Monday, April 19, 2010

மறவன் புலத்தில் 256 வீடுகள்முதல் வீடு நேற்று கையளிப்பு

MONDAY, APRIL 19, 2010
சுவிஸ் நாட்டின் அபிவிருத்திக்கும் ஒத்துழைப்புக்குமான முகவர் அமைப்பின் நிதியுதவியுடன் யாழ். மறவன் புலத்தில் அமைக்கப்பட்டு வரும் வீடமைப்பு திட்டத்தின் முதல் கட்டி முடிக்கப்பட்ட வீட்டை உரிமையாளருக்கு கையளிக்கும் வைபவம் நேற்று இடம்பெற்றது.
அமைப்பின் பிரமுகரான மாட்டின் ஸ்ரீயூடர் புதிய வீட்டின் வாயிலை சம்பிரதாய முறைப்படி நாடாவெட்டி திறந்து வைத்து உரிமையாளரிடம் கையளித்துள்ளார்.
மேற்படி சுவிஸ் நாட்டின் அபிவிருத்திக்கும் ஒத்துழைப்புக்குமான முகவர் நிலையமானது சாவகச்சேரி பிரிவில் உள்ள மறவன்புல கிராமத்தில் 256 வீடுகளை கட்டிவருகிறது.

நாவலப்பிட்டி மற்றும் கும்புறுப்பிட்டி மீள் தேர்தல் ஏற்பாடுகள் பூர்த்தி

MONDAY, APRIL 19, 2010
நாவலப்பிட்டி மற்றும் கும்புறுப்பிட்டி மீள் தேர்தல் ஏற்பாடுகள் பூர்த்தி
பாதுகாப்பு பணியில் 2000 பொலிஸ், இராணுவம்; விசேட அதிகாரிகள் குழு நாவலப்பிட்டி விரைவு
நாவலப்பிட்டி மற்றும் கும்புறுப்பிட்டிய மீள்தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் நேற்று கூறியது. தேர்தலுக்கான பிரசாரப் பணிகள் நேற்று முன்தினம் (17) நள்ளிரவு பூர்த்தியடைந்ததோடு தேர்தல்கள் நாளை நடைபெறவுள்ளன.

பாதுகாப்புக் கடமைகளில் சுமார் இரண்டாயிரம் பாதுகாப்புத் தரப்பினர் ஈடுபடுத்தப்படவுள்ளதோடு தேர்தல் கடமைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்கள் இன்று முதல் (19) வாக்கு நிலையங்களுக்கு செல்ல உள்ளதாகவும் தேர்தல் திணைக்களம் தெரிவித்தது. வாக்குப் பெட்டிகளும் இன்று (19) வாக்குச் சாவடிகளுக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளன.

நாவலப்பிட்டியிலும் கும்புறுப்பிட்டியிலும் அமைதியான தேர்தல்களை நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் திணைக்களம் கூறியது. விசேட அதிகாரிகள் குழு இன்று (19) நாவலப்பிட்டிக்கு செல்கிறது எனவும் திணைக்கள உயரதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

மக்கள் எதுவித அச்சமுமின்றி சுதந்திரமாக வாக்களிக்கும் வகையில் உச்ச பாதுகாப்பு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் கடமைகளுக்குப் பொறுப்பான பாதுகாப்பு அதிகாரி பிரதிப் பொலிஸ் மாஅதிபர் காமினி நவரத்ன கூறினார். 1200 இராணுவம் மற்றும் பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு தேர்தல் தினத்தில் மேலும் 800 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை விடுமுறை தினமான நேற்று (18) விசேட வாக்காளர் அட்டை விநியோகம் இடம்பெற்றதோடு இன்றும் (19) வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளதாக தபால் திணைக்களம் கூறியது.

நாவலப்பிட்டியவில் 37 வாக்களிப்பு நிலையங்களிலும் கும்புறுப்பிட்டியவில் ஒரு வாக்களிப்பு நிலையத்திலும் மீள் தேர்தல் நடைபெறுகிறது.

நாவலப்பிட்டிய வாக்குகள் கண்டி மாவட்ட செயலகத்திலும் கும்புறுப்பிட்டிய வாக்குகள் திருகோணமலை கச்சேரியிலும் எண்ணப்படவுள்ளன. கும்புறுப்பிட்டிய வாக்குகள் அதே வாக்களிப்பு நிலையத்தில் எண்ணுவதற்கே முன்னர் தீர்மானிக்கப் பட்டிருந்தது

இந்திய விஸா நிலையம் மே 5 முதல் யாழில் இயங்கும்

MONDAY, APRIL 19, 2010
இந்திய விஸா நிலையமொன்று எதிர்வரும் மே மாதம் முதல் யாழ் ப்பாணத்தில் இயங்கவுள்ளது.

இந்த நிலையம் மே மாதம் 5ம் திகதி திறந்து வைக்கப்படும் என்று இலங்கைக்கான இந்தியாவின் தூது வர் அசோக் கே. காந்த் நேற்று தெரி வித்துள்ளார்.

யாழ்ப்பாணம், மத்திய கல்லூரி யில் நடைபெறும் யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக கண்காட்சியை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

யாழ். குடா நாட்டு மக்கள் இந்த நிலையத்தில் விஸா விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக் கொள்ள வும், அவற்றைக் கையளிக்கவும் முடியும்.

இதன்படி விஸாவைப் பெற்றுக் கொள்ள மாத்திரமே கொழும்பி லுள்ள இந்திய உயர் ஸ்தானிகரால யத்திற்கு செல்ல வேண்டும் என்று தூதரக அதிகாரி ஒருவர் தெரிவி த்தார்.

Followers

Blog Archive