Sunday, May 22, 2011

காங்கேசன்துறைத் துறைமுக அபிவிருத்தி!

Sunday, May 22, 2011
வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்குத் தேவையான இந்தியப் பொருள்களை இறக்குவதற்கான முக்கியமான ஒரு பிராந்தியத் துறைமுகமாக காங்கேசன்துறைத் துறைமுகத்தை மாற்றுவதே அதனை அபிவிருத்தி செய்வதற்கான அரசின் முக்கிய நோக்கமாகும் என அரசாங்கம் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்திய அரசின் வடக்கு, கிழக்குக்கான உதவித்திட்டத்தின் கீழ் இந்தத் துறைமுக அபிவிருத்திக்கான நிதி வழங்கப்படவுள்ளது. இதற்கான பணிகள் யாவும் இரண்டு வருட காலத்தினுள் நிறைவுபெறும்.

இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள துறைமுக அதிகார சபையின் தலைவர் பிரியத் பண்டு விக்கிரம, இந்தியத் துறைமுக நகரங்களான தூத்துக்குடி, சென்னை ஆகிய நகரங்களில் இருந்து யாழ்ப்பாணம், திருகோணமலை ஆகிய இடங்களுக்கு எடுத்து வரப்படும் பொருள்களான சிமெந்து, உரவகைகள், வெங்காயம் ஆகியவற்றைக் காங்கேசன்துறைத் துறைமுகமே கையாளும்.

மேலும் எட்டு அடி ஆழமாக்கப்பட்டு இதனைப் பூரணமாக அபிவிருத்தி செய்வதற்காக அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தமும் இந்திய மற்றும் இலங்கை அரசுகளுக்கிடையில் கைச்சாத்திடப்படும். இந்திய கப்பல் கூட்டுத்தாபனத்தை உள்ளடக்கிய இந்திய அதிகாரிகள் தற்போது காங்கேசன்துறையில் உள்ளனர்.

இந்திய அரசு ஆரம்ப சாத்தியமான விடயங்களை ஆராய்வதற்கென 40 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. இது ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து மணல் வாருதல், துறைமுக மேடை கள் அமைக்கும் பணிகள் நடைபெறவுள்ளன எனவும் அவர் கூறினார்.

விரைவில் 90 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள்!

Sunday, May 22, 2011
339 உள்ளூராட்சி சபைகளில் 245 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் அண்மையில் நடைபெற்றன .நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் மற்றும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி, சில சபைகளின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டமை ஆகிய காரணங்களால் 90 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படவில்லை.
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் 2010 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் பிரகாரம் நடத்த தேர்தல் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார் விரிவாக

இவற்றில் 67 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களை ஜுலை மாதமளவில் நடத்துவதற்கு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும். ஏனைய உள்ளூராட்சி சபைகளுக்கான தேல்தல் தெரிவிக்கப்படுவது போன்று ஜூன் மாத இறுதியில் நடத்தப்பட மாட்டாது எனவும் அறிய முடிகின்றது. எஞ்சிய தேர்தல்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்

வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட 38 உளளூராச்சி மன்றங்களின் வேட்பு மனுக்கள் நீதி மன்ற தீர்ப்பின் ஊடாக மீண்டும் ஏற்றுகொள்ளப்பட்டுள்ளது இதன் பிரகாரம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 3 வேட்பு மனுக்கள், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 33 வேட்பு மனுக்கள், ஐக்கிய தேசிய கட்சி 2 வேட்பு மனுக்கள் என்பனவே மீண்டும் ஏற்று கொள்ளப்படவுள்ளது.

Thursday, May 19, 2011

புத்த கண்காட்சியை ஜனாதிபதி திறந்து வைத்துள்ளார்!

Thursday, May 19, 2011
2 ஆயிரத்து 600வது ஸ்ரீ சம்புத்தத்த ஜயந்திக்கு ஒத்ததாக “பிங்பர லங்கா” என்ற பெயரில் தேசிய மரபுரிமை புத்த கண்காட்சி தேசிய நூதனசாலை வளாகத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜாபக்சவின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட இந்த கண்காட்சி எதிர்வரும் 31ஆம் திகதி வரை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால், ஆரம்பித்து வைக்கப்பட்ட கண்காட்சியில், துட்ட கைமுனு அரசனின் அஸ்தி உட்பட பல புராதன பொருட்கள் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மகிந்த ராஜபக்ச தேசிய நூதனசாலையின் புராதன சொத்துக்களையும் பார்வையிட்டுள்ளார்.

இதனிடையே, ரஷ்ய கூட்டிணைவு நாடுகளின் கல்மக்கியா இராச்சியத்தின் முன்னாள் ஜனாதிபதி மற்றும் உலக செக் சங்கத்தின் தலைவர் கிருஷான் இலும்பினோவ் ஆகியோர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை இன்று சந்தித்துள்ளனர்.

இந்த சந்திப்பு அலரி மாளிகையில் இடம்பெற்றது.

எஞ்சியவர்கள் மீள்குடியேற்றப்பட வேண்டும் - இந்தியா!

Thursday, May 19, 2011
இடம் பெயர்ந்த நிலையில் தொடர்ந்தும் மீள்குடியேற்றப்படாமல் உள்ள மக்களை துரித கதியில் மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் என இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணாவிற்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ எல் பிரிஸ் ஆகியோருக்கிடையே இடம் பெற்ற சந்திப்பின் போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இந்த சந்திப்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் ஜீ எல் பீரிஸ் அதிகார பரவலாக்கம் குறித்து தமது அரசாங்கம் தமிழர்களின் பிரதிநிதிகளுடன் 6 சுற்று பேச்சுவார்தைகளை நடத்தியுள்ளன.

பேச்சுவார்தைகளில் கலந்து கொண்ட தமிழர்களின் பிரதிநிதிகளும் சில பிரேரணைகளை முன்வைத்துள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் தமிழர் பிரதிநிதிகள் முன்வைத்த விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர இந்திய மற்றும் இலங்கை நாடுகளுக்கிடையேயான வர்த்தகம், பொருளதார, இரு நாட்டு சகோதரத்துவம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் புதிய விமானம் கொள்முதல் ஏ-320: பிரான்ஸிலிருந்து இன்று கட்டுநாயக்க வருகை!

Thursday, May 19, 2011
ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ¤க்குப் புதிதாக கொள்முதல் செய்யப்பட்டுள்ள ஏ-320 ரக பயணிகள் விமானம் இன்று காலை கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைகிறது.

பிரான்ஸின், டுலஸ் விமான நிலையத்திலிருந்து புறப்படும் இப்புதிய பயணிகள் விமானம் இன்று காலை சுமார் 9.30 மணியளவில் கட்டுநாயக்கா விமான தளத்தில் தரையிறங்குகிறது.

சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரட்ன இவ்விமானத்தில் இலங்கை வருகிறார். ஸ்ரீலங்கன் விமான சேவையின் 18 வது விமானமாக இணைத்துக் கொள்ளப்பட வுள்ள இப்புதிய ஏ- 320 ரக விமான த்தில் 20 “பிஸ்னஸ் கிளாஸ்” இருக்கைகளும் 120 சாதாரண இருக்கைகளும் கொண்ட தாக உள்ளன. எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15ம் திகதி ஸ்ரீலங்கன் விமான சேவை தனது சேவையை விஸ்தரிக்கும் நோக்குடன் 52 ஆவது சேவையாக ரஷ்யாவின் மொஸ்கோ நகருக்கான நேரடி விமான சேவையையும் ஆரம்பிக்கிறது என அமைச்சர் பிரியங்கர ஜயரட்ண கூறினார்

Sunday, May 8, 2011

ஐ.நா. செயலாளரின் நிபுணர் குழு கலைப்பு;இரகசியங்களை வெளியிடத் தடை!

Sunday, May 8, 2011
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றம் தொடர்பாக தனக்கு ஆலோசனை வழங்கவென ஐ.நா. செயலாளர் நாயகத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு கலைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தருஷ்மன் தலைமையிலான மூவர் அடங்கிய நிபுணர் குழுவை ஐ.நா. செயலாளர் நாயகம் கடந்த வருடம் நியமித்திருந்தார். இக்குழு பல வழிகளில் சாட்சியங்களைப் பெற்று இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற விடயங்களை 192 பக்க அறிக்கையாக தயாரித்து அண்மையில் ஐ.நா. செயலாளர் நாயகத்திடம் கையளித்ததோடு, அவர் அதனை அம்பலப்படுத்தியிருந்தார்.

அவ்வாறான நிலையில் நிபுணர் குழுவின் செயற்பாடுகள் முற்றுப்பெற்றுள்ளதால் நேற்று ஐ.நா. செயலாளர் பான் கீ மூன் அதனைக் கலைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, நிபுணர் குழுவிடம் சாட்சியளித்தவர்களின் இரகசியத் தன்மை எதிர்வரும் இருபது வருடங்களுக்கு பேணப்பட வேண்டுமென நிபுணர் குழு உறுப்பினர்களுக்கு பணிப்புரை விதிக்கப்பட்டுள்ளது.

ஐநா அறிக்கை - இந்திய உயர்மட்டக் குழு வெள்ளியில் இலங்கை வருகை!

Sunday, May 8, 2011
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் மற்றும் இறுதிக் கட்ட யுத்தம் குறித்து ஐநா செயலாளர் நாயகம் பான் கீ மூனின் நிபுணர் குழு வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பில் ஆராய இந்தியாவின் உயர்மட்டக் குழுவொன்று எதிர்வரும் வெள்ளிக்கிழமை இலங்கை வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வரவுள்ள குழுவில் இந்திய வெளிவிவகார செயலாளர் நிருபமா ராவ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் பிரதீப் குமார் உள்ளிட்ட சிலர் அடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்குழு ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதுடன் பான் கீ மூன் நிபுணர் குழுவை அடிப்படையாக வைத்து இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வலியுறுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் எதிர்வரும் 16ம் திகதி இந்தியா செல்லவுள்ளதுடன், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

Wednesday, May 4, 2011

நாட்டின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படும் வகையிலான பாடல்கள் உருவாக்கப்படக் கூடாது – ஜனாதிபதி!

Wednesday, May 4, 2011
நாட்டின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படும் வகையிலான பாடல்கள் உருவாக்கப்படக் கூடாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இவ்வாறான பாடல்களை பிரிவினைவாதிகள் தங்களின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள பயன்படுத்திக்கொள்ளக் கூடுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

'மே ரட்டே மினிஸ்சு தனிகர கெலின்னே பிஸ்சு' (இந்த நாட்டு மக்கள் விசர் வேலைகளையே செய்கின்றனர்) போன்ற பாடல்களை கேட்க முடிவதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் ' லோகேம உதும்ம ரட்ட ஸ்ரீலங்காவை' (உலகின் மிகப் புனிதமான நாடு இலங்கை) போன்ற பாடல்கள் உருவானதாக அவர் தெரிவித்துள்ளார்.

நன்மதிப்பை கெடுக்கக் கூடிய வகையிலான பாடல்களை பிரிவினைவாத சக்திகள் தமது தேவைகளுக்காக பயன்படுத்திக்கொள்ளக் கூடுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

உலகின் மிகப்பெரிய பயங்கரவாதியை அழித்தவர்கள் இலங்கையரே-டலஸ் அழகப்பெரும!

Wednesday, May 4, 2011
உலகில் மிகப் பிரபலம் பெற்ற முதல்நிலை வகிக்கும் பயங்கரவாதியை அழித்தவர்கள் அமெரிக்காவன்றி இலங்கையர்களே என இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற செயலமர்வில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர், 20 வருடங்களுக்கு முன்னர் கல்வியின் ஆரம்பமாக அ,ஆ என்றிருந்தது. இப்போது அது மாறி டிஜிடெல் தொழில் நுட்பமாகி விட்டது. எனவே 20 வருட சரித்திர மாற்றத்திற்கு ஈடுகொடுக்க நாம் தயாராகவேண்டும். சகலரும் கணனிக் கல்வியில் திறமை காட்டுவதன் மூலமே எதிர்காலம் சிறக்கும்.

பிரபாகரனுடன் ஒசாமா பின் லேடனை ஒப்பிட முடியாது. ஒசாமா இரண்டு தாக்குதல்களை மட்டுமே மேற்கொண்டு சுமார் 3ஆயிரத்து 500 பேரைக் கொண்டொழித்த சரித்திரம்தான் உண்டு.

ஆனால் பிரபாகரனுக்கு தற்கொலைப்படை ஒன்றே இருந்தது. 300 ற்கும் மேற்பட்ட தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. முப்படைகளும் முப்படைத்தளங்களும் இருந்தன. சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களது கொலைக்குக் காரணமாக பிரபாகரன் இருந்ததோடு 30 வருட ஆதிக்கம் கொண்ட அமைப்பாகவும் காணப்பட்டது.

எனவே உலகிலே மிகப் பெறிய அல்லது முதலாம் இலக்க பயங்கரவாதியைக் கொண்டவர்கள் இலங்கையரே என தெரிவித்தார்.

Followers

Blog Archive