Tuesday, April 13, 2010

TUESDAY, APRIL 13, 2010

வாக்காளர்களுக்கு நன்றி – பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

வாக்காளர்களுக்கு நன்றி
எமதன்புக்குரிய வாக்காளப் பெருமக்களே! நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் எமது கட்சியின் சின்னமான மெழுகுதிரிக்கு வாக்களித்து எம்மை ஊக்கப்படுத்தியுள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம். அத்துடன் எமது கட்சிக்காக இத்தேர்தலில் கடுமையாக உழைத்த எமது கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் அனுதாபிகளுக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்தத் தேர்தலில் நாம் பல கட்சிகளுடன் இணைந்து ஓரணியாக நின்று போட்டியிடவே விரும்பினோம். ஆனால் அதற்கான ஒத்துழைப்பைத் தருவதில் பல கட்சிகள் தயக்கம் காட்டின. ஒற்றுமைக்கான எமது முயற்சிகளையும் புறக்கணித்தன. இருப்பினும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகமும் எமது கட்சியும் ஒற்றுமையாகச் செயல்படுவது என தீர்மானித்தோம். அதனடிப்படையில் எமது கட்சியின் பெயரில் நாம் யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டோம். இதில் மூன்று தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினரும் இணைந்து கொண்டனர். அதே நேரம் வன்னியில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் எமது தோழரொருவரையும் இணைத்துக்கொண்டு போட்டியிட்டது. மேலும் எமது கட்சி திருகோணமலையிலும் போட்டியிட்டது.
இந்த மூன்று மாவட்டங்களிலும் மக்கள் எம்மீது காட்டிய அக்கறையும் ஈடுபாடும் எம்மை மிகவும் உற்சாகப்படுத்தியுள்ளது. பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி இன்னும் சிறிது காலங்களில் மக்களின் ஒரு சக்திமிக்க இயக்கமாகப் பரிணமிக்கும் என்ற நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பிரமுகர்கள் கூட்டுக் கட்சியல்லää மாறாக மக்கள் புரட்சிகர இயக்கம். வடக்கு கிழக்கு மாகாண ஆட்சிக்கு உயர்ந்தபட்ச அதிகாரப் பகிர்வுக்காகவும்ää மக்களின் ஜனநாயக சுதந்திரங்களுக்காகவும்ää சமூக நீதிக்காகவும்ää பொருளாதார சுரண்டல்களுக்கு எதிராகவும்ää சாதிப்பாகுபாடுகளற்ற சமத்துவத்திற்காகவும் போராடும் இயக்கத்தை வழிநடத்தும் அரசியல் தலைமையே எமது கட்சி.
எமது கட்சி வெற்றிகளைக் கண்டு பெருமிதங் கொண்டதுமில்லை. தோல்விகளைக் கண்டு துவண்டதுமில்லை. கடந்த முப்பது ஆண்டுகளில் எமது கட்சி பல ஆயிரம் தோழர்களையும்ää மிகச் சிறந்த தலைவர்களையும் தமிழ்மக்களின் சுதந்திரத்திற்காகவும் ஜனநாயக உரிமைகளுக்காகவும் தியாகம் செய்திருக்கின்றது. கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக எமது சொந்த உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களிடம் அரசியல் உறவுகொள்ள முடியாத அளவுக்கு பெரும் இக்கட்டான சூழல்களைக் கடந்து வந்திருக்கின்றது.
இப்போது ஏற்பட்டிருக்கும் பயங்கரவாதம் மற்றும் யுத்த ஆபத்துக்கள் அற்ற சூழலின் காரணமாக எமது கட்சியினர் மக்கள் மத்தியில் சுதந்திரமாகச் சென்று கட்சியின் கொள்கைளையும் திட்டங்களையும் விளக்குவதற்கான நிலைமைகள் ஏற்பட்டிருக்கின்றன. இன்னமும் மக்கள் மத்தியில் இருந்து முற்றாக பயப்படும் போக்குகள் நீங்கவில்லை. மக்கள் மத்தியில் தமது எதிர்காலம் பற்றிய நம்பிக்கையீனங்களும் விரக்திகளும் பரவலாகக் காணப்படுகின்றன. அதிகாரப் பகிர்வு தொடர்பாக மக்கள் மத்தியில் அரசாங்கம் பற்றிய சந்தேகங்கள் உள்ளன.
மக்கள் மத்தியில் நிலவும் எதிர்மறையான உணர்வுகளையும் எண்ணப்பாடுகளையும் நாம் எதிர்வரும் காலங்களில் நீக்கவேண்டும். எமது கட்சி மக்களிடையே ஒரு புதிய நம்பிக்கையை வளர்ப்பதிலும் எதிர்கால முன்னேற்றமான போக்குகளை நோக்கி மக்களை அணிதிரட்டுவதிலும்ää அரசியல் அதிகாரப் பகிர்வுக்கான ஓர் இயக்கத்தை நடாத்துவதிலும் முன்னணி வகிக்கும். மக்கள் அமைப்புக்களை பரவலாகக் கட்டியெழுப்பி பரந்துபட்ட மக்கள் கட்சியாக எழுச்சிபெறும் வேலைத்திட்டங்களை மேற்கொள்ளும்.
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தேர்தல் என்னும் குறுகிய நோக்கம் கொண்ட கட்சியல்லää மாறாக இது ஒரு சமூக அரசியல் இயக்கம். ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியோடு இணைந்து ஒரு புரட்சிகர இலட்சிய இயக்கத்தை வலுவாக முன்னெடுக்க முற்போக்கு ஜனநாயக சக்திகள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.
சுதந்திரம்ää ஜனநாயகம்ää சகோதரத்துவம்ää சமூகப் பொருளாதார முன்னேற்றம் என்பவையே எமது இலட்சியங்கள். அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் உண்மையான விடுதலையே எமது குறிக்கோள்.

பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ,ஈபிஆர்எல்எவ்

TUESDAY, APRIL 13, 2010


புத்தாண்டு அனைத்து வழிகளுக்குமான புதிய ஆரம்பமாக அமைய வேண்டும்!
முப்பதாண்டுகளுக்குப் பின்னர் முழு இலங்கையிலும் தமிழ், சிங்கள மக்கள் இணைந்து சுதந்திரமாகக் கொண்டாடும் இப்புத்தாண்டானது அனைத்து வழிகளு க்குமான புதிய ஆரம்பமாக அமையுமென பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தமது புத்தாண்டு செய்தியில் தெரிவித்து ள்ளார்.
தமிழ்- சிங்கள புது வருடப் பிறப்பை முன்னிட்டு பிரதமர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது;
சிங்கள, தமிழ் புத் தாண்டு என்பது ஒவ் வொரு ஆண்டும் உதய மாகின்ற போதிலும் கூட இலங்கை வாழ் மக்கள் அந்த தினத்தை புதிதாக பிறக்கின்ற ஒரு வருடமாகவும், புதிய ஆரம்பம் ஒன்றினை குறிப்பிடும் ஒரு நாளாகவும் கருதியே செயற்படு கின்றனர்.
இந்த முக்கிய தினத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் பழக்க வழக்கங்கள் எமது கலாசாரமாக மாற்றம் பெற்றுள்ளமை மூலம், புது வருடப் பிறப்புடன் எமது சமூகத்திலே புத்துணர்ச்சி யொன்று ஏற்படு வதை எடுத்துக் காட்டுகின்றது.
சிங்களவர்களின் பழக்க வழக்கங்களை பேணிப்பாதுகாத்து பழைய கோபதாப ங்களை மறந்து புதிய உணர்வுடன் பணியாற்றுவதற்காக இந்த தினம் உதயமாகும் வகையில் முதியவர்கள், சிறார்கள் என்ற அனைவரும் 365 நாட்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.
புத்தாடைகள் அணிந்து சுப முகூர்த்தங்களுக்கு முன்னுரிமையளித்து நாடு முழுவதும் ஒரே நேரத்தில் ஒரே விடயத்தை மேற்கொள்ளும் புத்தாண்டானது, இலங்கை கலாசாரத்திலே ஒற்றுமையை எடுத்துக் காட்டும் சிறந்த காரணியாகும்.
இந்த பழக்க வழக்கங்களை நினைவு கூருவதற்குக் கூட சுதந்திரமொன்று காணப்படாத ஒரு யுகத்தை நாம் கழித்து வந்துள்ளோம். சாபத்திற்குள்ளான பயங்கரவாத கெடுபிடிகளை இல்லாதொழி த்து சுதந்திரத்தினைப் பெற்றுக்கொண்ட நாட்டிலே கொண்டாடப்படும் இந்த சிங்கள, தமிழ் புத்தாண்டானது, முன்னர் ஒருபோதும் இல்லாதவாறு வெகு விமரிசையாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
30 ஆண்டுகளின் பின்னர் முழு இலங்கையிலும் சிங்கள, தமிழ் மக்கள் ஒன்று சேர்ந்து இலங்கை முழுவதிலும் சுதந்திரமாகக் கொண்டாடப்படும் இந்த புத்தாண்டானது அனைத்து வழிகளிலும் புதிய ஆரம்பமொன்றினை பிரதிபலிக்கச் செய்யும் ஒரு நாளாகக் காணப்படுகின்றது.
உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் எனவும் பிரதமர் தமது வாழ்த்துக் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

TUESDAY, APRIL 13, 2010

ராய்ட்டர்ஸ் புகைப்படக்காரர் சுட்டுக் கொல்லப்பட்டார்
பேங்காக்
தாய்லாந்து ராணுவப் படையினருக்கும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர் களுக்கும் இடையில் சனிக்கிழமை நடந்த கடுமையான மோதலில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் தொலைக் காட்சிப் புகைப்படக்காரர் ஒருவர் கொல்லப்பட்டார்.
ஜப்பானிய நாட்டவரான 43 வயது ஹிரோ முராமோட்டோ நெஞ்சில் சுடப்பட்டிருந்தார். கிளாங் மருத்துவமனைக்கு அவர் கொண்டுவரப்பட்டபோது நாடித்துடிப்பு இல்லை என்று மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் பிச்சாயா நக்வட்சாரா தெரிவித்தார்.
தோக்கியோவிலுள்ள ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தில் 15 ஆண்டு களுக்கும் மேலாக வேலை செய்துவரும் முரா மோட்டோவுக்கு மணமாகி இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள்.
“பேங்காக் மோதலில் எங்களது சக ஊழியர் ஹிரோ முராமோட்டாவை இழந்ததில் பெருந்துயரம் அடைகிறேன். செய்தித்துறை மிகவும் ஆபத்தான தொழி லாகும். ராய்ட்டர்ஸ் குடும்பம் முழுவதும் இத்துயரத்தை நினைத்து வேதனைப்படுகிறது” என்று ராய்ட்டர்ஸின் தலைமை ஆசிரியர் டேவிட் ஷ்லிசிங்கர் கூறினார்.
ராஜ்தம்னோன் சாலை யில் ராணுவப் படைக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் நடந்த சண்டையை முரா மோட்டோ படமெடுத்துக் கொண்டிருந்தபோது, ராணுவத்தினர் ரப்பர் தோட்டாக்களைப் பயன்படுத்தி சுட்டதோடு, உண்மையான தோட்டாக்களை விண்ணை நோக்கியும் சுட்டனர்.
முராமோட்டோவின் நெஞ்சில் பாய்ந்த தோட்டா அவரது முதுகின் வழி வெளியேறிவிட்டது. அதனால் அவரைத் தாக்கியது எந்த வகை தோட்டா என்பது தெரியவில்லை என மருத்துவமனை இயக்குநர் தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் துப்பாக்கிகள் வைத்திருந்த தாகவும், பெட்ரோல் குண்டுகளையும் கையெறி குண்டுகளையும் ராணுவத் தினர் மீது வீசியதாகவும் ராணுவப் பேச்சாளர் கூறினார்.

TUESDAY, APRIL 13, 2010

காலாவதியான உணவுப் பொருள் விற்பனை; கண்டுபிடிக்க தேடுதல்

பாவனைக்குதவாத மற்றும் காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மற்றும் ஹோட்டல்களை கண்டு பிடிக்க தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை பொது சுகாதார பிரிவு தெரிவித்தது. புறக்கோட்டை மற்றும் கொழும்பிலுள்ள பிரதான இடங்களில் இத்தகைய தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக பொது சுகாதாரப் பரிசோதகர் டபிள்யூ. ரி. கருணாதிலக கூறினார்.
பண்டிகைக் காலத்தில் அதிகமாக காலாவதியான மற்றும் பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்கள் கூடுதலாக விற்கப்படுவதனால் தேடுதல் நடவடி க்கைகளை அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இதுவரை 20ற்கும் அதிகமான விற்பனை நிலையங்கள் பிடிப்பட்டுள்ளன. அங்கு விற்கப்பட்ட பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். கேக், பிஸ்கட், குளிர்பானங்கள் என்பன காலாவதியான பின்னரும் விற்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

TUESDAY, APRIL 13, 2010


கொழும்பிலிருந்து விசேட கண்காணிப்பு குழுவை அனுப்ப ஏற்பாடு; 380 உத்தியோகத்தர்கள் கடமையில்
கண்டி, திருகோணமலை மாவட்டங்களி லுள்ள 38 வாக்களிப்பு நிலையங்களில் மோசடி இடம்பெற்றதனால் அப்பகுதிகளு க்கான மீள் வாக்களிப்பு எதிர்வரும் 20 ம் திகதி நடைபெறவுள்ளது. மீள் வாக்குப் பதிவை கண்காணிப்பதற்காக கொழும்பிலி ருந்து விசேட குழுவொன்றை அனுப்புவத ற்கு தேர்தல்கள் செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக செயலக அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இதேவேளை மீள்வாக்குப் பதிவுக்கென வாக்காளர்களுக்கு புதிதாக வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் பணி ஆரம் பிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் 19ம் திகதிக்கு முன்னர் வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டு விடும் எனவும் அவ்வதிகாரி மேலும் தெரிவித்தார்.
கண்டி மாவட்டத்தின் நாவலப்பிட்டி தேர்தல் தொகுதியைச் சேர்ந்த 37 வாக்க ளிப்பு நிலையங்களுக்கும் திருமலை மாவ ட்டத்தின் கும்புறுபிட்டியிலுள்ள வாக்களிப்பு நிலையத்துக்குமே எதிர்வரும் 20 ம் திகதி மீள்வாக்குப் பதிவு நடத்தப்படவு ள்ளது.

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மேற்படி வாக்களிப்பு நிலையங்களில் மீள்வாக்குப் பதிவை நடத்த தேர்தல்கள் திணைக்களம், திட்டமிட்டுள்ளதுடன் எதிர்வரும் 20ம் திகதி தேர்தல் கடமையில் ஈடுபடுவதற்காக 380 உத்தியோகத்தர்களை நியமித்திருப்பதாகவும் அவ்வதிகாரி கூறினார்.

Followers

Blog Archive