Sunday, August 22, 2010

ஜனாதிபதியின் ஏற்பாட்டில் அலரி மாளிகையில் இப்தார் பெருமளவிலான முஸ்லிம்கள் பங்கேற்பு.


Sunday, August 22, 2010
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அலரி மாளிகையில் நேற்று முன்தினம் நடத்திய ‘இப்தார்’ நிகழ் வில் ஏராளமானோர் பங்குபற்றினர். அமைச்சர்கள், பிரதி அமைச் சர்கள், எம்.பீ மார்கள், உலமாக்கள், ஊடக வியலாளர்கள், ராஜதந்திரிகள் என அநேகர் ‘இப்தா’ரில் பங்குபற்றினர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரமுகர் களுடன் அமர்ந்து பேரீத்தம்பழத்துடன் நோன்புக் கஞ்சி அருந்தினார்.

மேல் மாகாண ஆளுநர் எஸ். அலவி மெளலான இங்கு பேசுகையில், முஸ்லிம் களின் உற்ற நண்பரான ஜனாதிபதி பலஸ் தீன விவகாரத்தில் காட்டிய, காட்டி வரும் பேரார்வத்தையும், பலஸ்தீன மக்களுக்கான அவரின் ஆதரவையும் பாராட்டிப் பேசினார்.

இலங்கை வானொலியில் ஐந்து நேரத் தொழுகைக்கான ‘பாங்கை’ ஒலிபரப்பச் செய்துள்ள அவர் முஸ்லிம்களை மிகவும் நேசிப்பவர் என்றும் கூறினார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர் பேசுகையில், ஜனாதிபதி முஸ்லிம்களைக் கெளரவிக்க தமது அலரி மாளிகையில் இவ்வாறு ‘இப்தார்’ மஜ்லிஸை ஏற்பாடு செய்துள்ளமை பாராட்டத்தக்கது.

அவர் முஸ்லிம்களுக்காக நிறைய சேவை செய்துள்ளார். முதலிலும் தாயகம், இரண்டாவதும் தாயகம், மூன்றாவதும் தாயகம் என்ற உயர் கோட்பாட்டை அவர் வலியுறுத்தி வருவது பெரிதும் பாராட்டத்தக்கது என்றார்.

நோன்பின் மாண்புகள் பற்றி கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மெளலவி எஸ். எல். எம். ஹஸன் (அல் அஸ்ஹரி) உரையாற்றினார்.

எகிப்திய ‘காரி’மாரின் ஓதல்களும் இடம்பெற்றன. இப்தார் நிகழ்ச்சிகள் வானொலி முஸ்லிம் சேவையின் ஊடாகவும், ரூபவாஹினி ஊடாகவும் நேரடியாக ஒலி, ஒளிபரப்பு செய்யப்பட்டன.

இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு வரவுள்ளார்.

Sunday, August 22, 2010
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரொமேஷ் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

எனினும், அதற்கு முன்னர் இந்தியாவின் உயர் இராஜதந்திரிகள் எவரும் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக இந்திய அரசு இதுவரையில் அறிவிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இடம்பெயர் மற்றும் மீள் குடியேற்றப்பட்ட மக்களின் நிலைமைகளை நேரில் பார்வையிடும் நோக்கிலும், மீனவர் பிரச்சினை குறித்து ஆராய்வதற்கும் விசேட பிரதிநிதி ஒருவர் இலங்கைக்கு விரைவில் விஜயம் செய்ய உள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் நிரூபா ராவ் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த விசேட பிரதிநிதி ஒர் அரசியல்வாதியாக இருக்கக் கூடும் எனவும், குறித்த பதவி நிரந்தரமான ஓர் பதவியாக அமையும் எனவும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக வடக்கில் அபிவிருத்தியை ஏற்படுத்தும் நோக்கில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை இலங்கைக்கான விசேட பிரதிநிதியாக உள்துறை அமைச்சர் சிதம்பரம் அல்லது டீ.ஆர் பாலு விஜயம் செய்யலாம் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Followers

Blog Archive