Friday, July 9, 2010

வன்னி மக்களின் வாழ்;வில் உடனடி முன்னேற்றங்களைக் கொண்டுவர தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர வேண்டிய கட்டாயம் உள்ளது,.வரதராஜப்பெருமாள்!

Friday, July 9, 2010
Friday, July 09, 2010
வன்னி மக்களின் வாழ்;வில் உடனடி முன்னேற்றங்களைக் கொண்டுவர தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர வேண்டிய கட்டாயம் உள்ளது.

உதயன் பத்திரிகைக்கு வரதராஜப்பெருமாள் அவர்கள் வழங்கிய நேர்காணல்

கேள்வி : தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தின் போது தோற்றம் பெற்ற இயக்கமொன்றின் தலைமைத்துவப் பதவியில் இருந்த நீங்கள் விடுதலைப் போராட்டம் தொடர்பான ஈர்ப்பு எவ்வாறு உங்களுக்கு ஏற்பட்டது?

பதில்.: என்னைச் சூழ நான் கண்ட நான் கேட்ட நான் வாசித்த புற விடயங்கள் கருத்துக்கள் சிறு வயதில் இ;ருந்தே எனக்குள் ஒரு சமூக அரசியல் உணர்வுகளை வளர்த்து விட்டதன் விளைவு என்றே கருதுகின்றேன். சிறு வயதிலேயே எனது அயலில் நடைபெற்ற அரசியற் கூட்டங்களில் பேச்சுக்களையெல்லாம் ஆர்வமாகச் சென்று கேட்பேன். எனது ஏழு வயதிலிருந்தே எம்ஜிஆரின் படங்களை முதல்நாளிலேயே நான் தனியாகச் சென்று பார்ப்பவனாக இருந்திருக்கிறேன்;. நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் காலத்திலேயே எனது மாமனார் தமிழ்ப் பண்ணை புத்தகசாலையிலிருந்து வாங்கி வரும் தமிழக தினந்தந்தி, தினமணிப் பத்திரிகைகளை வாசிப்பவனாக இருந்திருக்கிறேன் அந்த வகையில் அண்ணா கலைஞர் போன்றவர்கள் மீதான ஈர்ப்பும் என்னிடத்தில் சிறுவயதிலேயே ஏற்பட்டது. நான் பிறந்து வளர்ந்த யாழ்ப்பாணம் கொட்டடிப் பகுதியின் தமிழரசுக் கட்சித் தலைவரான சீவரத்தினம் அவர்களுடன் எனது பத்து வயதிலிருந்தே நெருக்கமாகப் பழகும் சூழல் இருந்தது. எனது பள்ளிக்கூட வாத்தியார்கள் ஒருவரான புதுமைலோலன் அவர்கள் தமிழரசுக் கட்சியின் பிரதம மேடைப்பேச்சாளர்களில் ஒருவராவார். 1965ம் ஆண்டு; 12 வயதாக நான் இருந்த போது எனது சட்டையில் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தை தைத்து, ~~தந்தை செல்வா வாழ்க! என்று நானே தைத்துப் போட்டிருந்தவன்தான். வீட்டுப் படலையில் எம்ஜிஆர் வாழ்க என்று எழுதி வைத்திருந்தவன் நான். அவருடைய படங்களைப் பார்த்து அவரை ஒரு லட்சிய புருஷராகக் கொண்டேன்;. இவ்வாறாக ஆரம்பத்தில் தமிழரசுக் கட்சி மற்றும் திமுக வளர்த்த தமிழ் இன அரசியல்;; சமூக உணர்வுகளே எனது அரசியற் கருத்துக்களின் ஆரம்பமாகும்..இலங்கைத் தமிழரசுக் கட்சியும், அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியும் தேர்தற் காலங்களில் நடாத்திய மோதல் அரசிலைக் கண்டிருக்கிறேன்.. 1970ம் ஆண்டு மதிமுகராசா என்பவருடன் எனக்கேற்பட்ட நட்பு தமிழரசுக் கட்சியில் என்னை உறுப்பினனாக்கியது. 1970ம் ஆண்டு மாணவர் பேரவையின் போராட்டங்களின் போது நான் ஒரு பார்வையாளன் மட்டுமே. 1972ம் ஆண்டிலிருந்துதான் எனது அரசியல் ஈடுபாடு ஆரம்பமானது.

கேள்வி : நீங்கள் அரசியல் போராட்டங்களின் போது சிறைக்குச் சென்றதாக அறிகிறோம். எதற்காக அச்சம்பவம் நிகழ்ந்தது?

பதில் : 1972ஆம் ஆண்டு இலங்கை குடியரசாக்கப்பட்ட போது தமிழருக்கான உரிமைகள் எல்லாம் அதன் புதிய அரசியல் யாப்பில் பறிக்கப்படுகின்றன என்ற விடயத்தை முன்வைத்து சகல இடங்களிலும் தமிழர் ஐக்கிய கூட்டணி சார்பாக சுவர்களில் எதிர்ப்புக் கோசங்களை எழுதுதல், கறுப்புக் கொடி ஏற்றுதல், ஹர்த்தால் அனுஸ்டித்தல் என எதிர்ப்பைக் காட்டும் போராட்டங்கள் நிகழ்ந்தன. இதில் நானும் கலந்துகொண்டபோது கைது செய்யப்பட்டு நான்கு மாதங்கள் சிறையில் இருக்க வேண்டி ஏற்பட்டது. பின்னர் தமிழ் இளைஞர் பேரவை மற்றும் தமிழீழ விடுதலை இயக்கம் ஆகியவற்றில் இருந்த எனது தீவிர அரசியல் ஈடுபாடு காரணமாக 1975ல் கைது செய்யப்பட்டு இருபத்திரண்டு மாதங்கள் யாழ்ப்பாணம் மற்றும் வெலிக்கடைச் சிறைச்சாலைகளில் வைக்கப்பட்டேன். பின்னர் 1983ம் ஆண்டு கார்ல் மார்க்ஸின் 100வது நினைவையொட்டிய கூட்டமொன்றில் மட்டக்களப்பில் பங்குபற்றிக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டு கொழும்பு மகஸின் சிறைச்சாலையில் நான்கு மாதங்களும் மட்டக்களப்பு சிறைச்சாலையில் சுமார் இரண்டு மாதங்களும் வைக்கப்பட்டேன்.

கேள்வி : 1970களின் பிற்பகுதியில் பல இயக்கங்கள் தமிழினத்தின் விடுதலைக்காகத் தோற்றம் பெற்றன. அவை அனைத்தும் இன்று ஒரு வெற்றுப் புள்ளியிலேயே இயங்கவேண்டிய சூழல் உண்டாகியுள்ளது. ஆயுதப் போராட்டம் தோற்றுப் போன நிலையில் அரசியல் போராட்டத்தை மட்டும் நம்பியதாகவே தமிழர்களின் நிலை உள்ளது. இது பற்றி என்ன கருதுகிறீர்கள்?

பதில் : எங்களுடைய இன அடிப்படையிலான போராட்டத்தின் அனுபவத்தில் மற்றும் என்னுடைய அனுபவங்கள் தொடர்பான எனது மீளாய்வின் அடிப்படையில் நான் கூறுவது எமது சமூகத்துக்கும் எமது தேசிய மற்றும் பிராந்திய சூழலுக்கும் எமது போராட்ட இலக்குகளுக்கும் ஆயுதங்கள் தாங்கிய போராட்டமுறைமை பொருத்தமானது அல்ல. சோவியத் புரட்சி, சீனப் புரட்சி, கியூபாப் புரட்சி மற்றும் வியட்னாம் புரட்சி என்பவற்றின் போது ஆயுதந் தாங்கிய போராட்டங்கள் வெற்றியளித்திருக்கின்றன. ஆனால் எங்களுடைய அரசியல் சமூக இலக்குகளுக்கு வன்முறை அரசியல் பொருத்தமானது அல்ல என்பதே எனது முடிவாகும்..

கேள்வி : ஏன் அப்படிக் கூறுகிறீர்கள்? நீங்கள் குறிப்பிட்ட நாடுகளில் வெற்றியளித்த ஆயுதப் போராட்டம் எங்கள் சூழலில் ஏன் பொருத்தமற்றது?

பதில் : அதைத்தான் நேரடி அனுபவமாக நாம் அனைவரும் கண்டு கொண்டோமே, முப்பது வருட போராட்டம் எவ்வாறு முடிவுற்றது, அது எவ்வாறான பாதகங்களையெல்லாம் எமது சமூகத்துக்கு விளைவித்திருக்கிறது என்பதை சரியாக மீளாய்வு செய்தால் நான் கூறுவதைப் புரிந்து கொள்ள முடியும். சோவியத் புரட்சி, சீனப் புரட்சி, வியட்நாம் புரட்சி போன்றன வர்க்கப் புரட்சிகள் அதனாலேயே அவை வெற்றிபெற்றன. எமது போராட்டம் சில வேளைகளில் காலணித்துவத்துக்கு எதிரான ஒரு தீர்க்கமான தேசிய விடுதலைப் போராட்டமாக இருந்திருந்தால் கூட குறிப்பிட்ட அளவில் ஆயுதங்கள் தாங்கிய போராட்ட முறைமைக்கு கணிசமானதொரு பங்கு இருந்திருக்கும். ஆனால் இலங்கையில் நடந்தது ஒரு நாட்டுக்குள் எண்ணிக்கை ரீதியில் சிறுபான்மையான தேசிய இனத்தினுடைய போராட்டம். இதனுடைய கோஷங்கள், இதைக் கொண்டு நடத்தியவர்கள், இதன்; பரிணாமம், இதற்கும் சமூக சக்திகளுக்கும் இடையிலான தொடர்பு ஆகியவற்றைப் பார்த்தால் வன்முறைப் போராட்ட முறை எங்களுக்குப் பொருத்தமானது அல்ல என்பது தெளிவாகவே புரியும்.

கேள்வி : 1989ஆம் ஆண்டுவரையும் நீங்களும் ஆயுதப் போராட்டத்தை நம்பியவர்தானே?

பதில் : ஆமாம் ஒரு காலகட்டத்தில் ஆயுதந் தாங்கிய அரசியலின் மூலம்தான் எமது மக்களின் விடுதலையைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று நானும் நினைத்திருக்கிறேன். ஆனால் அதை தவறு என உணர்கிறேன் 1990ல் வட இந்தியாவில் அதாவது இந்த மண்ணிலிருந்து இருந்து சுமார் மூவாயிரம் கிலோ மீட்டர்களுக்கு அப்பால் போயிருக்க வேண்டிய கட்டாய நிலைமை எனக்கு ஏற்பட்டது. அது எமது போராட்டத்தின் கடந்த காலம் பற்றிய ஒரு ஆழமான மீளாய்வுக்கு எனக்கு வாய்ப்பளித்தது. அதில் நான் உணர்ந்துகொண்டவைகள் பல. ஒரு விடயத்தில் தீவிர ஈடுபாடு கொண்டிருக்கும் ஒருவன் அதிலிருந்து சற்று விடுபட்டு ஆற அமர தனது கடந்த காலம் பற்றி தன்னுணர்ச்சிகளுக்கும் பொய்களுக்கும் இடமளியாது புறநிலையாக ஆய்ந்து பார்த்தால் தன்னைப் பற்றி தனது கடந்த காலம் பற்றி பல தெளிவான சிந்தனைகளை அடைய முடியும். ஏன் ஓய்வாக இருக்கும் போது தான் அதைப்பற்றி உணர முடியும். போராட்டத்தின் போது நிகழ்ந்த பல விடயங்களில் எது சரி? எது தவறு ஒரு பொது உண்மையே. இது ஒரு சுய பரிசோதனை மூலமான புரிந்துணர்வே

கேள்வி : ஆயுதப் போராட்டம் தவறு என்றால் வேறு எவ்வகையான போராட்டம் எமக்குச் சாத்தியமான வழிமுறையாக இருக்கலாம்?

பதில் : யாருக்கும் இம்சைகள் செய்யாத, யாரையும் நோகப் பண்ணாத யாருக்கும் விரோதத்தையோ வெறுப்பையோ ஏற்படுத்தாத தன்னை ஒறுத்த தனது உண்மைகளையும் நியாயங்களையும் வெளிப்படுத்தி மற்றவர்களின் மனச்சாட்சிகளின் கண்களைத் திறக்கும் அகிம்சை வழி முறைப் போராட்டங்களே நாம் கைக்கொண்டிருக்க வேண்டும். உண்மையைச் சொல்லப்போனால் இதுவரையும் நாங்கள் அகிம்சைப் போராட்ட முறைகளைச் சரியாகவோ முறையாகவே கடைப்பிடிக்கவில்லை. அதற்கான பயிற்சியும் துணிச்சலும் எம்மிடம் இருக்கவில்லை. ஆயுதப் போராட்டத்தை நாம் சுருக்கமான குறுக்கு வழியாகவே கருதினோம். அகிம்சை முறையில் இரகசியங்கள் இல்லை, அந்த முறையானது நேர்வழிகள் கொண்டது, அது பரந்துபட்ட மக்களின் மனச்சாட்சிகளோடும் தியாக உணர்வுகளோடும் சம்பந்தப்பட்டது. அது போராடுபவர்களுக்கு பக்குவத்தையும் முதிர்ச்சியையும் தருகின்ற ஒன்று. அறிவும் நேர்மையும் கொண்ட தலைவர்களை முன்னணிக்குக் கொண்டு வரும். அது பல முரண்பாடுகளுக்கு மத்தியிலும் பல்வேறுபட்ட கருத்துக்களுக்கும் இடமளிக்கும். அஹிம்சைவழியானது யாரையும் துரோகியென்றோ காட்டிக் கொடுபவன் என்றோ முத்திரை குத்தாது. யாரைக்கண்டும் அது சந்தேகம் கொள்ளாது யாருக்கும் அது அச்சம் கொள்ளாது. அது சமூகத்தை ஒன்றிணைக்கும் சக்தியாகும், சமூகத்தை அகதிகளாகவோ புலம் பெயர்ந்தவர்களாகவோ சீரழிக்காது. அகிம்சை வழியைக் கடைப்பிடிக்கும்; தலைவர்களுக்கு மக்களை மாயையில் வைத்திருக்க வேண்டிய அவசியமிருக்காது அவர்கள் தங்கள் தங்கள் சொந்தந் திரவியங்களையும் உழைப்பையும் தியாகம் செய்பவர்களாக இருப்பார்கள். மக்களை அவர்கள் அன்பாலும் உண்மையாலும் வெல்லும் தலைவர்களாக இருப்பார்கள்.. எமது அனுபவத்தில் ஆயுதங்களை மட்டும் நம்பிய குழுக்களும் தலைவர்களும் மேலே குறிப்பிட்ட ஒவ்வொன்றிற்கும் எதிர்மாறானவர்களாகவே இருந்திருக்கிறார்கள். உண்மையில் மேலே குறிப்பிடப்பட்டவற்றிற்கு எதிர்மாறான போக்குகள் ஆயுதக் கலாச்சாரத்தின் அடிப்படைகளாக அமைகின்றன என்றே நாம் காணமுடிகின்றது.

எமது போராட்ட வரலாற்றில் அகிம்;சை – சத்தியாக்கிரக போராட்டமுறைகளை 1970 வரை கடைப்பிடிக்கப்பட்டதாகக் கூறுவது தவறாகும். கச்சேரியை மறித்து தமிழ்த் தலைவர்கள் மக்களைத் திரட்டி 1961ம் ஆண்டு ஒரு தடைவை சத்தியாக்கிரகம் செய்தது உண்மைதான். ஆனால் அப்போது தமிழரசுக் கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டு ஒரு சில மாதங்கள் சிறை சென்று வந்த பின்னர் அத்தகைய அகிம்சை முறைப் போராட்டங்களை அவர்கள் தொடரவில்லை. ஆனால் காந்தியோ, நேருவே அவ்வாறில்லை. அவர்கள் மீண்டும் மீண்டும் அகிம்சைப் போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தினார்கள். அவர்;கள் தமது சுயதியாகத்தாலும் மக்கள் சக்தியை வெளிப்படுத்தியும் காலனித்துவ வெள்ளைக்காரர்களை தம் கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து ஒத்துக் கொள்ள வைத்தார்கள் அவர்களுடைய போராட்டத்துக்குச் செவிசாய்த்த வெள்ளைக்காரர்களை விட எங்கள் சிங்களச் சகோதரர்கள் நல்லவர்கள் கூடுதலாகவே மனச்சாட்சி உடையவர்கள். எமக்கு முந்தைய தலைமுறை தமிழ்த் தலைவர்கள் விடாது தொடர்ந்து அகிம்சை வழியைக் கடைப்பிடித்து தொடர்ந்து மக்களைத் திரட்டிப்; போராடியிருந்தால் எப்போதோ இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு கண்டிருக்கலாம். இலங்கையில் தமிழினம் இவ்வளவு இழப்புகளையும் சீரழிவுகளையும் அனுபவிப்பதிலிருந்து தவிர்த்திருக்கலாம்.

கேள்வி : ஆனால் 1990ஆம் ஆண்டளவில் சிங்கள இனத்துக்கெதிராகக் கடுமையான கருத்துக்ளை நீங்கள் முன்வைத்தீர்களே?

பதில் : அது தவறு! சிங்கள இனத்தவர்களுக்கு எதிரான கருத்துக்கள் எதனையும் நானோ என்னைச் சேர்ந்தவர்களோ எந்த வேளையிலும் கொண்டிருந்ததோ அல்லது பரப்பியதோ கிடையாது. சிங்கள இனவாதத் தலைவர்களை நாம் விமர்சித்து வந்திருக்கிறோம். அதையே நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்றே கருதுகிறேன்.

கேள்வி : எதற்காக நீங்கள் ஈழப் பிரகடனம் செய்யவேண்டிய சூழல் ஏற்பட்டது?

பதில் : உண்மையாக அது ஈழப்பிரகடனம் அல்ல. 19 அம்ச கோரிக்கைளைக் கொண்ட ஒரு பிரகடனம் தான். அன்றைய சூழலில் தமிழர்கள் மத்தியில் தனிஈழம் என்ற புலிகளின் பிரச்சாரம் தான் செல்வாக்கு செலுத்தியது. நாங்கள் மாகாணசபை மூலமான ஒரு தீர்வினை பரிசோதனையாக முயற்சித்தோம். எங்களால் அதனை வெற்றிகரமாக நிறைவேற்ற முடியவில்லை எங்களின் நியாயமான கோரிக்கைகளை மற்றைய சிங்களத் தலைவர்களும் காது கொடுத்துக்; கேட்கவில்லை. இந்தியாவில் 1989ம் ஆண்டு தேர்தலில் பிரதமரான வி.பி.சிங் இந்திய இராணுவத்தை மீள எடுப்பதிலேயே அக்;கறை காட்டினார்.; மாகாணசபையைக் கலைக்குமாறு தூது விட்டார். தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களும் புலிகளுக்கு ஆதரவாக இருந்து மாகாண சபையைக் கலைக்க வேண்டுமென்று வலியுறுத்தினார். புலிகள் தமிழர்களைக் காப்பாற்றுவார்கள் தமிழர்களின் உரிமைகளை வெல்வார்கள் என்றார். மொத்தத்தில் அன்றைய சூழலில் இலங்கைத் தமிழர்களுக்கு நியாயமான வட்டத்திற்குள் ஒரு தீர்வு எந்தக் கோணத்திலிருந்தும் கிடைக்கவி;ல்லை. நியாயமான நடைமுறைச் சாத்தியமான தீர்வுக்காக உழைத்த எங்களுக்குத் துணையாக ஒரு அரசியற் சக்தியும் அன்று இருக்கவில்லை. அதைவிட எம்மை எதிர்த்தவர்களும் எம்மை அழிக்க முனைந்தவர்களுமே மிக அதிகமாக இருந்தனர். நாம், ஈழப்போராட்டத்துக்குப் பதிலாக இந்தியா ஒரு நீதியான தீர்வை ஏற்படுத்தித் தரும் என்பதற்காகவே மாகாண சபை முறைக்கு ஒத்துக்கொண்டோம். ஆனால் நியாயமான தீர்வெதையும் இந்தியாவும் தரவில்லை, இலங்கையும் தரவில்லை. இலங்கை அரசாங்கமோ புலிகளின் உதவியுடன் எல்லாவற்றையும் மோசமாக சீரழிப்பதிலேயே கடுமையாக இருந்தது. எனவேதான் வேறு வழியின்றி நாங்கள் மீண்டும் பழைய நிலைக்குப் போகிறோம் என்பதைச் சொல்ல வேண்டியாயிற்று. அந்த ஒரு தீர்மானத்தை மேற்கொள்ள வேண்;டிய கட்டாயம் ஏற்பட்டது. நாம் அன்று முன்வைத்த பத்தொன்பது அம்சங்களில் பெரும்பாலானவை இன்றைக்கும் பொருத்தமானவை நீங்கள் இப்போதாயினும் படித்துப் பார்த்தால் புரிந்து கொள்வீர்கள்.

1986 ஆண்டிலேயே ஈழவிடுதலைப் போராட்டம். தொடர்ந்து சரியான பாதையில் பயணிக்க முடியாத ஒரு கட்டத்தை அடைந்து விட்டது. ஆனால் நாம் மீண்டும் ஈழப்பிரிவினையை வலியுறுத்தியாவது எமக்கான நியாயத்தை நிலைநாட்டுவோம் என முயற்சித்தோம்;.

1985ஆம் ஆண்டில் நாம் ஒற்றுமையாக இருந்தபோது இந்தியாவின் உதவியோடு மெதுமெதுவாக எமது ஈழவிடுதலை என்னும் இலக்கை நோக்கிச் சென்று விடலாம் என்று நம்பினோம். எப்போது விடுதலைப் புலிகள், ரெலோ இயக்கத்தின் மீது தாக்குதலைத் தொடுத்தார்களோ அன்றைக்கே எமது ஈழப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டுவிட்டது. எனவே ஈழ விடுதலைப் போராட்டத்தை உண்மையில் தோற்கடித்தவர்கள் புலிகள்தான். அவர்கள் யுத்த மோதல்களைத் தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு மேற்கொண்டாலும் அவர்கள் 1986ம் ஆண்டே இலங்கை அரசை ஈழ விடுதலைக்கான யுத்தத்தில் வெற்றிபெற வைத்துவிட்டார்கள்.. புலிகள் சக இயக்கங்கள் மீது தாக்கத்தொடங்கிய போதே தமிழர்களின் தனிஈழக் கோரிக்கையின் தோல்வி நிச்சயமாகிவிட்டது. அதற்குப் பிந்திய 24 ஆண்டுகால யுத்தமும் அழிவுகளுக்கும் இழப்புக்களுக்குமென நடத்தப்பட்ட யுத்தவெறியர்களின் சண்டைகளே தவிர வேறொன்றுமில்லை.

கேள்வி : இனி எவ்வாறானதொரு அரசியல் மாற்றம் தமிழர்கள் தொடர்பாக நிகழும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

பதில் : உலகில் முன்னர் இல்லாத நாடுகள் பல இப்போது தோற்றம் பெற்றிருக்கின்றன. ப+மிப் பந்தில் நாடுகளின் அரசியல் அமைப்புக்கள் மாறிக்கொண்டே வருகின்றன. அரசியல் எல்லைகளும் அடிக்கடி மாறிக்கொண்டிருக்கின்றன. நாடுகள் ஒவ்வொன்றிலும் அவற்றின் உள்ளாட்சி உறவுகளிலும் மாற்றங்கள் காலத்துக்குக் காலம் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்;றன. இலங்கையைப் பொறுத்தவரையில் கடந்த காலங்களிலும் சிங்களத் தலைவர்கள் அவ்வப்போது தமிழர்களின் நியாங்களை ஓரளவாயினும் ஏற்று அரசியற் தீhவுகளுக்கு முன்வந்ததை நாம் கருத்திற் கொள்ள வேண்டும். இப்போது இருக்கும் நிலைமைகளும் நாளை மாறும் என்று நம்புவோம். சிங்களத் தலைவர்கள் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று செயற்படும் நாள் விரைவில் வரும.; என எதிர்பார்த்து நாம் செயற்பட இங்கு வாய்ப்புகள் நிறையவே உண்டு. மாற்றம் ஒன்று தான் உலகில் மாற்றமில்லாத ஒன்று. 30 வருடங்களாக ஓர் உள்நாட்டு யுத்தப் போரழிவுகளையும் சொல்லொணா இழப்புகளையும் இந்த நாடு சந்தித்து இருந்தாலும் இலங்கை இன்னமும் ஜனநாயக அடிப்படைகளை இழந்துவிடாத ஒரு நாடு. இந்த நாடு இராணுவ ஆட்சிமுறையைக் கொண்ட சர்வாதிகார நாடு அல்ல. எனவே நிச்சயமாக இந்த நாட்டின் அரசியல் ஒரு சுமுகமான அரசியற் தீர்வினை நோக்கி நகரும் என்ற நம்பிக்கையோடு முன்னேறுவோம்;.

கேள்வி : வடக்கு கிழக்கு மாகாணங்களின் முதலாவது முதலமைச்சராகப் பதவி வகித்தவர்கள் நீங்கள். இந்த மாகாணங்களில் முதலமைச்சரின் அதிகார எல்லை வரம்பு பற்றிக் கூறமுடியுமா?

பதில் : நான் அதிகாரப் பகிர்வுக்காக போராடுகின்ற ஒரு முதலமைச்சராக இருந்N;தனே தவிர அதிகாரங்களைக் கொண்ட ஒரு முதலமைச்சராக இருக்கவில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். 13வது திருத்தச் சட்டமானது ஒரு பிழையான சட்ட அமைப்பு. அது சரியான வகையில் அமைக்கப்படாத ஒரு சட்டம். அதற்குள்ளேயே ஒன்றுக்கொன்று எதிரான முரணாண இணக்கம் காணப்பட முடியாத சரத்துக்கள் பல காணப்படுகின்றன. இச் சட்டத்தினை நல்ல விதமாகத் திருத்தி அமைத்தால் நல்ல விடயங்கனைச் செய்ய முடியும். இதே வேளை தவறான வகையில் கையாளக்கூடிய ஓட்டைகள் அதில் நிறைந்து காணப்படுகின்றன. ஆவ்வாறானவற்றை மாற்றியமைக்க வேண்டும்;. இப்போது அதனைப் பயனுடையதாக செயற்படுத்த வேண்டுமாயின் தவறான வகையில் இட்டுச்செல்லக் கூடிய விடயங்கள் தொடர்பாக தெளிவான வரையறைகளை விளக்கங்களை அரசாங்கம் உருவாக்க வேண்டும். இச்சட்டத்தினை அடிப்படையாகப்; பார்த்தால் ஏறத்தாழ இந்தியாவின் அரசியல் அமைப்பில் கூறப்பட்டுள்ளவற்றை ஒத்ததாக இருக்கும். மேலோட்டமாகப் பார்ப்பவர்களுக்கு இங்கு இந்தியாவின் அரசியலமைப்பைப் போலவே அதிகாரப்பகிர்வு வழங்கப்பட்டிருக்கின்றது என்ற தோற்றமே கொடுக்கப்பட்டிருக்;கிறது. ஆனால் உண்மை நிலைமை அதுவல்ல. உதாரணமாக நில அதிகாரத்தை எடுத்துக்கொண்டால் அது பின்னிணைப்புக்கு உட்பட்டது என்றே கூறப்பட்டிருக்கும். பின் இணைப்பை எடுத்துப் பார்த்தால் முன்ணிணைப்பில் கூறப்பட்ட விடயங்கள் எல்லாம் பறிக்கப்பட்டிருக்கும். இந்த 13வது திருத்தச் சட்டம் 1985ஆம் ஆண்டு முதல் 1986ஆம் ஆண்டு டிசம்பர் வரை நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் அமைக்கப்பட வேண்டும் என்றே இந்திய இலங்கை சமாதான உடன்பாடு கூறுகிறது. ஆனால் 13வது திருத்தம் அவ்வாறு ஆக்கப்படவில்லை.

சாதாரண சட்டங்கள் வழியாகவும் மற்றும் நிர்வாக ஆணைகள் மூலமாகவும். தற்போதைக்கு குறைபாடுகளை நிவர்த்தி செய்தால் 13வது திருத்தச் சட்டத்தை உடனடிப் பயனுடைய வலுவுள்ள ஒன்றாக அதனை நிறைவேற்ற முடியும். ஆனால் தென் மாகாணங்களில் கடந்த இருபது ஆண்டுகளாகவும்;, கிழக்கு மாகாணத்திலும் கடந்த இரண்டு ஆண்டுகளாகவும் அதை நடைமுறைப்படுத்துவது போலவேதான் தொடர்ந்தும் செய்வது என்றால் அது பயனற்றதாகும். அப்படி நிறைவேற்றுவதை விட அதை இல்லாமலே செய்து விடலாம். அரசாங்கம் 13வதை விட மேலும் அதிக அதிகாரங்களுக்காக ஆலோசனைக் கமிட்டிகளைக் கூட்டுகிறது. ஆனால் கையில் உள்ள 13வது திருத்தச் சட்டத்தை நல்ல மனதோடும், பரந்த மனதோடும் நிறைவேற்றாமல் இருப்பது விசனத்துக்குரிய ஒன்றாகும்

கேள்வி : 13வது திருத்தச் சட்டம் நடைமுறையின் போது எவ்வாறு இருந்தது?

பதில் : நான் முதலமைச்சராக இருந்தபோது 13வது திருத்தத்தில் உள்ள குளறுபடிகள் தொடர்பான சிலவற்றிற்கு தெளிவுதரும்படி உயர் நீதிமன்றத்திற்குச் சென்றோம். எங்களுக்கு அன்று மாகாணசபையைக் கூட்டுவதற்கே இடமில்லை. அப்போது மாகாண அமைச்சின் செயலாளராக இருந்த திஸ்ஸ ஜெயக்கொடி என்பவர் ஏதாவது ஒரு பாடசாலையில் மாகாணசபை கூட்டங்களை நடத்துங்களேன் என்று கூறுமளவிற்கு மாகாணசபைக்கான அடிப்படைக் கட்டமைப்பு எதுவுமே இல்லாமல் இருந்தது. நாங்கள் திருகோணமலை நகரசபையை தற்காலிகமாக எடுத்து அதனை மாகாணசபைச் செயலகம் ஆக்கினோம்; அங்கு சபைக்கூட்டங்களை நடத்தினோம். வடக்கு-கிழக்கின் ஆட்சி அமைப்புக்கான கட்டமைப்புக்களை உருவாக்கினோம். அரசாங்கம் மாகாண ஆட்சிக்கென ஒரு சிறிதளவு பணத்தொகையே ஒதுக்கியது. ஆனாலும் ஒரு விரிந்த அளவில் வேலைத்திட்டங்களை மேற்கொண்டோம். அன்றைக்கு எமக்கு இந்தியாவும் இந்தியப்படைகளும் பின்பலமாக இருந்தன. இன்றைக்கு அந்த நிலைமை இல்லை. இங்குள்ள மாகாண சபை அமைப்பை பலப்படுத்துவதும் பாதுகாப்பதுவும் இலங்கை அரசாங்கத்தின் கடமையே. அந்த ஒத்துழைப்பு எனக்கு இருக்கவில்லை. மாறாக எதிராகவே அரசாங்கம் செயற்பட்டது. இப்போதும் மாகாண ஆட்சிமுறை அர்த்தமுடையதாக இருக்க வேண்டுமாயின் அது இலங்கை அரசாங்கத்தின் விருப்பத்தையும் முயற்சியையும் பொறுத்தே அமையும்.

கேள்வி : நாடு கடந்த தமிழீழ அரசு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில் : அதை ஓர் ஏமாற்று போலி நாடகமாகவே பார்க்கிறேன். வெளிநாடுகளிலுள்ள புலியை வைத்து முன்னர் வசதிகளையும் சொத்து வளங்களையும் பெருக்கிக் கொண்டதோடு சண்டித்தனம் பண்ணிக்கொண்டு இருந்தவர்களுக்கு இப்போது புலி இல்லாததால் தமது பழைய பணம் திரட்டும் தொழிலுக்கு ஒரு புதிய வித்தை தேவைப்படுகிறது. நாடுகளைக் கடந்த ஒரு நாடு அமைப்பை தென்னாபிரிக்கர்களுக்கும், பாலஸ்தீனர்களுக்கும் உலக நாடுகள் பல சேர்ந்துதான் ஏற்படுத்தினவே தவிர அவை அந்நதந்த நாடுகளைச் சேர்ந்த சிலரால் நடாத்தப்பட்ட வேடிக்கை நாடகமல்ல. நாடு கடந்த தமிழீழம் என்பது தமிழர்களை தொடர்ந்தும் ஏமாற்றி சிலர் பணம் திரட்டுவதற்குப் பயன்படுமே தவிர உலகநாடுகள் எதுவும் அந்தக் கருத்துக்கு இடமளிக்கவில்லை. அதுமட்டுமல்லாது இவ்வாறான புரளிகள் இலங்கை அரசாங்கம் இராணுவத்தின் கட்டுப்பாடடில் தொடர்ந்தும் வடக்கு கிழக்கு மாகாணத்தை வைத்திருப்பதற்கும் அரசாங்கம் தனது இராணுவ பலத்தை மேலும் அதிகரிப்பதற்குமான நியாயங்களை வலுப்படுத்தவே உதவும். அப்படிக் கூறுபவர்கள் வேறு எந்த நாட்டிலாவது கனடாவிலோ இங்கிலாந்திலோ அல்லது பிரான்ஸிலோ தமிழீழம் அமைப்பார்களாயிருந்தால் நாங்கள் என்ன வேண்டாம் என்றா சொல்லப் போகிறோம். அப்படி அமைத்து விட்டு அவர்கள் எங்களையும் அங்கு அழைக்கட்டும் நாங்கள் விருந்தாளிகளாகப் போய்வருவோம். இப்படியான பயனற்ற விடயங்களில் புலம் பெயர் தமிழர்கள் ஈடுபடுவதை விடுத்து போரினால் பாதிக்கப்பட்ட வன்னி மக்களுக்கு பணத்தை அனுப்புங்கள். நீங்கள் இங்குள்ள உங்கள் உறவினர்களுக்கு பணத்தை அனுப்பி அவர்கள் மூலம் வன்னி மக்களுக்கு உதவி செய்யுங்கள். இதுநாள் வரையும் புலிகள் போரிடுவதற்காக அவர்களுக்கு பணத்தை வாரியிறைத்த புலம் பெயர் மக்கள் இப்போது வன்னி மக்களின் துயர் துடைக்கவும் பணத்தை அனுப்பலாம் தானே. அதைவிடுத்து வணங்கா முடிக்காரர்கள் நாடு கடந்த தமிழீழக்காரர்களுக்கு புலம் பெயர்ந்த மக்கள் தங்கள் பணங்களை வாரியிறைத்து வீணாக்கக் கூடாது இங்கே துன்பத்திலும் துயரத்திலும் வாழும் மக்களுக்கு மேலும் துன்பங்கள் அளிக்கும் வேலைகளுக்கு உதவக் கூடாது என்பதே எனது கருத்தாகும்.

கேள்வி : போர் முடிந்த பின்னர் தொடர்ச்சியாக பல தேர்தல்களை தமிழ் மக்கள் சந்திக்க நேர்ந்திருக்கிறது இது பற்றி?

பதில் : ஜனநாயக ரீதியில் மீண்டும் மீண்டும் தேர்தல்கள் வருவது நன்மையான ஒன்றுதான் 1982 ஆம் ஆண்டு இடம்பெற வேண்டிய நாடாளுமன்றத் தேர்தலை ஜே.ஆர்.ஜெயவர்த்தனா நடத்தியிருந்தால் 1983ஆம் ஆண்டு இனக்கலவரம் நடந்திருக்க மாட்டாது. அந்த தேர்தல் நடைபெற்றிருப்பின் பலமானதொரு எதிர்க்கட்சி அமைந்திருக்கும். அத்தகைய சூழலில் ஜே.ஆர்.ஜெயவர்தனா இவ்வாறானதொரு தலைதெறித்த போக்கை செய்திருக்க முடியாது. அதைப்போல் இங்கும் கடந்த மாநகரசபை தேர்தலின் போது குறைந்தளவு மக்கள் வாக்களித்திருந்தார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் அதற்குச் சற்று அதிகமானோர் வாக்களித்திருந்தனர். இனிவரும் பிரதேச சபைகளுக்கான தேர்தல்கள் மற்றும் மாகாணசபைக்கான தேர்தலில் முன்னரைவிட அதிகம் பேர் வாக்களிப்பார்கள். மக்கள் வாக்குகளின் வாக்குகள் மூலமே மக்களின் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட வேண்டும். அப்பொழுதுதான் தாங்கள்தான் தனிப்பிரதிநிதிகள் என்னும் ஜனநாயக விரோத கருத்துக்களுக்கு இடமிருக்காது. பல கருத்துக்களின் மோதலில் புதிய சரியான கருத்துக்களின் வளர்ச்சி, பரந்துபட்ட மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களின் ஆட்சி என்பன ஜனநாயகத்தின் பண்புகளாகும் இதுவே அரசியல் நாகரீக வளர்ச்சியின் முன்னேறிய ஒரு கட்டமாகும்.

கேள்வி : மாகாண சபையில் உங்கள் ஆட்சியைத் தக்க வைப்பதற்காக தமிழ் தேசிய ராணுவத்திற்குப் பலாத்காரமாக தமிழ் இளைஞர்களைச் சேர்த்து அவர்களை ஆயுத கலாச்சாரத்துக்குள் தள்ளியதாக உங்கள் மீதுள்ள குற்றிச்சாட்டு பற்றி என்ன கூறுகின்றீர்கள்?

பதில் : அத்தகைய அன்றைய நடவடிக்கை ஒரு பெரும் தவறுதான். இதுபற்றி நான் ஏற்கனவே பல தடவைகள் ஒப்புக்கொண்டிருக்கிறேன். இதற்காக மக்களிடம் மன்னிப்பும் கேட்டிருக்கிறோம். ஆனால் இந்த நடவடிக்கையை மாகாணசபை என்ற அமைப்பின் மூலம் மேற்கொள்ளவில்லை. பிரேமதாசாவும் பிரபாகரனும் எமது மாகாண ஆட்சி மீது பழிபோடும் வகையாக மேற்கொண்ட ஒரு சதிப்பிரச்சாரமே அது.. இளைஞர்களைத் திரட்டி ஜனநாயகரீதியான கட்சிகளின் பாதுகாப்பையும் பலத்தையும் அதிகரிக்கும் நோக்கில் கட்சிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளின் விளைவே தமிழ் தேசிய இராணுவம். இளைஞர்களை விரைவாக இணைப்பதில் கட்சிகளுக்கிடையில் ஏற்பட்ட போட்டியானது இளைஞர்களைக் கட்டாயமாகப் பிடித்து பயிற்சி அளித்து ஒரு இராணுவமாக்குதல் என மாறியது. ஆவ்வாறான முடிவை எடுத்ததிலோ அதை நடைமுறைப்படுத்தியலோ எனக்கு நேரடியான பங்கு எதுவுமில்லை. எனினும் நான் அவ்வாறாக செயற்பட்ட கட்சிகளில் ஒன்றின் ஒரு முக்கியஸ்தன் என்ற வகையில் அக்கட்சி விட்டிருக்கும் தவறுக்கு நானும் பொறுப்பேற்றே ஆகவேண்டும். எமது கட்சி ஒரு தற்பாதுகாப்பு நோக்குடனேயே அவ்வாறானதொரு தமிழர் இராணுவ விரிவாக்கத்தை உருவாக்க முனைந்தது. இன்றைக்கும் அதைப்பற்றிப் பேசுபவர்கள் கடந்த இருபது ஆண்டுகளில் புலிகளால் வலுக்கட்டாயமாகப் பிடிக்கப்பட்டு கொலைக்களங்களுக்கு அனுப்பப்பட்டு பலியிடப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை இருபதாயிரத்தையும் தாண்டும். அந்தச் சந்தர்ப்பங்களில் எங்களது பத்திஜீவிகள் அவ்வாறான தவறுகளுக்கெல்லாம் தெரிந்தே வக்காலாத்து வாங்கினார்கள் வாழ்த்துக்களும் தெரிவித்தார்கள். புலிகள் பிள்ளைகளைப் பிடித்துப் போனதால் எத்தனை பெற்றோர்கள் மனநோயாளிகளாகிப் போனார்கள், தற்கொலை செய்து கொண்டார்கள் என்பதைப்பற்றி எமது புத்திஜீவிகளோ பத்திரிகையாளர்களோ எந்தவேளையிலும் அசை போட்டுப் பார்ப்பதில்லை என்பது ஒருபுறம் வேடிக்கையாகவும் மறுபுறம் வேதனையாகவும் இருக்கிறது.

கேள்வி : நீங்கள் தேர்தல் காலங்களிலேயே இலங்கைக்கு வருவதாகவும் - இப்போது கூட வட மாகாண சபை தேர்தலைக் மனதில் கொண்டே வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு ஒரு தேர்தல் காலப் பறவை போல நீங்கள் கருதப்படும் நிலை பற்றி...?

பதில் : தமிழர் மத்தியில் இப்போது அரசியல் செய்யும் பெரும்பாலானோர் தேர்தல் காலப் பறவைகள் தான். கடந்த காலத்தின் சூழ்நிலைகள் அப்படித்தான் இருந்தன. நான் கடந்த சில தடவைகள் தேர்தல்களின் இங்கு வந்தேன் என்றாலும் நான் தேர்தல் போட்டிகளில் நிற்பதற்காக வரவில்லை என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். தேர்தற் காலங்களில் பலர் மக்கள் மத்தியில் வருவதற்கு அச்சந்தர்ப்பங்களின் போதுதான் அரசியற் தலைவர்கள் மக்களிடையே சென்று பிரச்சாரம் செய்வதற்கு போதிய பாதுகாப்பை அரசபடைகள் வழங்கத் தயாராக இருந்தமையும் காரணமாக இருக்கலாம். எவ்வாறாயினும் நான் இப்போது இங்கே வந்திருப்பதோ மக்களைச் சந்தித்து வருவதோ தேர்தல் தொடர்பான எந்த நோக்கங்களையும் கொண்டதல்ல என்பதோடு இப்போது இங்கு நிலவுவது தேர்தற் காலம் அல்ல என்பதுவும் உங்களுக்குத் தெரியும.

கேள்வி : தமிழ் கட்சிகளின் ஒன்றிணைவு பற்றி இப்போது அதிகமாகப் பேசப்படுகிறது. இதுதொடர்பாக சில செயற்பாடுகளும் இடம்பெற்றிருக்கிறன. இந்த ஒன்றிணைப்பு பற்றி என்ன கருதுகிறீர்கள்?

பதில் : தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டாக பொது உடன்பாடுகளை ஏற்படுத்திக் கொள்வது இன்றைய அவசியமாகும். வடக்கு மாகாணத்தில் தமிழர்கள் பெரும்பான்மையான ஆசனங்களை மக்கள் தமிழரசுக் கட்சிக்கு வழங்கியுள்ளனர். எனவே அவர்கள் தமிழர் கட்சிகளுக்கிடையில் ஒற்றுமையாக மிக அவசியமான பொதுவிடயங்களில் உடன்பாடுகளை உருவாக்கி தமிழர்களின் அடிப்படைக் கோரிக்கைகளை ஒன்றுபட்ட குரலாக ஆக்குவதற்கு அவர்களுக்கு ஓர் ஆணையை வழங்கியுள்ளார்கள் என்றும் கூறலாம். குறிப்பிட்ட அடிப்டையான ஒரு சில விடயங்களை நோக்கியாவது தமிழ்க் கட்சிகள் ஒருமுகப்பட வேண்டும். வேறுபாடுகளின் மத்தியில் ஒற்றமையைக் கண்டு தமிழக்கட்சிகள் அனைத்துக்குமிடையில் உடன்பாடுகள் எட்டப்பட வேண்டும்.

அந்தவகையில் ஒரு குறிப்பிடத்தக்க அளவு டக்ளஸ் தேவானந்தாவுக்கும் அவ்வாறானதொரு கடமையைச் செய்வதற்கான ஆணையை மக்கள் கொடுத்திருக்கிறார்கள் எனலாம். திரு.சம்பந்தர் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகிய இருவரும் தமிழ்க்கட்சிகளுக்கிடையில் ஓர் உடன்பாட்டை எட்டுவதற்கு முயற்சித்தால் அதுவே முழுப்பலனை அளிப்பதாக இருக்கும். அதில்லாதபட்சத்தில் திரு. டக்ளஸ் மேற்கொண்டுள்ள முயற்சியாவது அவ்வாறான பலனை அளிக்க வேண்டும் என்று விருப்புகிறேன். என்னைப் பொறுத்த வரையிலும் எனது கட்சியினரைப் பொறுத்தவரையிலும் நாங்கள் அவ்வாறான முயற்சிகளை யார் செய்தாலும் எங்களால் முடிந்த அளவு ஒத்துழைப்பு வழங்குவோம்;. பல கட்சிகளுடனும் நட்புடன் பேசி ஒற்றுமை ஏற்பட எம்மாலான முயற்சிகளையும் மேற்கொள்வோம். எமது ஈழத் தமிழ் மக்களின் இன்றைய நிலையைக் கருத்திற் கொண்டு இந்த உடன்பாடு ஒற்றுமை எட்டப்பட வேண்டும். குறிப்பாக வன்னி மக்களின் வாழ்;வில் உடனடி முன்னேற்றங்களைக் கொண்டுவர தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர வேண்டிய கட்டாயம் உள்ளது.

கேள்வி : ஆரம்ப காலகட்டங்களில் இருந்த ஒற்றுமையை மீண்டும் கட்டியெழுப்ப முடியுமா?

பதில் : நாங்கள் இளையவர்களாக இருந்த போது பெரியவர்களாக இருந்தவர்கள் தமிழர் போராட்ட இயக்கங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்தத் தவறி விட்டனர். 1984ல் நாம் எடுத்த முயற்சியால் ஈழத் தேசிய விடுதலை முன்னணி உருவாக்கப்பட்டது. அதுவே திம்புப் பேச்சுவார்த்தையின் போது ஒரு பலமாக இருந்தது. ஆனால் புலிகள் அதனை நீடிக்க விடாது செய்துவிட்டனர். அந்தத் தவறு தொடரக் கூடாது. புலிகள்தான் தமிழர்களிடையே ஒற்றுமை ஏற்படுவதற்குத் தடையாக இருந்தார்கள் இப்போது புலிகள் இல்லாதபடியினால் ஒற்றுமையை ஏற்படுத்த முடியும் என்று திரு சம்பந்தர் அவர்கள் பகிரங்கமாக அறிவித்ததை யாரும் மறந்திருக்கமாட்டார்கள். எனவே கடந்தகாலத் தவறுகளைத் தொடராமல் தமிழ் மக்களுக்கான அடிப்படை விடயங்களிலாயினும் ஒற்றுமைப்பட முயற்சி செய்வோம். அவ்வாறு முயற்சி செய்யாவிட்டால் அடுத்த தலைமுறை எம்மை நிச்சயம்; குற்றஞ்சாட்டும். மக்கள் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கை இல்லாது போகும். இந்த ஒற்றுமைக்காக ஊடகங்களும் பாடுபட வேண்டும். ஒற்றுமைக்கு எதிரான போக்குகளை ஊடகவியலாளர்கள் வளர்த்து விடக்கூடாது.

கேள்வி : இனப்பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவரக் கூடிய அதிகாரப்பகிர்வு பற்றிய உங்களது கருத்து என்ன?

பதில் : தமிழ்க்கட்சிகள் அடிக்கடி ஒன்றிணைந்து சந்தித்து ஒரு குறைந்த பட்சமாயினும் சில விடயங்களில் உடன்பாடு காண வேண்டும். அதன் மூலம் ஒரு தீர்வுத் திட்டத்தை உருவாக்கி அதனை தமிழர்களின் அரசியற் கோரிக்கையின் ஒரே குரல் என வெளிப்படுத்த வேண்டும். தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் ஒரு தீர்வுத் திட்டத்தை ஏற்கனவே வைத்திருப்பார்களாயின் அதனை அனைத்துத் தமிழ்க் கட்சிகள், சமூகத் தலைவர்கள்; மற்றும் புத்திஜீவிகளின் கருத்துக்களுக்கும் அபிப்பிராயங்களுக்கும் வெளிப்படுத்தி முன்வைக்க வேண்டும். அதன் மூலம் அவ்வாறான ஒன்று அனைத்துத் தமிழர்களினதும் கோரிக்கையென வெளிப்படும.;. அதை உலக நாடுகளிடம் சமர்ப்பித்து எமது நியாயத்தை எடுத்துக் கூறவேண்டும். தெற்கில் தமிழ் மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் எத்தனையோ சிங்களக் கட்சிகள் இருக்கின்றன. ஏன் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலும் அதிகாரப்பகிர்வுக்கு ஆதரவான அமைச்சர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கும் எமது ஒற்றுபட்ட கோரிக்கையை முன்வைத்து அதுபற்றி அவர்கள் சிங்கள மக்கள் மத்தியில் சாதகமான அபிப்பிராயங்களை உருவாக்க வழிவகுக்க வேண்டும். நாங்கள் பிரிவினைவாதிகள் அல்லர் எமது கோரிக்கைகள் நியாயமானவை என்று சிங்கள மக்களுக்கு முதலில் நம்பிக்கையைக் கொடுக்க வேண்டும். இவ்வாறான முன்னெடுப்புகளே ஒரு நிலையான அரசியற் தீர்வுக்கு நிலைமைகளை இட்டுச் செல்லும்.

கேள்வி : தமிழ்ப் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்கள் நிகழவுள்ளதாக ஒரு அச்ச நிலை தோன்றியுள்ளது. இது பற்றி உங்களது அபிப்பிராயம் என்ன?

பதில் : தெற்கில் எமது மக்கள் இருக்கிறார்கள். அதேபோல சிங்களவர்களும் 30 வருட யுத்தம் முடிவடைந்த பின்னர் வடக்கில் உள்ள அவர்களின் நாகவிகாரையிலும் நயினாதீவிலுள்ள பௌத்த விகைரையையும் தரிசிக்கவும்;, சுற்றுலா நோக்கிலும் இங்கு வருகின்றனர். இவ்வாறு வருகின்றவர்களை எமது நிலத்தில் குடியேறுவதற்காகவே வருகிறார்கள் என குற்றம் சாட்டுவது சரியானது அல்ல. வன்னியில் என்ன நடக்கிறது என்பது தொடர்பாக தமிழர்களின் மத்தியில் பலஅச்சங்கள் தோன்றியிருப்பது இயல்பானது. அவை தொடர்பாக அரசாங்கம் மக்களுக்கு உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும். ஊகங்களின் அடிப்படையில் எதனையும் என்னால் கூறமுடியாதுள்ளது. ஆனால் இவ்வாறான செயலுக்கு அரசே பெரும் பொறுப்பாகும். அதேவேளை ஆதாரமற்ற ஊகங்களை எமது மக்கள் மத்தியில் விதைக்கக் கூடாது என்பதில் நாமும் சமூகப் பொறுப்புணர்வுடன் கவனமாக இருக்க வேண்டும்.

மனிதாபிமான பணிகளில் பாதிப்பு ஏற்படாது!

Friday, July 9, 2010
ஐ.நாவின் கொழும்பு அலுவலகம் மூடப்படுகின்றமை இலங்கைக்கான ஐ.நாவின் மனிதாபிமானப் பணிகளில் பாதிப்பை ஏற்படுத்தாது என்று இலங்கைக்கான ஐ.நாவின் வதிவிடப் பிரதிநிதி நெய்ல் புக்னே தெரிவித்தார். ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனின் உத்தரவின் பேரில் ஐ.நா அபிவிருத்தித் திட்டத்தின் ஆசிய பிராந்தியத்துக்கான கொழும்பு அலுவலகத்தை மூடப்படுகிறது.

வதிவிடப் பிரதிநிதியான நெய்ல் புக்னேயும் நியூயோர்க்கு திரும்பி வர வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் புக்னே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஐ.நாவால் இலங்கையில் மேற்கொள்ளப்படுகின்ற எந்தவொரு நடவடிக்கையிலும் தடங்கல் ஏற்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குழந்தையை விற்பனை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் வைத்தியர் கைது!

Friday, July 9, 2010
பிறந்து 3 நாள்களேயான குழந்தையொன்றை விற்பனை செய்வதற்கு முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட வைத்திய ஒருவர் நேற்று வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

கடந்த டிசம்பர் மாதம் 10ஆம் திகதி 75,000 ரூபாவிற்கு குறித்த குழந்தையை விற்பனை செய்வதற்கு அந்த வைத்தியர் முயற்சித்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

டபிள்யூ.ஏ.சாந்த லொக்கு பண்டார என்ற வைத்திய அதிகாரியே ஜா எல பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபராவார்.

குழந்தைகளை விற்பனை செய்வது தொடர்பில் குறித்த வைத்தியருக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் இருப்பதாக சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்தது.

ஐ.நா அலுவலகப் பணியாளHகளின் பாதுகாப்புக்கு அரசாங்கம் உத்தரவாதம்!

Friday, July 9, 2010
கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகப் பணியாளர்களின் பாதுகாப்பு தொடர்பாக ஐ.நா வூக்கு அரசாங்கம் உறுதிமொழி வழங்கியிருப்பதாக அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்தார்.

வெளிவிவகார அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளா; சந்திப்பொன்றில் அமைச்சா; இதனைத் தெரிவித்தாh;. இங்கு அமைச்சா; மேலும் கூறியதாவது-

கொழும்பிலுள்ள ஐ நா அலுவலத்திற்கு சிக்கலின்றி சென்றுவரவூம் ஐ நா அலுவலர்கள் சுமுகமாக தங்களது பணிகளை மேற்கொள்ளவூம் தேவையான பாதுகாப்பை அரசாங்கம் முழுமையாக உறுதிப்படுத்தியூள்ளதென்பதை நிவ்யோக்கிலுள்ள ஐ நா தலைமையகத்திற்கும் கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகத்திற்கும் அரசாங்கம் தௌpவாக எடுத்துக்கூறியிருக்கிறது.

ஜனநாயக நாட்டில் ஜனநாயக ரீதியிலான ஆர்ப்பாட்டங்கள் ஒன்றுகூடல்கள் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் உரிமை இருக்கிது. அந்த வகையில் எம்மைப் பொருத்தவரையில் ஜானநாயக ரீதியில் ஆர்ப்பாட்டம் செய்ய இருக்கும் உரிமையைப் பாதுகாக்க வேண்டிய தேசிய கடப்பாடு எமக்கு இருக்கிறது.

அதேபோல் ராஜதந்திர பிரதேசத்தின் துhய்மையைப் பாதுகாக்க வேண்டிய கடப்பாடும் எமக்கு இருக்கிறது. இந்த இரண்டு கடப்பாடுகளையூம் நாம் நிறைவேற்றியூள்ளோம் என அமைச்சH தெரிவித்தாH.

ஐ நா செயலாளர் நாயகமும் இலங்கை அரசாங்கமும் கைச்சாத்திட்ட கூட்டு அறிக்கையே ஐ நா நிபுணர்குழு நியமனத்திற்கு அடிப்படையாக அமைந்திருப்பதாக தெரிவிக்கப்படும் கருத்து குறித்து கேட்கப்பட்டபோது - அது முற்றிலும் தவறு. யூத்த முடிவடைந்த சிலநாட்களில் அதாவது 2009 மே மாதம இந்த கூட்டறிக்கை கைச்சாத்திடப்பட்டது. இந்த கூட்டறிக்கையில் வெளிநாட்டு பொறிமுறை எதுவூம் பற்றி குறிப்பிடப்பட்டவில்லை என அமைச்சH குறிப்பிட்டாH.

இந்த கூட்டறிக்கையில் இலங்கை அரசாங்கத்தினால் தகுந்த பொறிமுறையொன்று ஏற்படுத்தப்படுவது பற்றியே குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கமையவே ஜனாதிபதியினால் கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு நியமிக்கப்பட்டிருந்தது.

எனவே ஐ நா செயலாளர் நாயகம் ஜனாதிபதி கூட்டறிக்கைக்கும் இலங்கை தொடர்பான ஐ நா வின் விசேட நிபுணர்குழு நியமனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. கூட்டறிக்கையின் மூலம் இந்த நிபுணர்குழுவூக்கான எந்த அடிப்படையோ அடித்தளமோ ஏற்படுத்தப்படவூம் இல்லை எனவூம் அமைச்சர் தெரிவித்தார்,

Followers

Blog Archive