தின் உறுப்பினர்கள் மத்தியில் வயதின் அடிப்படையிலேயோ, பதவியின் அடிப்படையிலோ அண்ணன், தம்பி என்று அழைக்கும் உறவு முறையையோ அல்லது தலைவர் தொண்டர் என்ற உறவு முறையையோ ஸ்தாபனத்தில் அவர் வளர்க்கவில்லை. மாறாக தோளுக்குத் தோள்கொடுத்து நிற்கும், உயிருக்கு உயிர்கொடுத்து நிற்கும் தோழமை உறவு முறையையே ஸ்தாபனத்தில் வளர்த்தொடுத்தார். தோழமைப் பாசத்தின் அடிப்படையில் ஈழ மக்கள் அனைவரையும் பிணைத்து புரட்சிகர குடும்பமாக்கிய பெருமை தோழர் எஸ்.ஜி. அவர்களையே சாரும்.

இலங்கைத் தீவில் வாழுகின்ற தமிழ்பேசும் மக்களின் வரலாற்றில் தோழர் என்ற சொல்லை மக்கள் மயப்படுத்திய பெருமை ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியையே சாரும்

தோழர் எஸ்.ஜி. அவர்கள் தோழர் என்ற சொல்லுக்கும் தோழமை என்ற உறவுக்கும் சரியான அர்த்தபுஷ்டியை தனது வாழும் முறையாலும் நடைமுறையாலும் வழங்கினார். தோழர் என்ற சொல்லை வரட்டுத்தனமாக உருப்போடும் சூத்திரங்களின் ஒரு பகுதியாகவோ அல்லாமல் தோழர் என்பதை ஸ்தாபன உறுப்பினர்களுக்கிடையேயான உளப்பூர்வமான உறவு முறையாக அதற்குரிய வகையில் தானே முன்னுதாரணமாக நடந்து நடைமுறைப்படுத்திக் காட்டினார்.


ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் உறுப்பினர்களை தோழர்; என்ற பொதுப் பெயர்ச் சொல்லால் சுட்டி அழைப்பது ஈழ மக்கள் மத்தியில் ஒரு வழக்கமாயிற்று. அதேபோல் ஈழ மக்கள் புரச்சிகர விடுதலை முன்னணியின் தோழர்கள் மத்தியில் தோழர் என்றால் அது தோழர் எஸ்.ஜி.யைக் குறிக்கும் சொல்லாக வழங்கி வந்துள்ளது.

உயர்ந்த மனிதர்

தோழர் நாபாவின் தனிமனித குணாம்சங்கள் மிகச் சிறப்பு வாய்ந்தவை ஆகும். உயரமான மனிதனான தோழர் அவர்கள் உடல் ரீதியிலும் உள்ளத்தாலும் உணர்வாலும் குணத்தாலும் பண்பாலும் உயர்ந்த மனிதராக வாழ்ந்தார். ஒரு மனிதனின் சிறந்த வாழ்வுக்கு உதாரணபுருஷராக அவர் வாழ்ந்து காட்டியுள்ளார். ஆஜானுபாகுவான அவரது தோற்றம் அவரது உயர்ந்த மனித அம்சங்களையே பிரதிபலித்தது.

நெஞ்சில் உரமும் நேர்மைத் திறனும் உள்ளத்தில் உண்மையும் வாக்கில் ஒளியும் அவரிடம் நிறைந்து காணப்பட்டன. அழுக்காறு, வெகுளி, இன்னாச்சொல் நான்கும் அறவேயற்ற அறவாழ்க்கையை அவர் இயல்பாகவே கொண்டிருந்தார். நிதானம், பொறுமை. கடுமையான உழைப்பு. தன்னலமின்மை. கடும்சொல் பேசாமை. மனிதாபிமானம் என்பன இயற்கையிவேயே அவரோடு கூடிப்பிறந்திருந்தன.

அவர் கொள்கைப் பிடிவாதமுடைய ஒரு சமதர்மப் புரட்சிவாதி. மார்க்சிசம், வர்க்கம், புரட்சி, போராட்டம் என்ற வார்த்தைப் பிரயோகங்களை உருப்போடும் வரட்டுத்தனமோ அல்லது தனது சுயநல அரசியல் நோக்கங்களுக்காக புரட்சிக் கோட்பாட்டைப் பயன்படுத்தும் பாசாங்குத்தனமோ அவரது புரட்சி வாழ்க்கையில் எள்ளளவும் இருந்ததில்லை.

அவர் சமூகப் புரட்சிக்காக உணர்வுபூர்வமாக உழைத்தார்: சமூக புரட்சியாளர்களை உள்ளத்தால் நேசித்தார். நேர்மையான சமூகப் புரட்சியாளர்கள் மீது - அவர்கள் தன்னை விமர்சிப்பவர்களாயினும் சரி எதிர்ப்பவர்களாயினும் சரி அவர்கள்மீது உளமார அன்பு செலுத்தினார். அவ்வாறானவர்களோடு பழகுவதிலும் நட்புக்கொள்வதிலும் பெருமிதமும் மகிழ்சியும் கொண்டார்.

தோழர் நாபாவிடம் கர்வம், தலைக்கனம், அதிகார வெறி என்பனவற்றை இம்மியளவேனும் யாரும் கண்டிருக்க முடியாது. பல்லாயிரக்கணக்கான இளம் தோழர்கள் அவர் சுட்டு விரலுக்குக் கட்டுப்பட்டு எதையும் செய்யத் தயாரான நிலையில் இருந்த போதிலும் , அவர் எந்தக் கட்டத்திலும் அதிகார மமதை - பதவி வெறி பிடித்து செயற்பட்டதில்லை - தலைக்கனம் பிடித்து நடந்ததில்லை. ஸ்தாபனத்தின் ஜனநாயகப்பூர்வமான பொது முடிவுகளுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் ஒரு கட்டுப்பாடான உறுப்பினனுக்கு முன்னுதாரணமாக அவரே திகழ்ந்தார்.

எந்தத் தோழருடனும் அன்பாகப் பழகுவார். அவர்களின் குற்றங்கள் குறைகளைத் தானே நேரில் கேட்டறிந்து கொள்வார். ஸ்தாபனத்தின் உறுப்பினர்களோடு வரையறை வைத்துப் பழகுவது தனது தலைமைக்கு அவசியம் என்று அவர் எந்தக் கட்டத்திலும் நடந்து கொண்டதுமில்லை: அவ்வாறான கருத்தைக் கொண்டிருக்கவுமில்லை. எந்தத் தோழரும் அவரைச் சந்திக்கலாம் பேசலாம் என்ற நிலையையே அவர் கடைப்பிடித்து வந்தார்.

அதேபோல் ஸ்தாபனத்தின் நண்பர்களாயினும் சரி, மாற்று அணிகளின் எந்த மட்ட உறுப்பினர்களாயினும் சரி, பத்திரிகையாளர்களாயினும் சரி, வேறு வெளியார்களாயினும் சரி அவரைச் சந்திப்பதில் எந்தக் கடினத்தையும் அவர் வைத்திருக்கவில்லை. பத்pரிகையாளர்கள் அவரை எந்த நேரமும் சந்திக்கக் கூடிய ஒருவர் என்றே பல தடவைகள் குறிப்பிட்டுள்ளனர்.

தோழர் நாபா அவர்கள் எப்போதும் அமைதியாகப் பேசும் சுபாவம் கொண்டவர். கத்திப் பேசித்தான் தனது கருத்தை மற்றவர்கள் மத்தியில் பதியவைக்க முடியம் என்ற கருத்து அவரது பேச்சுநடைமுறையில் இருக்கவில்லை. அவர் யாருடன் பேசிக் கொண்டிருக்கிறாரோ அந்த நபருக்கு மட்டுமே கேட்கக்கூடிய வகையிலேயே பேசுவார். மற்றவர்களோடு நேரடியாகப் பேசும்போது மட்டுமல்ல தொலைபேசியிலும் பேசும் திறன் அவருக்கிருந்தது. சலசலப்பற்ற அவரது செயற்திறன் போலவே அவரது சத்தமற்ற பேச்சுத்திறனும் அமைந்திருந்தது.

அவரது பள்ளிக்கால அரசியல்

1951 ஆண்டு காங்கேசன்துறையில் ஒரு நடுத்தரவர்க்கக் குடும்பத்தில் பிறந்தார். அவரது குடும்பத்தில் அவருக்கு ஒரு மூத்த சகோதரியும் ஒரு இளைய சகோதரியும் உள்ளனர். வீட்டுக்கு ஒரே ஒரு ஆண் பிள்ளையென்பதால் பெற்றோரும் சகோதரிகளும் அவர் மீது மிகுந்த அன்பைப் பொழிந்தனர். யாழ்ப்பாணத்தின் எல்லா நடுத்தரவர்க்க குடும்பங்களின் பெற்றோர்களைப் போலவே அவரது பெற்றோரும் அவர் படித்து முன்னேற வேண்டும் என்றே ஆசை கொண்டனர்.

அவரின் பள்ளிக்கூடக் கல்வியானது காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரி, தெல்லிப்பளை யூனியன் கல்லூரி, யாழ் - மத்திய கல்லூரி ஆகியவற்றில் கழிந்தன. பின்னர் இலங்கை அரசின் கல்வி அமைச்சால் நடத்தப்படும் கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சைக்காகவும், லண்டன் நிறுவனம் ஒன்றினால் நடத்தப்படும் கணக்குப் பதிவியல் பரீட்சைக்காகவும் யாழ்ப்பாண நகரில் இருந்த தனியார் கல்வி நிறுவனங்களிலும் கல்வி கற்றார்.

நெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே தனது சக மாணவர்களுடன் இணைந்து அரசியலில் ஆர்வம் காட்டத் தொடங்கினார். ஆனாலும் அந்தக் காலக் கட்டத்தில் அரசியல் ரீதியாக எந்தவொரு மாணவர் அமைப்பும் மாணவர்கள் மத்தியில் ஓர் அரசியல் தாக்கத்தையோ - விழிப்புணர்வையோ ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு செயற்படவில்லை. அவரது அரசியல் வாழ்வில் குறிப்பிட்டத்தக்க நேரடி அரசியல் ஈடுபாடு 1970ம் ஆண்டே ஏற்பட்டது.

1970ம் ஆண்டு இலங்கை அரசாங்கம் பல்கலைக் கழக அனுமதியில் இனவாரியான தரப்படுத்தல் இட ஒதுக்கீட்டு முறையை அறிமுகப்படுத்தியது. இது பரவலாக தமிழ் மாணவர்களின் மத்தியில் ஓர் அரசியல் எதிர்ப்புணர்ச்சியைத் தூண்டியது.

மாணவனாக இருந்த தோழர் நாபாவும் இந்தக் கட்டத்திலேயே தீவிர அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கினார். தரப்படுத்தலுக்கெதிரான அரசியல் ஆர்ப்பாட்டங்களில் அக்கறையுடன் ஈடுபட்டார். பொதுவாக மாணவர்கள் ஒழுங்குபடுத்தப் பட்ட ஸ்தாபனமாக இல்லாத நிலையில் எவ்வாறு வன்முறை எதிர்ப்பு நடவடிக்கைககும் கலந்த வகையில் தமது எதிர்ப்புணர்வைத் தெரிவிக்கும் அரசியல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்களோ அவ்வாறே தோழர் நாபாவினதும் அன்றைய மாணவர் அரசியல் ஈடுபாடும் இருந்தது.

தரப்படுத்தல் அறிமுகப்படுத்தப்பட்டதை எதிர்க்கும் போராட்டத்தை நடத்தும் இலக்குடன், மாணவர்கள் மற்றும் படித்த இளைஞர்களால் உருவாக்கப்பட்ட தமிழ் மாணவர் பேரவையானது, அப்போராட்டத்திற்காக தூண்டுவதிலும் மாணவர்களை எழுச்சி கொள்ளச் செய்வதிலும், காத்திரமான பாத்திரத்தை ஆற்றி, அக்காலத் தமிழ் மாணவர்கள் பெரும்பான்மையினரின் அரசியல் உணர்வின் பிரதிநிதியாக தமிழ் மாணவர் பேரவை விளங்கியது.

தமிழ் மாணவர் பேரவையானது பரந்துபட்ட தமிழ் மாணவர்களை போராட்ட அரங்குக்கு திரண்டெழச் செய்தது. இலங்கைத் தமிழர்களில் பெரும்பான்னையானவர்களின் விருப்பத்தை தமிழ் மாணவர் பேரவை பிரதிபலித்தது. ஆயினும் அது பரந்துபட்ட மாணவர்களையோ இளைஞர்களையோ ஸ்தாபன ரீதியாக அணிதிரட்டும் வேலைத் திட்டத்தைக் கொண்டிருக்கவில்லை. இதனால் தோழர் நாபா போன்ற மாணவர்களின் அரசியல் உணர்வுகளும் ஆர்வங்களும் ஒருங்கிணைக்கப்படாத தனி அலகுகளாகவே செயற்பட்டன.

1971ம் ஆண்டின் ஆரம்பத்திலேயே தமிழ் மாணவர் பேரவையானது ஒரு சில இளைஞர்கள் மாணவர்களுடன் தன்னைத்தானே குறுக்கிக் கொண்ட வன்முறை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் தலைமறைவு இயக்கமாகியது. இது காலப் போக்கிலான ஒரு வளர்ச்சிக்குக் கால்கோளிட்டதெனினும் அந்தகால கட்டத்தின் உணர்வாற்றல்களுக்கு முறைப்படுத்தப்பட்ட திரட்சி வடிவம் கொடுக்கவில்லை.
1971ம் ஆண்டில் ஒருபுறம் தமிழ் மாணவர் பேரவை தன்னைத்தானே தலைமறைவு இயக்கமாக்கிக் கொண்டது. மறுபுறம் பராளுமன்ற தமிழ் அரசியல் கட்சிகள் மக்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு தேவைகளுக்கு அரசியல் இயக்க வடிவம் அளிக்கவில்லை.

அத்துடன் 1971 ஏப்ரலில் ஜே.வி.பி. நடத்திய கிளர்ச்சியின் காரணமாக, ஏறத்தாழ அவ்வாண்டு முழுவதும் நாடு பூராவும் சிறிலங்கா இரவு இராணுவ அடக்குமுறை ஆட்சியையே நடத்திக் கொண்டிருந்தது. 1972ம் ஆண்டின் ஆரம்பத்திலேயே இலங்கையின் அரசியல் கட்சிகள் அனைத்தும் தமது அரசியல் பெருமூச்சுகளை மீண்டும் விடத்தொடங்கின.

1972லும் தோழர் நாபா தமது படிப்பைத் தொடர்ந்தவராயினும் அவரது பள்ளிக்கூட வாழ்க்கை முடிவுற்றது. பரீட்சையின் நோக்கமாக தனியார் கல்வி நிறுவனங்களின் போதனா வகுப்புகளில் கலந்து கொண்டார்.

தமிழர்களின் அரசியலில் புதிய அலைகள் தீவிரமுடன் வீசத் தொடங்கின. தோழர் நாபாவும் பள்ளிகூடச் சூழலிலிருந்து விடுபட்டதனால் அரசியலில் தீவிர ஈடுபாடு கொள்வதற்கு ஏற்றவகையில் அவரது தனிப்பட்ட சூழ்நிலைகளும் அமைந்தன.

இளமை அரசியல் வாழ்வு

1972ம் ஆண்டில் ஆரம்பத்திலேயே இலங்கை அரசின் குடியரசுப் பிரகடனத்துடன் அறிமுகப்படவிருந்த அரசியல் யாப்புப் பற்றிய விவாதமும் அது தொடர்பாக சிங்கள அரசியல் தலைவர்கள் நடந்து கொண்டவிதமும், தமிழர்களின் மத்தியில் அரசுக்கெதிரான ஒரு தீவிர அரசியல் அலையைத் தோற்றுவித்தன.

தமிழ் இளைஞர்களிடையே ஏற்கனவே பாராளுமன்ற தமிழ் அரசியல் தலைவர்களுக்குக் கட்டுப்படாத ஓர் தீவிர அரசியல் நடைமுறைப் போக்குகள் தலைதூக்கிவிட்டதன் காரணமாக பாராளுமன்ற அரசியலை அடிப்படையாகக் கொண்ட தமிழ் அரசியற் பிரமுகர்களும் சூழ்நிலைகளுக்கு ஏற்றார்போல் தம்மையும் சுதாகரித்துக் கொள்ள வேண்டியவர்களானார்கள். இதன் விளைவாக தமிழர் ஐக்கிய முன்னணி உருவாக்கப்பட்டது. இலங்கைக் குடியரசின் அரசியல் சட்டத்துக்கு எதிராக ஓர் அரசியல் இயக்கத்தை தோற்றுவித்தன.

தமிழர் ஐக்கிய முன்னணிப் பிரமுகர்களின் மேடைப்பேச்சுகளுக்கு செயல்வடிவம் கொடுப்பதே இக்காலகட்டத்தில் அவ்அரசியலில் ஈடுபாடு கொண்ட தமிழ் இளைஞர்களின் போராட்ட நடைமுறையாகியது. இளைஞர்களின் இந்த வகையான ஈடுபாட்டுக்கும், அவர்களின் ஆற்றல்களையும் செயல்முறைகளையும் நிறுவனரீதியாக ஒருங்கிணைத்து நெறிப்படுத்துவதற்கும் உரிய முறைப்படுத்தப்பட்ட அமைப்பு ரீதியான போராட்ட நடைமுறைகள் அன்று இருக்கவில்லை இளைஞர்கள் ஆங்காங்கே பிரமுகர்களின் மேமைப் பேச்சுகளுக்கு ஏற்ப, அப்பேச்சுகளால் உணர்சிசிவசப்பட்ட உந்துதல்களுக்கு உள்ளாகி, தத்தம் போக்குகளுக்கும் வாய்ப்புகளுக்கும் ஏற்ற வகையில் செயற்பட்டனர்.

1972ம் ஆண்டில் தோழர் நாபாவின் அரசியற் செயற்பாடு அந்த வகையாகவே அமைந்தன. காங்கேசன்துறையின் பகுதிகளிலும் யாழ்ப்பாண நகரின் பகுதிகளிலும் அவருக்கிருந்த அரசியல் நண்பர்களுடன் அவரும் பல்வேறு வகையான செயற்திட்டங்களிலும் ஈடுபட்டார்.

அந்த நாட்களில் தோழர் நாபாவினதும் அவரது நண்பர்களினதும் அரசியல் நடவடிக்கைகள் என்பது, ஏனைய தமிழ் இளைஞர்களைப் போலவே ஆங்காங்கே தத்தம் பாட்டுக்கு குழுக்கள் குழுக்களாக உதிரித் தன்மையுடைய செயற்பாடுகளை மேற்கொள்வதாகவே அமைந்தன.

தமிழர் ஐக்கிய முன்னணியின் ஹர்த்தால் போராட்டத்தை தாக்கமுடையதாக ஆக்கும் நோக்குடன் சுவர்களில் சுலோகங்கள் எழுதுதல், கறுப்புக்கொடிகள் ஏற்றல், அரசாங்க நிறுவனங்களில் கட்டிடங்களைச் சேதப்படுத்துதல், தேசியக் கொடிகளை எரித்தல், போக்குவரத்து சாதனங்களை சேதப்படுத்துதல், ரயில்தண்டவாளங்களைக் கழற்றி விடுதல், மின்சாரதடைகளை ஏற்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளிலேயே இளைஞர்கள் ஈடுபட்டனர்.

அக்காலகட்டத்தில் பரந்துபட்ட தமிழ் இளைஞர்கள் இவ்வாறான அரசியல் நடவடிக்கைகளிலேயே திருப்தி கண்டனர். தோழர் நாபாவும் இவ்வாறான அரசியல் நடவழக்கைகளில் தீவிரம் காட்டினார்.

பாராளுமன்ற அரசியல் பிரமுகர்களிடையே ஏற்பட்ட ஒற்றுமையானது தமிழர் ஐக்கிய முன்னணியாகத் தோற்றம் பெற்றபோது, மக்களிமையே குறிப்பாக இளைஞர்களிமையே புதிய தெம்பும் உத்வேகமும் ஏற்பட்டதாயினும், அது நீண்டகாலப் போராட்டத்திற்கு ஏற்ற வகையில் முறைப்படுத்தபட்ட அமைப்புரீதியான வடிவத்திற்கு மாற்றம் பெறவில்லை. நெருக்கமாக இணைந்துகொண்ட அரசியல் பிரமுகர்கள், பொதுவாக மக்களுடனோ ஸ்தாபன ரீதியாக அல்லாமல் மேடைப் பேச்சுக்களுடாகவும் பத்திரிகை அறிக்கைகளினூடாகவுமே தொடர்பு கொண்டனர்.

தமிழ் மாணவர் பேரவையானது வடக்கு கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பாகங்களிலும் குறிப்பிட்ட இளைஞர்களை இணைத்துக் கொண்டு ஸ்தாபன ரீதியாகச் செயற்பட முற்பட்டதாயினும், சமூக அரசியல் வளர்ச்சியை மீறிய அதன் அதிதீவிரப் போக்குகள் அதன் வளர்ச்சியை விரிவுபடவிடாமல் தடுத்துவிட்டன.

இவற்றின் விளைவாக தோழர் நாபா போன்ற இளைஞர்கள் தத்தம் உணர்வுகளுக்கான வடிகால்களாக, தமது சுயம்போக்கில் ஏதாவது செய்தல் என்பதையே பரவலாகக் கடைப்பிடித்தனர். இதனால் அவ்வாறான இளைஞர்களின் அரசியல் ஈடுபாடுகளுக்கு ஒரு தொடர்ச்சியான முறைப்படுத்தப்பட்ட வளர்ச்சிநிலை ஏற்படவில்லை.

தமிழர் ஐக்கிய முன்னணியானது இலங்கை அரசின் குடியரசு அரசியல் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது அதனை எதிர்க்கும் போராட்டத்தை ஒரு மக்கள் இயக்கமாக முன்னெடுத்ததாயினும் நாளடைவில் அம்முன்னணி போராட்டங்களை முன்னெடுக்கும் தன்மையானது, எதிரிக்கு ஒரு நெருக்கடி நிலையைத் தோற்றுவிக்கும் வளர்ச்சி நிலையைப் போராட்டத்தினூடாக வளர்த்தெடுப்பதற்கு மாறாக, மக்கள் மத்தியில் ஏற்பட்ட உணர்வலைகளைத் தக்கவைத்துக் கொள்வதையே நோக்கமாகக் கொண்டது.

இதனால் நாட்கள் கடந்து செல்ல அதன் போராட்ட முன்னெடுப்புகளின் வேகமும் பழப்படியாகத் தணிந்தன.

அதேவேளை தமிழ் மாணவர் பேரவையின் தீவிர நடவடிக்கைகளைத் தொடந்து, இலங்கை அரச படைகளின் தொடர்ந்து, இலங்கை அரச படைகளின் தேடுதல் வேட்டைகளும் கெடுபிடிகளும் அதிகரித்தன. இதனால் அதன் அளவும் செயற்பாடுகளும் படிப்படியாக குறுகத் தொடங்கின.

1972ம் ஆண்டின் இறுதிப் பகுதியில் தமிழர்களின் போராட்டத்தில் மிகவும் சோர்வான நிலைகாணப்பட்டது

இச்சந்தர்ப்பத்திலேயே தோழர் நாபாவும் அவரது அரசியல் நண்பர்களும், போராட்டத்தில் ஓர் உத்வேகத்தை உண்டுபண்ணும் நோக்குடன் செயற்பட ஆரம்பித்தனர். தமிழர் ஐக்கிய முன்னணியின் தலைவர்களை ஆர்வத்துடன் செயற்பட வைப்பதன் மூலமே தமது நோக்கத்துக்கு செயல்வடிவம் ஏற்படுத்தலாம் என்று கருதினர்.

இவர்களுக்கு தமிழர் ஐக்கிய முன்னணியின் பிரதானமான தலைவர்களோடு நேரடித் தொடர்புகள் இருந்தபோதிலும், தாம் மட்டும் இதனை அவர்களுக்கு எடுத்துக் கூறினால் அவர்கள் அக்கறை காட்டாமல் இருக்கக்கூடும் என்று கருதி, தமது கருத்தை யாழ்ப்பாணத்தின் பல்வேறு பாகங்கனிலும் அரசியல் ஆர்வமுடன் செயற்பட்ட தமிழ் இளைஞர்களின் கருத்தாக ஆக்க வேண்டும் என முயன்றார். இதன் நோக்கமாக யாழ்ப்பாணத்தின் பல்வேறு பாகங்களுக்கும் சென்று அரசியல் ஆர்வம் கொண்ட இளைஞர்களைச் சந்தித்து அபிப்பிராயம் திரட்டினர்.

இந்தச் சந்தர்ப்பத்தில்தான் தோழர் நாபாவை நான் சந்திக்கும் முதல் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. அவ்வாறான இளைஞர்களின் அபிப்பிராயத்தை ஒருமுகப்படுத்தும் முகமாக ஒரு கூட்டத்தை 1973ம் ஆண்டு ஜனவரி மாதம் 13ம் திகதி கூட்டினார்.

அக்கூட்டம் எதிர்ப்பார்த்த அளவு வெற்றியைத் தராததன் காரணமாக, மீண்டும் அதே மாதம் 28ம் திகதி இன்னொரு கூட்டத்தைக் கூட்டினார்.
அக்கூட்டத்தில் தமிழ் மாணவர் பேரவையில் இணைந்து செயற்பட்டுக் கொண்டிருந்த இளைஞர்களும், அவ்விரண்டுடனும் நேரடித் தொடர்பில்லாமலேயே அரசியல் நிலைமைகளின் சூழல்களால் உந்தப்பட்டுச் செயற்பட்டுக் கொண்டிருந்த இளைஞர்களும் என பலவகைப்பட்ட ஆனால் ஓரளவுக்கு ஒரே வகையான அரசியல் ஆர்வம் கொண்டிருந்த இளைஞர்கள் கூடினர்.

மேற்படி கூட்டம் கூட்டப்பட்டதன் நோக்கம் அக்கூட்டத்தி;ல் கூடியிருந்த இளைஞர்களின் விவாதத்தின் போக்கில் மறைந்தது. அதற்கு மாற்றாக தமிழ் இளைஞர் பேரவை என்ற ஒரு அமைப்பைத் தோற்றுவிப்பது என முடிவாயிற்று. அன்றே அதன் வேலைத் திட்டத்திற்கான அமைப்பாளர்கள் தெரிவாகினர். வேலைத் திட்டம் செயற்பட ஆரம்பித்தது.

தமிழ் இளைஞர் பேரவையில் தோழர் நாபா

தமிழ் இளைஞர் பேரவை ஆரம்பிக்கப்பட்டு ஒரு சில வாரங்களுக்குள்ளாகவே, அதன் வேலைத் திட்டங்களில் ஆர்வம் காட்டி செயற்பட்டுவந்த உறுப்பினர்கள் பெரும்பாலோர், அவர்களின் தமிழ் மாணவர் பேரவையின் வன்முறை அரசியல் நடவடிக்கைகளில் கொண்டிருந்த தொடர்புகளின் காரணமாக சிறிலங்கா காவல்படையினரால் கைது செய்யப்பட்டனர். முளைவிட ஆரம்பித்த தமிழ் இளைஞர் பேரவைக்கு இது பேரிடியாக அமைந்தது.

தமிழ் இளைஞர் பேரவையின் முன்னணி உறுப்பினர்களில், அரசியல் முன் அனுபவங்களையும் பரவலான அறிமுகங்களையும் கொண்டிருந்தவர்கள் அனைவருமே ஏறத்தாழ கைது செய்யப்பட்டுவிட்டனர். இதன் விளைவாக, அரசியல் முன் அனுபவங்களோ பரவலான அறிமுகங்களோ இல்லாத எஞ்சிய முன்னணி உறுப்பினர்கள் சிலரே தமிழ் இளைஞர் பேரவையின் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்புகளுக்காளாயினர்.

இந்த ஒருசிலரில் தோழர் நாபாவும் ஒருவர். இந்தக் காலகட்டத்தில் தோழர் நாபாவின் கடும் உழைப்பு மிகவும் மகத்தானது. தமது படிப்புக்கான ஒரு சில மணி நேரங்களைத் தவிர, ஏனைய முழுநேரமும் அரசியல் நடவடிக்கைகளிலேயே ஆர்வமுடன் ஈடுபட்டார். பெரும் பாலான நாட்களில் படிப்புக்கான நேரங்களைக்கூட இளைஞர் பேரவையின் பணிகளிலே செலவிட்டார்.

தோழர் நாபாவின் தந்தையார் கொழும்பில் வேலை பார்த்து வந்ததன் காரணமாக, இந்தக் காலகட்டத்தில் அவரின் பெற்றோர்களும் சகோதரிகளும் கொழும்பிலேயே குடியிருந்தனர். சில மாதங்களுக்கு ஒரு முறைதான் காங்கேசன்துறை வீட்டுக்கு வந்து போவது வழக்கம். தோழர் நாபா மட்டும் தமது கல்விப் பொதுத் தராதரப் பத்திர பரீட்சையைக் காரணமாகக் கொண்டு காங்கேசன்துறை வீட்டில் தங்கியிருந்தார். ஒவ்வொரு நாளும் தமது படிப்பு, அரசியற் கடமைகளுக்காக வந்து போவது வழக்கம்.

சுமார் இருபத்திரண்டு கிலோ மீட்டர் தூரமுள்ள யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் பஸ் போக்குவரத்து வசதிக்குப் பஞ்சமில்லையாயினும், பெரும்பாலும் சைக்கிளில் வந்து போவதிலேயே ஆர்வமாக இருந்தார்.

தோழர் நாபாவின் பெற்றோர்கள் அவருக்குத் தேவையான அடிப்படை வசதிகளை வழங்குவதில் எந்தக் குறையும் வைக்கவில்லை. பொதுவாக அடிப்படை வசதிகளைக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த அளைஞர்களைப் பொறுத்த வரையில் படிப்பு, விளையாட்டு, பெண்கள் தொடர்பான இளவயதுக் கோளாறுகள், சினிமா மற்றும் பொழுதுபோக்கு என்பதாகவே அமையும்.

ஆனால் தோழர் நாபா அவரது மிக இளம் வயதில்கூட படிப்புக்கான நேரத்தைத் தவிர ஏனைய முழு நேரத்தையும் அரசியல் ஆர்வத்துடனேயே செலவழித்தார். விளையாட்டுக்களில் அவரது நாட்டம் மிகமிகக் குறைவு. சினிமா பார்ப்பார் எனினும் அதில் அதிகமான ஈடுபாடு கொண்டிருக்கவில்லை. பெண்கள் விஷயத்தில் மிக ஒழுக்கமானவராகவும் ஒதுங்கிச் செல்லும் பண்புடையவராகவுமே இருந்தார்.

அவருக்கு பள்ளிக்கூடக் காலத்துக் காதல் ஒன்று இருந்ததெனினும் அதன்மீது கனவுகளில் மிதந்து திரியவில்லை. அதுவும் நாளடைவில் மறைந்துபோனது. எந்தவிஷயமாயினும் தான் எடுத்துக் கொண்ட முயற்சியில் மிகவும் கரிசனையுடனும் நிதானமாகவும் அமைதியாகவும் செயற்படும் பழக்கம் அவரிடம் எப்போதுமே இருந்து வந்திருக்கின்றது.

தோழர் நபாவின் பெற்றோர்கள் இயல்பில் மிகந்த தெய்வ பக்தியும், தாமுண்டு தமது பாடுண்டு என்ற சுபாவமும் கொண்டவர்களாயினும் யாழ்ப்பாணம் வருகின்ற வேளைகளில் தோழர் நாபாவின் அரசியல் நண்பர்கள் மீதும் தங்கள் பிள்ளையைப் போலவே அன்பு செலுத்தினார்கள்: அரவணைத்தார்கள்.

அன்றைய கால கட்டத்தில் தோழர் நாபாவின் காங்கேசன்துறை வீடும் எமது அரசியல் நடவடிக்கைகளுக்கான ஒரு தளமாகப் பயன்பட்டது. தோழர் நாபாவின் பெற்றோர்கள் எம்மீது காட்டிய அன்பும் அரவணைப்பும்கூட ஒருவகையில் அன்றைய எமது அரசியல் நடவடிக்கைகளுக்கு உற்சாகமளித்தது.

இதை ஏன் நான் இங்கு குறிப்பிட்டுக் காட்ட விரும்புகிறேன் என்றால் 1983ம் ஆண்டுக்கு முன்னர் தமிழர்களின் போராட்ட வரலாற்றில் சுமாhர் 12 ஆண்டுகளுக்கு மேலாக பல நூற்றுக்கணக்கான இளைஞர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு, தியாகங்கள் பல செய்திருக்கிறாhர்கள். பல அணிகள் தோன்றியிருக்கின்றன, மறைந்திருக்கின்றன. ஆனால் அவ்விளைஞர்களின் பின்னணியில் அவர்களின் பெற்றோர்களின் ஆதரவு என்பது குறிப்பிட்டு எண்ணிக் காட்டக் கூடிய அளவிவேயே இருந்தன.

தமிழர்களின் உரிமைகளுக்கான போராட்டம் நடத்தப்பட வேண்டும் - சுதந்திர ஈழம் பெறப்பட வேண்டும் என்று தமிழர்களில் பெரும்பாலோர் விரும்பினாhர்கள் என்பது உண்மையாயினும், அவ்விஷயத்தில் தாங்களும் தங்கள் பிள்ளைகளும் நேரடியாக ஈடுபடாமல் தமக்குச் சிரமம் இல்லாத ஆதரவை வழங்கிக் கொண்டு பார்வையாளர்களாக இருந்துகொள்ளவே விரும்பினார்கள்.

அக்காலகட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள், தமது போராட்டக் கடமைகள் தொடர்பாகத் தங்குவதற்கு வீடு கிடைப்பதென்றாலே மிகவும் சிரமமான ஒரு காரியமாக இருந்தது.

அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட பெரும்பாலான இளைஞர்களைப் பொறுத்தவரையில், அவர்கள் இலங்கை அரச படைகளால் தேடப்படாத வரை - கைது செய்யப்படாதவரை அவர்களின் பெற்றோர்களுக்கும் அவர்களின் ஈடுபாடு தெரியாது - தெரியக்கூடாது என்னும் நிலையே நிலவி வந்தது. இந்தப் பின்னணியிலேயே தோழர் நாபாவின் பெற்றோர்களுக்கும் அவர்களின் ஈடுபாடு தெரியாது - தெரியக்கூடாது எனும் நிலையே நிலவி வந்தது. இந்தப் பின்னணியிலேயே தோழர் நாபாவின் பெற்றோர்கள் அளித்த ஆதரவை நான் எண்ணிப் பார்க்கிறேன்.

தமிழ் இளைஞர் பேரவையை வடக்கு - கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பாகங்களிலும், மலையக்திலும் பல நூற்றுக் கணக்கான இளைஞர்கள் மத்தியில் கொண்டுசென்று அணி திரட்டுவதில் சலசலப்பில்லாத தோழர் நாபாவின் பாத்திரம் மிகவும் மகத்தானதாகும்.

கையில் பணம் இருந்தாலும் சரி இல்லாவிடினும் சரி, ஸ்தாபனத்தின் வேலைத்திட்டங்களை நிறைவேற்றுவதில் முன்னணியில் நிற்கும் தன்மை தோழர் நாபாவிடம் என்றைக்கும் இருந்து வற்திருக்கிறது.

போக்குவரத்துச் செலவுக்கு மட்டும் பணம் இருந்தால் போதும் ஏனைய தேவைகளைப் போகும் இடங்களில் பார்த்துக் கொள்வார்.

நாபாவின் வேலை முறைகளில் ஒரு தனிப் பாணியுண்டு. பலர் கூடியிருக்கையில் முன்னுக்கு வரமாட்டார்: அதிகம் பேசமாட்டார். ஆனால், எந்த வேலைத் திட்டத்திலும் முழுமையாகத் தன்னை அர்ப்பணித்துப் பங்கெடுப்பார். மிகவும் கடுமையாக உழைப்பார்.

அவரோடு இணைந்து வேலை செய்பவர்களுக்கு, அந்த வேலைகளைச் செய்து முடிப்பதில் தன்னம்பிக்கையும் ஒரு தனித் துணிச்சலையும் ஏற்படுத்துவதில் அவருக்கு நிகர் அவரே. எல்லா வசதிகளும் அமைகின்றபோதே பலருக்கு அவ்வாறு செய்யமுடியும். ஆனால் எதுவும் இல்லாமலே அதனைச் சாதிக்கும் வல்லமை அவருக்கு இருந்தது. தன்னுடைய கடும் உழைப்பாலும் மன உறுதியாலும் அதை மற்றவர்களுக்கும் ஏற்படுத்துவார். ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தோழர்கள் அனைவருக்கும் இது தெரிந்த விஷயமே. தோழரின் இந்த ஆற்றல் அவரின் பல ஆண்டு அனுபவங்களின் பின்னர் ஏற்பட்ட புதிய ஒன்றல்ல. மாறாக, அவரிடம் இயல்பாகவே இருந்த திறமையாகும்.

சிறந்த தொண்டன்

தோழருடைய அமைதியில் எவ்வளவு மன உறுதி குடிகொண்டிருந்ததோ, அதே அளவுக்கு இளகிய மனமும் குழந்தை உள்ளமும், துன்பப்படுபவர்களுக்கு இரக்கம் காட்டிச் சேவகம் செய்யும் பண்பும் அவரிடம் நிறைய காணப்பட்டன.

தோழர் நாபாவின் காங்கேசன்துறை வீடு மட்டுமல்லாது, அவரது பெற்றோர்களின் கொழும்பு வீடும், கொழும்புக்குச் சென்று திரும்பும் அவரது அரசியல் நண்பர்கள் பலருக்கு தங்குமிடமாகவும் விளங்கிற்று. அவரது பெற்றோர்கள், எவரையும் இனிது வரவேற்று உபசரிக்கும் உயர்ந்த பண்புடையவர்கள்.

1973ம் ஆண்டுக்குப் பின்னர் அரச படைகளினால் கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்களை கொழும்பிலும், கொழும்புக்கு அண்மித்த பகுதிகளிலும் உள்ள சிறைகளில் அடைத்து வைக்கும் சிறிலங்கா அரசாங்கம் கடைப்பிடிக்கத் தொடங்கியது.

இதன் காரணமாக சிறையில் இருந்த தமிழ் இளைஞர்களில் பொருளாதார ரீதியாகக் கஷ்டப்பட்டவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த பெற்றோர்கள், தாங்கள் பிள்ளைகளைப் பாhர்ப்பதற்காக மட்டக்களப்பு, திருகோணமலை, யாழப்பாணம் மற்றும் பகுதிகளிலிருந்து கொழும்புக்குச் சென்றுத் தங்கள் தங்கள் பிள்ளைகளைப் பார்த்துவிட்டுத் திரும்புவது என்பது மிகவும் சிரமமான காரியமாகியது. பலர் அப்போதுதான் கொழும்புக்கே செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகின்றனர். இதனால் கொழும்பில் இடம் வலமே தெரியாத நிலை.

இந்த வேளைகளில் தோழர் நாபாவின் பெற்றோர்கள் அக்குடும்பங்கள் பலவற்றிற்கு, அவர்கள் தங்குவதற்கு இடமளிப்பது தொடக்கம் அவர்கள் தங்கள் பிள்ளைகளைப் பார்த்து திரும்புவதற்கு வழிகாட்டுவதுவரை பல்வேறு வகையிலும் உதவியிருந்திருக்கிறார்கள்.

நாபாவின் குடும்பத்தினர் அடிப்படை வசதிகளுக்குக் குறைவில்லாதவர்கள் என்றாலும், பெரிய பணக்கார வசதி படைத்தவர்கள் அல்ல. கொழும்பில் அரச படைகளினால் ஏற்படக்கூடிய நெருக்கடி என்பது ஒருபுறமிருக்க, கொழும்பிலுள்ள 20க்கு 15 சதுர அடி அளவு கொண்ட அந்தச் சிறிய பிளாட் வீட்டில் குடியிருந்து கொண்டு இவ்வாறு அரசியல் தொடர்புகள் காரணமாக வருபவர்களுக்கு இடமளித்து உதவி செய்வதற்கு, அந்தப் பெற்றோர்களின் பரந்த மனமே காரணமாகும்.

தோழர் நாபா கொழும்பில் தங்கியிருக்கும் வேளைகளில், மேற் குறிப்பிட்ட இளைஞர்களின் பெற்றோர்கள் சகோதரர்கள் கொழும்புக்கு வர நேர்ந்தால் அவர்களைச் சிறைகளுக்குக் கூட்டிச் செல்வார். அவர்கள் போய்வர விரும்புகிற ஏனைய இடங்களுக்கும் கூட்டிச் செல்வார். அவர்கள் கடைசியாக திரும்பிச் ;செல்வதற்குப் பயணச் சீட்டு வாங்கிப் புகையிரதத்தில் ஏற்றிவிட்டுப் புறப்படும்வரை அவர்களுக்கு வழி காட்டியாகவும் செயல்படுவதை தமது கட்டாயத்தொண்டாகக் கருதிச் செயற்பட்டு வந்தார்கள். தமக்குரிய வேறு கடமைகளைப் புறக்கணித்து விட்டு, இந்தப் பெற்றோர்களுக்கு உதவியாக இருப்பதை தோழர் நாபா தமது கடமையாகக் கருதிச் செயற்பட்டார்.

1978ம் ஆண்டு கிழக்கு மாகாணம் பெரும் சூறாவளியால் பாதிக்கப்பட்டது. பெருந்தொகையான மக்கள் வீடுகளை இழந்தார்கள்: உணவுக்குப் பெரிதும் கஷ்டங்கள். க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்காக மாணவர்கள் தீவிரமாகப் படிக்க வேண்டிய இறுதி மாதங்கள் அவை. பள்ளிக்கூடங்கள் பாதிக்கப்பட்டதால் மாணவர்களின் படிப்பும், பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது.

இந்தச் சந்தர்ப்பத்தில் தோழர் நாபா தனது தோழர்களைத் திரட்டி மட்டக்களப்பு, அம்பாறை மக்களுக்குச் சேவையாற்றுவதில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்காலிக வீடுகளை அமைத்துக் கொடுத்தல், புயலால் சரிந்த மரங்களால் ஏற்பட்டிருந்த வீதித் தடைகளை நீக்குதல், பணவசதி படைத்த சமூக சேவை நிறுவனங்கள் வழங்கிய உணவுப் பொருட்களை அகதிகளான மக்களுக்கு விநியோகித்தல், அந்நிறுவனங்களிடமிருந்து கூரை ஓடுகள் திரட்டி பள்ளிக்கூடங்களைத் திருத்துதல் போன்ற பல்வேறு கடமைகளிலும் இரவு பகலாக உழைத்தார்.

அவையெல்லாவற்றிற்கும் மேலாக, யாழ்ப்பாணத்திலிருந்து உயர் வகுப்பு ஆசிரியர்களைத் திரட்டி மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பாகங்களிலும் க.பொ.த. உயர்;தர வகுப்பு மாணவர்கள், அவர்களது பரீட்சைக்கான படிப்பைத் தங்குதடையின்றி மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை மிகச் சிறப்பாகவே மேற்கொண்டார்.

தோழர் நாபாவின் சமூகத் தொண்டை கிழக்கு மாகாணத்து மக்கள் என்றென்றும் மறக்கவில்லை. பின்னைய காலங்களில் தோழர் நாபா கிழக்கு மாகாணத் தமிழ் மக்களின் பாசத்துக்குரிய தலைவனாக ஏற்றுக் கொள்ளப்பட்டமைக்கும், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கிழக்கு மாகாண மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்க ஒரு ஸ்தாபனமாக ஆழமாக வேரூன்றுவதற்கும் காரணம், தோழர் நாபா அன்று மக்களுக்கு அவசியமான தேவை ஏற்பட்டபோது சரியான முறையில் முன்னெடுத்த சமூகத் தொண்டேயாகும்.

ஓர் அரசியல் ஸ்தாபனம் மக்கள் மத்தியில் காத்திரமான பாத்திரத்தை ஆற்றும் வகையில் ;மக்களின் மனங்களில் வேர்விட்டு வளர வேண்டுமானால் அதற்கு ஆள் தொகை, ஆயுதக் கவர்ச்சி, பேச்சுத் திறன் என்பதைவிட மக்களுக்கு ஏற்படும் அவசியமான காலகட்டங்களில் அவர்களின் அடிப்படைத் தேவைகள் தொடர்பாக செய்வது மிகவும் அவசியமானதாகும்.

ஒரு புரட்சி ஸ்தாபனம் மக்களுக்குத் தலைமை தாங்குதல் என்பதன் அர்த்தம் மக்களுக்குத் தொண்டனாக இருப்பதே தவிர மக்களுக்கு எசமானாக இருப்பது என்பதல்ல. இதைத் தோழர் நாபா களத்தில் முன்னின்று தலைமை தாங்கி நடைமுறைப்படுத்திக் காட்டியிருக்கிறார்.

முரண்பாடுகளில் தெளிவு

தோழர் நாபாவிடம் பலரும் கண்டிருக்கக் கூடிய மற்றொரு சிறந்த பண்பு, ஒரு இயக்கத்தில் இருக்கக் கூடிய பல்வேறு கருத்துக்களின் முரண்பாடுகளுக்கு மத்தியிலும் ஒற்றுமையை ஏற்படுத்தி அரவணைத்துச் செல்லும் பண்பு. இது அவருக்கு, அவர் தலைவனாக ஆனபின் காணப்பட்ட ஒரு பண்பல்ல. அவர் அரசியல் இயக்கத்தில் சாதாரண உறுப்பினனாக இருந்த இளமைக் காலத்திலேயே இந்தப் பண்பு அவரிடம் நிலவியது.

தமிழ் இளைஞர் பேரவை ஆரம்பிக்கப் பட்டுச் சில மாதங்களுக்குள்ளாகவே, அதில் கருத்து மோதல்களும் தனிமனித முரண்பாடுகளும் தலைதூக்கின. ஆனால் அவை அவ்வாறானவர்களுக்கிடையில் ஒரு நிரந்தரப் பகையாக மாறிவிடாமல், ஸ்தாபனம் ஒரு பிளவுக்கு உட்பட்டுவிடாமல் கருத்து வேறுபாடுகள், முரண்பாடுகள் கொண்டவர்களுக்கு இடையில் ஓர் ஒருங்கிணைப்புப் பாலமாகச் செயற்பட்டு ஒற்றுமையையும் நட்பு உறவுகளையும் காப்பாற்றியவர் தோழர் நாபா.

அவர் சிந்தனைத் தெளிவுடைய ஒரு புரட்சிகர ஜனநாயகவாதி, சாதாரண தனிமனித முரண்பாடுகளையோ அல்லது உபாயங்கள் சம்பந்தப்பட்ட கருத்து வேறுபாடுகளையோ அடிப்படைக் கொள்கை முரண்பாடாக்கிக் குழப்பவோ குழம்பவோ மாட்டார்: அவ்வாறு யாரும் ஆக்குவதற்கு ஒத்துழைக்கவும் மாட்டார்.
அதே வேளை, ஒரு ஸ்தாபனத்துக்குள் அடிப்படைக் கொள்கை சம்;பந்தப்பட்ட விவகாரங்களில் விட்டுக்கொடுக்கவோ, சமரசம் செய்து கொள்ளவோ மாட்டார்.
தமிழ் இளைஞர் பேரவைக்குள் ஒருங்கிசைவை, ஒருமைப்பாட்டைப் பேணுவதில் உழைத்த தோழர் நாபா, 1975ல் அடிப்படைக் கொள்கை விவகாரங்கள் தொடர்பாக பிளவு ஏற்பட்டபோது ஒரு திட்டவட்டமான நிலைப்பாட்டை எடுத்தார். பிளவுபட்டவர்களில், தமது அரசியல் நிலைப்பாட்டுக்குத் தக்கவர்களோடு உறுதியாக நின்றார். அப்பிரிவினரால் அதே ஆண்டு உருவாக்கப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஆரம்ப உறுப்பினராகவும் கடும் உழைப்பாளியாகவும் இருந்தார்;.

அதேபோல அவர் ஈழப்புரட்சி அமைப்பாளர்கள் அமைப்பில் ஓர் உறுப்பினராக இருந்தபோது 1978,79ல் அவ்வமைப்பில் தனிமனித முரண்பாடுகளும், உபாயங்கள் தொடர்பான முரண்பாடுகளும் அடிப்படைக் கொள்கை சம்பந்தப்பட்ட முரண்பாடுகளும் ஒன்றோடு ஒன்று பின்னிக்கலந்த வகையில ஓர் சிக்கலான நெருக்கடி ஏற்பட்டது. அந்தச் சந்தர்ப்பத்தில் தோழர் அவர்கள் தனிமனித முரண்பாடுகளும் உபாயங்கள் தொடர்பான முரண்பாடுகளும் கொண்டிருந்தவர்களுக்கிடையில் ஒருவர்க்கொருவர் கொண்டிருந்த தவறான புரிந்துணர்வுகளை நீக்கவும் சமரசம் காணவும் முயற்ச்சித்தார். அதேவேளை அடிப்படைக்கொள்கைகள் தொடர்பான முரண்பாடுகளில் தலைமையில் இருந்தவர்களுடன் திட்டவட்டமாகத் தீர்வுகாணவும் தன்னாலான முயற்சிகளையெல்லாம் மேற்கொண்டார். அவ்விடயத்திலும் அவசரப்பட்ட முடிவுகளை எடுத்து விடாமல் மிகவும் பொறுமையுடனும் நிதானத்துடனுமே செயற்பட்டார். தான் பொறுமையோடு முரண்பட்டு நின்ற மற்றவர்களையும் பொறுமை காக்க வைத்தார். சுமார் ஓராண்டுக்கு மேலாக தொடர்ச்சியாக எடுத்து வந்த முயற்சிகளின்போதும் சுமுகமான தீர்வு ஏற்படாமற் போனபோதே பிளவு என்ற உறுதியான முடிவுக்குத் தள்ளப்பட்டார்.

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்கு அவர் அளித்த தலைமையில் மிகவும் காத்திரமான பங்கு என்னவெனில், பல்வேறு போக்குகளையும் குணாம்சங்களையும் கொண்டவர்கள் அனைவரையும் ஒன்றாக அரவணைத்துச் சென்றமையும், பல்வேறு கருத்துக்கள் கொண்டவர்களையும், ஓரணியாகத் திரட்டி முன்நோக்கி வழி நடத்திச் சென்றமையுமே ஆகும். அதற்குக் காரணம் யாந்திரீக ரீதியாக அல்லாமல் மனித இயல்புகள் பற்றிய தெளிவான புரிதலோடுகூடிய ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாட்டை அச்சாணியாகக் கடைப்பிடித்தமையும் அது செழுமையாகச் செயற்படுவதற்குத் தேவையான விமர்சனம் சுயவிமர்சனம் என்பவற்றையே உளப்பூர்வமாகப் பின்பற்றியமையுமே ஆகும்.

ஒரு குறிப்பிட்ட ஸ்தாபனத்திற்குள் அடிப்படைக் கொள்கைகளில் முரண்பாடான செயற்பாடுகள் நிலவவும் முடியாது: அவ்வாறானவற்றைச் சமரசப்படுத்தவும் முடியாது என அவர் உறுதியாகக் கருதியபோதிலும், ஒரு போராட்ட இயக்கத்திலோ ஓர் அரசியல் இயக்கத்திலோ அடிப்படைக் கொள்கை முரண்பாடுகள் கொண்ட வௌ;வேறு அணிகள் இருக்கக்கூடாது என்றோ, இருக்க முடியாது என்றோ அவர் கருதியதுமில்லை, நம்பியதுமில்லை. அவ்வாறான அணிகளுக்கிடையில் எதிரியைக் குறித்த பொது உடன்பாடுகளும் ஒருங்கிணைக்கப்பட்ட செயற்பாடுகளும் ஓர் ஐக்கிய முன்னணி உருவாக்கத்தின் மூலம் ஏற்பட வேண்டும். என்ற கொள்கையைக் கொண்டிருந்தார். அந்த அடிப்படையில் ஈழமக்களின் விடுதலைப் போராட்டத்தைப் பலப்படுத்தும் வகையில் பல்வேறு அணிகளுக்கிடையிலும் ஐக்கிய முன்னணி உருவாகுவதற்காக தம்மாலான எல்லா முயற்சிகளையும் செய்தார் - கடுமையாக உழைத்தார்.

நோ ப்ராப்ளம்

தோழர் நாபாவிடம் குடிகொண்டிருந்த மற்றொரு குணாம்சமாகிய எதையும் தாங்கும் இதயம், சகிப்புத் தன்மை மிகவும் அபாரமானதாகும். எந்தவொரு நெருக்கடியான சூழ்நிலையிலும் கலங்கமாட்டார். முகம் கொடுக்க வேண்டிய பிரச்சினைகளைக் கண்டு ஒதுங்கவோ ஓடவோ மாட்டார். நோ ப்ராளம் (ஒரு பிரச்சினையுமில்லை) என்று சொல்லிக் கொண்டு தொடர்ந்து நிதானமாகச் செயற்பட்டார்.

ஸ்தாபனத்துக்கு புறச்சக்திகளால் - சூழல்களால் நெருக்கடி ஏற்படுகின்றபோதும் சரி, ஸ்தாபனத்துக்கு உள்ளேயுள்ள உறுப்பினர்களால் நெருக்கடி ஏற்பட்ட போதும் சரி நோ ப்ராப்ளம் என்று கூறிக்கொண்டே கலங்காது உறுதியோடு செயற்படுவார்.

அதே போல கையிலே காசில்லாத போதும் சரி, அல்லது யாராவது அவருக்கு நம்பிக்கைத் துரோகம் செய்து ஏமாற்றிய போதும் சரி, அல்லது யாரிடமிருந்தாவது அவர் உதவியை எதிர்பார்த்து அந்த உதவி கிடைக்காத போதும் சரி நிலை குலைய மாட்டார். நோ ப்ராப்ளம் என்ற மந்திரத்தைச் செல்லிக் கொண்டு தனது கடமைகளில் தொடர்ந்து; செயற்பட்டுக் கொண்டேயிருப்பார்.

தோழர் நாபாவின் இந்த நோ ப்ராப்ளம் என்ற சொல்லை அறிந்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணித் தோழர்கள் பலரும், ஸ்தாபனத்தின் நெருக்கிய நண்பர்கள் பலரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் கிண்டலாகப் பேசியிருக்கிறார்கள். ஆத்திரப்பட்டிருக்கிறாhர்கள். இதில் நானும் கூட சில சந்தர்ப்பங்களில் பங்கு பெற்றிருக்கிறேன். சிலர் நோ ப்ராப்ளம்!... நோ ப்ராப்ளம்!... நோ ப்ராப்ளம்!... என்பதுதான் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் கீதம் என்றுகூட பொறாமை தாங்காமல் கூறியிருக்கிறார்கள்.

இருந்தாலும் அந்தச் சொல் தோழர் நாபாவின் நாவோடு ஒட்டிப் பிறந்த சொல் போல் ஆகியிருந்தது, அவரோடு நெருங்கிப் பழகிய பலருக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் அந்தச் சொற்றொடர் ஜீரணிக்கமுடியாத ஒன்றாக இருந்த போதிலும், அது தோழர் நாபாவுக்கு நெருக்கடிகளின் மத்தியில் உற்சாகம் தரும் பிரணவமாயிருந்தது.

தோழருடன் கூடிப் பழக்கப்பட்டதால் நான் உட்பட மேலும் பல தோழர்கள், பல்வேறு விடயங்களிலும், தன்னம்பிக்கையுடன் உழைப்பதற்கு, தோழரின் நோ ப்ராப்ளம் என்ற சொற்றொடர் பயன்பட்டிருக்கிறது: பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

மிக நல்ல நண்பர்

நண்பர்களைச் சம்பாதிப்பதிலும், நட்பைப் பராமரிப்பதிலும் தோழர் நாபாவுக்கு நிகர் அவரேதான். அவர் யாராவது ஒருவருடன் ஏதாவது ஒரு காலகட்டத்தில் நட்புக்கொள்ள நேரிட்டால், அந்த நட்பை எந்தக் காலத்திலும் மறக்காமல் தொடர்ந்து பேணுவார். நட்புக் கொள்வதற்கும் நட்பைப் பெறுவதற்கும் அரசியல், தொழில், சமூகக்காரணங்கள் அவசியம் இருக்க வேண்டும் என்ற அவசியம் அவருக்கு இல்லை.

நண்பர்களாயிருந்தவர்கள் அரசியல் ரீதியாக விலகிப்போயிருந்தாலும் சரி, அதற்காக நட்பை முறித்துக் கொள்ளாமல் தொடர்ந்தும் பேணுவார்.

நண்பர்களாக இருப்பவர்கள் உதவி செய்வதாகக் கூறிவிட்டு பின்னர் உதவி செய்யாவிட்டாலும்கூட, அந்த நபர் தங்கியிருக்கும் வழியால் எங்காவது போகவேண்டியேற்பட்டால், அந்த நட்பைத் தேடிப் போய்ப் பேணுவார்.

உண்மையில் ஈழமக்களின் விடுதலைப் போராட்டத்தின் அணிகள் அனைத்தினதும் அனுபத்திலிருந்து பார்ப்போமானால், எந்தவொரு தனிப்பட்ட நட்புத் தொடர்புகளினூடாகவே மிகப்பெரும்பாலும் நபர்கள் அந்த ஸ்தாபனத்துடன் ஆரம்ப உறவுகளை ஏற்படுத்திக் கொள்கின்றனர் என்பதையே நாம் புரிந்து கொள்ள முடிகின்றது.

தோழர் நாபாவிடமிருந்த நண்பர்களைச் சம்பாதிக்கும் குணாம்சம்தான் இலங்கையில் மட்டுமல்ல, இந்தியாவிலும் பல நூற்றுக்கணக்கான நண்பர்களை அவர் கொண்டிருக்கக் காரணமாயிருந்தது.

எண்ணிக்கை ரீதியில் பார்த்தால் தோழர் நாபாவுக்கு இந்தியாவில் இருக்குமளவு நண்பர்கள், இலங்கையைச் சேர்ந்த வேறுயாருக்கும் இருக்கமுடியாது. 1983ம் ஆண்டுகளுக்குப் பின்னர் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியானது பணவசதி இல்லாத போதிலும், இந்திய மண்ணிலிருந்து பல தயாரிப்பு வேலைகளைச் சாதிக்க முடிந்ததற்குக் காரணம், தோழர் நாபா சம்பாதித்து வைத்திருந்த நண்பர்களே.

1974ம் ஆண்டு ஜனவரி உலகத் தமிழாராய்ச்சி மாநாடு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. அம்மாநாடு இலங்கை அரசின் ஒத்துழைப்பில்லாமலேயே - ஒரு வகையில் மறைமுகமான எதிர்ப்பின் மத்தியிலேயே நடத்தப்பட வேண்டியிருந்தது. இதனால் வடக்கு கிழக்கில் ஏற்கனவே அலைபாய்ந்து கொண்டிருந்த அரசியல் உணர்வின் ஒரு பகுதியாகவே மக்கள் மத்தியில் அம்மாநாடும் தவிர்க்க முடியாமல் அமைந்திருந்தது. அரசின் துணையில்லாத காரணத்தினால் அம்மாநாட்டுக்குத் தேவையான துணைவேலைகளைக் கவனிப்பதற்காக அம்மாநாட்டின் அமைப்பாளர்கள் ஒரு தொண்டர்படைக்கு அழைப்பு விட்டனர்.

ஈழவிடுதலைப் போராட்டத்தில் வீறுகொண்டெழுந்த இளைஞர்களின் முன்னோடியான சிவகுமாரனின் தலைமையில் அத்தொண்டர்படை அமைந்தது.
தோழர் நாபாவும் தவறாமல் தன்னையும் அத்தொண்டர் படையில் ஒருவனாக இணைத்துக்கொண்டு தன் உடலுழைப்பை பங்களித்தார்.

மாநாட்டின் இறுதி நாளன்று, அதாவது ஜனவரி 10ந் தேதி இலங்கை அரச பொலிசாரின் துப்பாக்கிப் பிரயோக நடவடிக்கையினால், அம்மாநாட்டின் இறுதி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பொதுமக்களில் 10 பேர் படுகொலைக்கு உள்ளானார்கள். அந்நிகழ்ச்சி பொதுவாகவே தமிழ் இளைஞர்கள் மத்தியில் ஆத்திரத்தைத் தூண்டியது. பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு வழி கோலியது.

வன்முறைப் போராட்டத்தின் மீதே முழு நம்பிக்கை கொண்டிருந்த சிவகுமாரன், சில இளைஞர்களைச் சேர்த்துக்கொண்டு ஒரு தலைமறைவு அரசியற்குழுவாக வன்முறை நடவடிக்கைகளில் இறங்கினார். தோழர் நாபா இக்குழுவில் தன்னை முமுநேரப் பங்காளானாகச் சேர்த்துக் கொள்ளவிடினும், ஒரு தீவிர ஆதரவாளனாகவும், பகுதிநேரமாக அக்குழுவின் வேலைத் திட்டங்களில் பங்கெடுத்துக் கொள்பவராகவும் செயல்பட்டார். இக் குழுவும் அவ்வாண்டு ஜுன் மாதம் 5ம் தேதி சிவகுமாரன் இறந்ததோடு தொடர்ந்தும் செயற்பட முடியாமல் முடங்கியது.

அதன் பின்னர் ஓர் ஆறு மாதங்கள் தமது பெற்றோர்களுடன் கொழும்பில் தங்கியிருந்த தோழர் நாபா அவர்கள், 1975ம் ஆண்டில் ஆரம்பத்தில் மீண்டும் யாழ்ப்பாணம் வந்து தமிழ் இளைஞர் பேரவையின் வேலைத்திட்டங்களில் பங்கெடுத்து கடுமையாக உழைத்தார்.

அதே ஆண்டு ஜுலை மாதம் தமிழ் இளைஞர் பேரவையில் பிளவு ஏற்பட்டது. அதில் ஒரு பகுதியினராக தோழர் நாபாவும் நானும் மற்றும் இளைஞர்களும் இருந்தோம். 1975ம் ஆண்டில் ஆரம்ப மாதங்களில் இலங்கை அரசு தனது கடுமையான அடக்குமுறைப் போக்குகளில் சிலவற்றைத் தளர்த்தியது. இதன் விளைவாக இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த பெரும்பாலான தமிழ் இளைஞர்கள் விடுதலை செய்யப்பட்டிருந்தனர். அவர்கள் மத்தியிலும் இளைஞர் பேரவையில் ஏற்பட்ட பிறவு பிரதிபலித்தது.

சில நாட்களுக்குள்ளேயே கருத்தொருமித்த நாம் அனைவரும் பல ஆலோசனைக் கூட்டங்களைத் தொடர்ச்சியாக நடத்தினோம். அதன் விளைவு ஜுலை 14ல் தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஆரம்பமும் அதன் கொள்கைப் பிரகடனமும் அறிவிக்கப்பட்டது.

சில நாட்களுக்குள்ளேயே புலிகள் குழுவினர், இலங்கை அரசின் தீவிர ஆதரவாளராக இருந்த யாழ்ப்பாண துணை மேயர் துரையப்பாவை கொலை செய்ததைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த சிறிலங்கா அரசு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபாடு கொண்டிருந்த அனைத்துத் தமிழ் இளைஞர்களையும் ஏற்கனவே சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டவர்களையும் கைது செய்து, வழக்கு விசாரணைகள் எதுவுமின்றி சிறையிலடைத்தது.

இதன் காரணமாக தமிழீழ விடுதலை இயக்கத்திலிருந்து நானும் மற்றும் பல முன்னணி உறுப்பினர்களும் சிறைக்குள் தள்ளப்பட்டோம். இந்தச் சந்தர்ப்பத்தில், தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஆரம்ப உறுப்பினர்களில் ஒருவரான தோழர் நாபாவும் மற்றும் உறுப்பினர்களும் ஸ்தாபனத்தை வழி நடத்திச் செல்ல வேண்டிய பொறுப்புக்கு உள்ளானார்கள். அந்தக் கடமைகளில் தோழர் நாபா மிகத் தீவிரமாக கடுமையாக உழைத்தார்.

ஆனால், தமிழீழ விடுதலை இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு ஓராண்டு முடிவடைவதற்குள்ளேயே, அதாவது 1976ன் மே மாதத்திலேயே, அது வன்முறைப் பாதைக்குள், அதற்கான வளர்ச்சி முறைகள் எதுவுமின்றியே காலடி எடுத்து வைத்தது. சிறிலங்கா அரச படைகள் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கின. பெரும்பாலும் முன்னணியில் நின்று உழைத்த அனைவரும் கைது செய்யப்பட்டனர். இதனால் அவ்வாண்டு ஜுலை மாதத்திற்குள்ளாகவே ஏறத்தாழ அதன் கதை முடிந்தது.

இங்கு நான் குறிப்பிடும் தமிழீழ விடுதலை இயக்கத்திற்கும் இப்போது செயற்பட்டுக் கொண்டிருக்கும் தமிழீழ விடுதலை இயக்கத்திற்கும் பெயரைத் தவிர வேறெந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்துவது இங்கு அவசியம் என்று கருதுகிறேன்

1976ம் ஆண்டு ஜுன் மாதம் தமிழீழ விடுதலை இயக்கத்தின் முன்னணி உறுப்பினர்களில் ஒருவரான தோழர் நாபாவும் பொலிசாரால் கைது செய்யப்பட்டார். ஆனால் அதன் வன்முறை நடவடிக்கைகளுக்கும் அவருக்கும் நேரடித் தொடர்பு ஏதுமில்லையென்பதால் சில நாட்களுக்குள்ளாகவே விடுதலை செய்யப்பட்டார்.

ஈரோஸில் தோழர் நாபா

விடுதலை செய்யப்பட்ட உடனேயே தோழர் நாபாவின் பெற்றோர்கள் அவரை வற்புறுத்தி, படிப்பதற்காக லண்டனுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சென்ற தோழர் அவர்கள் கணக்கியல் துறையில் தமது படிப்பை ஆரம்பித்தார்.

ஆனால் இரு மாதங்கள் கூட முடிவடைவதற்கு முன்னரேயே அங்கு ஆரம்பிக்கபட்டிருந்த ஈழப்புரட்சி அமைப்பாளர்களில் தன்னையும் இணைத்துக்கொண்டார்: லெபனான் சென்றார்: அங்கு ஆயுதப் பயிற்சியை முடித்துக்கொண்டு திரும்பி லண்டன் சென்று, அங்கிருந்து 1977ன் இறுதிப் பகுதியில் இந்தியாவிற்கு வந்தார். இந்தியாவில் சில நாட்கள் தங்கியிருந்து விட்டு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தார்.

ஈழப்புரட்சி அமைப்பாளர்கள் அமைப்பானது லண்டனில் இருந்தவர்களைக் கொண்டே ஆரம்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் அது ஈழத்தில் காலூன்றுவதற்காக சுமார் ஓர் ஆண்டுகாலம் பல்வேறு வகையிலும் முயற்சித்தது. ஆனால் நடைமுறையில் சாதிக்க முடியவில்லை.

பின்னர் நாடு திரும்பிய தோழர் நாபா அதற்கான வேலைத் திட்டத்தில் முயற்சிகளை மேற்கொண்டார்.

தமிழீழ விடுதலை இயக்கம் செயலிழந்து போனதால் ஒதுங்கிப் போயிருந்த அதன் உறுப்பினர்களையெல்லாம் சந்தித்தார்: நம்பிக்கையூட்டினார். அவர்களில் முன்வரத் தயாராய் இருந்தவர்களையெல்லாம் திரட்டினார்.

ஈழப்புரட்சி அமைப்பாளர்கள் அமைப்பு ஈழத்தின் பல்வேறு பாகங்களிலும் மிக அமைதியாக ஆனால் மிகத் துரிதமாகச் செயற்படத் தொடங்கியது. இக்கால கட்டத்தில் தமிழ் இளைஞர் குழுக்களின் வன்முறை நடவடிக்கைகள் ஆங்காங்கே பரவலாக இடம்பெற்றன. இதன் தொடர்ச்சியாக அரசின் பொலிஸ், இராணுவ கெடுபிடிகளும், தேடுதல் வேட்டைகளும் அதிகரித்தன.

ஈரோஸ் அமைப்பானது வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபடாமல் பல்வேறு வகைகளிலும் முனைப்புடன் தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது.

ஆயினும் வன்முறை அரசியற் சூழ்நிலைகளின் தொடர்பாக அரச இராணுவம் மேற்கொண்ட கெடுபிடிகளினால் ஈரோஸ் அமைப்பைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டனர். எனையோர் தேடுதல் வேட்டைக்கு உள்ளாயினர். இதனால் அதன் செயற் திட்டங்களிலும் முன்னேற்றத்திலும் பின்னடைவுகள் தடங்கல்கள் ஏற்பட்டன.

1978ன் இறுதிப் பகுதியில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்pல் சூறாவளியால் அழிவுகள் ஏற்பட்டபோது மேற்கொள்ளப்பட்ட சமூக சேவை நடவடிக்கைகள் மூலம், ஈரோஸின் உயிரூட்டம் கொடுத்தார்.

இரத்த உறவுகள்

தோழர் அவர்கள், தாய், தந்தை சகோதரிகள் மூவர் இவர்களைத் தவிர அவரது உறவு, பழக்கம், நடைமுறை எல்லாம் ஸ்தாபனத் தோழர்கள், நண்பர்களைச் சுற்றியே அமைந்திருந்தன. ஈரோஸ் உறுப்பினராக ஆனகாலத்திலிருந்து பெற்றோர், சகோதரிகளுடனான தொடர்பும் மிக அரிதாகியது.

தோழர் நாபாவின் தந்தையார் 1978ன் ஆரம்பத்திலேயே காலமாகி விட்டார். அந்த வேளையில் தோழரின் சகோதரிகள் எவருக்குமே திருமணம் நடக்கவில்லை.

அவரின் மூத்த சகோதரியார் அவரை விட இரு வயது மூத்தவர். தோழர்அவர்கள் சமூகப் புரட்சிக்கான கடமைகளில் தன்னை முழு நேரமாக அர்ப்பணித்து விட்டதால் அவர் தனது வீட்டுக்கு ஒரே ஆண்பி;ள்ளையாக இருந்தும்கூட, தன் வீட்டுக் கடமைகளைத் துறந்து நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் கடமை செய்வதிலேயே ஈடுபட்டார்.

அவருடைய குடும்பத்தவர்களுடன் நெருங்கிப் பழகியவன் என்ற முறையில் நான் அவரிடம் ஒரு தடவை சகோதரியின் திருமணம் பற்றி கேட்ட பொழுது அதெல்லாம் அம்மா இருக்கிறார் பார்த்துக்கொள்வார் என்று சட்டெனக் கூறி முடித்துவிட்டு வேறு பேச்சுக்குள் என்னை இழுத்துக் கொண்டார்.

தமது சகோதரிகளின் மீது அன்பும் பாசமும் நிறையவே கொண்டிருந்த தோழர் நாபா, ஈழமக்களின் விடுதலைக்காக தனது குடும்பக் கடமைகளைத் துறந்து தன்னைத் தானே வைராக்கியப்படுத்திக் கொண்டார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர்தான் அவரது மூத்த சகோதரியாருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. சென்ற ஆண்டு இறுதியில் தோழரின் தாயாரும் காலமானார்.

பெற்றோர், சகோதரிகள் உறவைத் துறந்து தன்னைத்தானே வைராக்கியப் படுத்திக் கொண்டார் என்பதன் அர்த்தம், குடும்பப் பொறுப்புணர்வற்றவராகவோ அல்லது புரட்சிக்கும் குடும்ப உறவுக்கும் இடையில் ஒரு தனிநபரின் உறவு தொடர்பாக வரட்டுத்தனமான சித்தாந்தியாக இருந்தார் என்பதோ அர்த்தமல்ல.

தோழர் நாபா குடும்பம், நாடு என்பவற்றிற்கிடையில் தனிமனிதனின் பாத்திரம் எவ்வகையில் அமைகின்றது அமைய வேண்டும் என்பதில் தெளிவான கருத்தை சிந்தனையைக் கொண்டிருந்தார்.

தோழரின் திருமணம்

தோழர் நாபா என்றைக்கும் ஸ்தாபனத்தின் தோழர்களின் திருமண விவகாரங்களில் தலையிட்டதோ அல்லது அவர்களைத் திருமணம் செய்துகொள்ளக் கூடாதென்று வற்புறுத்துவதிலோ அல்லது அவ்வாறு ஆலோசனை கூறுவதிலோ அவர் ஈடுபட்டதில்லை. தோழர்களின் திருமண நிகழ்ச்சிகளில் தான் பங்கு பெறவாய்ப்புப் கிடைத்த போதெல்லாம் மகிழ்ச்சியோடு பங்கு பெற வந்திருக்கிறார். அவ்வாறு திருமணம் செய்யும் தோழர்களின் பணதேவைகளை உணர்ந்து முடிந்தளவுக்கு பணஉதவி செய்வதைத் தவறாமற் செய்து வந்திருக்கிறார். திருமணம் செய்வதும் செய்யாதிருப்பதும் ஒருவனின் தனிப்பட்ட விவகாரம் என்றே கருதி வந்திருக்கிறார். ஒருவன் திருமணம் செய்யாமலிருப்பது சமூகப் புரட்சிக்கு அவன் செய்யும் தியாகத்தின் அடையாளம் என்று அவர் என்றுமே கருதியதில்லை.

தோழர் நாபாவுக்கும் அவரது அன்பு மனைவியான ஆனந்தி அவர்களுக்குமிடையில் ஏறத்தாழ பத்து ஆண்டுகளாகக் காதல் நிலவியது. இது அவரோடு நெருக்கமாகப் பழகியவர்களில் மிகச் சிலருக்கு மட்டுமே தெரியும்.

பல்வேறு சூழ்நிலைக் காரணங்களால் அவர்களின் திருமணம் பல ஆண்டுகளாக ஒத்திப் போடப்பட்டே வந்தது. கடைசியில் தோழர் நாபாவிற்கும் ஆனந்தி அவர்களுக்குமிடையில் திருமணம் 1989ல் நடந்தேறியது.

திருமணம் செய்துகொண்ட போதிலும் தனக்கென ஒரு தனி வீட்டை அவர் அமைத்துக் கொள்ளவில்லை. ஸ்தாபனத்தின் தோழர்களோடு எப்படி அவர் இதுவரை வாழ்ந்து வந்தாரோ அதில் எந்தவித அடிப்படை மாற்றத்தையும் திருமணத்திற்குப் பின்னரும் அவர் ஏற்படுத்திக் கொள்ளவில்லை.

ஒரு சமூக புரட்சியாளன்

தோழர் நாபா ஒரு சமவுடைமைவாதி: பொதுவுடைமைப் புரட்சிவாதி: மார்க்சிசத்தின் மீது தளராத நம்பிக்கை கொண்டிருந்தார். ஆயுதங்களால் அல்ல வரலாற்றாலும் மக்களாலுமே புரட்சிகள் நடக்கின்றன என்பதையே நம்பினார். பெரும்பான்மையானவர்களின் முடிவுகள் சரியோ பிழையோ அதற்குக் கட்டுப்படுதலும், அதேவேளை சரியானவற்றுக்காகத் தொடர்ந்தும் அதற்குள்ளேயே நின்று போராடுதலும் என்பதை ஐயமுற ஏற்றுக் கொண்ட சிறந்த ஜனநாகவாதி: அதே வேளை அந்தப் பெரும்பான்மை, மனிதர்களின் இன, மொழி, மத, நிற, சாதி அடிப்பமைகளில் நிர்ணயிக்கப்படுமானால் அதை ஏற்காது அதையெதிர்த்துப் போராடும் சிறந்த அரசியற் போராளி.

தோழர் நாபா மார்க்சிச சித்தாந்தத்தின்மீது அசையாத நம்பிக்கை கொண்டிருந்தாலும். அதன்மீது குருட்டுத்தனமான சூத்திரவாதியாகச் செயற்பட்டதில்லை. மக்களின் வரலாறு, சமூக அமைப்பு, கலாச்சாரப் பண்பாடுகள் ஆகியவற்றைத் தெளிவாகப்புரிந்து கொண்டு செயற்பட்டார்.

வௌ;வேறு சமூகக் காலக்கட்டங்களிலும், அரசியற் சூழ்நிலைகளிலும் ஒரு புரட்சிகரக் கட்சியின் பாத்திரம் பற்றி, தெளிவான கருத்தைக் கொண்டிருந்தார்.

அவர் சொல்லாட்சி மிக்க தத்துவ வித்தன் அல்ல. ஆனாலும் அவரின் நடைமுறைகள் புரட்சிகரத் தத்துவங்களுக்கு முரணாகாமலேயே எப்போதும் அமைந்திருந்தன. ஈழமக்களின் தேசிய விடுதலைப்போராட்டத்தில் பிரதான வரலாற்றுப் பாத்திரத்தை அவர் வகித்தபோதிலும், எந்தச் சற்தர்ப்பத்திலும் குருட்டுத்தனமான குறுகிய தேசியவாதத்திற்கு ஈழ மக்களின் போராட்டத்தைப் பலியிட்டுவிடக் கூடாது என்பதில் மிகவும் நிதானத்தோடும் தெளிவோடும் நடந்துகொண்டார். இன ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடினார். ஆனால் இனவெறிக்கு எந்தக் கட்டத்திலும் அவர் இடமளிக்கவில்லை.

ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடிய அவர் எல்லா வகைப்பட்ட மக்களையும் நேசித்தார். ஈழமக்களின் தேசியவிடுதலைப் போராட்டத்துக்கு தலைமை தாங்கிச் சென்ற அதேவேளை சிங்கள மக்கள் மத்தியிலும் ஒரு சரியான சமூக அரசியல் புரட்சிப் போராட்டம் நடைபெற வேண்டுமென்பதில் அக்கறையோடு செயல்பட்டார்.

இதனால்தான சிறிலங்கா அரசாங்கம், அவர்மீது அரசைக் கவிழ்க்கச் சதிசெய்தார் என் வழக்குத் தொடுத்தது. இன்னமும் அவர் மீதான பிடிவாரந்தை விலக்கிக் கொள்ளவில்லை.

இந்திய - இலங்கை சமாதானம் ஒப்பந்தம் ஏற்பட்டு ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி வடக்கு கிழக்கு மாகாண அரசில் ஆளும் கட்சியாகிய போதிலும், பாராளுமன்றத்துக்குப் பல உறுப்பினர்கள் மக்களால் தேர்வு செய்யப்பட்டபோதிலும் கூட இலங்கை அரசு தோழர் மீது கொடுத்திருந்த வழக்கை வாபஸ் பெறவே இல்லை.

இலங்கைத் தீவில் வாழ்கின்ற தமிழ் பேசும் மக்கள் அனைவரினதும் அரசியல் பொருளாதார சுதந்திரத்திற்காகப் போராடிய தோழர் நாபா தமிழ்பேசும் மக்களின் சமுதாய அமைப்புக்குள்ளேயே நிலவும் சாதி ஒடுக்குமுறையை முற்றாக ஒழித்தே தீரவேண்டும் என்ற கங்கணத்துடன் செயற்பட்டு வற்திருக்கிறார்.

தமிழ் முஸ்லீம் மக்களிடையே ஒற்றுமையான வாழ்வு ஏற்பட்டேயாக வேண்டும் என்பதில் மிகத் திட்டவட்டமாகச் செயற்பட்டே வந்திருக்கிறார்.

தமிழ் முஸ்லீம் மக்களிடையே ஒற்றுமையான வாழ்வு ஏற்பட்டேயாக வேண்டும் என்பதில் மிகத் திட்டவட்டமாகச் செயற்பட்டே வந்திருக்கிறார்.

தமிழ் மக்கள் தொடர்பாக முஸ்லீம் மக்கள் மத்தியில் நிலவும் அவநம்பிக்கையைப் போக்கியே ஆக வேண்டும் என்பதற்காக அயராது உழைத்து வந்திருக்கிறார். முஸ்லீம் மக்களின் தனித்தன்மையையும் அங்கீகரி;த்து, அதேவேளை தமிழ் பேசும் மக்கள் அனைவரும் தமிழ் - முஸ்லீம் என்ற பேதமின்றி வாழ்வதற்குரிய உறுதியான அரசியற் தீர்வையும் முன்வைத்துப் பாடுபட்டு வந்திருக்கிறார்.

அதேபோல ஈழமக்கள் மத்தியில் நீண்டகாலமாக நிலவி வரும் பிரதேச வேறுபாடு உணர்வுகளுக்கெதிராகவும் கடுமையாகப் போராட வந்திருக்கிறார்.

எல்லோரும் ஓர் குலம் எல்லோரும் ஓர் இனம் எல்லோரும் இந்நாட்டு மக்கள் என்ற உணர்வு ஒரு தேசமக்களுக்கு ஏற்படவில்லையென்றால், அத்தேச மக்கள் ஒன்றுபட்டு வாழமுடியாது என்பதனை தோழர் நாபா விடாப்பிடியாக உணர்த்தி வந்திருக்கிறார்.

சிங்களப் பெரும்பான்மையினரின் ஒடுக்குமுறைக்கு உள்ளாகி, அதற்கெதிராகப் போராடுகின்ற தமிழ் மக்கள் தமக்குள்ளே பெரும்பான்மை சிறுபான்மை என்ற வடிவில் ஒடுக்கு முறையில் ஈடுபடுவதை அனுமதிக்க முடியாது என்பதில் மிகவும் உறுதியாக இருந்து வந்திருக்கிறார்.

அதேவேளை ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்களுக்கும் பின்தள்ளப்பட்ட பிரதேசத்தைச் சேர்ந்தவர்களுக்கும் முன்னுரிமை அளிப்பதன் மூலம்தான பரஸ்பர நம்பிக்கையை வளர்க்கவும் ஒற்றுமையைப் பலப்படுத்தவும் முடியும் என்ற நடைமுறையையும் அவர் கொண்டிருந்தார் என்பதையும் இங்கு நான் சுட்டிக் காட்டுவது அவசியமாகும்.

சிறிலங்கா அரசின் இராணுவமும் குண்டர்களும் தமிழ் மக்கள்மீது எவ்வளவுதான் கொடூரமாக நடந்து கொண்டபோதிலும் நாம் அதற்குப் பழிவாங்கும் நோக்குடன் சாதாரண சிங்கள மக்களுக்கு எதிராக ஆயுதம் தூக்கக் கூடாது என்பதில் சலனமற்ற அரசியற்கொள்கையை அவர் கடைப்பிடித்து வந்திருக்கிறார்.

அவ்வாறான போக்குகளை அநாகரிகமென்றும் காட்டுமிராண்டித்தனமென்றுமே முடிவு செய்தார்.

உறுதியான சர்வதேசியவாதி

தோழர் நாபா ஓர் உறுதியான சர்வதேசியவாதி. சர்வதேச உறவு சம்பந்தப்பட்ட கண்ணோட்டம் நிலைப்பாடு என்பது சம்பிரதாயம் சம்பற்தப்பட்ட விவகாரமுமல்ல, நேரத்துக்கு நேரம் சுயநல தேவைகளுக்குத் தக்கபடி எந்தவித கொள்கை நிலைப்பாடும் இல்லாமல் உறவுகளை ஏற்படுத்திக்கொள்கும் விஷயமுமல்ல என்ற கொள்கை ரீதியான கருத்தைக் கொண்டிருந்தார்.

எமது உள்நாட்டுக் கொள்கைக்கும் வெளிநாடுகள் சம்பந்தப்பட்ட கொள்கைக்கும் பரஸ்பர உறவுத்தாக்கம் உண்டு என்பதை உறுதியாக நம்பினார். குழப்பமான உள்நாட்டு கொள்கையைக் கொண்டிருப்பவர்கள் குழப்பமானதும் நேரத்தக்கு நேரம் தாவும் தன்மையையும் கொண்ட வெளிநாட்டுக் கொள்கையைக் கொண்டிருப்பார்கள். அவ்வாறான வெளிநாட்டுக் கொள்கையைக் கொண்டிருப்பவர்கள் தேவைப்பட்டால் தமது சுயநல நோக்கங்களுக்காக நாட்டையும் மக்களையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ விற்கவும் தயங்க மாட்டார் என்பதைத் தோழர் திடமாக நம்பினார்.

உள்நாட்டு விவகாரங்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் உறுதியான கொள்கைகள் வேண்டியதைப் போலவே வெளிநாடுகள் சம்பந்தப்பட்ட கொள்கைகளிலும் உண்மையாகவும் உறுதியாகவும் இருப்பது ஒரு புரட்சிகரக் கட்சிக்கு அடிப்படையாகும் என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டார். நடைமுறையில் கடைபிடித்து வந்தார்.

உலக ஏகாதிபத்திய அமைப்பும் அதன் ஏவலுக்குக் கட்டுப்பட்டுச் செயற்படும் நாடுகளும் நிறுவனங்களும் எம்மால், எதிர்க்கப்படவேண்டியவை என்றும் அப்போராட்டத்தில் அணிதிரண்டு நிற்கும் நாடுகளோடும் நிறுவனங்களோடும் நாமும் கைகோர்த்து நிற்க வேண்டும் என்பதுவும் தோழர் நாபாவின் சர்வதேசக் கொள்கையின் பிரதான பகுதியாகும்.

ஆரம்பத்தில் இந்திய அரசாங்கத்துக்கு ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தொடர்பாக பலத்த சந்தேகங்கள் இருந்தன. இதற்குப் பிரதான காரணம் சகோதர தமிழ் அமைப்புகளும் சில பெரிய தமிழ்ப் பிரமுகர்களும், இந்திய அரசின் உயர்மட்டத்தில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தொடர்பாக ஏற்படுத்தியிருந்த கம்யூனிசப் பயப் பிரமையே ஆகும்.

அப்படியிருந்தும் 1983ம் ஆண்டு ஒரு நாள் இந்திய அரசின் உயர் அதிகாரிகள் சிலர் தோழர் நாபாவுடன் பல்வேறு விஷயங்கள் தொடர்பாக உரையாடிக் கொண்டிருந்துவிட்டு, திடீரென்று அவர்கள் தோழர் நாபாவிடம் இந்தியா பற்றி உங்கள் அரசியல் நிலைப்பாடு என்ன என்று கேட்டார்கள். தோழர் நாபாவும் இந்தியாவிடமிருந்து உதவிகள் பெறுவதற்காக முகஸ்துதிக்காக ஏதும் சொல்லாமல், அவர்கள் கேள்விகேட்ட அதே வேகத்தில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அரசியல் அங்கமாக இந்திய அரசாங்கம் ஆகாதவரை நாங்களும் இந்தியாவின் நண்பர்களாக இருப்போம் என்று பதிலளித்தார்.

சர்வதேசக் கொள்கையின் அடிப்படையில் இந்தியா தொடர்பாக தோழர் நாபா வெளியிட்ட அவரது உள்ளக்கிடக்கையே இதுவாகும்.

பல்வேறு தமிழ்க்குழுக்களின் மத்தியில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தொடர்பாக இந்தியா எப்படி நடந்துகொண்டது என்பதை இங்கு நான் விபரிக்க முயற்சிக்கவில்லை. மாறாக, தோழர் நாபா இந்தியா தொடர்பாகவும் மற்றும் சர்வதேச நாடுகள் தொடர்பாகவும் கொண்டிருந்த கொள்கை நிலைப்பாடுகளை மதிப்பீடு செய்வதற்கு மேற் கூறப்பட்டுள்ள அவரது வாக்கியம் ஓர் உரைகல் என்பதை வலியறுத்த விரும்புகிறேன்.

உலகம் பூராவும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தேசிய விடுதலைப் போராட்டங்கள், இன ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள், நாடுகளை ஆக்கிரமித்து ஆதிக்கம் செலுத்தும் போக்குகளுக்கு எதிரான் போராட்டங்கள் ஆகியவற்றோடு ஈழமக்களின் விடுதலைப் போராட்டமும் ஓரங்கமாக பரஸ்பர உறவுகளோடு செயற்பட வேண்டும் என்பதில் தோழர் நாபா மிகுந்த அக்கறை காட்டி வந்தார்.

அது தொடர்பாக பல்வேறு ஆக்கபூர்வமான முயற்சிகளையும் மேற்கொண்டு வந்தார்.

தோழர் நாபா ஈழமக்களின் விடுதலைப் போராட்டத்தில் பிரதான பாத்திரத்தை வகித்தார் என்பதை வைத்துக்கொண்டு அவரை ஒரு பிரிவினைவாதியாக எடைபோட முடியாது.

ஒன்றுபட்ட சமதர்ம இலங்கையில் சுயநிர்ணய உரிமை அதிகாரத்துடன் கூடிய ஈழம் அமைந்திருப்பதே அவரது அரசியல் விருப்பமாகும்.

ஈழ மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்ததன் அடிப்படையில் ஒரு சமூக அரசியல் புரட்சி இலங்கைத் தீவு முழுவதிலுமாக நடைபெறுவதற்கான சமூக அரசியற் பொருளாதார நிலைமைகளில் இன்னும் வளர்ச்சி ஏற்படவில்லை.

அதே வேளை பௌத்த சிங்கள இனவாதிகளின் கொடூரமான இன ஒடுக்கு முறையிலிருந்து ஈழமக்களுக்கு ஓர் உடனடி அரசியற் தீர்வைப் பற்றிய முடிவை முன்னெடுத்தே தீரவேண்டிய நிலைமை இம்மதிப்பீடுகளின் அடிப்படையிலேயே ஈழமக்களின் விடுதலைப் போராட்டத்திற்குரிய தலைமைப் பாத்திரத்தைப் பொறுப்பேற்றார்.

அதே வேளை தவறாமல் சிங்கள மக்கள் மத்தியிலுள்ள சரியான புரட்சிகர அரசியல் சக்திகளை முன்னணி அரங்குக் கொண்டுவருவதற்காகவும் பாடுபட்டார். தம்மாலான வகையிலெல்லாம் அவர்களுக்குக் கைக்கொடுத்தார்.

இந்திய - இலங்கை சமாதான ஒப்பந்தம் இலங்கை இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியற் தீர்வை முன்வைத்த போது, ஒரு புறம் தமிழ் மக்களின் நிலையையும் மறுபுறம் திசை திரும்பிய ஈழப் போராட்டத்தின் போக்கையும் இன்னொருபுறம் இந்தியாவின் நட்புறவையும் கவனத்தில் எடுத்துக்கொண்டது மட்டுமல்லாது, அப்ஒப்பந்தத்தின் ஊடான தமிழ் - சிங்கள சமுதாயத்தில் எதிர்காலப் புரட்சி தொடர்பாக புதிய வளர்ச்சி நிலைமைகள் ஏற்படக் கூடும் என்றும் எதிர்பார்த்தே அவ்ஒப்பந்தத்துக்குத் தமது ஆதரவை தெரிவித்தார்.

அவ்ஒப்பந்தத்துக்கு உதட்டளவில் இல்லாது, அவ்ஒப்பந்தம் நடைமுறையில் நிறைவேற வேண்டும் என்ற அபிப்பிராயத்துடன் கடுமையாக உழைக்கும் வகையில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியை வழிநடத்தினார்.

இந்தியா - இலங்கை சமாதான ஒப்பந்தம் எவ்வளவுதூரம் எதிர்ப்பர்க்கைகளுக்கேற்ப நடைமுறையாகியது. இந்தியா எவ்வளவுதூரம் விடங்களைச் சரியாகக் கையாண்டது என்பெதல்லாம் வேறுவிடயங்கள்.

ஆனால், தோழர் நாபா ஒன்றுபட்ட இலங்கைக்குள் உண்மையான சமாதானமும் ஜனநாயகமும் ஒற்றுமையான வாழ்வும் ஏற்பட வழியேற்பட்டால் அதையேற்கவும் தயாராக இருப்பதையே அவ்ஒப்பந்தத்துக்குத் தெரிவித்த ஆதரவின் மூலம் வெளிப்படுத்தினார்.

சர்வதேசங்களினதும் மக்களை அவர் நேசித்ததற்கு மற்றொரு எடுத்துக்காட்டு, எந்தக் கட்டத்திலும் போதைப் பொருள் வர்த்தகம் மூலம் ஸ்தாபனத்துக்குப் பணம் திரட்டுவதை அவர் ஏற்றுக் கொள்ளாமையாகும்.

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி எவ்வளவுதான் பணநெருக்கடியைச் சந்தித்தபோதிலும் மூன்றுநேரக் கஞ்சிக்கே திண்டாடிய வேளையிலும் கூட போதைப்பொருள் வர்த்தகத்தை எதிர்த்து வந்தார்.
புலிகள் உட்பட ஈழவிடுதலைப் போராட்டத்தில் பலஅமைப்புக்கள் போதைப் பொருள் வர்த்தகம் மூலமே பண ஆதிக்கம் பெற்றன. பெற்றிருக்கின்றன. ஆனால் தோழர் நாபாவோ அது மனித இனத்துக்கே விரோதமானது என்ற உணர்வுடன் திட்டவட்டமாக போதைப்பொருள் எதிர்ப்புக் கொள்கையைக் கடைபிடித்து வந்திருக்கிறார்.

இந்தியாவுடன் நட்பு

இந்தியாவுடனான் நட்பை வளர்ப்பதிலும் பேணுவதிலும் தோழர் நாபா மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டு வந்திருக்கிறார். அது வெறுமனே உதவி பெறுவதற்காகவே என்று யாராவது கொச்சைப் படுத்த முனைந்தால் அது மிகவும் தவறாகும்.

இந்தியாவுடனான நட்புக்கு அவர் கொண்டிருந்த இலக்கணத்தை நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன். அத்துடன் ஈழமக்களின் விடுதலைப்போராட்டம் தொடர்பாக இந்தியா கொண்டிருக்கும் புவியியல்சார் அரசியல் முக்கியத்துவத்தையும் கணக்கிலெடுத்துக் கொண்டார்.

இந்தியாவும் எங்களைப் பயன்படுத்துகிறது. நாங்களும் இந்தியாவைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என சிலர் கூறியதுபோல ஒருவரையொருவர் பயன்படுத்துதல் என்பதன் அடிப்படையில் அவர் இந்தியாவுடனான நட்புறவை என்றைக்கும் கருதியதில்லை. மாறாக, பரஸ்பர நலன்கள் சம்பந்தப்படுகின்றபோது ஏற்படுகின்ற நட்புறவை அவர் கருத்தில்கொண்டே செயற்பட்டு வந்தார்.

இந்தியாவிலுள்ள அரசியல் பொருளாதார ஏற்றத் தாழ்வுகள், சுரண்டல், ஜாதி ஒடுக்குமுறைகள், இனங்களுக்கிடையே இன்னமும் சரியான உறவுகள் முழுமையாக ஏற்படுத்தாமை ஆகியவை புரட்சிகர மாற்றத்துக்குள்ளாகி, ஒரு புதிய இந்தியா உருவாக வேண்டும் என்பதில் தோழர் நாபா ஒரு சர்வதேசவாதி என்ற அடிப்படையில் விருப்பம் கொண்டிருந்தார்.

ஆனால், அது இந்திய மக்களால் சாதிக்கப்பட வேண்டிய விடயமே தவிர அதற்குள் வேற்று நாட்டு மக்களாகிய நாம் தலையிடுவது சரியுமல்ல, என்ற தெளிவான அரசியல் கண்ணோட்த்தையே அவர் கொண்டார்.

அதுமட்டுமல்லாது, இந்தியாவில் ஏற்படவேண்டிய புரட்சிகர மாற்றங்கள் பற்றி சிந்திப்பதற்கும் பேசுவதற்கும் செயல்படுவதற்கும் இந்திய மக்களுக்குள்ளேயே ஆற்றல் பரந்து நிறைந்து கிடக்கும்போது அதைப்பற்றி நாம் அலட்டிக்கொள்ள முற்படுவது புதிதாக எதையும் இந்திய மக்களுக்குச் சாதித்துக்கொடுத்துவிடப் போவதில்லை என்பதோடு நமது போராட்டத்துக்கு இந்திய அரசிடமிருந்தும் இந்திய மக்களிடமிருந்தும் கிடைக்கும் ஆதரவிற்கு நாமே தடைக் கற்களைப் போடுவதாகிவிடும் என்பதில் தோழர் அவர்கள் உறுதியான கருத்தைக் கொண்டிருந்தார்.

எமது போராட்டத்திற்கு உதவி செய்யும் தகுதியில்தான் இந்திய மக்கள் இருக்கிறார்களே தவிர, இந்திய மக்கள் மத்தியில் உள்ள பிரச்னைகளுக்குத் தீர்வு தரும் தகுதியில் நாம் இல்லை என்பதிலும், பொறுப்புச் சுமைகள் எதுவும் அற்ற தனிநபர் புத்தி ஜீவிகளை யுக்தி ஜீவிகளைப் போல ஒரு புரட்சி ஸ்தாபனம் செயற்பட முடியாது என்பதிலும், அவர் தெளிவுடன் நடந்துகொண்டதோடு, இந்திய அரசிடமிருந்தும் இந்திய மக்களிடமிருந்தும் எமது போராட்டத்திற்கு உதவியையும் ஆதரவையும் திரட்டுவதுதான் எமத இன்றைய வரலாற்று கடமையே தவிர வேறல்ல என்பதை உறுதியாகக் கடைபிடித்து வந்தார்.

ஆயினும், இந்தியாவிலுள்ள இடதுசாரி முற்போக்கு கட்சிகளுக்கும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்ணிக்குமிடையில் இயல்பாகவே நட்புறவுகள், மிக நெருக்கமாக வளர்ந்தன. காலப்போக்கில் இடதுசாரிகளல்லாத இந்திய தேசியவாதிகள்கூட ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியைப் பற்றிப் புரிந்துணர்ந்தார்கள், நட்புக்கரம் நீட்டினார்கள்.

இந்தியா தொடர்பாக, சந்தர்பத்துக்கு ஏற்ற போக்குகளைக் கண்டுபிடிக்காமல், ஒரு தொடர்ச்சியான நிலையான கொள்கை நடைமுறையை தோழர் பத்மநாபா கடைபிடித்து வந்திருக்கிறார். தேவைப்பட்டால் உரத்து வாழ்த்துப் பாடுவதும், தேவைப்படாதபோது கண்போக்குத் தெரியாமல் நடந்துகொள்வதும் அவரது நடைமுறையில் இருக்கவில்லை.

தோழர் நாபா இந்தியாவிடம் உதவிகேட்டிருக்கிறார், ஆதரவு வேண்டிநின்றிருக்கிறார். ஆனால் எந்தச் சந்தர்ப்பத்திலும் ஈழ போராட்டத்தையோ, தமிழ் பேசும் மக்களின் உரிமைகளையோ பேரம் பேசியதில்லை.

பணத்துக்காகவும், ஆயுதங்களுக்காவும், தங்களை மட்டுமே தலைவர்களாக அங்கீகரிக்கவேண்டும் என்பதற்காகவும் சிறிலங்கா அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவது தொடக்கம், மாகாண இடைக்கால நிர்வாகம்வரை பல முக்கியமான முடிவுகளை பேரம் பேசி விற்ற சம்பவங்கள் ஈழ மக்களின் விடுதலைப் போராட்ட வராலாற்றில் பல தடவைகள் நடைபெற்றிருக்கின்றன.

இவ்வாறு, வியாபாரம் செய்வதில் தமிழீழத் தாகம் கொண்டவர்களும், அவர்களின் வாலைப் பிடித்துத் தொங்கியவர்களும் பாரம்பரிய பாராளுமன்ற அரசியல்வாதிகளே தோற்றுப்போகும் அளவிற்கு நடந்துகொண்டார்கள்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் எல்லாம் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பல்வேறு வகையான பாதிப்புகளுக்கும் உள்ளாகி இருக்கிறது.

இந்தியாவுடன் பல்வேறு கட்டங்களிலும் நேரடியாகவும் வெளிப்படையாகவும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஒத்துழைத்து வற்திருக்கிற போதிலும், எந்த சந்தர்ப்பத்திலும் தோழர் பத்மநாபா பேரம் பேசும் அரசியல் வியாபாரத்தில் இறங்கியதில்லை. இந்தியாவுடனான உறவையும் அதனோடு ஒத்துழைத்துச் செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் அரசியல் பூர்வமாகத்தான் முடிவெடுத்திருக்கிறாரே தவிர வேறு வகைகளில் அல்ல.

அதைப்போலவே தமிழ்நாட்டிலும் எந்தவொரு அரசியற் கட்சியோடும் வெளிப்படையாக அடையாளம் காட்டிக்கொள்ளாமல் அங்குள்ள அரசியற் கட்சிகளுக்கிடையேயுள்ள முரண்பாடுகளில் தலையிடும் வகையான ஈடுபாடு கொள்ளாமல் எல்லா அரசியற் கட்சிகளினதும் எல்லா அரசியல்வாதிகளினதும் ஆதரவும் ஈழமக்களின் போராட்டத்திற்கு அவசியம் என்ற அடிப்படை நிலைப்பாட்டில் நின்று பிறழாது தோழர் நாபா செயற்பட்டு வந்திருக்கிறார். இந்த நிலைப்பாடு பண ரீதியாகவோ, பொருள் ரீதியாகவோ, பிரச்சார ரீதியாகவோ தனது ஸ்தாபனத்துக்கு உடனடிப் பயன்களைத் தராது என்று தெரிந்திருந்தும் குறுகியகால சுயநல இலாபங்களுக்காக சமுதாயத்தின் பொது நலன்களை ஆபத்துக்கு உள்ளாக்க முடியாது என்ற உறுதியான அரசியற் கொள்கையுடனேயே தோழர் நாபா தமிழ்நாட்டிலும் செயற்பட்டு வந்திருக்கிறார்.

சுதந்திர பங்களாதேஷ் உருவாக்கத்தின் பின்னர் இலங்கை வாழ் தமிழ்ப்பேசும் மக்கள் மத்தியில் இந்திய நாடானது இலங்கைக்கும் படையனுப்பி ஈழத்தின் விடுதலையைப் பெற்றுதர வேண்டும். என்ற எதிர்பார்ப்பை பரவலாக படிப்படியாக வளர்ந்து வந்த ஒன்றாகும். அந்த நம்பிக்கையை தமிழ் அரசியல் பிரமுகர்களும் மக்கள் மத்தியில் வளர்த்து வந்தார்கள்.

1983 ஜீலைக்கும் 1987ம் ஆண்டு ஜீலைக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்தியா இலங்கைக்குப் படையனுப்பி சிறிலங்கா அரசின் படைகளின் கொடூரத்திலிருந்து தங்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் ஈழத்தமிழர்கள் மத்தியில் மிகவும் வலுவாகவே நிலவியது. சில தமிழ்க்குழுக்கள் இந்தியா இலங்கைக்குப் படையை அனுப்பி ஈழத்தை மீட்டு அதன் அதிகாரத்தைத் தங்கள் கையில் இராணுவ ரீதியாக ஒப்படைக்க வேண்டும் என்ற ஆசை கொண்டிருந்தார்கள்.

இவ்வளவு நிகழ்வுகளின் மத்தியிலும் தோழர் நாபா உறுதியான நிலையான ஓர் அரசியல் நிலைப்பாட்டை, இந்தியாவுடனான நட்பு தொடர்பாக, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்கு வழங்கினார்.

இந்தியாவிடம் எமது போராட்டத்திற்கான உதவியைக் கோருகின்ற அதேவேளை, அந்தப்போராட்டத்தை வென்றெடுக்க வேண்டியவர்கள் எமது மக்களும் அவர்களின் அரசியல் இயக்கங்களுமே தவிர இந்திய ராணுவத்தின் படையெடுப்பு மூலம் அல்ல என்பதில் உறுதியான கொள்கையைக் கடைப்பிடித்து வந்தார்.

இந்தியாவிடம் ஈழத்தின் விடுதலைப் போராட்டத்துக்கு உதவியாக ஆயுத உதவிகள் கேட்டிருக்கிறார். மற்றும் பொருள் உதவிகள், இந்திய மண்ணைப் பின்தளமாகப் பயன்படுத்துவதற்கு உதவிகள் கேட்டிருக்கிறாhர்கள். ஆனால் எந்தக் கட்டத்திலும் இந்தியாவின் இராணுவ உதவியை அவர் கோரியதுமில்லை, எதிர்பார்த்ததுமில்லை. இந்தியாவிலுள்ள எந்த அரசியல் கட்சியும் இராணுவத்தை அனுப்பும்படி கோருவதையும் அவர் விரும்பியதில்லை.

இந்திய-இலங்கை சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டபோதுதான் அதை நடைமுறையில் அமுல்படுத்துவதற்கு சிறிலங்கா அரசை மட்டும் நம்ப முடியாது என்பதோடு, ஒப்பந்தத்தை அமுல்படுத்துவதற்கு வேறு அரசியற் பொறிமுறைகள் இலங்கையில் இல்லையென்பதன் அடிப்படையில்தான் இந்திய இராணுவம் இலங்கைக்கு ஒப்பந்தத்தை அமுல்படுத்தும் படையாக அனுப்பப்பட்டதை அவர் ஏற்றுக்கொண்டார். ஒப்பந்தத்துக்கு மட்டுமல்லாமல் அதை அமுல்படுத்தும் நோக்கில் அனுப்பப்பட்ட இந்திய அமைதி காக்கும் படைக்கும் வெளிப்படையாகவே ஆதரவை-ஒத்துழைப்பை வழங்கினார்.

இரகசியமாக ஒரு உறவும் மக்கள் மத்தியில் அதற்கு முரணாக வேறொரு அரசியலும் நடத்தும் அரசியற் போக்கிரித்தனம் தோழர் நாபாவிடம் இருந்ததில்லை. அதனால் எவ்வளவு அரசியல் நெருக்கடிக்கு உள்ளாகியபோதிலும் நேரடியாகத் துணிவுடன் முகம் கொடுத்தே வந்திருக்கிறார்.
இந்தியா பற்றியோ, சிறிலங்கா அரசு பற்றியோ இந்திய-இலங்கை சமாதான ஒப்பந்தம் பற்றியோ சரியான நிலையான புரிதலோ அரசியற் கொள்கையோ இல்லாமல் தனது குறுகிய சுயநல நோக்கங்களுக்குத் தக்கபடி இயங்கியதால் புலிகள் இந்திய இராணுவத்திற்கெதிரான யுத்தத்தைத் தொடங்கியதைத் தொடர்ந்தும் அதற்கெதிராக இந்திய இராணுவம் பாரிய அளவில் இராணுவ நடவடிக்கைகளைக் கட்டவிழ்த்து விட்டதனாலும், உள் நாடடிலும் சரி வெளிநாடுகளிலும் சரி இருந்த பெரும்பான்மையான ஈழத்தமிழர்கள் இந்தியாவுடனான நட்பு, இந்தியாவின் உதவியின் அவசியம் என்பது பற்றிச் சரியான சிந்தனை எதுவுமின்றி இந்தியாவுக்கு எதிரான கோஷங்களின் ஈடுபட்டிருந்தனர்.

இவ்வாறாக மக்கள் மத்தியில் பெரும்பான்மையினரும் சரி தமிழ்மக்கள் மத்தியில் இருந்த அரசியல் அணிகளும் சரி இந்தியா பற்றி நேரத்துக்கு நேரம் ஒரு போக்குக்கும் - ஒரு உணர்வுக்கும் உட்பட்டபோதிலும் தோழர் நாபா சூழல்களின் தற்காலிக பாதிப்புகளுக்கு எடுபடாமல், மக்கள் மத்தியில் குறுகிய காலத்தில் பிரபல்யம் பெறுவதற்கு எதுவழி என்று கருதாமல், ஈழ மக்களின் அடிப்படை நலன்களையும் நீண்டகால நலன்களையும் இந்தியாவுடனான பரஸ்பர நலன் உறவுகளையும் கருத்திற்கொண்டே உறுதியாக இந்தியா பற்றிய நிலைப்பாட்டைக் கடைபிடித்து வந்திருக்கிறார்.

இந்தியா அவர் விஷயத்தில் எவ்வளவு தூரம் அக்கறையோடு செயற்பட்டிருக்கின்றது என்பது வேறு விஷயம். ஆனால் அவர் இந்தியாவுடனான நட்பு பற்றிய விஷயத்தில் அரசியல் தெளிவோடும் கண்ணியத்தோடும் நடந்து வந்திருக்கிறார் என்பதுதான் எமக்குப் பெருமையளிக்கின்ற விஷயமாகும்.

இந்தியா தொடர்பாக தோழர் நாபாவும், அவரது வழிகாட்டுதலின்
அடிப்படையில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும் கொண்டிருந்த - கொண்டிருக்கும் நிலையான கொள்கை நிலைப்பாட்டின் சரி-பிழை பற்றி இன்று ஈழத்தமிழ் மக்கள் நன்கு புரிந்து கொண்டிருப்பார்கள் என்று நம்புகிறேன்.

ஆயுதம் மீதல்ல அரசியல் மீதே நம்பிக்கை கொண்டவர்

தோழர் நாபா வன்முறையற்ற அரசியல் போராட்டமுறை மூலம் மட்டும் இலங்கையின் தேசிய இனங்களிற்கிடையிலான முரண்பாட்டுக்கோ அல்லது வர்க்கங்களிற்கிமையேயான முரண்பாடடுக்கோ அடிப்பமையான நிரந்தரத்தீர்வைக் காண முடியம் என எந்தக் கட்டத்திலும் நம்பவில்லை எனினும், ஆயுதத்தின் மீது கவர்ச்சிகொண்ட ஒரு நபராக அவர் இருக்கவில்லை.

ஆயுதத்தை விட அரசியலுக்கே மிகுந்த முக்கியத்துவம் அளித்து வந்திருக்கிறார். ஆயுதம் ஒரு கருவி. அது எமது அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாகி விடக்கூடாதுளூ ஆயுதங்கள் மட்டும் இருந்தால் எதையும் சாதித்துவிடலாம் என்ற குருட்டு நம்பிக்கைகளுக்கு இடமளித்துவிடக் கூடாது என்பதில் உறுதியான சித்தாந்த நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார்.

ஸ்தாபனத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் அரசியல் தத்துவார்த்த அறிவும் வரலாற்று அறிவும் பெறவேண்டும் என்பதில் அவர் எப்போதும் அக்கறையெடுத்து வந்தார்.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆயுதங்கள் திரட்டல், ஆயுத நடவடிக்கைகள் என்பனவற்றினூடாக வளர்;ந்த கட்சியேயாகும். அரசியல் ரீதியாக ஸ்தாபன உறுப்பினர்களை அறிவும் தெளிவும் பெற வைப்பதில் எவ்வளவு தூரம் வெற்றி கண்டார் என்பது மதிப்பீடு செய்யப்பட வேண்டிய ஓர் விஷயமே எனினும், அவ்விஷயத்தில் இடையறாது முயற்சிகளே மேற்கொண்டு வற்திருக்கிறார். அதே ஆயுதங்களின் கவர்ச்சியின் ஆதிகத்துக்கு உட்பட்டிருந்த ஈழ விடுதலைப் போராட்டத்தின் மத்தியில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி உறுப்பினர்களிடையே அரசியலின் முக்கியத்துவத்தை உணரும் நிலையை சாதித்திருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை.

அதேபோல, மக்களையும் ஆயுதக் கவர்ச்சியை அடியொற்றித் திரட்டாமல், அரசியல் மயப்படுத்தலை அடிப்படையாகக் கொண்ட மக்கள் எழுச்சியை ஏற்படுத்த வேண்டுமென்பதிலேயே அவர் நம்பிக்கை கொண்டு செயற்பட்டு வந்திருக்கிறார் வெற்றிகரமான ஆயுத நடவடிக்கைகள் தன்னியல்பாகவே மக்களை எழுச்சிகொள்ளச் செய்து போராட்டத்தின் இலக்கினை வெற்றியீட்டச் செய்யும் என்ற கோட்பாட்டை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை.

மாறாக, மக்கள் அரசியல் மயப்படுத்தப்பட்ட ரீதியில் ஸ்தாபன ரீதியாக அணிதிரட்டப்பட வேண்டியவர்கள்ளூ மக்கள் மயப்பட்ட தொடர்ச்சியான அரசியல் நடவடிக்கைகளே மக்களை எழுச்சி கொள்ளச்செய்கின்றன. மக்களை முறைப்படுத்தப்பட்ட ஸ்தாபன வடிவில் அணி திரட்டி போராட்ட இலக்கினை நோக்கி வழிநடத்தி தலைமை தாங்குவது ஒரு புரட்சிகரக் கட்சியின் கடமை அந்த வகையிலான ஒரு புரட்சிகரக் கட்சியில்லாமல் வெறுமனே இராணுவக்குழுவொன்று - அது எவ்வளவுதான் ஆட்பலமும் ஆயுதபலமும் இராணுவத்திறனும் கொண்டிருந்தாலும் - அதன் இராணுவ நடவடிக்கைகள் மூலம் ஒரு விடுதலைப் போராட்டத்தின் வெற்றி இலக்கை அடையமுடியாது.

இராணுவச் சதிப்புரட்சி என்பதுவும் ஒரு விடுதலைப் போராட்டத்தின் வெற்றி என்பதுவும், எத்தனையோ அடிப்படை வேறுபாடுகளைக் கொண்ட வௌ;வேறுபட்ட நடவடிக்கைகளே தவிர ஒரே விஷயங்களோ அல்லது ஒரே அடிப்படைத் தன்மை கொண்ட விஷயங்களோ அல்ல என்பதில் மிகத் தெளிவோடும் உறுதியாகவும் நம்பிக்கை கொண்டு செயலாற்றி வந்திருக்கிறார்.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியானது வெறுமனே ஆயுதம் தாங்கிய ஒரு இராணுவக் குழுவாக ஆகிவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்தோடும் தோழர் நாபா கடமையாற்றி வந்தார்.

ஸ்தாபனத்தில் எப்போதும் ஆயுத ஆற்றலின் அடிப்படையில்லாமல் அரசியல் ஆற்றலின் அடிப்படையிலேயே ஒவ்வொரு பிரிவினதும் பகுதிகளினதும் தலைமைப் பொறுப்பாளர்களை நியமித்து வந்திருக்கிறார். அதேபோல கட்சியானது ஆயுத நடவடிக்கைகள் அமைப்புகளுக்குக் கொடுக்கும் அதே அளவு முக்கியத்துவத்தை தொழிற் சங்கங்கள், விவசாயிகள் அணிகளைக் கட்டுதல், பெண்களை, மாணவர்களை அணி திரட்டுதல் ஆகிய வேலைத் திட்டங்களிலும் மும்மரமாக ஈடுபடும் வகையில் அவ்விஷயங்களில் மிகவும் அக்கறையோடு வழிகாட்டி வந்திருக்கிறார்

அரசியலில் புனிதமான மனிதன்

தோழர் நாபா ஒரு கட்டுப்பாடான பரட்சிகரக் கட்சியைக் கட்டியெழுப்பும் வேலைத் திட்டத்தின் தலைமைப் பாத்திரத்தை வகித்து வந்த போதிலும் தலைமை வெறி, அதிகாரத் தலைக்கனம் கொண்டு செயற்பட்டதில்லை. தனக்கு மாற்றான கருத்துக் கொண்டவர்களை சரீர ரீதியாக ஒழித்துக் கட்டவேண்டும் என்ற எண்ணமோ நடைமுறையோ எள்ளளவும் அவரிடம் இருந்ததில்லை. ஒவ்வொரு தனிமனிதனினதும் அடிப்படையான ஜனநாயக உரிமைகளை எப்போதும் மதித்து நடந்து வந்திருக்கிறார். நட்பு சக்திகளுக்கிடையேயான முரண்பாடுகள் அரசியல் முறைகள் மூலம் தீர்க்கப்படக் கூடாது என்பதை மிகவும் உறுதியாகக் கடைப்பிடித்து வந்திருக்கிறார்.

தனது தலைமையின் கீழுள்ள அணியில் எல்லோரும் சேர்ந்து தனக்குக் கட்டுப்பட்டு இருக்கவேண்டும் என்ற எண்ணம், ஆசை அவரிடம் சிறிதளவும் இருந்ததில்லை.

தனது அணியிலிருந்து ஒருவன் பிரிந்து செல்வதற்கும், அவ்வாறு பிரிந்து செல்பவன் அல்லது விலக்கப்பட்டவன் அவன் விரும்பிய வேறொரு அணியில் சேருவதற்கும் அல்லது அவரவர் கருத்துக்கேற்ப தனியான அணிகளைக் கட்டிச் செயற்படுவதற்கும் எந்தவொரு போராளிக்கும் உரிமையுண்டு என்பதை உறுதியுடன் ஏற்று நடைமுறையில் செயற்படுத்தியவரே தோழர் நாபா.

ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் பல்வேறு சந்தர்ப்பங்களில் மாற்று அணிகளில் இருந்து பல போராளிகள் தமது அணிகளை விட்டு விலகி ஓடி உயிர்ப்பாதுகாப்புக்காக தோழர் நாபாவிடம் அடைக்கலம் தேடி வந்திருக்கிறார்கள். அவர்களுக்குப் பாதுகாப்பளித்து வேண்டிய உதவிகளை எப்போதும் தவறாமல் செய்து வந்திருக்கிறார். தனது ஸ்தாபனத் தோழர்களுக்கே சாப்பாடு வழங்குவதற்கு தங்குமிட வசதிகளைச் செய்து கொடுப்பதற்குப் பணத்துக்காகச் சிரமப்பட்ட வேளையிலும் மேற்கண்டவாறு ஓடிவருபவர்களுக்கு உதவி செய்வது தனது கடமை என ஏற்றுச் செயற்பட்டு வந்திருக்கிறார்.

மாற்று இயக்கங்களிலிருந்து விலகி அவ்வணிகளின் கொலை வெறிக்குத் தப்பி ஓடிவருபவர்கள் முதலில் புகலிடம் தேடி ஓடிவருவது பெரும்பாலும் தோழர் நாபாவிடமே. இதற்குக் காரணம் தோழர் நாபாவை நம்பலாம் என்று அவர்கள் கருதுகின்றமையேயாகும். அவர்களின் அந்த உள்ளக்கருத்துக்கு தோழர் நாபா என்றைக்குமே துரோகம் செய்ததில்லை.

தன்மீதும் தன் கட்சியின் மீதும் அவதூறுப் பிரச்சாரத்தை வாரியிறைத்தவர்களாயினும் சரி, ஏன்? மாற்று அணிகளில் இருக்கும் போது தன்னைக் கொல்வதற்குத் திட்டம் போட்டுச் செயற்பட்டவர்களைக்கூட, பின்னர் புகலிடம் என்று தேடி வந்தபோது அவர்களுக்கு எந்தத் தீங்கும் செய்தலில்லை என்பது மட்டுமல்ல, அவர்களுக்கு வேண்டிய உதவிகளையும் செய்வதில் சிறிதளவும் தயக்கம் காட்டாமற் செயற்பட்டு வந்திருக்கிறார்.

அதேவேளை அவ்வாறு விலகி ஓடி வருபவர்களை தனது ஸ்தாபனத்தில் சேர்த்துக் கொள்வதற்கு அவர் வலிந்து முயற்சித்ததுமில்லைளூ அவ்வாறானவர்களை அவர்கள் இருந்து விட்டு விலகி ஓடிவந்த அணிகளுக்கெதிராகப் பயன்படுத்தும் சதி வேலைகளிலும் அவர் ஈடுபட்டதில்லை.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியிலிருந்து விலகியவர்களை, அல்லது விலக்கப்பட்டவர்களை, மாற்றணிகள் பல, முன்னணிக்கு எதிரான சதிமுயற்சிகளில் ஈடுபடுத்திப் பயன்படுத்திய சம்பவங்கள் நிறையவே ஏற்கனவே இருந்தும்கூட, தோழர் நாபா அந்த நடைமுறையை எந்தச் சந்தர்ப்பத்திலும் கடைப்பிடித்ததில்லை.

தோழரைப் பொறுத்தவரையில் தமது அரசியலை ஒரு புனிதக் கடமையாகத்தான் ஏற்றுக் கொண்டு செயற்பட்டாரே ஒழிய, சூதாட்ட விளையாட்டாக அவர் அரசியல் நடத்தவில்லை.

அதிகாரத்துக்காக அரசியலில் எதுவும் செய்யலாம் என்பது தோழர் நாபாவின் அரசியலாக இருக்கவில்லை. அவரோடு கொஞ்சம் கூட நேர்மையில்லாமல் நடந்து கொண்டவர்களிடம் கூட அவர் நேர்மை நெறி பிறழாமல் வந்திருக்கிறார்.

மண்டையில் போடு, நெற்றியில் பொட்டுவை, மேலே அனுப்பி வை, பச்சை வள்ளத்தில் ஏற்றிவிடு, துரோகத்திற்குப் பரிசு துப்பாக்கிச் சூடு, கட்டுப்படாதவர்களுக்குத் தண்டனை மரணம் எனக்கொடூரமான சொற்றொடர்கள் மலிந்த நவீன காட்டுமிராண்டித்தனம் நிறைந்ததாக ஈழவிடுதலைப் போராட்டம் காணப்படுகின்றது. பல நூற்றுக்கணக்கான விடுதலைப் போராளிகள் அவர்கள் அங்கம் வகித்த அணிகளின் துப்பாக்கிகளுக்கும் கொலைவெறி மனநோய்களுக்கும் பலியாக்கப் பட்டிருக்கிறார்கள். இந்தச் சம்பவங்கள் மனித வரலாற்றின் எந்த வகையான பிற்போக்குத்தனமான மனித நேயமற்ற நிகழ்ச்சிகளுக்கும் சளைத்தவையல்ல.

ஆனால் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியை அந்தச் சகதிக்குள் சிக்கிவிடாமல், எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான் என மக்கள் எண்ணும் வகையேற்படாமல் காப்பாற்றிய மிகச் சிறந்த மனித நேயம் மிக்க தோழர் நாபாவை தலைவராகப் பெற்றமைக்காக தோழர்கள் அனைவரும் பெருமைப்படுவார்கள்.

தேசம், சமுதாயம், ஜனநாயகம், சமாதானம் மனிதாபிமானம் அனைத்தினதும் விரோதிகளான புலிகள், மாஃபியாக் கும்பலாக பாசிச வெறிபிடித்துச் செயற்பட்டு வந்தபோதிலும், அதற்கெதிராக ஆயுதம் தூக்கிப் போராடுவதற்கு அவர் எவ்வளவு காலம் தயக்கம் காட்டினார் என்பதை வரலாறு நிச்சயமாகக் கூறும்.

புலிகளுக்கெதிராகப் போராட வேண்டிய தவிர்க்க முடியாத கட்டங்கள் ஏற்பட்ட போதிலும்கூட ஒவ்வொரு கட்டத்திலும் புலிகளின் தவறுகளால் தமிழ் பேசும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள துன்பங்களையும், நட்டங்களையும் சுட்டிகாட்டி, அவர்கள் ஏனைய அணிகளுடன் சமாதானமாக வாழ முன்வரவேண்டும் என்று தமது பேச்சிலும் அறிக்கையிலும் அழைப்பு விடுத்துக்கொண்டே இருந்தார்.

புலிகளுடன் ஒரு சமாதான உறவை ஏற்படுத்திக் கொள்வதற்காக எத்தனையோ வகையான முயற்சிகளை மீண்டும் மீண்டும் முயன்றார். புலிகள் தாம் அழிந்து போகின்றவரை திருந்தவும் மாட்டார்கள்ளூ திருத்தவும் முடியாது என்பதை அவர் தெரிந்திருந்த போதிலும் சமாதானத்திற்கான முயற்சிகளில் தான் தொடர்ந்தும் ஈடுபடுவது தனது கடமை என்று கருதினார்.

ஐக்கிய முன்னணிக்கு அவரின் உழைப்பு

ஈழ மக்களின் விடுதலைப் போராட்டத்தில் இருக்கும் அத்தனை அணிகளுக்குமிடையில் ஐக்கிய முன்னணியை ஏற்படுத்துவதில் கடந்த சுமார் பத்து ஆண்டுகளாக தோழர் அவர்கள் மேற்கொண்டு வந்த தொடர்ச்சியான உழைப்பும், வகித்து வந்துள்ள பாத்திரமும் ஈழ மக்களின் வரலாற்றில் மிகவும் பிரதானமான ஒன்றாகும்.

ஐக்கிய முன்னணி ஒன்று ஏற்பட வேண்டும் - ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற விஷயத்தை அவர் எந்தக் கட்டத்திலும் தற்காலிக தந்திரம் பற்றிய விஷயமாகக் கருதவில்லை. மாறாக அதனை ஈழமக்களின் போராட்டம் தங்கு தடையற்ற ரீதியில் நீண்டகாலம் நடைபோடுவதற்கு அவசியமான மூலாதாரமான ஒரு விஷயமாகவே கருதினார்.

மாற்று அணிகளின் தலைவர்களையும், அவற்றின் பிரதான உறுப்பினர்களையும் அவர்களின் இடங்களுக்குத் தேடிச்சென்று பேசுவார். அதற்காக எத்தனை தடவைகளும் அவர்களிடம் செல்லவும், அவர்கள் அழைக்கும் இடங்களுக்கெல்லாம் சென்று பேசவும் தயாராக இருந்தார் - அவ்வாறு செயற்பட்டார். அதற்காக எந்தக் கௌரவமும் என்றைக்குமே பார்த்ததில்லை.

மதியாதார் வாசல் மிதியாதே! நித்தம் பார்க்கின் முற்றம் சலிக்கும் என்ற பழமொழிகளெல்லாம் ஐக்கியம் பற்றிய விஷயத்திற்குப் புறம்பானவை - பொருந்தாதவை என்றே கருதி இடைவிடாது உழைத்தார்.

தோழர் நாபாவிடம் புறம்கூறும் பழக்கமோ, அன்றில் ஒருவர் மற்றொருவருக்கிடையில் பகைமையை மூட்டிவிடும் பழக்கமோ அவரிடம் இயல்பிலேயே கிடையாது. அவரோடு பழகுபவர்களுக்கு அப்படிப்பட்ட சந்தேகம்கூட எழுவதில்லை. 1980ன் ஆரம்ப ஆண்டுகளில் பல்வேறு அணிகளுக்கிடையிலும் ஒரு தொடர்புப் பாலமாக அவரால் தொழிற்பட முடிந்தது.
பொது எதிரிக்கெதிரான நட்பு சக்திகளாக இருக்க வேண்டியவர்கள் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்என்ற நோக்கில் முரண்பாடான விஷயங்களில்கூட விட்டுக் கொடுத்து சமரசம் செய்து சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு ஈழ மக்கள் மத்தியில் தோழர் நாபாவுக்கு நிகர் வேறு யாரும் இருக்க முடியாது.

1983 ஜீலையின் பின்னர் காலத்தின் தேவைகள் பல அணிகளை ஐக்கிய முன்னணி பற்றிச் சிந்திக்கத் தூண்டின. தோழர் நாபாவின் கடுமையான உழைப்பும் முரண்பாடானவர்க்கிடையிலும் இணக்கத்தை ஏற்படுத்துவதில் அவருக்கிருந்த திறனும் தமிழீழ விடுதலை இயக்கம், ஈரோஸ் ஆகியவற்றின் தலைவர்கள் அக்காலகட்டத்தில் அளித்த ஒத்துழைப்பும் 1984ல் மூன்று அணிகளுக்குமிடையில் ஈழத் தேசிய விடுதலை முன்னணி என்ற பெயரில் ஓர் ஐக்கிய முன்னணி ஏற்பட வழிவகுத்தன.

பின்னர் ஓராண்டு கால இடைவெளிக்குள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பும் அதில் இணைந்து கொண்டது. அந்த ஒற்றுமையானது மக்கள் மத்தியில் ஏற்படுத்திய நம்பிக்கை, சிறிலங்கா அரசுக்கு முன்னாலும் உறுதியான அரசியல் நிலைப்பாட்டைத் தமிழ் பேசும் மக்களின் சார்பில் தெரிவிப்பதற்கு ஏற்படுத்தியிருந்த வாய்ப்பு என்பவையெல்லாம் எப்படியிருந்தன என்பதை நாடறியும்ளூ உலகமறியும்.

புலிகளின் அதிகார வெறிபிடித்த அடாவடித்தனங்களாலும், அதன் வாலில் தொங்கிய ஈரோஸினாலும் அந்த ஐக்கிய முன்னணி 1986ம் ஆண்டு மே மாதத்திற்கு மேல் நீடிக்க முடியாமல் போனது.

எனினும் அந்த குறுகிய கால இடைவெளியில் அந்த ஐக்கிய முன்னணியைப் பாதுகாப்பதிலும், வலுப்படுத்துவதிலும் தோழர் நாபா எடுத்த முயற்சிகள் மறக்க முடியாதவையாகும்.

ஈழத் தேசிய விடுதலை முன்னணி என்ற வடிவில் ஐக்கிய முன்னணி தொடர்ந்து செயற்படாமற் போனபோதிலும், தோழர் அவர்கள் தொடர்ந்தும் புதிய முயற்சிகளில் ஈடுபட்டார். அந்த முயற்சிகள் ஓர் அமைப்பு வடிவத்தைப் பெறாமற் போனபோதிலும், மாற்று அணிகள் பலவற்றோடும் ஓர் நல்லுறவைப் பேணுவதற்கும், மாற்று அணிகளுக்கிடையில் ஓர் சந்திக்கும் சூழல் பராமரிக்கப்படுவதற்கும் அம் முயற்சிகள் உதவிகரமாக இருந்தன.

ஈழவிடுதலைப் போராட்டத்தின் எந்தவொரு கால கட்டத்திலும் மேற்கொள்ளப்பட்ட ஐக்கிய முன்னணி முயற்சிகள் ஒவ்வொன்றிலும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பின்வாங்காது கலந்துகொண்டது என்பதோடு, அவ்விடயங்களில் ஓர் பார்வையாளனாகவோ அல்லது நேரம் பார்த்து நழுவுவதற்கு வசதியாக நுனிக் காலில் குந்தியிருக்கும் பின்வரிசைக்காரனாகவோ அல்லாமல் மிகவும் அக்கறையுடனும், ஆர்வத்துடனம் தனது பங்கைச் செலுத்தி வந்திருக்கின்றது. ஈழ மக்களின் உரிமைப் போராட்டத்தில் யார் ஆக்கபூர்வமான விஷயங்களுக்கு முன் முயற்சி எடுத்தாலும் அதற்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்குவது தமது கடமையென்றே தோழர் நாபா கருதிச் செயல்பட்டு வந்திருக்கின்றார்.

அவரது இடைவிடாத முயற்சியினால் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம் ஆகியவற்றிற்கிடையில் 1989ல் தமிழ்த் தேசிய சபை என்ற பெயரில் ஓர் ஐக்கிய முன்னணி ஏற்பட்டது.

தமிழ்ச் சமுதாயத்தில் ஐக்கியம் பற்றிய விஷயம் தொடர்பாக இருந்து வந்துள்ள ஒரு பழக்கத்தையும் இந்த இடத்தில் சுட்டிகாட்ட விரும்புகிறேன். அதாவது யார் யாரெல்லாம் ஐக்கியப்பட்டுச் செயற்படத் தயாராக இருக்கிறார்களோ - அதற்காக முயற்சிக்கிறார்களோ அவர்களிடம் மட்டுமே தமிழ்ப் பிரமுகர்கள் ஐக்கியம் பற்றி வலியுறுத்திப் பேசுவார்கள். அதே வேளை அவர்கள், யார் யாரெல்லாம் ஐக்கியத்துக்குத் தயாராக இல்லாமல் - ஐக்கியத்துக்கு எதிராகச் செயற்பட்டும் கொண்டிருக்கிறார்களோ அவர்களிடம் அதை வலியுறுத்தவும் மாட்டார்கள் - அவ்வாறானவர்கள் ஐக்கியத்தின் தேவையை உணர்வதற்கான நெருக்குதலைக் கொடுக்கவும் மாட்டார்கள். தமிழ் சமுதாயத்திலுள்ள ஒரு நோயென்றே இதைக் குறிப்பிட வேண்டும். தமிழ்ச் சமுதாயத்தின் இந்தப் பழக்கம் ஈழத்தின் போராட்ட அணிகளுக்கிடையே ஒற்றுமை ஏற்படாமைக்கு ஒரு பிராதான காரணம் ஆகும். தமிழ் மக்கள் தங்கள் பிள்ளைகளிடமே ஜனநாயக உரிமைகளை இழந்து போனதற்கும் இந்த நோய்வாய்ப்பட்ட வகையான பழக்கமே ஓர் அடிப்படைக் காரணமாகும்.

தோழர் நாபா மாற்று அணிகளின் எந்த மட்ட உறுப்பினர்களுடனும் எந்தவித ஏற்றத் தாழ்வுமின்றிப் பழகுவார் அவர்களுக்குத் தனது ஸ்தாபனத் தோழர்களைவிடக் கூடுதலாகவே மதிப்பம் மரியாதையும் அளித்துப் பழகுவார். போராட்ட அணிகளுக்கிடையே ஐக்கியம் ஏற்பட வேண்டுமானால், வெறுமனே தலைவர்கள் பேசி மட்டும் அது சாத்தியமாகாது. அணிகளின் உறுப்பினர்கள் மட்டத்தில் அந்த உணர்வு வளர வேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருந்தார்.

தனது ஸ்தாபனத்தின் மிகப்பிரதானமான உறுப்பினர்களைக் கூட மாற்று அணிகள் படுகொலை செய்த வேளையிலும்கூட, அந்த அணிகளுடன் இருந்த ஐக்கியத்தை முறித்துக் கொள்ளாமல் பேச்சு வார்த்தை மூலம் பரஸ்பர நம்பிக்கையையும், ஐக்கியத்தையும் வலுப்படுத்துவதன் மூலமே, அவ்வாறானா நெருக்கடிகளுக்கும் தவறான போக்குகளுக்கும் தீர்வுகாண வேண்டும் என்ற எண்ணப்பாட்டுடனேயே செயற்பட்டு வந்திருக்கிறார்.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்கும் ஏனைய எந்தவொரு மாற்று அணிகளுக்குமிடையில் ஐக்கிய முறிவு ஏற்பட்ட நிகழ்ச்சிகளை அவதானித்தால் அவை மிகவும் கடைசிக்கட்டத்pல் - யாராலும் அதற்கு வேறு வழியில் தீர்வு காண முடியாது என்ற நிலையின் பின்னர்தான் அந்த முறிவைக் காண முடியும். அப்போதும்கூட தோழர் நாபா அதை இறுதியானதாகவோ நிரந்தரமானதாகவோ எடுத்துக் கொள்ளாமல் தொடர்ந்தும் அந்த அணிகளுடனான ஐக்கியத்துக்காக முயற்சித்து வந்துள்ளதையே காணமுடியும்.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் பெரும்பாலான அணிகள் தமது உறுப்பினர்களுக்கு ஆரம்பத்திலும் அடிக்கடியும் போதிப்பது மாற்று அணிகளுக்கு எதிரான விரோத உணர்வையேயாகும். ஆனால் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் வரலாற்றின் எந்தக் கால கட்டதிலும் அவ்வாறான நடைமுறையை தோழர் நாபா அனுமதித்ததில்லை.

மாறாக, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியில் உறுப்பினர்களுக்கான அரசியல் வகுப்புகளில் ஐக்கிய முன்னணியின் அவசியம் என்பது ஓர் நிரந்தரப் பாடத் திட்டமாக இருந்து வந்திருக்கின்றது.

மக்கள் மத்தியில் நடமாடிய தோழன்

ஈழ மக்களின் விடுதலைப் போராட்டம் ஆயுதப் போராட்டமாகத் தீவிரமடைந்த போதிலும் தோழர் நாபா இளைஞர்களைத் திரட்டல், ஆயுதப் பயிற்சி அளித்தல், ஆயுதங்கள் திரட்டல், அவர்களை ஆயுத நடவடிக்கைகளில் ஈடுபடுத்துதல் என்ற குறுகிய வட்டத்துக்குள் மட்டும் நிற்காமல் போராட்டமானது வெறுமனே ஆயுதம் தாங்கிய இளைஞர்களின் விவகாரமாக மட்டும் இருந்து விடக் கூடாது - அது மக்கள் மயப்பட்டதாக இருக்கவேண்டும் என்பதில் மிகவும் அக்கறையோடு செயற்பட்டு வற்திருக்கிறார்.

மலையகத் தமிழ் மக்களின் போராட்டம் வடக்கு கிழக்கு மக்களின் போராட்டத்துடன் ஒருங்கிணைக்கப்படுதல் வேண்டும் என்ற கருத்து ஏற்கனவே ஈழ மக்களின் அரசியலில் இருந்து வந்திருந்தாலும், அதற்கான முயற்சிகளில் தானே நேரடியாகப் பங்கெடுத்து உழைத்து வந்திருக்கிறார். அவ்விடயத்தில் ஓர் குறிப்பிட்ட எல்லைக்கு மேல் வெற்றி காண முடியாமல் போனபோதிலும், தம்மாலான எல்லா வகையான முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வந்திருக்கிறார்.

சிறிலங்கா அரசினால் மிகத் தீவிரமாகத் தேடப்பட்டு வந்த நிலையிலும்கூட தானே நேரடியாக மலையத்தின் பகுதிகளில் மிகக் கடுமையாக உழைத்தார்ளூ இளைஞர்களைத் திரட்டினார்ளூ அரசியல் வகுப்புக்கள் நடத்தினார்ளூ அவர்கள் தொழிலாளர்களின் மத்தியில் புதிய தொழிற்சங்கம் ஒன்றைக் கட்டியெழுப்புவதற்கு வழி காட்டினார்ளூ மலையத் தோட்டங்களில் உள்ள தொழிலாளர்களின் தலைவர்களைச் சந்தித்து உரையாடினார்ளூ திரட்டப்பட்ட இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சிகளுக்கு ஒழுங்குகள் செய்தார். இவ்வாறாக மலையக மக்கள் மத்தியில் ஒருபுதிய எழுச்சியை ஏற்படுத்தும் நோக்குடன் அடிப்படையான வேலைத் திட்டங்களில் ஈடுபட்டார்.

மலையகத்தின் பல்வேறு காரணிகளினால் இன்னமும் அவர் எதிர்பார்த்த நிலைமை அங்கு ஏற்படவில்லையாயினும், அவர் விதைத்த விதைகள் அங்கு முளைவிட்டிருக்கின்றன. அது வளர்ந்து ஓர் ஆலவிருட்சமாகி சிறிலங்கா அரசின் ஒடுக்கு முறைகளுக்குச் சவாலாகும் என்பதில் ஐயமில்லை.

மலையகத்தின் தோட்டங்களில் மட்டுமல்லாது, இலங்கை ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்றகாலம் தொடக்கம் மேற்கொள்ளப்பட்ட பல இந்திய இலங்கை ஒப்பந்தங்களினால் நாடு கடத்தப்பட்ட மலையக மக்கள் மத்தியில் அவர் அயராது பாடுபட்டு வந்திருக்கிறார்.

இந்தியாவில் அவர்களுக்கு உரிய மறுவாழ்வு உதவிகள் கிடைக்காத வேளைகளிலும், தொழில் முதலாளிகளினால் அவர்கள் ஏமாற்றப்பட்ட சந்தர்ப்பங்களிலும் அந்தந்த இடங்களில் அவர்களைத் திரட்டி, அவர்களுக்கு வழிகாட்டி அவர்கள் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்கான போராட்டத்தை நடத்துவதற்கு பின்பக்க பலமாக நின்று செயற்பட்டு வந்திருக்கிறார்.

1979க்கும் 83க்கும் இடைப்பட்ட காலத்தில் அவர் இந்தியாவில் தங்கியிருக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டபோதெல்லாம் அவரது பிரதான வேலைத் திட்டம் இதுவாகவே இருந்து வந்திருக்கின்றது.

ஈழத்தில் ஒரு சுபிட்சமான நிலை ஏற்பட்டால், இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டு அங்கு இன்னும் அந்நியர்களாகவே வாழ்ந்து வரும் மலையகத் தமிழ் மக்களில் எவ்வளவு பேர் ஈழத்துக்கு வரத் தயாராக இருக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் ஈழத்தில் ஒரு சுபிட்சமான புதிய வாழ்வு அமைத்துக்கொடுக்க வேண்டுமென்பதே தோழர் அவர்களின் விருப்பமாகும்.

ஈழவிடுதலைப் போராட்டத்தில் பெண்கள் ஆயுதம் தாங்கிப்போராடும் நிலை பரவலாக ஏற்பட்டதற்குக் கால்கோளிட்டவர் தோழர் நாபாவே. 1983க்குப் பின்னரும் கூட ஆரம்ப காலங்களில், பெண்களைப் போராட்டத்தில் ஈடுபடுத்துவதை இழிவுபடுத்துவதன் மூலம் யாழ்ப்பாண சமூகத்தின் பழமைவாதிகளின் ஆதரவைத்தேடிக் கொள்ள முற்பட்டவர்கள் - பெண்களை ஆயுதப் போராட்டத்தில் அணி திரட்டுவது சமூக விரோதச் செயல் என்று பிரச்சாரம் செய்தவர்கள் எல்லாம் காலப் போக்கில் தவிர்க்க முடியாமல் தங்கள் அணிகளிலும் பெண்களை இணைத்துப் பெருமையடித்துக் கொண்டதற்கு வழிகாட்டியது - கட்டாயமான சூழலைத் தோற்றுவித்தது - ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியே.

தோழர் ஒரு மக்கள் சமுதாயத்தின் போராட்டத்தில் பெண்களின் பாத்திரம் பற்றிய தெளிவான உறுதியான அரசியற் பார்வையோடு போராட்டத்தின் முன்னணிக்குப் பெண்களையும் கொண்டு வரும் வகையில் ஸ்தாபனத்துக்கு வழி காட்டினார். அரசியல் இயக்கம் நடத்துவதிலும், ஆயுதம் தாங்கிப் போராடுவதிலும், அவர்களின் ஆண்களுக்குச் சளைத்தவர்கள் அல்லர் என்ற நம்பிக்கையையூட்டி அவர்களது ஆற்றலை வெளிப்படுத்தும் வாய்ப்புக்களையும் நிலைமைகளையும் ஏற்படுத்தினார். இதற்குப் பின்னரே ஏனைய அணிகளும் தவிர்க்க முடியாமல் பெண்களுக்கும் ஆயுதப் போராட்டத்தில் இடமளிக்க முன்வந்தார்கள்.

பரந்துபட்ட பெண்கள் பிரிவுக்கும் சமுதாயத்தின் ஆயுதம் தாங்கிய போராட்டத்திற்கும் நேரடியாக வெளிப்படையான சம்பந்தம் இருக்கக்கூடாது என்ற பழமை வாதத்துக்கு ஆட்பட்டிருந்த தமிழ்ச் சமுதாயத்தில், பெண்களை முன்னணிக்குக் கொண்டுவந்த பெருமை தோழர் நாபாவையும் அவரது ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியையுமே சாரும்.

அதே போலவே, மாணவர் அமைப்பின் பாத்திரத்தையும், ஈழ மக்களின் போராட்டத்தில் அரசியற் தாக்கமுடைய ஓர் சக்தியாக ஆக்கிய பெருமையும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்கே உண்டு. தமிழ் மாணவர் பேரவைக்குப் பின்னர் சுமார் பத்து ஆண்டுகள் ஈழ மக்களின் அரசியலில் மாணவர் அமைப்பு எதுவும் தலை தூக்கவில்லை.

பாரம்பரிய பாராளுமன்ற அரசியல்வாதிகளே மக்கள் மத்தியில் அரசியற் கருத்துக்களை சிந்தனைகளை தமது வசதிக்கேற்ற வகையில் வழிப்படுத்திக் கொண்டிருந்த நிலையிலிருந்து, மாற்றமான வகையில் ஆகும்படி ஒரு காத்திரமான பாத்திரத்தை ஆற்றிய ஸ்தாபனம் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைமையின் கீழ் அதன் ஓர் அங்கமாகச் செயலாற்றி வந்த ஈழ மாணவர் பொதுமன்றமேயாகும்.

ஈழமக்களின் அரசியல் வரலாற்றில் ஒரு காலமாற்றத்திற்கான திருப்புமுனையில் குறிப்பிடக்கூடிய வரலாற்றுப் பாத்திரத்தை ஈழ மாணவர் பொது மன்றம் ஆற்றியிருக்கின்றது.

காலத்தினதும் சூழலினதும் தேவை கருதி ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியை ஒரு தலை மறைவு ஸ்தாபனமாக வைத்துக் கொண்டு மக்கள் மத்தியில் ஒரு முன்னணி ஸ்தாபனமாக மாணவர் அமைப்பை முன்னிறுத்தி மக்களிமையே புதிய அரசியல் விழிப்புணர்வைத் தூண்டும்வகையிலும் புதிய சிந்தனைகளின் பால் மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் ஸ்தாபனம் செயற்படுவதற்கு உரிய தெளிவான அரசியற் தலைமையை தோழர் நாபா வகித்து வந்துள்ளார்.

ஒரு புரட்சிகர அரசியற் தலைவன்

தோழர் நாபா பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் சந்தேகத்திற்கும் கேள்விக்கும் இடமற்ற ஒரு தலைவனாக இருந்தபோதிலும், அவர் எந்தச் சந்தர்ப்பத்திலும் தனது தலைமையை ஒரு பதவியாகக் கருதவில்லை. மாறாக வரலாறு தம்மீது சுமத்திய பொறுப்பாகவே கருதினார் அதற்குத் தக்கபடி பொறுப்புணர்ச்சியோடு நடந்து கொண்டார்.

எமது தனிப்பட்ட அதிகாரங்களுக்காகப் போராடவில்லைளூ மக்களின் நலன்களுக்காகவே போராடுகிறோம் என்பதில் மிகவும் தெளிவோடு ஸ்தாபனத்தை வழிநடத்தி வந்துள்ளார்.

அவர் தன் தேசத்தை மிகவும் நேசித்தார் அதன் மண்ணை நேசித்தார்ளூ ஆனால் மக்களுக்காகவே அந்த மண்ணை நேசித்தார். மக்களை அழிவுப் பாதையில் செலுத்தி மண்ணை மீட்கலாம் என்று அவர் என்றைக்கும் சிந்தித்ததில்லை.

மக்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள்ளூ மக்கள் எவ்வாறு சிந்திக்கிறார்கள் என்று பார்த்து அதற்குத் தக்கபடி அரசியல் நடத்தினால் மக்களின் செல்வாக்கோடு இருக்கலாம் என்னும் வண்டிக்குப் பின்னால் மாட்டைக் கட்டி வண்டியோட்டும் அரசியற் தலைவனாக அவர் இருக்கவில்லை. மாறாக மக்களைப் புரிந்துகொள்ள வேண்டும். அந்தப் புரிதலை அடிப்படையாகக் கொண்டு சரியான இலக்கை நோக்கிச் சரியான பாதையில் மக்களை வழிநடத்தும் அரசியலையே அவர் கடைப்பிடித்து வந்துள்ளார்.

தானும், தனது ஸ்தாபனத்தின் உறுப்பினர்களும் தான் மக்கள்ளூ ஏனையவர்கள், எல்லாமே பயன்படுத்தப்பட வேண்டிய பொருட்கள் என்னும் மானுட உணர்வற்ற அரசியலை அவர் ஏற்றிருக்கவில்லை - அவ்வாறான அரசியலை அவர்அறவே வெறுத்திருந்தார்.

அவரிடம் இருந்த தேச பக்தியானது புரட்சிகர தேச பக்தியே ஒழிய குறுகிய தேசிய வெறியோ, இனவெறியோ அல்ல. அவரின் அரசியலில் காட்டுமிராண்டித் தனம் இருக்கவில்லை வளர்ச்சியடைந்த சமூகத்துக்குரிய பண்புகளையே காண முடியும். அவரது புரட்சி வாழ்க்கையின் வரலாறானது ஆத்திரத்திற்கும் வெறுப்புக்கும் உரியதல்ல மாறாக எந்த நல்ல மனிதனும் பின்பற்ற விரும்பும் வகையில செழுமையானதாகும்.

ஒரு புரட்சிகர அரசியற் போராளிக்கு சுயவிமர்சனம், விமர்சனம் பற்றிய தெளிவான கண்ணோட்டமும் நடைமுறையும் தேவையான விஷயமாகும். அவை தோழர் நாபாவிடம் குறைவின்றி இருந்தது.

அவர் தான்விட்ட தவறுகளை ஒத்துக்கொள்ளவோ சுயவிமர்சனம் செய்து கொள்ளவோ தயங்காதவர். அவர் தனிப்பட்ட நபர்களின் நிறைகளைப் பற்றி எங்கும் பேசுவார்ளூ ஆனால் குறைகளைப் பற்றி பகிரங்கத்தில் பேசமாட்டார்ளூ தன்னை எவராயினும் தனிப்பட்ட ரீதியில் நாசமான முறையில் பகிரங்கத்தில் விமர்சனம் செய்தாலும்கூட அதற்கு எந்தவித அரசியல் முக்கியத்துவமும் அளிக்கமாட்டார்ளூ அதற்குப் பழிக்கு பழி வாங்கும் வகையில் சிறிதளவும் நடந்து கொள்ள மாட்டார்.

தோழர் நாபா, அவரது திறமையின் அடிப்பமையிலேயே தலைவராக இருந்தார். மற்றவர்களின் பலவீனத்தைப் பயன்படுத்தி தனது தலைமையை ஏற்படுத்தியவரல்ல அவர்.

திறமைசாலிகளைத் தட்டிக் கொடுத்து அவர்களை முன்னணிக்குக் கொண்டுவருவதில் எம்மத்தியில் தோழர் நாபாவுக்கு நிகர் அவரேதான்.

தோழர் நாபாவின் தலைமையின் கீழ் செயற்படுவது மிகவும் எளிமையானதாகும். அதை இன்னொரு வகையில் கூறுவதானால் தோழர் நாபாவின் தலைமையின் கீழ் செயற்படத் தகுதியில்லாதவன் வேறெருவரது தலைமையின் கீழும் செயற்படத் தகுதியில்லாதவன் ஆவான்.

அதேபோல தோழர் நாபாவுடன் இணைந்து வேலைசெய்வதற்குச் சிரமப்படுபவன் எவனும் வேறு எவருடனும் இணைந்து செயற்பட மாட்டான். இதைப் பலருடைய உதாரணங்களில் நாம் கண்டிருக்கிறோம்.

ஒரு புரட்சிகர ஸ்தாபனத்திற்கு ஒழுங்கு, கட்டுபாடுகள் அவசியம் என்பதை அவர் நிராகரித்ததில்லை. ஆயினும் எடுத்ததற்கெல்லாம் சட்டம், திட்டங்கள், ஒழுங்குக் கட்டுப்பாடுகள் என்று மனித இயல்புகளைப் புரிந்துகொள்ளாமல் கண்மூடித்தனமாக யாந்திரீக ரீதியாக ஒரு தலைமை நடந்து கொண்டால் அந்த ஸ்தாபனம் கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாகிவிடும் என்பதை உறுதியாக நம்பினார்.

ஒரு கட்சியானது ஒரு கையளவு குழுவாக இருப்பதற்கும் ஒரு பரந்த ஸ்தாபனமாக இருப்பதற்கும் இடையேயுள்ள வேறுபாட்டை அவர் தெளிவாகப் புரிந்து கொண்டே தனது தலைமைப் பாத்திரத்தை மிகவும் பொறுமையோடும் சகிப்புத்தன்மையோடும் நிறைவேற்றி வந்திருக்கிறார்.

தோழர் நாபா அவர்கள் ஸ்தாபனத்தின் தோழர்கள் மீது எவ்வளவு அன்பும் அக்கறையும் செலுத்தினாரோ அதே அளவுக்கு அவர்களது குடும்பத்தினர் மீதும் அன்பு செலுத்தினார். ஸ்தாபனத்தின் ஊழியர்களின் பொறுப்பில் இருக்கும் குடும்ப உறுப்பினர்களையும் ஸ்தாபனம் பராமரித்தேயாக வேண்டும் என்பதில் பணநெருக்கடிகளின் மத்தியிலும் பொறுப்போடு கவனி;த்தே வந்திருக்கிறார்.

ஸ்தாபனத்தில் உறுப்பினர்கள் இறக்க நேரிடுகின்ற போதெல்லாம் அவர்களுக்கு தியாகிப் பட்டம் சூட்டி ஓர் அஞ்சலி நிகழ்ச்சி நடத்துவதோடு தனது கடமை முடிந்தது என்றவிதமாக அவர் என்றைக்கும் நடந்து கொண்டதில்லை. மிகவும் ஆபத்தான சூழ்நிலைகளின் மத்தியிலும் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்து ஆறுதல் கூறி முடிந்த அளவு பொருளாதார உதவிகளை வழங்குவதில் கவனத்தோடும் பொறுப்போடும் பணியாற்றி வந்திருக்கிறார்.

இந்திய - இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் பின்னர்; கிழக்கு மாகாணம் சென்ற தோழர் அவர்கள் அந்தப் பகுதிகளைச் சேர்ந்த ஸ்தாபனத்துக்காக இறந்த தோழர்களின் பெற்றோர்களையும் மற்றும் குடும்ப உறவினர்களைச் சந்தித்ததுதான் அவர் அங்கு மேற்கொண்ட முதற்கடமையாகும். தோழர்களின் குடும்பங்களிலிருந்து அவர்களை வெறுமனே தனி மனிதர்களாகப் பிரித்துப் பார்க்கமுடியாது என்ற கருத்தையே தனது நடைமுறையாகக் கடைப்பிடித்து வந்திருக்கிறார்.

தோழர்களே! நண்பர்களே!

தோழர் நாபா அவர்களுடன் பதினெட்டு ஆண்டுகள் மிக நெருக்கமாகப் பழகவும், அவரை ஆழமாகப் புரிந்து கொள்ளவும் எனக்குக் கிடைத்த பெரும் வாய்ப்பின் காரணமாக அவரைப் பற்றி மேலும் மேலும் உங்களுக்குக் கூறிக் கொண்டிக்கவே ஆசைப்படுகிறேன். எனினும் இங்கு தேவை கருதி எனது எழுத்துக்களை சுருக்கிக் கொள்கிறேன்.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி வடக்கு கிழக்கு மாகாணசமைக்கான தேர்தலில் பெரும்பான்மையான இடங்களைப் பெற்று ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய போதிலும் அதில் முதலமைச்சர் பதவியேற்பதற்கு அவர் நிராகரித்து விட்டார். என்னை முதலமைச்சராகப் பதவியேற்கும்படி அறிவித்தார்.

அவரது சொல்லுக்கு மறுத்துப் பேசி எனக்கோ மற்றும் தோழர்களுக்கோ பழக்கமில்லை. ஆனாலும் அவர் என்னை முதலமைச்சராக்கிய அடுத்த கண நேரம் தொடக்கம் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் மாகாண அரசின் எந்தவொரு விவகாரத்திலும் அவர் தலையிட்டதேயில்லை.

மாகாண நிர்வாகத்துடனோ அதன் அதிகாரிகளுடனோ அல்லது ஊழியர்களுடனோ அவர் எந்த வேளையிலும் ஆளும் கட்சியின் தலைவன் என்ற முறையில் தொடர்பு கொண்டதேயில்லை. மாறாக, தானும் சாதாரண மக்களில் ஒரு உறுப்பினராகவே தொடர்புகளைப் பேணி வந்திருக்கிறார்.

மாகாண அரசின் செயற்பாடுகள் தொடர்பாகக் கட்சியானது கொள்கை ரீதியில் அடிப்படைகளை வகுத்தது. அதனடிப்படையில் நானும் ஏனைய அமைச்சர்களும் சபையின் உறுப்பினர்களும் செயற்பட பூரண சுதந்திரம் வழங்கிய சிறந்த ஜனநாயகவாதி ஆவர்.

தோழர் நாபா பற்றி நான் கூறுகையில் அவரிடம் காணப்பட்ட பலவீனங்களைப் பற்றிக் கூறவில்லையே என யாரும் நினைக்கக் கூடும். ஆனால் அதுபற்றிச் சுருக்கமாகக் கூறுவதானால், அவர் மிகச் சிறந்த நல்ல மனிதப் பண்புகளைக் கொண்டிருந்ததுதான் அவரிடம் காணப்பட்ட பலவீனம்.

அவரது நல்ல பண்புகளைச் சிலர் அவரது பலவீனமாகக் கருதி நடந்து கொண்டிருக்கிறார்கள் - அவரை ஓர் ஏமாளியாகக் கருதி ஏமாற்ற முற்பட்டிருக்கிறார்கள். அவ்விடயங்களில் தோழர் ஏமாந்தாரா அல்லது அவரை ஏமாற்ற முற்பட்டவர்கள் ஏமாந்தார்களா என்பது வேறு விஷயம். ஆனால் அவவாறான நோக்குடையவர்களுக்கு இடமளித்திருக்கிறார் என்பதை அவதானிக்கலாம். உலகில் நல்ல மனிதர்கள் இவ்வாறன நிலைமைக்கு உள்ளாவது தவிர்க்க முடியாதது.

ஒரு அரசியல் ஸ்தாபனத்தை நடத்துவதில் சூழ்ச்சிகள் பற்றிய நுட்பத்திறன்கள் தேவைப்படும். அந்த வகையான விஷயங்களில் அவர் திறமைசாலியாக இருந்தார் என்று கூறமாட்டேன்.

இவ்விஷயங்களில் மற்றவர்களின் சூழ்ச்சிகளை, தந்திரங்களைப் புரிந்துகொள்ளும் திறன் அவருக்கு இருந்தது. எனினும் அவற்றுள் அகப்பட்டுவிடாமல் இருப்பதற்குத்தான் முயற்சிகளை மேற்கொள்வாரே ஒழிய அந்தச் சூழ்ச்சிகள், தந்திரங்களுக்கு எதிர்ச் சூழ்ச்சிகள் எதிர்த் தந்திரங்கள் போடுவதில் அக்கறை காட்ட மாட்டார். அவரிடம் குடியிருந்த அரசியல் மாண்புகளும் அதற்கு இடமளிக்கவில்லை.

அவரை ஒரு தனி மனிதனாகப் பார்ப்பதை ஒருபுறம் விட்டுவிட்டு ஒரு தோழனாக ஒரு தலைவனாகப் பார்த்தாலும், அவற்றின் அம்சங்களும் அவருடைய தனி மனித குணாம்சங்கள் மீதே வளர்ந்திருந்தன. அவற்றில்; பாசாங்கோ, போலித்தனமோ இருக்கவில்லை.

நல்ல மனிதர்களைக் காண்பதே அரிதான இந்த உலகில் அதிலும் அரசியல் உலகில் தோழர் நாபாவிடம் குடிகொண்டிருந்த அம்சங்கள் அமானுடத் தன்மையுடையவையாகத் தான் தோன்றும். தோழர் நாபாவுடன் நெருங்கிப் பழகி அவரை உண்மையாகப் புரிந்து கொண்டவர்களே அவை நிச்சயமாக இந்த உயர்ந்த தோழரிடம் அமைந்திருந்ததைக் கண்டுகொள்வார்கள்.

தோழர் நாபாவின் இழப்பு என்பது வெறுமனே எமது ஸ்தாபனத்துக்கு மட்டுமல்ல ஈழ மக்களுக்கும், இலங்கைத் தீவின் அனைத்து மக்களினத்துக்கும், விடிவுக்கான போராட்டத்திற்கும், சர்வதேச ரீதியில் உள்ள புரட்சியையும் ஜனநாயகத்தையும் சமாதானத்தையும் விரும்பும் சக்திகளுக்கும் ஒரு பேரிழப்பாகும்.

தோழர் நாபாவின் வாழ்க்கை வரலாறு இந்த உலகில் நல்ல பண்புகளையும் உயரிய இலட்சியங்களையும் வேண்டிநிற்பவர்களுக்கு ஒரு பாடமாகும்.

தோழர் நாபாவைத் தலைவராகத் தந்தமைக்காக அவரது தோழர்கள் அனைவரும் வரலாற்றுக்கு நன்றியுடையவர்களாக இருப்போம்.

தோழர் நாபாவின் நினைவுகளும் கனவுகளும் அவரது தோழர்களில் ஒருவன் உள்ளவரையும் முன்னெடுத்துச் செல்லப்பட்டு அடுத்த தலைமுறையிடமும் கையளிக்கப்படும் என உறுதியாக நம்புகிறேன்.

சுவீஸில் தியாகிகள் தினம்;..27.06.2010

Friday, June 18, 2010

யாழ்ப்பணத்தில் தியாகிகள் தினம்==லண்டனில் தியாகிகள் தினம்=ஜேர்மனியில் தியாகிகள் தினம்== கனடாவில் தியாகிகள் தினம்==சுவீஸில் தியாகிகள் தினம்=சென்னையில்

Friday, 18 June 2010
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியின் நிறுவனர் தோழர் பத்மநாபா உட்பட கொல்லபட்ட தோழர்களை நினைவு கூறும் நிகழ்வு
20 வருடங்களுக்கு முன்னர் சென்னை சூளைமேட்டில் புலிகளின் துப்பாக்கிச் சூட்டுப் பிரயோகத்தில் உயிரிழந்த ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் செயலாளர் நாயகம் க.பத்மநாபா உள்ளிட்ட 12 பேரின் நினைவுதினம் எதிர்வரும் 19ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளது.

13 ஆவது திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப் படவில்லை வடக்கு கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜபெருமள் தெரிவித்துள்ளார்.

Friday, 18 June 2010
இந்திய இலங்கை உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேல் கடந்துள்ள போதிலும், 13 ஆவது திருத்தச் சட்ட மூலம் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என வடக்கு கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜபெருமள் தெரிவித்துள்ளார்.
13 அவது திருத்தச் சட்ட மூலத்தை நடைமுறைப்படுத்துவதில் காணப்படும் சிக்கல்கள் குறித்து ஆராய்வதற்கு நிபுணர்கள் குழுவொன்றை நியமிக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஒரே பாய்ச்சலில் அதிகாரப் பகிர்வினை மேற்கொள்ள முடியாது எனவும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு வலுவான மக்கள் ஆணை கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதிகாரப் பகிர்வினை மேற்கொள்வதற்கு சிறந்த வாய்ப்பு கிட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமூகத்தில் வேறுபாடுகள் காணப்படுகின்றமை இயல்பான நிலைமையே, குடும்ப உறுப்பினர்களுக்கு இடையிலேயே மாற்றுக் கருத்துக்கள் காணப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

அதிகாரப் பகிர்வு தொடர்பிலான முனைப்புக்களை அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டும் எனவும், அதற்கு தமிழ் மக்கள் சரியான முறையில் ஆதரவு தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் முன்னாள் தலைவர் பத்மநாபாவின் 20 ஆவது நினைவு நிகழ்வில் கலந்து கொள்ளும் நோக்கில் வரதராஜ பெருமாள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.

படை வீரா;கள் போன்று நாட்டுக்காக தியாம் செய்ய அரசாங்க ஊழியா;களும் முன்வர வேண்டும்!

Friday, 18 June 2010
தேசிய வெற்றி விழா வைபவத்தில் ஜனாதிபதி கோரிக்கை
இரண்டு இலட்சம் படை வீரா;கள் கடந்த 4 வருடங்களாக ஊணின்றி உறக்கமின்றிச் செய்த தியாகத்தின் காரணமாகவே நாம் கொடிய பயங்கர வாதத்தைத் தேற்கடித்து உலக அரங்கில் நிமிh;ந்து நிற்கிறௌம்.
இதேபோன்றதொரு தியாகத்தை எமது அரசாங்க ஊழியா;களும் செய்வாh;களானால் ஆசியாவிலேயே ஆச்சரிய நாடாக எமது இலங்கையை மாற்றியமைக்க முடியூம் என்பது எனது நம்பிக்கை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.
பயங்கரவாதத்தை முழுமையாக தோற்கடித்ததன் வெற்றியைக் கொண்டாடும் தேசிய வெற்றி விழா மற்றும் இராணுவ வெற்றி அணிவகுப்பு இன்று கொழும்பு காலிமுகத்திடலில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது. இவ்வைபவத்தில் நாட்டு மக்களுக்கு உரையாற்றும்போதே அவா; இவ்வாறு கூறினாh;. இங்கு ஜனாதிபதி மேலும் கூறியதாவது.

வன்னியில் நடைபெற்ற இறுதிக்கட்ட யூத்தத்தின்போது ஆயூதங்களைக் களைந்துவிட்டு வெள்ளைக்கொடியூடன் சரணடைந்த புலிகளை இராணுவத்தினர் கொலை செய்தார்கள் என்ற குற்றச்சாட்டு நாட்டிற்கு இழைக்கப்படும் பாரிய துரோகமாகும்
எமது தாய் நாட்டை பழிவாங்கும் கொடூர எண்ணம் படைத்தவா;களே எமது படை வீரா;கள் மீது இவ்வாறான அபாண்டத்தைச் சுமத்துகின்றனா;.
எமது உள்நாட்டுப் பிரச்சினைகளை நாமே தீh;த்துக்கொள்வோம். இதில் வெளிநாட்டவார்கள் தலையிட நாம் அனுமதியோம்.
பயங்கரவாதத்தின் கொடூரத்தை அனுபவித்த நாடுகளில் இலங்கையா;களின் பங்கு துயரம் மிக்கது. பயங்கரவாதத்துக்கு எந்த நாடுகள் துணைபோகின்றனவோ அந்த நாடுகளே பயங்கரவாதத்தால் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றன.

படையினரின் உயித்தியாகங்கள் மூலம் பயங்கரவாதத்துக்கு எதிராக நாம் அடைந்த வெற்றியின் பிரதிபலன்களை வடபகுதி மக்கள் அடைந்து மகிழ்வடையவேண்டும். அதற்கான ஆக்கபூHவ நடவடிககைகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

இதன் அடிப்படையில் இவ்வருட இறுதிக்குள் யூத்தத்தால்; சிதைவடைந்த வடக்குப் பகுதி முழுவதும் வழமைக்குத் திரும்பிவிடும் என எதிபார்க்கிறேன்.
கடந்த 30 வருட காலப் போராட்டத்தின் காரணமாக நாம் நாட்டைப் பரிவினையில் இருந்து விடுவித்துள்ளோம். இனியூம் இந்த நாட்டைப் பிளவூபடுத்த எவருக்கும் இடமளியோம்.

எமது நாட்டு மக்கள் யூத்தம் காரணமாக இழந்த அனைத்தையூம் மீண்டும் பெற்றுக்கொள்ள மஹிந்த சிந்தனை மூலம் வழியேற்படுத்தியூள்ளோம்.
வீரம் என்பது வெளிநாடுகளிலிருந்து தருவிக்கும் பொருளல்ல. அது எமது சரித்திரத்துடனும் எமது சம்பிரதாயத்துடனும் பிண்ணிப் பிணைந்தது.

நாட்டிலுள்ள சகல இன மக்களையூம் ஐக்கியப்படுத்தும் நோக்குடனேயே இந்த தேசிய விழா கொண்டாடப்படுகின்றது. வெளிநாடுகளின் நிபந்னைகளுக்கு அடிபணிந்து எமது சுதந்திரங்களைப் பறிகொடுத்து உதவிகளைப் பெற நாம் தயாரில்லை.
நாட்டுக்காக நாம் இரத்தமும் கண்ணீரும் சிந்துவதைத் தவிக்க முடியாது. இவ்வாறான தியாகங்கள் மூலம் இந்த நாட்டில் அண்மைக் காலத்தில் சூரஇவீர சரித்திரம் படைத்தவா;கள் எமது படையினா;. அவார்கள் மரணித்த பின்னா; ஏனையவார்களைப்போல் சமாதிகளில் உறங்க மாட்டாகள்ர் இந்த நாட்டு மக்களின் இதயங்களில் வாழ்வார்கள் என்றும் ஜனாதிபதி கூறினார்,

இலங்கையில் ஒப்பந்த ஊழியர்களாக சீன கைதிகளே வருகை,

Friday, 18 June 2010
இலங்கையில் நெடுஞ்சாலைப் பணிகளையும், ரயில்வே பணிகளையும் மேற்கொள்வதற்காக, சிறைக் கைதிகளாக இருந்த 25,000 தொழிலாளர்கள் சீனத்தில் இருந்து வந்துள்ளது குறித்து இந்திய அரசு விழிப்போடு இருக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கை,

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மறுசீரமைக்க இந்தியா ரூ.1,000 கோடி அனுமதித்துள்ளது. ஆனால் இந்த மறு சீரமைப்பிற்கான ஒப்பந்தத்தை சீனாவிடம் இலங்கை அரசு அளித்திருக்கிறது. இதிலிருந்து, இலங்கையில் உள்ள தமிழர்களின் நலனுக்காக அனுப்பப்பட்ட இந்திய மக்களின் வரிப் பணம் சீனாவை சென்றடைகிறது என்பது தெளிவாகிறது.

இந்தியாவின் பணம் சீனாவிற்கு செல்கிறதே என்பது தற்போது எனது முக்கிய கவலை இல்லை. இதுவரை பாதுகாப்பாக உள்ள இந்தியாவின் தெற்குப் பகுதியில், இந்தியாவிற்கு எதிரான வேவு பார்க்கும் பணிகளை தொடங்கும் குறிப்பிட்ட நோக்கத்துடன் சீன ஒற்றர்களும், உளவுத் துறையினரும் சீனத் தொழிலாளர்களுடன் இலங்கைக்குள் ஊடுருவி இருப்பதாக எனக்குத் தகவல் கிடைத்துள்ளது. தமிழ்நாட்டின் தெற்கு கடலோரத்திலிருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் தான் இலங்கை உள்ளது.

1962 ஆம் ஆண்டைய சீன ஆக்கிரமிப்பு இந்திய தேசத்தையே உலுக்கியது. அப்போதிருந்த இந்திய அரசு சகோதரத்துவத்து மனப்பான்மையுடன் சீனாவோடு அபரிமிதமாக உறவாடிக் கொண்டிருந்த போதுகூட, சீனா இந்தியாவின் மீது தாக்குதல் தொடுத்தது. குறுகிய நோக்குப் பார்வையும், தவறான முடிவுமே அந்த சமயத்தில் இந்தியா தோல்வியுற்றதற்கு காரணம்.

அதே வரலாறு மீண்டும் நிகழ்வதற்கு வாய்ப்பிருக்கிறது. வட இலங்கையில் சீனர்கள் பெருமளவில் குவிந்திருக்கிறார்கள் என்ற ஊடகங்களின் தகவல் உண்மையாக இருக்குமேயானால், இந்தியாவிற்கு ஆபத்து எதிர் நோக்கியிருக்கிறது என்பதில் எவ்விதமான ஐயமும் இல்லை. அண்மையில் ராஜபட்ச இந்தியாவிற்கு வந்த போது, இந்த பிரச்சினையை இந்தியா உறுதியுடன் முன் வைத்திருக்க வேண்டும்.

இலங்கையில் தமிழர்

குடும்பங்களுக்கு ஆபத்து

வட இலங்கையில் சீனர்கள் குவிக்கப்பட்டுள்ளதன் மூலம் மற்றுமொரு கடுமையான ஆபத்து ஏற்கெனவே மிக மோசமாக உருக்குலைந்துள்ள இலங்கைத் தமிழர்களுக்கு காத்திருக்கிறது. 27 ஆண்டு கால இனப் போர் பல உயிர்களை பலி வாங்கியுள்ளது. பெரும்பாலான ஆண்கள் இந்த இனப் போரில் உயிரிழந்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இன்னமும் பாதுகாப்பு முகாம்களில் அடைக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சூழ்நிலையில், தற்காத்துக்கொள்ளும் சக்தியற்று பலவீனமாக உள்ள முதியவர்கள், ஊனமுற்றோர் மற்றும் பெண்கள் அடங்கிய மீதமுள்ள தமிழர்களை சீனாவிலிருந்து வந்துள்ள 25,000 சிறைக் கைதிகள் தங்களுடைய அத்துமீறல்களுக்கு உட்படுத்த ஆரம்பித்தால், அங்குள்ள தமிழர்களின் அவல நிலைமை மேலும் விபரீதமாகும்.

இந்தப் பிரச்சினையில் காலதாமதமின்றி இந்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை அரசுடன் கடுமையாகப் பேச வேண்டும்; கடினமாக நடந்து கொள்ள வேண்டும்.

தமிழக முதலமைச்சர், தமிழ்நாட்டின் பாதுகாப்பு மற்றும் இலங்கையில் உள்ள தமிழ் இனத்தின் பாதுகாப்பு ஆகிய பிரச்சினைகளில் கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்க முடியாத காரணத்தினால், இந்திய அரசாங்கத்திற்கு இந்த வேண்டுகோளினை நான் விடுக்கின்றேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

Tuesday, June 15, 2010

தியாகிகள் தினம்

மொழியூ+டான அறிவூ வளர்ச்சி இனங்களுக்கிடையில் புரிந்துணர்வைக் கட்டியெழுப்பும்!

Tuesday, 15 June 2010

மக்களின் மொழியூ+டான அறிவூ வளர்ச்சியானது இனங்களுக்கிடையில் அன்னியோன்ய புரிந்துணர்வைக் கட்டியெழுப்புவதுடன் அதன் மூலம் அமைதியான அபிவிருத்தி நிறைந்த நாட்டைக் கட்டியெழுப்பவூம் முடியூம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

தமிழ் சிங்கள எழுத்தாளர் ஒன்றியத்தின் சிங்கள தமிழ் மற்றும் முஸ்லிம் எழுத்தாளர்களின் சாகித்திய நூல்கள் நேற்று ஜனாதிபதிக்குக் கையளிக்கப்பட்டன. அலரி மாளிகையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நூல்களைக் கையேற்று உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தாh;. அவா; தொடா;ந்து கூறுகையில்.

தமிழ் மற்றும் சிங்கள மொழி மூலமான நூல்களின் வரவானது இனங்களுக்கிடையில் நம்பிக்கையையூம் நல்லுறவையூம் கட்டியெழுப்புவதற்கு அடித்தளமாக அமையூம் என மேலும் தொpவித்தாh;;.
இந்நிகழ்வின் போது தமிழ் சிங்கள மொழி மூலமான 17 நூல்கள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டன.(எஸ்.டி.எம்.ஐ.10.00)

கொழும்பில் தற்காலிக போக்குவரத்துத் திட்டம்.

Tuesday, 15 June 2010

இராணுவ வெற்றியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அணிவகுப்பு ஒத்திகைக்காக தற்காலிக போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

கொழும்பு காலிமுகத் திடல் சந்தியிலிருந்து செரமிக் சந்தி வரையிலான பகுதி இக்காலப் பகுதியில் போக்குவரத்துக்காகத் தற்காலிகமாக மூடப்படவுள்ளதெனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

குறிப்பாகக் காலி வீதியூடாகக் கொழும்பு நோக்கிப் பயணிக்கும் சகல பார ஊர்திகளும் கொள்ளுப்பிட்டிச் சந்தியால் திரும்பிப் பித்தளைச் சந்தியால் கொழும்பு நோக்கிப் பயணிக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இலகுரக வாகனங்கள் காலிமுகத்திடல் சுற்றுவட்டத்தின் வலப்புறமாக மாக்கான் மாக்கார் மாவத்தையூடாகத் திரும்பிக் கொம்பனித் தெரு ஊடாக கொழும்பு நோக்கிப் பயணிக்கமுடியும்.

யாழ், கிளிநொச்சி வாக்காளர் பதிவுகள் திருப்தியில்லை.

Tuesday, 15 June 2010

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களின் வாக்காளர் பதிவு நடவடிக்கைகள் திருப்தி அளிக்கும் வகையில் அமையப்பெறவில்லை என கபே அமைப்பு தெரிவித்துள்ளது. வாக்காளர் பதிவு நடவடிக்கைகள் உரியமுறையில் மேற்கொள்ளப்பட்டவில்லை என குறித்த தேர்தல் கண்காணிப்பு குழு குற்றம் சுமத்தியுள்ளது.

கிராம உத்தியோகத்தரின் அலுவலகத்திற்கு செல்லும் நபர்களுக்கு மட்டுமே வாக்காளர்களை பதியும் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருவதாகவும், அதிகாரிகள் வீடு வீடாக செல்லவில்லை எனவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இதன் காரணமாக ஒரே கிராமத்தில் சிலருக்கு வாக்குரிமை இல்லாமல் போகக் கூடிய அபாயம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஏனைய மாவட்டங்களில் வாக்காளர் பதிவு நடத்தப்படுவதற்கும் வடக்கில் வாக்காளர் நடத்தப்படும் விதத்திற்கும் வித்தியாசம் காணப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது. வடக்கு மாகாணத்தில் வாக்காளர் பதிவினை உரிய தரத்தில் பேணுவதற்கு அரசாங்கம்

எகிப்திலிருந்து உயர்மட்டக் குழு இலங்கை வருகை,

Tuesday, 15 June 2010

எகிப்து நாட்டு உதவி வெளிவிவகார அமைச்சர் அஹ்மத் அமீன் பத்தல்லாஹ் தலைமையிலான உயர்மட்ட குழு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று கொழும்பு வந்து சேர்ந்தது.

இக்குழுவினர் இன்று 15ம் திகதி பிரதி வெளிவிவகார அமைச்சர் கீத்தாஞ்சன குணவர்தனவுடனும், நாளை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் மேல் மாகாண ஆளுநர் எஸ். அலவி மெளலானா ஆகியோருடன் சந்திப் புக்களை நடத்தவுள்ளனர் என வெளிவிவகார அமைச்சு அதிகாரியொருவர் கூறினார்.

Sunday, June 13, 2010

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்குப் புலிகளால் அச்சுறுத்தலா,?

Sunday, June 13, 2010
அடுத்த வாரம் சென்னையில் ஆரம்பமாக இருக்கும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு புலிகளுக்கு ஆதரவான சக்திகளால் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன என்று பீதி கிளப்பி விடப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு பொலிஸார் மாநாட்டை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

கோவையில் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை இந்த மாநாடு நடத்தப்பட உள்ளது. தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி இம்மாநாட்டுக்குத் தலைமை தாங்குவார். உலகின் பல நாடுகளில் இருந்தும் தமிழ் அறிஞர்கள் 7000 பேர்வரை கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஈழத் தமிழர்கள் கடந்த வருடம் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தால் பேரழிவுகளைச் சந்தித்து இன்றும் முட்கம்பி முகாம்களுக்குள் முடக்கி விடப்பட்டிருக்கும் நிலையில் இப்படியொரு மாநாடு இந்நேரத்தில் அவசியம் தானா? என்று ஏராளமான விமர்சனங்கள் பல தரப்பட்ட தமிழர் அமைப்புக்களில்தமிழ்புத்திஜீவிகளிடம்இருந்தும் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

இம்மாநாட்டில் ம.தி.மு.க பங்கேற்க மாட்டாது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இம்மாநாட்டுக்கு புலிகளுக்கு ஆதரவான சக்திகளால் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன என்று பீதி கிளப்பி விடப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு பொலிஸார் மாநாட்டை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

இது குறித்து கோவை நகரப் பொலிஸ் ஆணையாளர் சைலேந்திரா பாபு தெரிவித்தவைவருமாறு:
நாம் எல்லா விதமான தடுப்பு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.எமது உயர் அதிகாரிகள் இவ்விடயத்தில் மிகுந்த கரிசனை எடுத்துச் செயற்பட்டு வருகிறார்கள்.மாநாட்டுக்குப் பூரண பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது”

சட்டவிரோத வேலை வாய்ப்பு நிலையம் மீது நடவடிக்கை,

Sunday, June 13, 2010

வெளிநாட்டு வேலை வாய்ப்புச் சட்டத்தை மீறும் வகையில் குருநாகலில் இயங்கிவந்த வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலையத்திற்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இந்த முகவர் நிலையம் அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து, இந்தியா மற்றும் ஐரோப்பாவில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு இலங்கை மாணவர்களை அனுப்பிவைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்துவந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தெரிவித்தது.

பதிவு செய்யப்பட்ட வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலையங்கள் தமக்குரிய நடவடிக்கைகளைத் தவிர ஏனைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான அனுமதி இல்லை

தீவிரவாதிகளின் புகலிடமாக மாறி வருகிறது தமிழகம்,

Sunday, June 13, 2010

தி.மு.க. அரசை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று மத்திய அரசை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளர். விழுப்புரம் அருகே ரயில் தண்டவாளம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:

கடந்த நான்கு ஆண்டு காலமாக தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்து வருகிறது என்றும், அன்றாடம் கொலை, கொள்ளை ஆகியவை அதிகரித்துக் கொண்டே வருகின்றன என்றும், தீவிரவாதம், பயங்கரவாதம் ஆகியவை அதிகரித்துக் கொண்டே வருகின்றன என்றும் நான் பொதுக்கூட்டங்களிலும், எனது அறிக்கைகளின் வாயிலாகவும் சுட்டிக்காட்டி வந்திருக்கிறேன்.

இதற்கேற்றாற் போல், சனிக்கிழமை அதிகாலை விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே ரயில் தண்டவாளத்தை மர்ம நபர்கள் குண்டு வைத்து தகர்த்துள்ளனர். மலைக்கோட்டை ரயில் இப்பகுதி வழியாக வருவதற்கு சில நிமிடங்கள் முன்பு தண்டவாளத்தில் குண்டு வெடித்துள்ளது. இதைத் தொடர்ந்து உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு மிகப் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டிருக்கிறது. இதனால் பெரும் உயிரிழப்பு தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீரழிந்து கொண்டிருக்கிறது என்பதற்கும், தீவிரவாதிகளின் புகலிடமாக தமிழகம் மாறி வருகிறது என்பதற்கும் இதுவே எடுத்துக்காட்டு. கடந்த நான்கு ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதற்கு பதிலாக சட்ட விரோதிகளின் ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அமைதி கலாசாரம் என்று இருந்த நிலை மாறி, ஆயுதக் கலாசாரம் கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்து விட்டது.

அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் இங்கிலாந்து நாட்டிலுள்ள ஸ்காட்லாந்து யார்டு போலீஸ�க்கு நிகராக விளங்கிய தமிழகக் காவல் துறை, மற்றவர்கள் பார்த்து கை கொட்டி சிரிக்கும் அளவுக்கு இன்று கேலித் துறையாக செயலிழந்து காணப்படுகிறது.

போலி மருந்து, காலாவதி மருந்து, போலி உணவுப் பொருட்கள், போலி மருத்துவர்கள், கடத்தல், பதுக்கல், தீவிரவாதம், பயங்கரவாதம் ஆகியவைதான் தி.மு.க. ஆட்சியின் நான்கு ஆண்டு கால சாதனைகள். சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதற்கு பதிலாக, சட்ட விரோத ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டுள்ளது. தி.மு.க. ஆட்சி தமிழகத்தில் தொடருமேயானால், சட்டம்-ஒழுங்கு என்பதே இல்லாமல் போய்விடும்.

எனவே, மத்திய அரசு தனது கடமையை உணர்ந்து, விரைந்து செயல்பட்டு, தி.மு.க. அரசை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும். தமிழ்நாட்டை பேரழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளர்.

Friday, June 11, 2010

ஜெனரல் சரத் பொன்சேகாவின் கென்யா பயணம்;பாதுகாப்பு அமைச்சே தீர்மானிக்கும்,

Friday, 11 June 2010
சபாநாயகர்.சமல்.ராஜபக்ஸவினால்.கோரிக்கைக்.கடிதமொன்று கையளிக்கப்படும் பட்சத்தில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் கென்யாவில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற சங்கத்தின் பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வதற்கான அனுமதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது.

குறித்த கோரிக்கை விடுக்கப்படாத பட்சத்தில் இராணுவ பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ தளபதியும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினறுமான ஜெனரல் சரத் பொன்சேகாவை, குறித்த மாநாட்டில் கலந்துகொள்வதற்கான அனுமதி வழங்குவதா? இல்லையா என்பது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சே தீர்மானிக்கும் என்று அமைச்சின் பேச்சாளரான லக்ஷ்மன் ஹுலுகல்ல தெரிவித்தார்.

சிறுவர் இல்லச் சிறுமிகள் விபசாரத்தில்! பொலிஸ் விசாரணை!!

Friday, 11 June 2010
சிலாபம் நகரை அண்மித்த பகுதியில் உள்ள சிறுவர் இல்லத்திலிருந்த நான்கு சிறுமிகளை விபசாரத்தில் ஈடுபடுத்துவதற்காக அழைத்துச் செல்லப்பட்டமை தொடர்பாகப் பொலிசார் விசாரணைகள ஆரம்பித்துள்ளனர்.

நன்னடத்தை நிலையத்தின் பொறுப்பில் இச்சிறுவர் இல்லம் இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது.
14 முதல் 16 வயது வரையிலான சிறுமியரே இவ்வாறு விபசார நடவடிக்கைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

சிறுவர் இல்லத்திலிருந்து நேற்று முன் தினம் மாலை வெளியேறிய இவர்கள் வீடொன்றில் தங்கியிருந்தபோது கைதுசெய்யப்பட்டதாகப் பொலிசார் தெரிவித்தனர்.

இந்த சிறுமிகளில் இருவர் சிலாபத்திலும் ஒருவர் காலியிலும், நான்காமவர் நவகத்தேகமவிலும் துஷ்பிரயோகத்துக்குக்கு உட்படுத்தப்பட்டதையடுத்து நீதிமன்ற உத்தரவுக்கு அமைய நன்னடத்தை நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.
இவர்களை அழைத்துச் சென்ற நீர்கொழும்பு, கதிரான பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தரும் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாகக் கிடைத்த தகவலொன்றுக்கமைய பொலிசார் அந்த வீட்டைச் சுற்றி வளைத்துள்ளனர்.
இதன் பின்னர் நடத்தப்பட்ட விசாரணைகளையடுத்து மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

புலிகள் சார்பு வலையமைப்புக்கள் மீண்டுமொரு அமைப்பை உருவாக்க முயற்சி!

Friday, 11 June 2010
புணானையில் படைவீரர் மத்தியில் பாதுகாப்பு செயலர்

சர்வதேச மட்டத்தில் செயற்பட்டு வருகின்ற புலிகள் சார்பு பயங்கரவாத வலையமைப்புக்கள் இலங்கையில் மீண்டுமொரு அமைப்பை உருவாக்க முயற்சித்து வருவதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார்.

புலிகள் சார்பு சர்வதேச வலையமைப்புக்களின் இதுபோன்ற செயற்பாடுகள் தொடர்பில் இலங்கை புலனாய்வூத் துறையினருக்கு தகவல்கள் கிடைக்கப்பெற்றிருப்பதாக தெரிவித்த அவர்இ இலங்கையின் பாதுகாப்புத் தொடர்பில் கவன யீனமாக இருக்க முடியாதென்றும் உள்நாட்டு பாதுகாப்பு கட்டமைப்பை மறுசீரமைத்து அதனை மேலும் வளப்படுத்தப்படுமென்றும் தெரிவித்தார்.

வெலிகந்தைஇ புணானையிலுள்ள இராணுவத்தின் 23வது படையணியின் தலைமையகத்துக்கு நேற்று விஜயம் செய்த பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அங்கு கூடியிருந்த நான்காயிரத்து க்கு மேற்பட்ட முப்படையினர் மற்றும் பொலிஸார் மத்தியில் உரையாற்றும்போதே மேற்கண்ட வாறு குறிப்பிட்டார்.

இலங்கையில் பயங்கரவாதம் முடிவூக்கு கொண்டுவரப்பட்டு புலி களின் சர்வதேச மட்ட நிதித் தொடர்புகள்இ ஆயூதத் தொடர்புகள் போன்ற பாரிய வலையமைப்புக்கள் உள்நாட்டு புலனாய்வூத் துறையின ராலும் வெளிநாடுகளின் ஒத்துழைப் புடனும் முடக்கப்பட்ட போதிலும் இன்னும் ஒரு சில வலையமைப் புக்கள் தொடர்ந்தும் சர்வதேசமட்ட த்தில் செயற்பட்டு வருவதாகவூம் தெரி வித்தாh;. அதன் அழுத்தங்களுக்கு ஒருபோதும் இடமளிக்கப் போவ தில்லை. ஒரு யூகத்தைக் கடந்து புதியதொரு யூகத்தில் நாம் காலடி வைத்துள்ளோம்.

எமக்குக் கிடைக்கப்பெற்ற இந்த சிறந்த சந்தர்ப்பத்தை நாம் தவற விடக்கூடாது. அப்பாவி பொதுமக் களைப் பாதுகாத்து உயிர்த்தியாகம் செய்து இராணுவத்தினர் பெற்ற வெற்றியை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

பயங்கரவாதத்தின் ஆரம்பக் கட்ட த்தை எமது எதிர்கால படிப்பினை யாக கொள்ளவேண்டும். அப்போது தான் எதிர்காலங்களிலும் நாட்டில் பயங்கரவாத அச்சுறுத்தல் ஏற்படாது செயற்பட முடியூம்.

இவ்வாறான பயங்கரவாதத்தின் அடித்தளம் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் மீண்டும் கிளம்புவதற்கு இடமளிக்கக் கூடா தென்றும் இதற்கமைவாக நிரந்தர பாதுகாப்பு கட்டமைப்பு ஏற்படுத் தப்பட்டு அங்குள்ள பாடசாலைக ளிலும் கட்டடங்களி லும் அமைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கு பதிலாக வடக்குஇ கிழக்கில் பாது காப்பை உறுதிப்படுத்தும் வகையில் நிரந்தர முகாம்கள் அமைத்து சகல வசதிகளும் செய்துகொடுக்கப்படு மென்றும் தெரிவித்தார்

சீன உப பிரதமர் தலைமையில் உயர் குழு இலங்கை வருகை!

Friday, 11 June 2010
சீன உப பிரதமர் சியாங்க் டிஜியாங்க் தலைமையில் கொழும்புக்கு வருகை தந்துள்ள உயர் மட்டக் குழு பிரதமர் தி.மு. ஜயரத்னவை இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தவிருக்கின்றது.
இக்குழுவினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நாளை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று வெளிவிவகார அமைச்சின் அதிகாரியொருவர் நேற்றுத் தெரிவித்தார்.

சீன உப பிரதமர் தலைமையிலான குழுவினர் நேற்றிரவூ கொழும்புக்கு வந்து சேர்ந்தனர். இவர்களை பதில் வெளி விவகார அமைச்சர் கீத்தாஞ்ன குணவர்தன கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வரவேற்றார்.

Thursday, June 10, 2010

இந்திய தமிழக எம்.பிகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவூடன் சந்திப்பு!

Thursday, June 10, 2010
இந்திய மக்களவையில் அங்கம் வகிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இலங்கை உயர்மட்ட தூதுக்குழுவினருடன் கலந்துரையாடலை மேற்கொண்டனர்.

நேற்று பிற்பகல் 3.30 மணி அளவில் மவூரியா ஹோட்டலில் இடம்பெற்ற இச்சந்திப்பில் இலங்கை உயர்மட்டக் குழுவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கநிதி அமைச்சசின் செயலாளர் கலாநிதி பி.பி.ஜெயசுந்தர ஆகியோரும் பங்குகொண்டனர்.

இந்திய தமிழக குழுவில் தி.மு.க. சார்பில் டி.ஆர்.பாலு கனிமொழிடி.கே.எஸ்.இளங்கோவன் ஏ.கே.எஸ்.விஜயன்.ஜி.சுகவனம ஆதிசங்கர் அப்துல்ரகுமான் ஆர்.தாமரைச்செல்வன்ஜே.கே.ரிதீஷ் எஸ்.ஆர்.ஜெயதுரை ஏ.ஏ.ஜின்னா வசந்தி ஸ்டான்லி ஆகியோரும் காங்கிரஸ் கட்சி சார்பில் மணிசங்கர ஐயர் எம்.கிருஷ்ணசாமி கே.எஸ்.அழகிரி பி.விஸ்வநாதன் மாணிக் தாகூர் ஜெயந்தி நடராஜன் .எம்.சுதர்சன நாச்சியப்பன் பி.எஸ்.ஞானதேசிகன் ஆகியோரும் கலந்து கொண்டனார்

போரினால் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியூள்ள மக்கள் விரைவில் மீள்குடியேற்றப்படுவர் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தமிழ்நாட்டு எம்.பி.க்களிடம் உறுதியளித்துள்ளார்.

வடக்கில் புலிகளால் புதைக்கப்பட்டுள்ள நிலக்கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதினாலேயே குறித்த மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தாமதமாகின என்றும் ஜனாதிபதி அவர்களிடம் சுட்டிக்காட்டியூள்ளார்.

இலங்கை தமிழர்களின் எதிர்கால நல்வாழ்வூக்காக அரசினால் செயற்படுத்தப்படும் வீடமைப்புத் திட்டம் இந்திய உதவியூடன் துரிதமாக நிறைவேற்றப்படும் என்றும் ஜனாதிபதி இந்திய அமைச்சா;களுக்கு இச்சந்திப்பின்போது விளக்கிக் கூறினார்

இந்திய வர்த்தகரைத் தாக்கிய 3 பேருக்குப் பிணை,

Thursday, June 10, 2010
சிலாபம் ஆராச்சிக்கட்டுவப் பகுதியில் இந்திய வர்த்தகர் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபைத் தலைவர் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சிலாபம் மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டபோது தலா ஒரு லட்சம் ரூபா பிணையில் இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை இம்மாதம் 27 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஆராச்சிக்கட்டுவப் பிரதேசத்தில் தும்பு சார்ந்த வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த இந்திய வர்த்தகரைக் கடத்திச்சென்று தாக்கியதாகக் கிடைத்த முறைப்பாட்டையடுத்தே பொலிசார் இவர்களைக் கைது செய்தனர்.
ஆராச்சிக்கட்டுவப் பிரதேச சபைத் தலைவர் உள்ளிட்ட குழுவினர் குறித்த வர்த்தகரை நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் கடத்திச்சென்று தாக்கி அச்சுறுத்தியுள்ளனர்.

ஊழியர் பிரச்சனையை மையமாகக் கொண்டே இத்தாக்குதல் நடத்தப்ப்ட்டுள்ளது.
தாக்குதலில் காயமடைந்த இந்திய வர்த்தகர் ஆராச்சிக்கட்டுவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளதாகப் பொலிசார் கூறினர்.

ஜனாதிபதி – சோனியா சந்திப்பு!

Thursday, June 10, 2010
இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவி திருமதி சோனியா காந்தியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இலங்கையின் உயர்மட்ட தூதுக்குழுவினரை நேற்று சந்தித்துக் கலந்துரையாடினர்.

புதுடெல்லி மயூ+ரா ஹோட்டலில் இடம்பெற்ற இச்சந்திப்பில் இலங்கை உயர்மட்டக் குழுவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாஇ வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கஇ நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.பி.ஜெயசுந்தர ஆகியோரும் இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசமும் பங்கு கொண்டனர்.

இந்தியாவூக்கும் இலங்கைக்குமிடையில் மிக நீண்டகாலமாக நிலவூம் நல்லுறவை மேலும் பலப்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இங்கு திருமதி சோனியா காந்தி குறிப்பிட்டார்

இலங்கை சகல துறைகளிலும் அபிவிருத்தியடைந்து வருவதன் காரணமாக இரு நாடுகளுக்குமிடையிலான உல்லாசப் பிரயாணத்துறையை மேலும் முன்னேற்ற நல்ல தருணம் உருவாகியூள்ளதென்றம் அவா; கூறினார்

ஜனாதிபதி இரண்டாவது முறையாகவூம் மக்களால் தெரிவூ செய்யப்பட்டமை குறித்து மகிழ்ச்சி தெரிவித்த திருமதி சோனியா காந்தி இரு நாட்டுத் தலைவா;களும் ஒன்றிணைந்து செயற்படவேண்டிய அவசியத்தையூம் வலியூறுத்தினார்

Wednesday, June 9, 2010

அமைச்சர் றிசாத் பதியுதீனைச் சந்தித்தார் வியட்நாம் பிரதி அமைச்சர்.

Wednesday, 09 June 2010
கைத்தொளில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் றிசாத் பதியுதீனை, வியட்நாம் நாட்டின் வர்த்தக மற்றும் கைத்தொழில் பிரதி அமைச்சர் டொன் லீ குஆங் சந்தித்துக் கலந்துரையாடினார்.
கொழும்பு கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள மேற்படி அமைச்சில் இந்தச் சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளது.
தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள சூழலையடுத்து தமது நாடு இலங்கையில் முதலீடு செய்வதற்கு ஆர்வத்துடன் உள்ளதாக பிரதி அமைச்சர் டொன் லீ குஆங், அமைச்சர் றிசாத் பதியுதீனிடத்தில் தெரிவித்தார்.

கைத்தொழில் மற்றும் வணிகத்துறையில் இலங்கை, வியட்நாம் இருதரப்பு நாடுகளினதும் உறவை வலுப்படுத்தும் வகையில் எதிர்காலத்திலும் செயல்படுவது வரவேற்கக் கூடியதாகும் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் இங்கு தெரிவித்தார்.

கைத்தொழில், வர்த்தகம், கல்வி மற்றும் ஏனைய துறைகளில் வியட்நாம் தனது முதலீடுகளை செய்வதைத் தாம் பெரிதும் வரவேற்பதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் இங்கு சுட்டிக்காட்டினார்.

இலங்கை ஜனாதிபதி - தமிழக எம்பிக்கள் இன்று சந்திப்பு

Wednesday, 09 June 2010

டில்லி சென்றுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை இன்று மாலை தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திக்கின்றனர். இதன்போது போரினால் இடம் பெயர்ந்துள்ள தமிழர்களை அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் வலியுறுத்துவர் என இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி ராஜபக்ஷ மூன்று நாள் பயணமாக இந்தியா சென்றுள்ளார். இலங்கை பிரச்சினை குறித்து முக்கிய தலைவர்களைச் சந்தித்து அவர் பேசுவார்.

கடந்த 6ஆம் திகதி முதல்வர் கருணாநிதி, இலங்கைத் தமிழர்கள் எதிர்பார்க்கும் வகையில், அவர்களைச் சொந்த இடங்களில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்குமாறு ராஜபக்ஷவிடம் வலியுறுத்துமாறு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதினார்.

மேலும் இதுதொடர்பாக தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டில்லி சென்று, ராஜபக்ஷவை நேரில் சந்தித்து வலியுறுத்த நடவடிக்கை எடுக்குமாறு திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவுக்கு அவர் உத்தரவிட்டார்.

முதல்வர் கருணாநிதியின் கடிதத்தை பிரதமரிடம் ஒப்படைத்த டி.ஆர்.பாலு, நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்து, ராஜபக்ஷவிடம் இலங்கை தமிழர்களை விரைவில் அவரவர் சொந்த இடங்களில் குடியமர்த்த வலியுறுத்துமாறு கேட்டுக் கொண்டார்.

மேலும் முதல்வர் கருணாநிதி உத்தரவுபடி தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர். பாலு, கவிஞர் கனிமொழி, டி.கே.எஸ். இளங்கோவன், ஏ.கே.எஸ்.விஜயன், இ.ஜி.சுகவனம், ஆதிசங்கர், அப்துல்ரகுமான், ஆர்.செந்தாமரைச் செல்வன், ஜே.கே.ரித்தீஸ், எஸ்.ஆர்.ஜெயதுரை, ஏ.ஏ.ஜின்னா, வசந்தி ஸ்டாலின், மணிசங்கர் அய்யர், எம்.கிருஷ்ணசாமி, கே.எஸ்.அழகிரி, பி.விஸ்வநாதன், மாணித்தாகூர், ஜெயந்தி நடராஜன், சுதர்சன நாச்சியப்பன், ஞானதேசிகன் ஆகியோர் இலங்கை அதிபர் ராஜபக்ஷவைச் சந்தித்து இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையை தீர்க்குமாறு வலியுறுத்துவர் எனவும் அச்செய்தியில் தெரிவிக்கப்படுகிறது.

தமிழகத்தில் அரசியல் தலைவா;கள் பலா; கைது!

Wednesday, 09 June 2010

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இந்திய விஜயத்துக்கு எதிர்ப்புத தொpவித்து தமிழகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசியல் தலைவா;கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரை தமிழ்நாடு பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனா;.

தென்னிந்திய அரசியல்வாதிகளான வைகோ பழ. நெடுமாறன் தொல். திருமாவளவன் உட்பட திரைப்பட நடிகர்கள் இயக்குநர்கள் அடங்கலாக நூற்றுக் கணக்கானோர் நேற்று தமிழ் நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டிருப்பவர்களில் திரைப்பட இயக்குநரும் நடிகருமான சீமான் டி.ராஜேந்தர் மகேந்திரன் நல்லகண்ணு போன்றௌரும் அடங்குகின்றனர்.

தமிழகத்தில் சென்னையிலுள்ள இலங்கை உதவி உயர்ஸ் தானிகராலயம் இலங்கை வங்கி போன்ற பகுதிகளுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் இவ்வீதிகளும் மூடப்பட்டிருந்தன.

தமிழகத்தின் திருப்பூர் மயிலாடுதுறை சிவகங்கை கோவை காந்திநகர் நாகர்கோவில் கரூர் சென்னை ஓசு+ர் தேனி நாமக்கல் போன்ற பகுதிகளிலேயே இந்த ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன,

Monday, June 7, 2010

ஜனாதிபதி நாளை இந்தியாவூக்கு உத்தியோகபூh;வ விஜயம்!

Monday, June 7, 2010
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை இந்தியாவூக்கு உத்தியோகபூh;வ விஜயம் ஒன்றை மேற்கொள்கிறாh;.

ஜனாதிபதி தலைமையிலான குழுவினர் இந்திய ஜனாதிபதி பிரதீபா பட்டேல்இ பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்இ காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திஇ வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாஇ நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜிஇ எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவூள்ளனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்இ பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷஇ வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரொமேஷ் ஜயசிங்க இ ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்கஇ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாஇ மின்சக்தி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட சிலர் இடம்பெறுவதாக வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்தியாவூக்கு விஜயம் மேற்கொள்ளும் குழுவினர் அங்கு 11 ஆம் திகதிவரை தங்கியிருப்பர் என்றும் இதன்போது சில உடன்படிக்கைகள் மற்றும் புரிந்துணர்வூ ஒப்பந்தங்கள் என்பன கைச்சாத்திடப்படும் என்றும் வெளிவிகார அமைச்சின் அதிகாரி குறிப்பிட்டார்,

ஜீ. எஸ். பி. சலுகை பெற ஐ. நா. ஒத்துழைக்கும்!

Monday, June 7, 2010
ஜீ. எஸ். பி. சலுகையை இலங்கைக்கு பெற்றுக்கொள்வதற்கு ; ஒத்துழைப்பு வழங்குவதாக ஐக்கிய நாடுகளின்; இலங்கைக்கான பிரதிநிதி நீல்பூனே பிரதமாpடம் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதி நீல்பூனே பிரதமர் டி. எம். ஜயரட்னவைப் பிரதமர் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். இச்சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்.

உலக வர்த்தக நடவடிக்கைகளில் போட்டித் தன்மையை மேம்படுத்திக்கொள்வதற்கு இலங்கைக்கு ஜீ. எஸ். பி. சலுகையைப் பெறுவது மிக முக்கியமானதாகும். இந்தச் சலுகை இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்பவர்களுக்கு மட்டுமன்றி இலங்கையின் பொருளாதாரத்திற்கும் பங்களிப்பு வழங்கும்.

இதனைக் கருத்திற் கொண்டு ஐக்கிய நாடுகள் அமைப்பு ஜீ. எஸ். பி. சலுகையைப் பெற்றுக் கொள்வதற்கான இணைப்புச் செயற்பாடுகளில் உதவத் தயார் எனவூம் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் துரித அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஐ. நா. திருப்தி யடைந்துள்ளது. குறிப்பாக வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வாழ்வாதார நடவடிக்கைகளில் அரசாங்கம் முக்கிய கவனம் செலுத்தி வருவதைக் காண முடிகிறது.

ஐ. நா. அமைப்பு அபிவிருத்திப் பணிகளுக்குத் தொடர்ந்தும் இலங்கைக்கு பூரண ஆதரவை வழங்கும். தற்போது கொழும்பு மொன ராகலை பதுளை மாவட்டங்களின் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்கு உதவி வருகிறது.

தொடர்ந்தும் நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு உதவி வழங்க எதிர்பார்த்துள்ளது எனவூம் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த பிரதமர் டி. எம். ஜயரட்ன் யூத்தம் முடிவூக்குக் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் வடக்கு கிழக்கு மாகாணங்களின் துரித அபிவிருத்திக்கு இந்த ஜீ. எஸ். பி. சலுகை பெரிதும் உறுதுணையாக முடியூம். எனினும் இச் சலுகையைப் பெறுவதற்காக சர்வதேசத்திற்குப் பின்னால் செல்வதற்கு அரசாங்கம் தயாரில்லை எனவூம் தெரிவித்துள்ளார்,

Saturday, June 5, 2010

ஜனாதிபதியினால் மூவருக்கு விருது வழங்கி கௌரவம்!

Saturday, June 5, 2010
கார்கில்ஸ் சிலோன் லிமிடெட்டின் தலைவர் ரஞ்ஜித் , மாஸ் ஹோல்டிங்ஸ் தலைவர் மகேஷ் இந்திய திரைப்பட நடிகருமான அனுபம் கேர் ஆகியோருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விருது வழங்கி கௌரவித்தார்.
சீ.என்.பீ.ஸி - ஐ.ஐ.எப்.ஏ. குளோபல் லீடர் ஷிப் விருதுகள் இவர்களுக்கு வழங்கப்பட்டன. கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற இலங்கை - இந்திய வர்த்தக சம்மேளனத்தின் விசேட அமர்வூக்கு பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட ஜனாதிபதி இந்த விருதுகளை வழங்கினார்.

ஐஃபா இந்திய திரைப்பட விழா இறுதிநாள் வைபவம் இன்று!

Saturday, June 5, 2010
சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவின் இறுதி நாள் வைபவம் இன்று கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் நடைபெறுகிறது. இன்று மாலை 5.30 மணிக்கு ஆரம்பமாகும் இவ்விழாவில் திரைப்பட விருதுகள் வழங்கப்படுவதோடு கலாசார நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
விவேக் ஒபரோய்இ விபாசா பாசுஇ தியாமிர்ஸா உட்பட நட்சத்திர பிரபலங்கள் நடன நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கின்றனர்.
லாரா தத்தாஇ பூமன் இராணிஇ ரித்தீஸ் தேஷ்முக் ஆகியோர் இந்த நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குகின்றனர்.
சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவின் இரண்டாம் நாள் ஐபா சர்வதேச வர்த்தக சம்மேளன மாநாட்டுடன் நேற்று ஆரம்பமானது. இம்மாநாடு நேற்றுக் காலை 9 மணியளவில் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்றது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்குரார்ப்பணம் செய்து வைத்த இம்மாநாட்டில்இ இந்தியத் தூதுவர் அசோக் காந்தாஇ இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர் சஷி தஷரூர் ஆகியோர் உட்பட இந்திய மற்றும் இலங்கையின் வர்த்தகத் துறையைச் சார்ந்த விற்பன்னர்கள் பலர் உரையாற்றினர்.
இந்தியத் திரைப்பட நடிகரும் தயாரிப்பாளருமான அனுபம் கீன்இ ஜனாதிபதியினால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து இலங்கையின் வடக்குஇ கிழக்கு பிரதேசங்களை மீளக் கட்டியெழுப்புவது தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது.
அதேபோல யூத்தத்தின் பாதிப்பில் இருந்து மீண்டு வரும் ஒரு நாட்டில் விளையாட்டுத்துறையை குறிப்பாக கிரிக்கெட்டை அனைவரையூம் ஈர்க்கும் துறையாக எவ்வாறு மாற்றுவது என்பது தொடர்பான கலந்துரையாடலொன் றும் அதனைத் தொடர்ந்து இடம் பெற்றது.
இக்கலந்துரையாடலில் இந்திய நடிகை தியா மிர்ஸாஇ இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வாஇ அஜய் ஜடேஜா உட்பட சிலர் கலந்து கொண்டனர். இதற் கிடையில்இ சிலோன் கொண்டினென்ட் ஹோட்டலில் சினிமா பயிற்சிப்பட்டறையொன் றும் காலை 9.30 முதல் மதியம் 1.30 வரை இடம்பெற்றது.
மதியம் 1 மணிக்குஇ இலங்கை அணி வீரர்களுக்கும் இந்தியத் திரை நட்சத்திரங்களுக்குமிடையிலான கிரிக்கெட் போட்டி எஸ். எஸ். ஸி மைதானத்தில் இடம்பெற்றது.
சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவின் பவூன் ஷோவின் இரண்டாம் கட்டம் நேற்று காலை சினமன் கிராண்ட் ஹோட்டலில் இடம்பெற்றது

Friday, June 4, 2010

ஐஃபா விழாவில் சில நடிக நடிகையர் இல்லை,அமைச்சர் ரம்புக்வெல தெரிவித்தார்.

Friday, June 4, 2010
இலங்கையில் நடைபெறும் ஐஃபா விருது வழங்கும் விழாவில் இந்தியாவின் சில நடிக நடிகைகள் பங்கேற்கவில்லையென அமைச்சர் ரம்புக்வெல தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் ஊடகவியலாளர்கள் இது குறித்து வினவினர்.

இந்தியாவில் எல். ரீ. ரீ. ஈ க்கு விதிக்கப்பட்டிருந்த இரண்டு வருடங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
உயர் மட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்கள்மூலம் இலங்கைக்கு நன்மைகள் கிடைக்கின்றன.
பயங்கரவாதம் நிலவியபோதும் இத்தகைய பிரச்சினைகள் ஏற்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

அந்தப் பிரச்சினைகளை எதிர்நோக்கியதைப் போன்று தற்போதைய பிரச்சினைகளையும் எதிர்நோக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.
அமைச்சர் மேலும் தகவல் தருகையில் அமிதாப்பச்சன் நாட்டிற்கு வருகைதரமாட்டார் எனும் விடயத்தை எவ்வாறு எதி்ர்நோக்குவது என்பது தொடர்பில் தற்போது கூறமுடியாது என அவர் சுட்டிக்காட்டினார்

முதலமைச்சர்கள் மாநாடு மாரவிலையில்,

Friday, June 4, 2010
மாகாண முதலமைச்சர்களின் மாநாடு புத்தளம் மாவட்டத்தின் மாரவில நகரில் இன்று ஆரம்பமாகின்றது.
இந்த மாநாட்டில் மாகாணங்களில் நிலவும் பிரச்சனைகள் மற்றும் பொதுவாக மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்படுமென வடமேல் மாகாண முதலமைச்சர் அத்துல விஜேசிங்க குறிப்பிட்டார்.
இந்த மாநாட்டில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.
நீண்டகால இடைவெளியின் பின்னர் மாகாண முதலமைச்சர்களின் மாநாடு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

வட கிழக்கில் தென்பகுதி மீனவர் மீன்பிடிக்கத் தடை,

Friday, June 4, 2010
வடக்குக் கிழக்கில் கடற்றொழில் துறையை மேம்படுத்துவதற்கான பல திட்டங்கங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் இங்கு அப்பகுதியைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம், சிங்கள மீனவர்களுக்கு மட்டுமே கடற்றொழிலுக்கு அனுமதி வழங்கப்படுமெனவும் தெரிவிக்கப்படுகிறது. வட கிழக்கு மாகாணங்களில் அவ்வப் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மாத்திரமே மீன் பிடி நடவடிக்கைகளில் ஈடுபடமுடியுமெனக் கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனரத்ன தெரிவித்தார்.
தென் பகுதி மீனவர்களுக்கு வட கிழக்குப் பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதி வழங்கப்படமாட்டாதென அமைச்சர் தெரிவித்தார்.
தென் பகுதி மீனவர்களுக்கு இதற்கான அனுமதி வழங்கினால் அனாவசியப் பிரச்சனைகள் உருவாகலாமென அவர் சுட்டிக் காட்டினார்.

Wednesday, June 2, 2010

மீள்குடியேற்றத்தின் முன்னேற்றம் திருப்தி தருகின்றது!

Wednesday, 02 June 2010
அரசாங்கத்தின் மீள்குடியேற்ற திட்டத்தின் முன்னேற்றம் திருப்தியளிப்பதாக இந் தியாவின் ‘டைம்ஸ் ஒப் இந்தியா’ பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
முகாம்களில் இருந்த 3 இலட்சம் பேரின் எண்ணிக்கை இப்போது 30 ஆயிரமாக குறைந்துள்ளது. இவ்வருட இறுதிக்குள் பெரும்பாலான இடங்களில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு விடும். அப்போது முகாம்களில் உள்ள அனைவருமே தமது சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட்டு விடுவார்கள் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அந்த போட்டியின் போது குறிப்பிட்டார்.

பேட்டியின் முழு விபரம் வருமாறு:

கே: புலிகள் தோற்கடிக்கப்பட்டு ஒரு வருடமாகிறது. அந்த இயக்கம் ஏன் தோல்வியடைந்தது என்று நினைக்கியர்கள்?

ப: இயக்கத்துக்குள் என்ன நடந்தது என்பது எல்லோருக்கும் தெரியூம். அது தோல்வியடைந் ததற்கான காரணம் தௌpவாகவே உள்ளது. அது தன்னைத்தான் அழித்துக்கொள்ளும் பாதையிலேயே பயணித்தது. தனி ஈழம் என்ற அவர்களது கோரிக்கை எப்போதுமே கேள்விக்கு அப்பாற்பட்டதாகவே இருந்தது.

நாம் அதனை அனுமதித்திருக்க முடியாது. எனினும் முக்கியமாக அவர்களது முத்திரையாக மாறி யிருந்த வன்முறையூம் இரத்தக் களரியூம் நிறுத்தப்பட வேண்டியி ருந்தது. இந்த நிலை தொடரக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடந்த முயற்சி செய்தோம். ஆனால் அவர்கள் மறுத்துவிட்டனர். இதனையடுத்து தீர்க்கமான முடிவை எடுப்பதை தவிர வேறு வழிகள் எதுவூம் இருக்கவில்லை.

கே: புலிகளின் அத்தியாயம் முடிந்துவிட்டது என்று கருதுகியர்களா?

ப: நான் அவ்வாறு சொல்லமாட்டேன். புலிகளின் அனுதாபிகள் அவர்களது உறங்கும் உறுப்பினர்கள் இன்னும் இருக்கின்றனர். அவர்கள் பல்வேறு நாடுகளில் நன்கு பராமரிக்கப்பட்டு வருகின்றனர். எனவே அவர்களது அத்தியாயம் இன்னும் முடியவில்லை.

கே: இறுதிக்கட்ட போரில் 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதாக சில அறிக்கைகள் கூறுகின்றன.

ப: இது சரியானது என நான் நினைக்கவில்லை. இலங்கை இராணுவத்தினர் ஒழுக்கமானவர் கள் என்பதுடன் பொதுமக்கள் கொல்லப்படக்கூடாது என்பதில் நாம் மிகவூம் கவனமாக இருந்தோம். பிரபாகரனின் தந்தை தாய் மற்றும் அவரது குழுவினர் முழுவதுமாக எமது முகாம்களில் இருந்தனர். அவர்களுக்கு தீங்கிழைக்கப்பட வில்லை என்றால் பொதுமக்கள் இலக்கு வைக்கப்பட்டதாக கூறும் கேள்விக்கு இடமில்லையே? நாம் ஏன் பொதுமக்களை கொல்ல வேண்டும். சொல்லப் போனால் அவர்கள் எங்கள் மக்கள்தானே.

கே: உள்நாட்டில் வடக்கில் இடம்பெயர்ந்த சுமார் 3 லட்சம் தமிழ் மக்கள் அனைவரையூம் 180 நாட்களுக்குள் மீள்குடி யேற்றும் திட்டம் பற்றி உறுதியளித்திருந்தீர்கள் அந்த உறுதிமொழி நிறைவேற்றப்பட்டதா?

ப: அந்த முன்னேற்த்தையிட்டு நான் மிகவூம் திருப்தியடைகிறேன். முகாம்களில் இருந்த 3லட்சம் பேரின் எண்ணிக்கை தற்போது 30 ஆயிரமாக குறைந்துள்ளது. இவ்வருட இறுதிக்குள் பெரும் பாலான இடங்களில் கண்ணி வெடிகளை எம்மால் அகற்றிவிட முடியூம். அதன்பின் அனைவரையூம் அவர்களது இடங்களில் மீள்குடியமர்ந்த முடியூம்.

கே: புலிகளுக்கு எதிரான யூத்தத்தில் இந்தியாவிட மிருந்து உங்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைத்தனவா?

ப: ஆம் இந்தியாவின் உதவி கிடைத்தது. நாம் அதனை வெகுவாக பாராட்டுகிறௌம்.

கே: அது எவ்வாறான உதவிஇ தார் மீக உதவியா அல்லது இராணுவ உதவியா?

ப: இரண்டும் (சிரிக்கிறார்) எமக்கு இரண்டுமே தேவையாக இருந்தன.

கே: உங்களுக்கு ஆயூதங்கள் விற்பனை செய்வதற்கு சீனர்கள் முன்வரவில்லையா?

ப: ஆயூதங்கள் வாங்குவது என்பது ஒரு இராணுவ தீர்மானம். நாம் ஒரு யூத்தத்தை செய்து கொண்டிருந்தோம். சாத்தியமானது எதுவோ அதனை இந்தியாவிலிருந்து பெற்றுக் கொண்டோம். மற்றவை சீனாஇ பாகிஸ்தான்இ ஐரோப்பிய யூ+னியன்இ இஸ்ரேல்இ ஏன் அமெரிக்காவிடம் இருந்து கூட பெற்றுக்கொண்டோம். அது ஒரு சுலபமான விதி. எமக்கு எவரிடம் இருந்து விரைவாக பெறமுடிந்ததோ அவர்களிடம் இருந்து பெற்றுக்கொண்டோம்.

கே: சீனாவூடன் இலங்கையின் உறவூகள் நெருங்கி வருவதை யிட்டு இந்தியாவின் அக்கறை அதிகரித்துள்ளது அத்துடன் இந்து சமுத்திரத்தில் கால் ஊன்றிக் கொள்ள சீனா இதனை பயன் படுத்திக்கொள்வதாகவூம் கூறப் படுகிறது. இலங்கை-இந்திய உறவூகளுக்கு இது எவ்வாறான நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தும்?

ப: அவ்வாறு கூறுவதற்கு எந்த அடிப்படையூம் இல்லை. இந்தியாவூம் இலங்கையூம் வெறுமனே நண்பர்கள் மட்டுமல்ல என்று நாம் எப்போதுமே கூறிவந்துள்ளேன். நாம் உறவினர்களைப் போல் அத்துடன் எமது நட்புறவூ இன்று மிகவூம் உயர்ந்த நிலையில் உள்ளது. நாம் இந்தியாவை எதிர்பார்த்துள்ளோம். இந்தியாவூக்கும் எம்மை பார்க்கும் கடமை உள்ளது. பெரியண்ணனைப் போன்று அல்ல. ஒரு வகையில் கூறப்போனால் தனது சிறிய சகோதரியைப்போல.

கே: அண்மையில் சில இந்திய கிரிக்கெட் வீரர்களை உங்கள் தனிப்பட்ட வைத்தியர் டாக்டர் வைட்டிடம் சிகிச்சை பெறுவதற்கு அழைத்திருந்தீர்கள். இது இந்திய - இலங்கை கூட்டுறவூக்கு ஒரு முன்மாதிரியானதா?

ப: ஆம். அதுபோன்றே கூறப்போனால் சச்சின் டெண்டுல்கர் டாக்டர் வைட்டின் சிகிச்சையினால் பெரிதும் நன்மையடைந்தார். அது பற்றி மற்றவர்களுக்கும் சிபாரிசு செய்துள்ளார். அவர்களுக்கு உதவ முடியூமென்றால் ஏன் உதவக்கூடாது?

கே: ஜூன் எட்டாம் திகதி நீங்கள் இந்தியாவூக்கு விஜயம் செய்கியர்கள். கடந்த இரண்டு வருடங்களாக சிக்கல் நிலையில் இருந்து வரும் இந்திய-இலங்கை பொருளாதார பங்காளி உடன்படிக்கை இந்த விஜயத்தின் போது புத்துயிர் பெறுவதை நாம் காணமுடியூமா?

ப: நாம் பல விடயங் களைப் பற்றி விவாதிப் பதற்கு எதிர்பார்த்துள் ளோம். முன்னோடி விடயங்களில் பொருளா தார அபிவிருத்தி முக்கிய இடத்தில் உள்ளது.

கே: மாநில அரசாங்கங் களுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது தொடர்பான இந்தியாவின் தவறில் இருந்து நிறைய தெரிந்து கொண்டதாகவூம் கூறியிருந்தீர்கள். அது இலங்கையில் மாகாண அரசாங்களுக்கு அதிகார பரவலாக்கலை வழங்கும் 13 ஆம் திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதற்கு ஒரு காரணமா?

ப: இந்தியா ஒரு மிகப் பெரிய நாடு. இலங்கையூடன் அதனை ஒப்பிட முடியாது. பொலிஸ் அதிகாரத்தை மாகாணங்களுக்கு வழங்க முடியாது என்றுதான் நான் எப்போதுமே கூறியூள்ளேன். இதில் பல விடயங்கள் உள்ளன.

மும்பாய் தாக்குதலின் போது என்ன நடந்தது என்று பார்த்தீர்களா. கொமாண்டோக்களை கொண்டுவர எவ்வளவூ நேரம் பிடித்தது. பல்வேறு அனுமதிகளை பெற்றே இதனை நிறைவேற்ற வேண்டியிருந்தது. இதனால்தான் பொலிஸ் அதிகாரம் மத்திய அரசிடமே இருக்க வேண்டுமென்று நான் கருதுகிறேன்.

கே: உங்கள் ஆட்சி ஒரு குடும்ப ஆட்சியாக இருப்பதாக கூறுகின்றனரே?

ப: அதற்கு நான் என்ன செய்வது அவர்களை மக்கள் தெரிவூ செய்கின்றனரே. அண்மையில் எமது குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு மக்கள் அமோக வெற்றியை வழங்கியிருந்தார்கள். எனவே அது மக்களின் தீர்ப்பு. எப்போது அவர்கள் தேவையில்லை என்று மக்கள் நினைப்பார்களோ அப்போது அவர்களை விரட்டியடிப்பார்கள்.

கே: அலுவலகத்தில் கடுமையான வேலைக்கு பின்னர் எப்படி நீங்கள் ஓய்வெடுப்பீர்கள்? திரைப்படங்கள் பார்ப்பீர்களா?

ப: ஆம்இ நாம் மாலைகளில் ஹிந்தி திரைப்படங்களை பார்ப்பேன்.

கே: நீங்கள் அண்மையில் பார்த்த படம் என்ன?

ப: சாருக்கானின் ‘மைநேம் இஸ் கான்’ அது மேற்குலகில் முஸ்லிம்களுக்கு எதிரான பாரபட்சத்தை மிகவூம் சிறப்பாக எடுத்துக்காட்டியது. அந்தப் படத்தை பார்த்தபின் எம் மீது மனித உரிமை மீறல் பற்றி குற்றம் சாட்டுவோர். அவர்களது நாடுகளில் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதை நான் நினைத்துப் பார்த்தது ஞாபகத்துக்கு வருகிறது,

யூத்தத்தால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு உதவியளிப்பேன்! விவேக் ஒவ்ரோய் அறிவிப்பு

Wednesday,June2,2010 வடபகுதியில்யூத்தத்தினால்பாதிக்கப்பட்டசிறுவர்களுக்கு உதவியளிக்கவூள்ளதாக தென்னிந்திய நடிகர் விவேக் ஒவ்ரோய் இன்று ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
இலங்கையில் உல்லாசப் பயணத்துறையை ஊக்குவிப்பதற்கான பல திட்டங்களுக்கு ஆதரவளிக்கவென கெழும்பில் நடைபெறுவள்ள இந்திய சா;வதேச விருது வழங்கும் திரைப்பட விழாவில் பங்கேற்பதற்காக இந்தியக் கலைஞா;கள் பலா; நேற்று இலங்கை வந்தடைந்தனா;.

ஹிந்தித் திரை உலக நட்சத்திரங்களான லாரா தத்தா விவேக் ஒபராய் மற்றும் ரிதிக்; ஆகியோர் இவ்விழாவில் கலந்துகொள்ளும் பொருட்டு நேற்று இலங்கை வந்தனா;.

விவேக் ஒபராய் நேற்று கொழும்பில் ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோதே இக்கருத்தை அவா; வெளியிட்டாh;.

நேற்று இலங்கை வந்துள்ள விவேக் ஒவ்ரோய்இ பல நிகழ்வூகளில் பங்குபற்றவூள்ளமை குறிப்பிடத்தக்கது,

Tuesday, June 1, 2010

எம் மீதான குற்றச்சாட்டுக்கு சர்வதேச விசாரணை அவசியமில்லை : கெஹெலிய,

Tuesday, 01 June 2010
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை செய்வதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுத்துள்ளதால் சர்வதேச விசாரணை ஒன்றை நடத்துவதற்கான அவசரம் எதுவும் ஏற்பட்டுவிடவில்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
யுத்தத்தின் பின்னரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை செய்ய அரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழு ஒன்றை நியமித்துள்ளது.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உமைகள் பேரவைக் கூட்டத்தில் உரையாற்றிய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, இலங்கை தொடர்பாக சர்வதேச விசாரணை அவசியம் என்று வலியுறுத்தியதை அடுத்தே ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை ஜனநாயக ரீதியில் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஒரு இறைமையுள்ள நாடு. அதன் உள்விவகாரங்கள் தொடர்பான தீர்மானங்களை எடுக்கும் உரிமை அதற்கு இருக்கின்றது.
நாங்கள் எடுத்துள்ள நடவடிக்கைக்கு சாதகமான கருத்துக்களை வேறு நாடுகளும் தெரிவித்துள்ளன.
தவறுகளை நாங்களாகவே திருத்திக் கொள்வதில் தற்போது அதிக அக்கறை காண்பித்து வருகின்றோம்" என்றார்.

கொழும்பில் 3 முதல் 5 வரை சர்வதேச இந்திய திரைப்பட விழா!

Tuesday, 01 June 2010

கொழும்பில்.நாளை.மறுதினமான.3ஆம்.திகதி.முதல்.5 ஆம்.திகதிவரை சர்வதேச இந்திய திரைப்பட விருது (ஐகுகுயூ) வழங்கும்; விழா கோலாகலமாக இடம் பெறவூள்ளது.
யூனிசெப்பின் சிறுவர்களுக்கு கிரிக்கெட் என்ற திட்டத்துக்கு நிதி சேகரிக்கும் நிகழ்ச்சியாக இந்தியாவின் முன்னணி சினிமா நட்சத்திரங்களுக்கும் இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கும் இடையில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் சுனில் ஷெட்டி hpதிக் ரோஷன் ஆகியோரின் தலைமையிலான இரு அணிகளும் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் குமார் சங்கக்காரவின் தலைமையிலான அணியூம் போட்டியில் குதிக்கின்றன.
சல்மான் கான் டினோ மரியா வினோத் காம்ப்ளி கிரான் மோரே ஆகியோர் இந்திய அணிகளில் இடம்பெறும் அதேவேளை சனத் ஜயசு+ரிய முத்தையா முரளிதரன் மஹேல ஜயவர்தன ஆகியோர் இலங்கை அணியில் விளையாடுகின்றனர்.
இதேவேளை எதிர்வரும் 3 ஆம் திகதி பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும் பாஷன் மற்றும் மாடலின் நிகழ்ச்சியில் இந்தியாவின் பிரபல ஆடை வடிவமைப்பாளர்களான மனிஷ் மல்ஹோத்ரா விக்ரம் பட்னிஸ் ஆகியோருடன் உள்ளுhர் ஆடை வடிவமைப்பு கலைஞர்களான காஞ்சனா தல்பாவில யோலன்ட் அலுவிஹாரை ஆகியோரும் கலந்துகொள்கின்றனர்.
அவர்களுடன் சுமார் 15 இந்திய மொடல்கள் இந்திய ஆடை அணிகளை அணிந்து கண்காட்சியில் கலந்து கொள்வர்.
முன்ளாள் இலங்கை அழகுராணியூம் தற்போது இந்தியாவில் பிரபல நடிகையாகவூம் உள்ள ஜெக்குலின் பெர்னாண்டோவூடன் 7 முதல் 10 இலங்கை மொடல்களும் இக்கண்காட்சியில் கலந்துகொள்ளவூள்ளனர்,

Sunday, May 30, 2010

வவுனியாவில் வீதியோரங்களில் உள்ள கடைகள் விரைவில் அகற்றப்படும்.

Sunday, May 30, 2010

வவுனியா நகரில் வீதி அபிவிருத்தி வேலைகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற காரணத்தினால் வீதியோரங்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டடங்கள் மற்றும் கடைகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட திட்ட வரைவின் அடிப்படையிலேயே இந்தக் கட்டிடங்கள் அகற்றப்படவிருப்பதாக வவுனியா செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கட்டிடங்கள் அகற்றப்படுவது தொடர்பில் அவற்றின் உரிமையாளருக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பிரதான நகரங்கள் சிலவற்றில் அமைக்கப்பட்டிருந்த வீதியோர மற்றும் சட்டவிரோத கட்டடங்கள் வீதி அதிகாரசபை அதிகாரிகளால் அகற்றப்பட்டமை குறிபிடத்தக்கது.
Sunday, May 30, 2010

கிளிநொச்சி பிரதேசத்தின் கணேசபுரம் பகுதியில் மலக்குழி ஒன்றில் இருந்து மூட்டை மூட்டையாக பெண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிகின்றன. கிளிநொச்சி கணேசபுரத்தில் ஐ.நா அலுவலகம் அமைந்திருந்த இடத்திற்கு மிக அருகில் உள்ள ஒரு மலக்குழி ஒன்றில் ஏராளமான சடலங்கள் காணப்படுகின்றன.
குறிப்பிடப்பபட்டுள்ள இடத்தில் துப்புரவு தொழிலாளர்கள் குழியில் நிரப்பப்பட்டிருந்த மணலை வெளியிலெடுக்க முனைந்தபோது, குழியினுள் கறுப்பு பைகளால் கட்டி வைக்கப்பட்டிருந்த நிலையில் மூட்டைகள் காணப்பட்டுள்ளன.
அவற்றினை பிரித்துப் பார்த்தபோது பெண்களின் சடலங்கள் இருந்தன. ஐந்து மூட்டைகள் வரை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள போதிலும், இன்னமும் அதிகமான சடலங்கள் அதே குழியினுள் இருக்கலாம் என அங்கு சென்ற மக்கள் கூறுகின்றனர். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததும், அப்பகுதியில் இருந்து அனைவரையும் வெளியேறுமாறு மிரட்டியிருக்கின்றனர். ஆனாலும் பெருமளவு மக்கள் திரண்டு அவற்றைப் பார்த்துச் சென்றவண்ணம் உள்ளனர்.
இச்சம்பவம் குறித்து கிளிநொச்சி மாவட்ட நீதிபதியிடம், யாரும் புகார் கொடுக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. சடலங்கள் இரவோடு இரவாக அங்கிருந்து அகற்றப்படலாம் என்ற அச்ச நிலையும் எழுந்திருக்கின்றது. மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தொடங்கிய காலப் பகுதியில் இதே கணேசபுரம் பகுதியில் கிணறு ஒன்றில் இருந்து இரண்டு பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Saturday, May 29, 2010

நிவாரணக் கிராமங்களை மூடப் பணிப்பு ,

Saturday, May 29, 2010
வடக்கில் இடம்பெயர்ந்தோர் தங்கியுள்ள நிவாரணக் கிராமங்களை அடுத்த மூன்று மாதங்களுக்குள் மூடிவிட நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
இடம்பெயந்த சுமார் 3 லட்சம் மக்கள் வடபகுதியில் ஏற்கனவே மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்த மக்களின் சொந்த இடங்களின் உட் கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டதன் பின்னரே அவர்கள் மீளக் குடியமர்த்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வடக்கின் வசந்தம்' அபிவிருத்தித் திட்டத்தின் அடிப்படியில், மீள் குடியேற்ற நடவடிக்கைகள், அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் தலைமையில் முன்னெடுக்கப்படுகின்றன.
ஏறக் குறைய 4,500 பேர் தொடர்ந்தும் நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் கூறுகிறது.
இதே வேளை மீள் குடியேற்றம் தொடர்பான கலந்துரையாடலொன்று வவுனியா மாவட்டச் செயலகத்தில் அண்மையில் இடம்பெற்றது.

மலேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் உண்ணாவிரதம்! - அகதி அந்தஸ்தை ஏற்றுக் கொள்ள வலியுறுத்தல் ?

Saturday, May 29, 2010
அரசியல் புகலிடம் கோரிய இலங்கையர் மலேசியாவின் தடுப்பு முகாமில் உண்ணா விரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர் என்று அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமையிலிருந்து 61 பேர் உணவு உண்ண மறுத்து வருகின்றனர். அவர்கள் தாங்கள் அரசியல் அகதிகள் என்று ஏற்றுக் கொள்வதோடு சர்வதேச உரிமைகளுக்கான அமைப்புக்களைத் தொடர்பு கொள்ள வழிஏற்படும் வரை உண்ணாவிரதத் தைக் கைவிடப் போவதில்லை என்று தெரி வித்துள்ளனர் என மலேசிய மனித உரிமை நிறுவனம் ஒன்றைச் சேர்ந்த நளினி ஏழுமலை தெரிவித்துள்ளார்.
ஆனால் அவர்கள் பின்னர் எவ்வாறு படகிலிருந்து இறங்கினார்கள்? அவர்களுக்கு ஏதாவது உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளதா? என்பது தெரியவரவில்லை. இந்தோனே ´யக் கடலில் கடந்த ஒரு சில நாள்களுக்கு முன் கைதான 26 இளைஞர்கள் எங்கு வைக்கப்பட்டுள்ளார்கள் என்ற தகவல் வெளி யாகவில்லை.
இந்தோனே´யாவின் மத்தியயாவா மாகாணத்திலிருந்து தென்கிழக்கில் அமைந் துள்ள இந்து சமுத்திரத்தில் 26ற்கும் மேற் பட்ட இலங்கை அகதிகளை ஏற்றிய படகு என நம்பப்படும் படகொன்று தரித்து நின்ற தாக இந்தோனே´யத் தரப்புத் தகவல்கள் தெரிவித்திருந்தன.
இந்தோனே´ய மீனவர்கள் இந்த இலங் கை அகதிப் படகை இனம் கண்டனர். இந்தப் படகு இலங்கை அகதிகளை ஏற்றி வரும் படகாக இருக்கலாம் என இந்தோனே´ய அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டனர்.அகதிகள், அதிகாரிகள் ஊடாக தமக்கு உதவுமாறு மீனவர்களிடம் கோரிக் கை விடுத்துள்ள தாக இந்தோனே ´யக் கடலோரக் காவல் படையின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.

மீள்கட்டுமானப் பணிகளைத் துரிதமாக்க ஆசிய அபிவிருத்தி வங்கி தலைவர் பணிப்பு

Saturday, May 29, 2010

வடக்குக் கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப் பட்டுள்ள இடங்கள் வழமையான நிலைக்குக் கொண்டுவரப்படுதல் வேண்டும். அதற்காக குறித்த பகுதிகளுக்கான மீள்கட்டுமானப் பணிகளை இலங்கை அரசாங்கம் துரிதமாக்க வேண்டும் என்று ஆசிய அபிவிருத்தி வங்கி யின் தலைவர் ஹருகிகோ குருடா தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் விஜயம் ஒன்றை மேற் கொண்டு இலங்கை வந்த அவர் நேற்று மாலை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு கூறினார். யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நலனுக்காக இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள அபிவிருத்தி வேலைத் திட்டங் களுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியினால் இவ்வருடம் 150 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனாக ஒதுக் கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Thursday, May 27, 2010

வெள்ளாமுள்ளிவாய்க்காலில் வெடி மருந்துகள் ,

Thursday, 27 May 2010
முல்லைத்தீவு வெள்ளாமுள்ளிவாய்க்கால் பகுதியில் நடத்தப்பட்ட தேடுதலில் துப்பாக்கிகளும் வெடிபொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
எல்.ரி.ரி.ஈயினரால் அமைக்கப்பட்ட பதுங்கு குழி ஒன்றில் இவை புதைக்கப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
தமோபரக் ரகத்தைச் சேர்ந்த இரண்டு துப்பாக்கிகளும், சி 90 ரக துப்பாக்கியொன்றும், ஐந்து ஆர்.பி.ஜி ரக கைக்குண்டுகள், உள்ளிட்ட துப்பாக்கி ரவைகளும் இவற்றுள் அடங்குகின்றன.
எல்.ரி.ரி.ஈயினரால் தயாரிக்கப்பட்ட இரண்டு குண்டுகள் மற்றும் ரி 56 ரக துப்பாக்கி என்பனவும் கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸார் கூறினர்.

புலிகளுக்கு சார்பான பிரசாரங்களில் ஈடுபட்டதாக கிழக்கில் இருவர் கைது .

Thursday, 27 May 2010
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு சார்பான பிரசாரங்களில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் கல்முனை மற்றும் களுவாஞ்சிக்குடி ஆகிய இரு பிரதேசங்களையும் சேர்ந்த இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் இவர்கள் கைதாகும் போது அவர்களிடமிருந்த கையடக்க தொலைபேசிகளில் விடுதலைப் புலிகளுக்குச் சார்பான வீடியோ காட்சிகள் இருந்ததாக பொலிஸ் பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.
வடக்கின் பாண்டிருப்பு மற்றும் எருவில் போன்ற பிரதேசங்களைச் சொந்த இடமாகக்கொண்ட இவ்விருவர் தொடர்பில் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல்களை அடுத்தே இந்த கைது இடம்பெற்றதாகவும் அவர் கூறினார்.
கடந்த வருடம் விடுதலைப் புலிகள் இயக்கம் முழுமையாக தோற்கடிக்கப்பட்டதை அடுத்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான பிரசாரங்களில் இவர்கள் ஈடுபட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
இவ்விருவர் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரும் களுவாஞ்சிக்குடி பொலிஸாரும் முன்னெடுத்து வருகின்றனர்.

இன்று வெசாக் பண்டிகை தினமாகும்! நாடெங்கிலும் கோலாகலம்,

Thursday, 27 May 2010
பௌத்த.மக்கள்.அனைவரும்.இன்று.வெசாக்.பண்டிகையைக் கொண்டாடுகின்றனா;.
புத்தபெருமானின் பிறப்பு இறப்பு மற்றும் ஞானம் பெறல் ஆகிய மூன்று சம்பவங்களும் ஒரே நாளில் சம்பவித்துள்ளதை நினைவூ கூறும் முகமாக பௌத்த மக்கள் இவ்வாறு அநுஷ்டிக்கின்றனா;.
பௌத்த நாடான இலங்கை வாழ் பௌத்த மக்கள் அனைவரும் மிக விமா;சையாக இன்றைய தினத்தை கொண்டாடுகின்றா;.
நாடெங்கிலும் பௌத்த வரவாற்றை சித்தாpக்கும் ஓவியங்களுடனான வண்ண விளக்குளாலான அலங்காரப் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்முறை கொழும்பில் எட்டு அலங்காரப் பந்தல்கள் காட்சிக்கு உள்ளன. மேலும் அலங்கார வெசாக் கூடுகளும் அமைக்கப்பட்டுள்ளன.
கொழும்பு நகாpலும்; மூன்று வெசாக் வலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் அலங்கார கூடுகளுக்கான போட்டிகளை நடத்தவூம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நாடெங்கிலம் பரவலாக பக்தி கீதங்களை இசைக்கவூம் எற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் நாடு பூராவூம் நாளை மதல் அண்ணதானங்களை நடத்த ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன,

Wednesday, May 26, 2010

கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் விழா

Wednesday, 26 May 2010
முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் விழா மிக கோலாகலமாக நேற்று இடம்பெற்றது. சுமார் முப்பதாயிரத்துக்க்கும் அதிகமான பக்தர்கள் ஆலயததை தரிசிக்க வருகை தந்தார்கள்.
கடந்த காலங்களில் வன்னியில் இடம் பெற்ற யுத்தம் காரணமாக ஆலயத்தில் பொங்கல் விழா இடம் பெறாமலேயே இருந்து வந்தது.இன்றைய யுத்தம் அற்ற சூழலில் ஆலய பொங்கல் விழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
வவனியா நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டிருப்பவர்கள் , வன்னியில் இருந்து இடம் பெயர்ந்து ஏனைய இடங்களில் வாழ்பவாகள்,யாழ்ப்பாணம் கிளிநோச்சி வவுனியா மன்னார் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என நாட்டின் பல பாகங்களிலும் இருந்து மககள் வந்து பொங்கிப் படைத்தனர்.
காவடிகள் எடுத்தனர். நேர்த்திக்கடன்களை மிகவும் பயபக்தியுடன் நிறைவேற்றினர். ஆலய வாசலில் ஆயிரக்கணகான பானைகளில் மககள் அம்மனுக்கு பொங்கி படைத்தனர். அதே நேரம் ஆலய சுற்றாடலில் பொலிஸாரும் இராணுவத்தினரும் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டு இருந்தார்கள் .

ஜூலையில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் பூர்த்தியாகும்.

Wednesday, 26 May 2010
எதிர்வரும் ஜூலை மாத நடுப்பகுதி அளவில் கண்ணிவெடி அகற்றும் மனிதாபிமான தொண்டு நடவடிக்கைகளை முழுமையாக பூர்த்தி செய்ய முடியும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. கண்ணிவெடி அகற்றும் பணி பூர்த்தியானதன் பின்னர் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் வடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் சந்திரா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
விவசாய நிலங்கள் மற்றும் காட்டுப்பகுதிகளில் புதைக்கப்பட்டுள்ள கண்ணி வெடிகளை அகற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புக் கட்டண மோசடி .

Wednesday, 26 May 2010
இலங்கையில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களுக்கான கட்டளைகள் இன்றியும் வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் முன் அனுமதி இன்றியும் பணம் வசூலிக்கும் நபர்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் தொடர்பாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
பதிவு செய்யப்பட்ட வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலையங்களுக்குக் கிடைக்கும்தொழில் கட்டளைகள் தொடர்பாகப் பணியகத்துக்குத் தகவல் சமர்பிக்க வேண்டும்.
தூதுவராலய மட்டத்தில் இது தொடர்பாக ஆராயப்படுமென வெளிநாட்டு வேலைவாயப்புப் பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்.
சில முகவர் நிலையங்கள் தூரப் பிரதேச இளைஞர் யுவதிகளிடம் தொழில் கட்டளைகள் இன்றிப் பெருந்தொகைப் பணத்தை வசூலிப்பதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பணியகத்துக்குக் கிடைக்கும் சகல முறைப்பாடுகள் தொடர்பாகவும் விசாரணைகள் நடத்தப்படுமென கிங்ஸ்லி ரணவக்க கூறினார்.
சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களைக் கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எந்த அடிப்படையில் கட்டணம் அறவிடப்படுகின்றது என்பதை வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிலையங்கள் தமது பணியகத்துக்கு அறிவிக்க வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகச் சட்டத்தில் அண்மையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தத் திருத்தத்திற்கு அமைய சட்டங்களை மீறி வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களின் அனுமதிப் பத்திரத்தை இரத்துச் செய்ய முடியுமெனப் பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க மேலும் தெரிவித்தார்.

வடக்கு கிழக்கில் 26 புதிய தபாலகங்கள் தபால் மா அதிபர் தகவல்,

Wednesday, 26 May 2010
வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் தபால் திணைக்களம் புதிதாக 26 தபால் நிலையங்களை வடக்கு கிழக்கில் நிர்மாணித்து வருகின்றது.
வடக்கு கிழக்கில் புதிதாக 26 தபால் நிலையங்கள் நிர்மாணிக்கப்படுவதாக தபால் மா அதிபர் எம். கே. பி. திசாநாயக்க கூறினார். இவை நவீன வசதிகளுடன் கூடியதாக அமைக்கப்படுவதாகவூம் இவற்றுக்கு தொலைபேசி மற்றும் கணணி; வசதிகள் என்பனவூம் வழங்கப்படவூள்ளன.
யூத்த சு+ழ்நிலை காரணமாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள தபால் நிலையங்கள் சேதமடைந்தன. யூத்தம் முடிவடைந்த பின்னர் தற்காலிக இடங்களில் தபால் நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டன.
இந்த நிலையில் வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் 26 தபால் நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருவதாக தபால் மா அதிபர் குறிப்பிட்டார்

வெசாக் பண்டிகை விஷேட ரயில் சேவை! மூன்று நாட்களுக்கு தொடரும்,

Wednesday, 26 May 2010
வெசாக் பண்டிகையை முன்னிட்டு பக்தா;களுக்கு அநுராதபுரம் செல்வதற்காக விஷேட ரயில் சேவைகளை நடத்த ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இன்று (26) நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய மூன்று நாட்களிலும் பிற்பகல் 1.25 க்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து அநுராதபுரத்துக்கு விஷேட ரயில் சேவை ஒன்றை நடத்த ஏற்பாடு செய்துள்ளதாக ரயில்வே ஊடகப் பேச்சாளா; விஜய சமரசிங்ஹ தொpவித்தார்
இவ்வாறு புறப்பட்டுச் செல்லும் ரயில் மாலை 6.02க்கு அநுராதபுரம் ரயில் நிலையத்தை சென்றடைகிறது.
அதேபோன்று குறிப்பிட்ட மூன்று தினங்களிலும் காலை 8.45 க்கு அநுராதபுரம் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் ரயில் பிற்பகல் 1.40 அளவில் கொழும்பு கொட்டையை வந்தடையூம் என அவா; மேலும் தொpவித்தார்

Tuesday, May 25, 2010

யாழ். ஆஸ்பத்திரிக்கு 200 கோடி ரூபா செலவில் நவீன நான்கு மாடிக் கட்டம்!

Tuesday, 25 May 2010
யாழ் ஆஸ்பத்திரி வளாகத்தில் 200 கோடி ரூபா செலவில் நான்கு மாடிகளைக்கொண்ட நவீன வைத்திய வசதிகள் கொண்ட கட்டடம் ஒன்றை அமைக்க ஜப்பான் சா;வதேச ஒத்துழைப்பு நிறுவனம் முன்வந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
நவீன ஆய்வூகூடம்இ நவீன அறுவை சிகிச்சைப் பிரிவூஇ தீவிர சிகிச்சைப் பிரிவூ என்பன இந்த நான்கு மாடிக் கட்டத்தில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
யாழ் ஆஸ்பத்திரியில் தற்போது 16இ 17இ 18இ 23இ மற்றும் 26 ஆம் வாh;டுகள் அமைந்துள்ள இடத்திலேயே இப்புதிய கட்டம் அமைக்கப்படவூள்ளது. இந்த வாh;டுகள் ஜூன் மாதத்துக்கு முன்னா; அழிக்கப்பட்டு அந்த இடத்தில் இரண்டு வருட காலத்துக்குள் புதிய மாடிக்கட்டடம் அமைக்கப்படவூள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் போக்குவரத்து விதிமுறைகளை அமுல்படுத்த பொலிஸாருக்கு உத்தரவு

Tuesday, 25 May 2010
யாழ்.மாவட்டத்தில்,போக்குவரத்து,விதிமுறைகளை,முழுமையாக அமுல்படுத்துமாறு யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கே.கணேஸ் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன் அங்கு இடம்பெறுகின்ற சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக செயற்படுமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
யாழ். மாவட்டத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் காமினி டி சில்வா, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பத்மதேவ ஆகியோருடனான சந்திப்பின் போதே அரசாங்க அதிபர் மேற்கண்டவாறான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

Monday, May 24, 2010

இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம் என கோரிக்கை .

May 24, 2010
இலங்கையின் உள்விவகாரங்களில் ஐநா செயலாளர் நாயகம் பான் கீ மூனை தலையிட வேண்டாம் என இலங்கை, வேண்டுகோள் விடுத்துள்ளது.
இராணுவத்திற்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் பற்றியும் ஐக்கிய நாடுகள் சபை சுதந்திரமான விசாரணைக்குழு ஒன்றை நியமித்து உண்மைநிலையை வெளிப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை எனவும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

புலிகளின் துஷ்பிரயோகம் தொடா;பான ஐ.நா.வின் அறிக்கை காலம் கடந்தது!

May 24, 2010
வன்னியில் இடம்பெற்றிருந்த இறுதிக்கட்ட யூத்தத்தின் போது புலிகளால் மேற்கொள்ளப்பட்ட துஷ்பிரயோகங்களை சுட்டிக்காட்டியூள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையானது காலம் கடந்த நடவடிக்கை என்று அராசாங்கம் அறிவித்துள்ளது.
புலிகள் இயக்கமே இந்த போர்க் குற்றங்களில் ஈடுபட்டது என்றும்இ படையினர் அவ்வாறான குற்றங்களை மேற்கொள்ளவில்லை என்றும் ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுட்டிக்காட்டினார்.
வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யூத்தத்தின்போது தப்பிச்செல்ல முயற்சித்த பெண்களின் தலைமுடியை விடுதலைப் புலிகள் கட்டையாக வெட்டியூள்ளனர். இதனால் தலைமுடி கட்டையாக வெட்டப்பட்ட பெண்களை புலி உறுப்பினர்கள் என கருதிய இராணுவத்தினர்இ முகாம்களில் அவர்களை வித்தியாசமான முறையில் நடத்தியூள்ளனர் என்றும் ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இருப்பினும்இ சரணடைந்த விடுதலைப் புலி உறுப்பினர்களை படையினர் முறையாக நடத்தி அவர்களுக்கான மருத்துவ உதவிகளையூம் செய்தனர் என்று தெரிவித்த ஊடக அமைச்சர்இ சரணடைந்த புலிகளிடம் படையினர் தவறுதலாக நடந்துகொள்ளவில்லை என்றும் கூறினார்

கொழும்பு வீதி அபிவிருத்திப் பணிகளில் சிறைக் கைதிகள்

May 24, 2010
கொழும்பு வீதி அபிவிருத்திப் பணிகளில் சிறைக் கைதிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள இந்திய சர்வதேச திரைப்பட விழாவினை முன்னிட்டு வீதி அபிவிருத்திப் பணிகள் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
60 வீதமான சிறைக் கைதிகள் நகர அபிவிருத்திப் பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகரசபையின் நிர்வாக அதிகாரி ஒமர் காமில் குறிப்பிட்டுள்ளார். நகர அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட்டு வரும் கைதிகளின் உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் தற்போது நிலவி வரும் மோசமான காலநிலையினால் வீதி அபிவிருத்திப் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. எவ்வாறெனினும், திரைப்பட விழாவிற்கு முன்னதாக வீதி அபிவிருத்திப் பணிகள் பூர்த்தியாகும் என நகர நிர்வாகி ஒமர் காமில் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Saturday, May 22, 2010

ததேகூ உறுப்பினர்களுக்கு செட்டிக்குளம் முகாம் செல்ல அனுமதி மறுப்பு

Saturday, May 22, 2010
வவுனியா செட்டிகுளம் நிவாரணக் கிராமங்களுக்கு இன்று தாம் மேற்கொள்ளவிருந்த விஜயத்திற்கான அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு சற்று முன் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவின் உத்தரவுகளுக்கு அமைவாகவே இதற்கான அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாகவும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கூட்டமைப்பின் 12 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒரு மணி நேரம் நடுவீதியில் காத்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பின் 12 உறுப்பினர்களும் செட்டிகுளம் நிவாரணக் கிராமங்களுக்கும், வவுனியா பிரதேச தடுப்பு முகாம்களுக்கு இன்று செல்லவிருந்தனர்.
செட்டிகுளம் நிவாரணக் கிராமங்களுக்கு செல்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து, மன்னாரில் இடம்பெயர்ந்திருக்கும் மக்கள் மீள்குடியேற்றப்பட்டிருக்கும் இடங்களுக்கு தாம் தற்போது சென்றுகொண்டிருப்பதாக கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

தென்னிந்திய விமான விபத்தில் 160 பேர் பலி

Saturday, May 22, 2010
தென்னிந்தியாவின் மங்களூர் விமான நிலையத்தில் எயார் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான விமானமொன்று விபத்துக்குள்ளானதில் 160 பேர் உயிரிழந்துள்ளனர்.
துபாயிலிருந்து புறப்பட்ட இந்த விமானம் கர்நாடக மாநிலத்தின் மங்களூர் விமான நிலையத்தில் இன்று காலை 6 மணியளவில் தரையிறங்க முயன்றபோது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
விமானம் தரையிறங்கியபோது ஓடுபாதையைவிட்டு விலகி விபத்துக்குள்ளானதுடன் தீப்பற்றிக்கொண்டதாக விமான நிலையப் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக ரொய்டர் செய்தி கூறுகிறது.
இந்த விமானத்தில் 163 பயணிகளும் 6 விமானப் பணியாளர்களும் இருந்ததாகவும் இவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்கலாமெனவும் முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 160 என கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் வி எஸ் ஆச்சார்யா உறுதிப்படுத்தியுள்ளார்.

Friday, May 21, 2010

நிவாரணப் பணிகளில் கடற்படையினர்

Friday, 21 May 2010
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 300 படகு ஓட்டுநர்களைக் கடற்படையினர் அனுப்பிவைத்துள்ளனர்.
இவர்கள் 30 குழுக்களாக, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் கடற்படைப் பேச்சாளர் கப்டன் அத்துல செனரத் கூறினார்.
கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி, மாரவிலை ஆகிய பகுதிகளில் கடற்படைப் படகோட்டுனர்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களுடன் கடற்படைக்குச் சொந்தமான 28 படகுகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் திசர சமரசிங்க நேற்று கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் விஜயம் செய்து நிவாரணப் பணிகளில் ஈடுபடும் கடற்படையினர் குறித்து ஆராய்ந்தார்.

பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் என்கிறார் அமைச்சர்

Friday, 21 May 2010
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சர் ஏ எச் எம் பௌசி தெரிவித்துள்ளார்.
வெள்ளம் வடிந்தோடியதன் பின்னர் இந்த நடவடிக்கைகள் மேலும் விஸ்தரிக்கப்படுமென அவர் சொன்னார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லையெனச் சிலர் வதந்திகளைப் பரப்புவதாகவும் இது உண்மையல்லவெனவும் அவர் சொன்னார்.
அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் முயற்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலக உணவுத் திட்டத்தினால் உலர் உணவுப் பொருள்கள் வழங்கப்படுவதாக அமைச்சர் பௌசி கூறினார்.
அத்துடன் நிவாரணம் வழங்குவதற்காக இதுவரை 25 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதெனவும் மேலும் 55 மில்லியன் ரூபா நிதி அமைச்சிடம் உள்ளதாகவும் அமைச்சர் பௌசி தெரிவித்தார்.
முற்றாகவோ அல்லது பகுதியாகவோ சேதமடைந்த வீடுகளின் உரிமையாளர்களுக்கும் நிவாரணம் வழங்கப்படவுள்ளது.
சேதமடைந்த வீடுகளைப் புனரமைக்கவும் நிதி உதவி வழங்கப்படவுள்ளது.
நிலைமை வழமைக்குத் திரும்பியதன் பின்னர் பிரதேச செயலகங்கள் ஊடாக நிவாரணம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் அது குறித்து அமைச்சிடம் முறைப்பாடுகளைத் தெரிவிக்கலாமென அமைச்சர் கூறினார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
மூன்று கட்டங்களாக 50 ஆயிரம் ரூபா வழங்கப்படவுள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் மரினா மொஹமட் கூறினார்,
இதேவேளை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பாகப் பிரதேச செயலாளர்களும் கிராம உத்தியோகத்தர்களும் தகவல்களைச் சேகரித்து வருகின்றனர்.

Thursday, May 20, 2010

புலி சந்தேக நபருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை

Thursday, May 20, 2010
கொழும்பு நகரில் சேதத்தை ஏற்படுத்தும் நோக்கில் வெடி பொருட்களைக் கொண்டுவந்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட விடுதலைப் புலி சந்தேக நபர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபர் முன்வைத்த இரண்டு குற்றச்சாட்டுக்களை சந்தேக நபர் ஏற்றுக்கொண்டுள்ளார். இதனையடுத்து மேல் நீதிமன்ற நீதிபதி சுனில் ராஜபக்ஸ இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர் லிங்கம்பத்மநாதன் என்ற சந்தேக நபருக்கே இந்த கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2008 செப்டம்பர் மாதம் 27ம் திகதி அல்லது அதற்கு அண்மைய தினமொன்றில் ரி.என்.ரி மற்றும் சி 4 ரக வெடிமருந்துகளைக் கொண்டுசென்றார் என்ற குற்றச்சாட்டில் சந்தேக நபர் பாதுகாப்புத் தரப்பினரால் கைதுசெய்யப்பட்டார்

பணிப்பாளர் தேர்வில் கலந்து

Thursday, May 20, 2010

செலிங்கே இன்ஷூரன்சின் அடுத்த பணிப்பாளருக்கான தெரிவு இடம்பெறும் போது தான் கலந்துக்கொள்ளப் போவதில்லை என லலித் கொத்தலாவல தெரிவித்துள்ளார். லலித் கொத்தலாவலவின் தற்போதைய பதவிக்காலம் மே மாதம் 28ம் திகதியுடன் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது

Wednesday, May 19, 2010

சீரற்ற காலநிலை! சுமார் 4 லட்சம் பேர் பரிதவிப்பு!!

Wed, 19/05/2010
பாதிப்படைந்துள்ளன சீரற்ற கால நிலை காரணமாக 89,725 குடும்பங்களைச் சேர்ந்த 392,686 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கிறது.
சீரற்ற கால நிலை காரணமாக ஏற்பட்ட பல்வேறு விபத்துகளில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
இயற்கை அனர்த்தம் காரணமாக 1,555 குடும்பங்கள் இடம்பெயர்ந்து தற்காலிகமாக வேறு இடங்களில் தங்கியுள்ளனர்.
மிக மோசமாகப் பாதிப்படைந்த கொழும்பு மாவட்டத்தில் 142,236 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கூறுகிறது.
கம்பஹா மாவட்டத்தில் 115,031 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 37,605 பேரும், காலி மாவட்டத்தில் 94,971 பேரும் சீரற்ற காலநிலையால் பாதிப்படைந்துள்ளதாக நிலையம் தெரிவிக்கிறது.
இம்மாவட்டங்கள் தவிர காலி, கேகாலை, இரத்தினபுரி, குருநாகல், புத்தளம், திருகோணமலை, மாத்தறை, மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களும்

பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம்

Wed, 19/05/2010
மழை வெள்ளம் காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க, குறுகிய மற்றும் நீண்ட காலத் தீர்வு எடுக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.
நிவாரண நடவடிக்கைகள் தொடர்பாக நேற்றுப் பிற்பகல் ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடப்பட்டபோதே இது தொடர்பான தீர்மானமெடுக்கப்பட்டதாக அமைச்சர் ஏ எச் எம் பௌஸி தெரிவித்தார்.
நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச செயலாளர் அலுவலகங்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் சொன்னார்.
இதேவேளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு 3 தினங்களுக்குச் சமைத்த உணவு வழங்கப்படவுள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் மரீனா மொஹமட் தெரிவித்தார்.
இதன் பின்னர் அவர்களுக்கு உலர் உணவுப் பொருள்கள் வழங்கப்படுமென அவர் சொன்னார்.
பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பாகக் கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோரால் ஆய்வுசெய்யப்படவுள்ளது.
ஆகக் கூடுதல் நிவாரணமாக 50 ஆயிரம் ரூபா வரை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

புலிகள் இயக்கம் இன்னமும் மிரட்டல்: இந்தியா

Wed, 19/05/2010
புலிகள் இயக்கம், இந்தியாவுக்கு இன்னமும் மிரட்டலாக உள்ளதாகப் புதுடெல்லி தெரிவித்துள்ளது.
இலங்கையில் சென்ற ஆண்டில் புலிகள் இயக்கம் ஒழிக்கப்பட்டதற்கு இந்தியத் தலைவர்களே காரணம் என்று புலிகள் அமைப்பு குறைகூறி வருகிறது என்று இந்திய அரசாங்கம் வெளியிட்டுள்ள அரசிதழ் அறிவிப்பு தெரிவிக்கிறது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவின் இறை யாண்மைக்கு இன்னமும் தொடர்ந்து ஒரு மிரட்டலாகவே இருந்து வருகிறது,” என்று அந்த அறிவிப்பு குறிப்பிட்டுள்ளது.
புலிகள் அமைப்பை இலங்கை ராணுவம் ஒழித்துவிட்டது என்ற போதிலும் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டில் மீண்டும் ஒன்று திரள்கிறார்கள்.
தனித் தமிழ் ஈழத்தை அமைக்க அவர்கள் மறுபடியும் ஒன்று கூடுகிறார்கள்” என்றும் அந்த அரசு இதழ் தெரிவிக்கிறது.
இலங்கைப் போரில் உயிர் தப்பிய புலிகள் இயக்கத்தினர், தங்களைக் காட்டிக்கொடுத்த துரோகிகள் என்றே இந்திய அரசாங்கத்தைக் கருதுகிறார்கள்.
இந்திய அரசையும் இலங்கை அரசையும் விரோதிகளாக நினைக்கும் அவர்கள் பழிக்குப் பழி வாங்க விரும்புகிறார்கள்” என்றும் அந்த அறிவிப்பு குறிப்பிட்டுள்ளது.
புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த அத்தகைய போராளிகள், இந்தியாவைக் குறிப்பாகத் தமிழ்நாட்டைப் பயன்படுத்தி மறுபடியும் ஒன்று திரண்டு தாக்குதலைத் தொடங்கக்கூடிய சாத்தியத்தை மறுக்க முடியாது,” என்றும் அந்த அறிவிப்பு கூறியது.
புலிகள் அமைப்பின் தலைவர்களும் போராளி களும் ஆதரவாளர்களும் இந்தியாவின் இலங்கை கொள்கையை வெறுக் கிறார்கள் என்றும் இந்திய அரசிதழ் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப் பட்டதை அடுத்து, அதற்கு அடுத்த ஆண்டான 1992ல் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை இந்தியா தடை செய்தது.
அந்தத் தடை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவையாக இதுவரை நீட்டிக்கப்பட்டு வருகிறது.
சில நாட்களுக்கு முன் புலிகளுக்கு எதிரான தடையை நீட்டித்து இந்திய அரசு அறிக்கை வெளி யிட்டது. அதையொட்டி இப்போதைய அரசு இதழ் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
இதற்கிடையே இலங்கையில் அவசரகால பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதானவர்கள் தொடர்ந்து தடுத்து வைக்கப்படுவர் என இலங்கைப் பிரதமர் டி.எம்.ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

Tuesday, May 18, 2010

பயணிகளுக்கு வேண்டுகோள்

May 18, 2010
கொழும்பு பிரதேசத்திற்கும் கட்டுநாயக்க விமான நிலைய பாதைக்குமிடையில் ஒரு சில இடங்களில் வெள்ளப்பெருக்கின் காரணமாக பயணிகள் விமான நிலையத்தை வந்தடைய தாமதமடைவதாகவும், அவர்களை பயண நேரத்தின் நான்கு மணித்தியாலயங்கள் முன்பு விமான நிலையத்தை வந்தடையுமாறும் ஸ்ரீ லங்கா எயர் லைன்ஸ கேட்டுக் கொண்டுள்ளது.

கீழ் குறித்த தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு விமான சேவைகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.

ஸ்ரீ லங்கா எயர் லைன்ஸ பொது இலக்கம் : 019733 5555



விமான சேவை விபரம் : 019733 2377

பாராளுமன்ற கூட்டத்திலும் காலநிலை செல்வாக்கு

Tuesday, May 18, 2010
இன்று பாரளுமன்ற கூட்டத்தை அனைவரும் ஏற்றுக் கொண்டதற்கிணங்க இன்று மாலை 1.55 மணியளவில் பாராளுமன்ற கூட்டம் நிறுத்தப்பட்டு. நாளை காலை மீண்டும் கூடயிருப்பதாக உதவி பாரளுபமன்ற சபாநாயகர் பிரியங்கரா அறிவித்துள்ளார்.

Sunday, May 16, 2010

பிரான்ஸ் உதவியூடன் இலங்கையில் சேலைன் உற்பத்தி!

Sunday, 16 May 2010
இலங்கையில் சேலைன் உற்பத்தி செய்யூம் நடவடிக்கைகள் இவ்வருட இறுதிக்குள் ஆரம்பிக்கப்பட்டு விடுமென்று சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சேலைன் உற்பத்தி செய்வதற்கான திட்டத்தை ஆரம்பிப்பதற்கான சகல அறிக்கைகளும் தயாரிக்கப்பட்டு விட்டதாகவூம் அடுத்த ஆறு மாத காலத்தினுள் பூர்வாங்கப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுவிடுமென்றும் அமைச்சர் சிறிசேன தெரிவித்தார்.
சேலைன் உற்பத்திக்கென பிரான்ஸ் அரசாங்கத்திடமிருந்து 6.4 மில்லியன் யூ+ரோ கடனாகக் கிடைக்கப்பெற்றுள்ளது. தேவையான இயந்திர உபகரணங்கள் மற்றும் பயிற்சிகளைப் பெற்றுக்கொடுக்க பிரான்ஸ் அரசாங்கம் முன்வந்துள்ளது.
இதன்படி ஒரு வருடத்திற்குத் தேவையான 7.2 மில்லியன் சேலைன் போத்தல்களை உற்பத்தி செய்வதே சுகாதார அமைச்சின் இலக்காகும். இதுவரை சேலைன் போத்தல்களை இறக்குமதி செய்யவென வருடாந்தம் 260 மில்லியன் ரூபாவை அரசாங்கம் செலவிட்டு வருகிறது.
இதேவேளை அரசாங்க வைத்தியசாலைகளில் சேலைன் பற்றாக்குறையை நிவர்த்திக்கவென விமானப்படை விமானம் மூலம் 37 ஆயிரம் கிலோ சேலைன் இந்தியாவிலிருந்து தருவிக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காவல்துறை மா அதிபரின் பதவிக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது

Sunday, 16 May 2010
காவல்துறை மா அதிபரின் பதவிக் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
காவல்துறை மா அதிபரின் பதவிக் காலம் ஒரு வருடத்தினால் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் 3ம் திகதி ஆறு மாத கால அடிப்படையில் மஹிந்த பாலசூரிய காவல்துறை மா அதிபராக நியமிக்கப்பட்டார்.
சேவை நீடிப்பு வழங்கப்பட்டதனைத் தொடர்ந்து நடமாடும் காவல்துறை சேவையொன்றை அவர் ஆரம்பித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

Sunday, 16 May 2010
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி பிறைன் எட்கின் தலைமையிலான குழுவினருக்கும், அரசாங்க அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
வட மாகாண ஆளுனர் ஜீ.ஏ. சந்திரசிறி மற்றும் அரசாங்க அதிபர் கே.கணேஷ் ஆகியோருடன் சந்திப்புக்கள் நடத்தப்பட்டுள்ளன.
அபிவிருத்தி மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகள் குறித்து இந்த சந்திப்பின் போத அரசாங்க அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதி அதிகாரிகளின் விஜயம் வழமையானதென மத்திய வங்கி அதிகாரிகள் தெரிவித்த போதிலும், இலங்கை;கு மூன்றாம் கட்ட கடனை வழங்குவது தொடர்பிலான கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் இந்த விஜயம் நடைபெறுவதாக பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னரே இலங்கைக்கு கடன் வழங்குவது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Saturday, May 15, 2010

உலகில் பயங்கரவாதத்தை ஒழித்தவர்கள் நாமே : இராணுவத் தளபதி

Saturday, May 15, 2010
உலகில் எந்தவொரு நாடும் பயங்கரவாதத்தைத் தோற்கடித்ததில்லை. நாம் அதனைச் செய்திருக்கிறோம். பயங்கரவாதத்தை தோற்கடித்தமை தொடர்பில் எமது அனுபவங்களை வேறு நாடுகளுடன் பகிர்ந்துகொள்ளவும் நாம் தயாராக இருக்கிறோம் என இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
யுத்தத்தால் உடல் அவயங்களை இழந்த இராணுவ வீரர்களுக்கு சகல வசதிகளுடன் கூடிய வீடுகள் அமைத்துக் கொடுப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று அநுராதபுரத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இராணுவத் தளபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அனைத்து இராணுவத்தினரின் பங்களிப்பினாலும் நாட்டில் நிலவிய பயங்கரவாதத்தை முற்றாக அழிக்க முடிந்தது. தாய்நாட்டுக்காகத் தமது உடற்பாகங்களை இழந்த இராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்துமுகமாக இத்திட்டத்தினை முன்னெடுத்து வருகிறோம்" என அவர் மேலும் கூறினார்.
பிரேவ் ஹார்ட்' செயற்திட்டத்தின் மூலம் அநுராதபுரத்திலுள்ள அங்கவீனமுற்ற 200 இராணுவ வீரர்களுக்கு இந்த வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளதாக அங்கிருக்கும் எமது அலுவலக செய்தியாளர் தெரிவிக்கிறார்

நுவரெலியா தோட்டத்தில் ரோனடோ சு+றாவளி!

Saturday, May 15, 2010
நுவரெலியா நெஸ்லி தோட்டத்தில் நேற்று திடீரென ஏற்பட்ட ரோனடோ சு+றாவளியினால் ஆறு வீடுகள் சேதமடைந்ததோடு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 36 வயதுடைய உதயகுமார் என அடையாளங் காணப்பட்டுள்ளார்.
நுவரெலியா மாவட்டத்தில் நேற்று இலேசான மழை பெய்து கொண்டிருந்தது. நண்பகல் இரண்டு மணியளவில் திடீரென ரொனடோ சுழல்காற்று ஏற்பட்டது. இதில் வீடுகள் தூக்கி வீசப்பட்டதோடு மின்கம்பங்களும் பாதிக்கப்பட்டன.
இந்த வேளையில் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த உதயகுமார் மீது வீட்டுச் சிதைவூகள் மோதி வெட்டியதிலேயே உயிரிழந்தாரென பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
நுவரெலியா மாவட்ட எம்.பி. வே. இராதாகிருஷ்ணன் ஸ்தலத்திற்கு விரைந்து நிலைமைகளை ஆராய்ந்ததோடு பாதிக்கப்பட்டோருக்கு உலர் உணவூ வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தார்,

Friday, May 14, 2010

ஜீ-15 மாநாட்டின்; தலைமைப் பதவி இலங்கைக்கு

Friday, 14 May 2010

ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் நடைபெறும். ஜீ- 15 நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று இரான் பயணமாகவூள்ளாh;.
ஜனாதிபதியின் தலைமையில் விஷேட குழு ஒன்றும் பங்குபற்ற உள்ளது.
இன்று முதல் 17 ஆம் திகதி வரை ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் நடைபெறும். இந்த மாநாட்டில் கலந்துகொள்ளும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இலங்கைக்குழு இன்று தெஹ்ரான் பயணமாகவூள்ளது.
ஜீ- 15 நாடுகளின் தலைமைப் பதவி இம்முறை இலங்கைக்கு வழங்கப்பட உள்ளது. தற்பொழுது ஜீ-15 நாடுகளின் தலைமைப் பதவியை ஈரான் ஜனாதிபதி மஹ்மூத் அஹமதி நிஜாத் வகிப்பதோடு மேற்படி தலைமை பதவி நாளைஇலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்க ப்படவூள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
ஜனாதிபதியூடன் வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் அடங்கலான உயர்மட்டக் குழு தெஹ்ரான் செல்ல உள்ளது. இலங்கை ஜனாதிபதி ஈரான் உட்பட பல நாட்டு தலைவர்களை சந்தித்து பேச உள்ளதாகவூம் அவர் கூறினார்

தேசிய நல்லிணக்க ஆணைக்குழு நியமிக்கப்படவுள்ளது

Friday, 14 May 2010

படித்த படிப்பினைகளைக் கொண்டு பிரச்சினைகளின் அடிப்படையைக் கண்டறிவதற்காக ஏழுபேர் கொண்ட தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவை நியமிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது என அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்து பேசிய அமைச்சர், தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவை நியமிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் இந்தக் குழுவில் அங்கம் வகிப்போரின் பெயர்கள் அடங்கிய மேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் கூறினார்.
பிரச்சினையின் அடிப்படையைக் கண்டறிந்து தீர்வு காணும் பொருட்டே இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
அத்தகைய தீர்வினை எட்டாவிடில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களிடையே மீண்டும் பிரச்சினையைத் தோற்றுவித்து விடும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் 2011 ஆம் ஆண்டிற்காகக் குறைநிறப்பு ஒதுக்கீட்டுப் பிரேரணை ஜுலை மாதம் 22 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும் எனவும் ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

பொலிஸ் சேவைக்கு வடக்கிலிருந்து 500 பேர்!

Friday, 14 May 2010

வடக்கின் யாழ். மாவட்டத்திலிருந்து பொலிஸ் சேவைக்கு 500 சேர்த்துக்கொள்ளப்படடுள்ளதுடன் அவா;களுக்கு களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி வழங்கவூம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கிறது.
ஆதன்படி பயிற்சிக்காக 367 பேர் களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா;. அடுத்த கட்டப் பயிற்சிக்கு எஞ்சியவா;கள் அனுப்பி வைக்கப்படவூள்ளனா;.
பயிற்சிகளின் பின்னா; இவர்கள் வடமாகாண பொலிஸ் நிலையங்களில் கடமையில் அமர்த்தப்படவூளளனா;.
வடபகுதியிலிருந்து சுமார் மூன்று தசாப்தங்களின் பின்னர் முதல் முறையாக பொலிஸ் சேவைக்கு ஆட்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளனர். யாழ். மாவட்டத்திலிருந்து தகுதிவாய்ந்த இளைஞர்களை பொலிஸ் சேவைக்கு சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கடந்தாண்டு கோரப்பட்டிருந்தன.
இதன்படி சுமார் 6000 விண்ணப்பங்கள் பொலிஸ் திணைக்களத்திற்கு கிடைத்திருந்தன. குறிப்பிடப்பட்ட வயதெல்லையையூம் விஞ்சிய வயதையூடையவர்களும்இ விவாகமானவர்களும் விண்ணப்பித்திருந்தனர். 6000 விண்ணப்பங்களுள் தகுதிவாய்ந்தவர்கள் எனக் கருதப்பட்ட 1500 பேர் மட்டுமே நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
2009ஆம் ஆண்டு 6ஆம் மாதம் 26ஆம் திகதி நடத்தப்பட்ட நேர்முகப் பரீட்சையின் பயனாக 500 பேர் மட்டுமே பொலிஸ் சேவைக்கு சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனரென பொலிஸ் தலைமையக ஆட்சேர்ப்பு பிரிவூ பொறுப்பதிகாரி ஐ. எம். கருணாரட்ன தெரிவித்தார்

Followers

Blog Archive