Tuesday, April 13, 2010

TUESDAY, APRIL 13, 2010

காலாவதியான உணவுப் பொருள் விற்பனை; கண்டுபிடிக்க தேடுதல்

பாவனைக்குதவாத மற்றும் காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மற்றும் ஹோட்டல்களை கண்டு பிடிக்க தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை பொது சுகாதார பிரிவு தெரிவித்தது. புறக்கோட்டை மற்றும் கொழும்பிலுள்ள பிரதான இடங்களில் இத்தகைய தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக பொது சுகாதாரப் பரிசோதகர் டபிள்யூ. ரி. கருணாதிலக கூறினார்.
பண்டிகைக் காலத்தில் அதிகமாக காலாவதியான மற்றும் பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்கள் கூடுதலாக விற்கப்படுவதனால் தேடுதல் நடவடி க்கைகளை அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இதுவரை 20ற்கும் அதிகமான விற்பனை நிலையங்கள் பிடிப்பட்டுள்ளன. அங்கு விற்கப்பட்ட பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். கேக், பிஸ்கட், குளிர்பானங்கள் என்பன காலாவதியான பின்னரும் விற்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Followers

Blog Archive