Monday, February 28, 2011

இலங்கையர்களை அழைத்துவர தயார் நிலையில் விமானங்கள்!

Thursday, March 3, 2011
லிபியாவில் சிக்கியுள்ள இலங்கையர் களுள் 400 பேர் நாளை வெள்ளிக் கிழமையும் மறுநாள் சனிக்கிழமையும் இரண்டு விசேட விமானங்கள் மூலம் இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.

ஜோர்டானுக்கு சொந்தமான ரோயல் ஜோர்தானியன் எயார் வேஸ¤க்கு சொந்தமான இரண்டு விமானங்கள் திரிபோலி விமான நிலையத்திலிருந்து ஜோர்டான் - டுபாய் ஊடாக இவ் இலங்கையர்களை அழைத்து வரவுள்ளதாக திரிபோலியிலுள்ள இலங்கைத் தூதுவர் சுதந்த கனேகம ஆராச்சி தினகரனுக்குத் தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பணிப்பிற்கமைய காலி மாவட்ட எம்.பி. சச்சின்வாஸ் குணவர்தன விசேட விமானங்களை அனுப்புவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளதாக லிபியாவிலுள்ள இலங்கைத் தூதுவர் சுதந்த கனேகல ஆராச்சி தெரிவித்தார்.

ஜோர்தானியன் எயார்வேஸ¤க்கு சொந்தமான ஒரு விமானம் வெள்ளிக் கிழமை திரிபோலியிலிருந்து புறப்படுகிறது. மறுநாள் சனிக்கிழமையும் மற்றொரு ஜோர்தானியன் விமானம் திரிபோலியிலிருந்து புறப்படுகிறது.

எனினும் இவ் விமானங்கள் திரிபோலி யிலிருந்து புறப்படும் நேரங்களை தற்போது கணிப்பிட முடியாதுள்ளது என தெரிவித்த இலங்கைத் தூதர், திரிபோலி விமான நிலையம் பரபரப்பாக இருப்பதால் முன்கூட்டியே நேரத்தை கூற முடியாதுள்ளது எனத் தெரிவித்தார்.

இதேவேளை, திரிபோலி உட்பட லிபியாவின் ஏனைய பகுதிகளிலுள்ள இலங்கையர்கள் நாடு திரும்பவிரும்பாத னால். உடனடியாக தூதரகத்துடன் தொடர்பு கொண்டு கடவுச் சீட்டு இலக்கம் பெயர் என்பவற்றை பதிவு செய்யுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ள தாகவும் அவர் கூறினார்.

சில இலங்கையர் நாடு திரும்ப விருப்பம் தெரிவிக்கவில்லை என்று கூறிய சுதந்த கனேகல ஆராச்சி, லிபியாவின் தற்போதைய நிலை, அதனால் ஏற்படும் அச்சுறுத்தல் தொடர்பாக எமது மக்களுக்கும் விளக்கமாக கூறியிருக்கிறோம் என்றும் தெரிவித்தார்.

லிபியாவின் பேர்த் நகரிலிருந்து சைப்பிரஸின் நார்மாத்தா நகருக்குக் கொண்டு சென்ற 29 இலங்கையரின் நிலை தொடர்பாக இலங்கைத் தூதுவர் சுதந்த கனேகல ஆராச்சியிடம் தினகரன் கேட்ட போது,

நார் மாத்தா நகரிலுள்ள கொன் சியூலர் 29 பேரையும் பொறுப்பேற் றுக் கொண்டதாக சைப்பிரஸிலிரு ந்து தொலைபேசி மூலம் தெரிவித் ததாகவும் விரைவில் 29 பேரும் இலங்கை வந்து சேருவார்கள் என் றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, லிபியாவில் சிக்கியிருந்த மேலும் 22 பேர், அவர்கள் தொழில்புரிந்த நிறுவனத்தினூடாக கப்பல் மூலம் மோல்டாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். மோல்டாவிலுள்ள 22 பேரும் நேற்று மாலை இலங்கைக்கு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சைப்பிரஸிலுள்ள நார்மாட்டா நகரிலுள்ள 29 இலங்கையர்களும் இன்று 3 ஆம் திகதி அதிகாலை இலங்கை வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிக்கிறது.

மேலும், 54 பேர் கப்பல் மூலம் கடந்த முதலாம் திகதி மோல்டாவை வந்தடைந்துள்ளனர். இவர்களும் இன்று இலங்கை வருவரென எதிர்பார்க்கப்படுகிறது.

Sunday, February 27, 2011

ஜனாதிபதியின் வாழ்க்கை வரலாறு முதன் முறையாக தமிழில் வெளியீடு.

Sunday, February 27, 2011
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வாழ்க்கை வரலாற்றினை உள்ளடக்கிய நூல் முதன் முறையாக தமிழில் வெளி வந்துள்ளது. இந்நூலுக்கு ‘மஹிந்த’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மூன்று தசாப்தங்களாக இலங்கை மக்களை துன்புறுத்திய பயங்கர வாதத்திலிருந்து நாட்டைக் காப்பாற்றி மக்கள் அனைவரும் சமாதானமாகவும், ஒற்றுமை யாகவும், புரிந்துணர்வுடனும் வாழ வழியமைத்துக் கொடுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விற்கு தமிழ் மக்கள் சார்பாக

நன்றியினைத் தெரிவிக்கும் முகமாக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது.

சிறுவயது முதல் ஜனாதிபதி மாளிகை வரையிலான மஹிந்த ராஜபக்ஷவின் விசேட நிகழ்வுகள் இந்நூலில் வர்ணப் புகைப் படங்களுடன் உள்ளடக்கப்பட்டுள்ளமை இதன் சிறப்பம்சமாகும்.

நாட்டின் சகல இன மக்களினதும் மனிதாபிமான உரிமைகளை பெற்றுக் கொடுத்த தலைவரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பற்றி தமிழ் மக்கள் கூறும் கருத்துகளும் இந்நூலில் உள்ளடக் கப்பட்டுள்ளன.

தினகரன் நாளிதழின் பிரதம ஆசிரியரான எஸ். தில்லைநாதனினால் இந்த வரலாற்று நூல் எழுதப்பட்டுள்ளது.
இந்நூலின் முதற் பிரதி கடந்த வாரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் ஜனாதிபதி மாளிகையில் வைத்து நூலாசிரியர் தில்லைநாதனால் கையளிக் கப்பட்டது. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வரும், எஸ். தில்லைநாதனின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.

மொபைல் போனில் ஆபாச வீடியோவா?4 மாதம் சிறை செல்ல நேரிடும்.

Sunday, February 27, 2011
மொபைல் போனில் ஆபாச வீடியோக்களை வைத்திருப்பவர் களுக்கு எதிராக சட்டம் கடும் நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் மொபைல் போனில் ஆபாச வீடியோ வைத்தி ருந்த நபர் ஒருவருக்கு நீதிமன்றத்தால் நான்கு மாதம் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கடந்த செவ் வாய்க்கிழமை தெல்லிப்பளைப் பொலி ஸாரால் சோதனைக்கு உட்படுத் தப்பட்ட இளைஞர் ஒருவரின் மொபைல் போனில் ஆபாச வீடியோ இருந் துள்ளது. பொலிஸார் குறிப்பிட்ட இளைஞரை மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்படுத்தி தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்றன.

விசாரணைகளுக்கு அமைய குறிப்பிட்ட இளைஞர் குற்றவாளியாக இனம் காணப்பட்டார். அவருக்கு நான்கு மாதங்கள் சிறைத் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கல்லூரி செல்லும் இளைஞர்கள் தொடக்கம், பள்ளி செல்லும் மாணவர்கள் வரை பலரது மோபைல் போன்களில் இவ்வாறான ஆபாசப்படங்கள் பரவலாகக் காண்பபடுகிறது. இது போன்ற படங்களை மாணவிகளுக்கு காண்பித்து உணர்ச்சிகளைத் தூண்டி சிலர் அதில் குளிர் காய்வதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

முஸ்லிம் காங்கிரஸின் பலம் தேர்தலில் வெளிப்படும்.

Sunday, February 27, 2011
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸி டமிருந்து பறித்தெடுக்கப்பட்ட பேரம் பேசும் அரசியல் பலத்தை மீளப் பெறுவதற்கானதோர் சந்தர்ப்பமே எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலாகும்.

இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும், உள்நாட்டு வர்த்தக, கூட்டுறவுத்துறை பிரதி அமைச்சருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்தார். எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலில், நிந்தவூர் பிரதேச சபைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையி லேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஸ்ரீல. மு. காங்கிரஸ் நிந்தவூர் மத்திய குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இக் கூட்டத்தில் (2011-02-25) திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். சி.பைசால் உட்பட பெருந்தொகை யான பொது மக்களும் கலந்து கொண்டனர்.

பிரதி அமைச்சர் பசீர் சேகுதாவூத் மேலும் பேசியதாவது, கிழக்கு மாகாண சபைக்கான அடுத்த தேர்தலில் முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரை பெற்றுக் கொள்வதற்கான முதற்கல்லை நடுகின்ற நாளாக எதிர்வருகின்ற மார்ச் 17 ஆம் திகதி அமையப் போகின்றது. இதற்காக முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மரச் சின்னத்திற்கு இந்த உள்ளூராட்சி சபைத் தேர் தலில் வாக்களிக்க கடமைப்பட்டுள் ளனர். கிழக்கு மாகாண சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்போ, அரசாங்கக் கட்சியோ அடுத்து வரும் தேர்தலில் தனித்து வெல்ல முடியாத ஒரு சூழலில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசுடனோ தமிழ் தேசிய கூட்டமைப்புடனோ சேர்வதன் மூலம் ஆட்சியமைப் பதற்கான காலம் நிச்சயம் வரும்.

முஸ்லிம்களுக்கென்று தனி யலகு கோரிக்கைக்கான அரசியல் போராட்டம் கைவிடப்படாத நிலையில் கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரை பெற்றுக் கொள்வதற்கான வியூகங்களுக்கு வலுச் சேர்க்க வேண்டிய காலம் இது. இச்சந்தர்ப் பத்தில் தமிழ் மக்களுக்கும் நீதியான நேர்மையான தீர்வு கிடைக்க வேண்டும் என பிரார்த் திக்கின்றோம்.

எனவே தான் முஸ்லிம்களின் அரசியல் அபிலாஷைகளை அடைந்து கொள்வதற்கான போராட்ட வியூகத்திற்கு வழிசேர்க் கின்ற தேர்தலாக இந்த தேர்தலை முஸ்லிம் மக்கள் பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் செல்வாக்கை தேசிய அரசியலில் இருந்தும், சமூக அரசியலில் இருந்தும் ஒரு போதும் ஓரங்கட்ட முடியாது என்ற செய்தியை வெளிக்காட்ட முடியும் எனக் கூறினார்.

இக் கூட்டத்தில் மு.கா. வேட்பாளர் களான எம்.ஏ.எம். தாஹிர், ஏ.ஏ.எம். நெளசாத், எம்.ரீ. ஜப்பார் அலி, எம்.எம். அன்சார், றியாஸ் உட்பட பலரும் உரையாற்றினர்.

Wednesday, February 23, 2011

அடையவே முடியாத மகாதேவிக்காக வாளைத் தூக்கி வீசிக் கொண்டிருப்பதைவிடவும் சாத்தியமான வழிமுறைகளைக் குறித்துச் சிந்தியுங்கள்-முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜப்பெருமாள்!
Wednesday, February 23, 2011
இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக ஏறக்குறைய ஏழு மாதங்களுக்கு முன்னர் வடக்கு கிழக்கு மாகாணங்களின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் சில அபிப்பிராயங்களை தெரிவித்திருந்தார்.

13வது திருத்தச்சட்;டத்தின் அடிப்படையில் முதற்கட்டமாக அதிகாரப் பகிர்வுகளை சாத்தியப்படுத்துதல், இநத அதிகாரப் பரவலாக்கல் சம்பந்தப்பட்ட விடயத்தை சரியான முறையில் செயற்படுத்துதற்கு உடனடியாக ஒரு ஆனைக்குழுவை ஏற்படுத்துதல். இந்த அதிகாரப் பரவலாக்கல் ஆனைக்குழுவில் அரசியல் யாப்பு சம்பந்தமான விடயங்களில் நிபுணத்துவமுடையவர்கள் விடயங்களைத் திறமையாக நிர்வகிக்கக்கூடிய திறனாளர்களைக் கொண்ட நிபுணர்குழுவொன்றை அதை;தல் அவசியமாகும் என்பது வரதராஜப்பெருமாளின் சாராம்சக் கருத்தாகும். அடையவே முடியாத மகாதேவிக்காக வாளைத் தூக்கி வீசிக் கொண்டிருப்பதைவிடவும் அடைய முடிந்த ஸ்ரீதேவிக்காக கைகளை நீட்டலாம் என்பதைப் போல் சாத்தியமான வழிமுறைகளைக் குறித்துச் சிந்தியுங்கள் என்பதாக வரதராஜப் பெருமாள் இந்தக் கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தார். தன்னுடைய இந்த நிலைப்பாட்டை அவர் இலங்கையில் பல்வேறு இடங்களிலும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றார். யாழ்ப்பாணம், கொழும்பு உள்ளிட்ட பல பிரதேசங்களில் நடைபெறும் கூட்டங்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பெருமாளின் பிரசன்னம் அதிகளவில் காணப்படுகிறது.

அத்துடன் அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று புலம்பெயர் மக்களையும் விடுதலைப் போராட்ட அமைப்புக்களில் திவிரமாக செயற்பட்டிருக்கும் முக்கிய உறுப்பினர்களையும் சந்தித்து தனது நிலைப்பாட்டை விளக்கியிருக்கிறார். வரதராஜப்பெருமாள் இலங்கை அரசியல் களத்தில் நன்றாக அறியப்பட்டவர். வடக்கு கிழக்கு மாகாண சபையின் முதல் அமைச்சர். முப்பது ஆண்டுகளுக்கு மேலான அரசியல் செயற்பாடு அனுபவங்களையுடையவர். கல்வியியலாளர். பொருளியல் சிந்தனையாளர். ஆயுதப் போராட்ட அரசியல் அனுபவத்தையும் ஆயுதமற்ற அரசியல் நடவடிக்கைகளின் அனுபவத்தையும் கொண்டவர். இந்தப் பின்புலத்தில் தனது கடந்தகால அரசியல் அனுபவத்தையும் இலங்கைத் தமிழர்களின் அரசியல் அனுபவத்தையும் தொகுத்து தனது இன்றைய நிலைப்பாட்டை அவர் உருவாக்கியிருக்கிறார். இதை அவர் பகிரங்கமாகத் தெரியப்படுத்தியும் வருகிறார்.

இதேவேளை வரதihப்பெருமாளை கடுமையாக விமர்சிப்போரும் உள்ளனர். குறிப்பாக இந்தியாவுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டவர் என்றும் இந்திய விரிவாக்கத்துக்கு ஆதரவளிப்பவர் என்றும் பெருமாளை இவர்கள் விமர்சிக்கின்றனர்.

ஆனால் பெருமாளோ தான் கடந்த கால அனுபவங்களின் வழியாகவும் இன்றைய உலக ஒழுங்கின் வழியாகவும் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கின்றேன் என்கின்றார். பிரச்சினைக்கான சூழல் அற்றுப்போனதென்றால் அடுத்த கட்டமாக எது சாத்தியமோ அதைப் பற்றித்தானே நாம் சிந்திக்க வேண்டும்? என்பதுதான் பெருமாளின் தீர்க்கமான நிலைப்பாடு.

இங்கே நாம் வரதராஜப்பெருமாளை முக்கியப்படுத்துவதை தவிர்த்து விட் அவருடைய கூற்றுக்களையும் நிலைப்பாடுகளையும் அவதானிக்கலாம்

தமிழர்கள் இன்று எத்தகைய நிலையில் இருக்கின்றனர்? தமிழ் பேசும் சமூகங்கள் இப்போது எவ்வாறுள்ளன? இந்த இரண்டு கேள்விகளும் முக்கியமானவை. அதாவது அரசியல் ரீதியாசும் சரி, பொருளாதார சமூக இருப்பு நிலையிலும் சரி தமிழர்களும் தமிழ் பேசும் மக்களும் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கின்றனர்.

தமிழ் பேசும் சமூகங்களை பிரதிநிதிதுவப்படுத்தும் அரசியல் சகதிகளில் பலவும் இன்று ஐக்கிய இலங்கைக்குள் தான் அரசியற் தீர்வு என்ற நிலைப்பாட்டுக்கு வந்துவிட்டன. இந்த நிலைப்பாட்டுடன்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பும் உள்ளது. நாடு கடந்த தமிழீழக் கோட்பாட்டாளர்களைத் தவிர ஏனையோர் அனைவரும் யதார்த்த அரசியலைப் பற்றி சிந்திக்க முற்பட்டுள்ளனர். இந்த யதார்த்த அரசியல் வெளிக்கு அப்பால் நிற்போரில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒரு சிறு பிரிவினரும் உள்ளடங்குவர். இத்தகைய பிரிவினர் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது கூட்டமைப்பிலிருந்து விலகிச் சென்று விட்டனர்.

கூட்டமைப்பில் ஓரளவுக்கு யதார்த்தமாகச் சிந்திப்பவர் சுரேஷ் பிரேமச்சந்திரன். ஆனால் அண்மையில் இவர் நாடாளுமன்றத்தில் ஆற்றும் உரைகளும் ஊடகங்களுக்கு விடுக்கும் அறிக்கைகளும் யதார்த்த சிந்தனை முறைக்கு அப்பாலானவையாக இருக்கின்றன. கூட்டமைப்புக்குள் இருக்கும் நெருக்கடியைச் சமாளிக்கவும், அந்தக் கட்சியின் அரசியல் இருப்பை உறுதி செய்யவும் சரேஷ் பிரேமச்சந்திரன் முனையலாம்.

ஆனால் அவ்வாறு அவர் முயற்சிப்பாராயின் அவருடைய அரசியல் வெற்றிகள் என்பதும் அடையாளம் என்பதும் எதிர்காலத்தில் கேள்விக்குறியாகவே அமையலாம். பல மந்தைகளில் ஒன்றாக நிற்பதை விடவும் தனித்து சிங்கமாக இருக்க வேண்டிய அரசியல் தலைமையாளரின் பண்புகளில முக்கியமானது என்பார்கள். இந்த் தனித்துத் தெரிதல் என்பது சிந்தனையையும் செயற்பாட்டாலுமே அமையும்.

சுரேஷ் பிரேமச்சந்திரன் நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமல்ல. ஆயுதப் போராட்ட முன்னோடிகளில் ஒருவர். நீண்டகால அரசியல் அனுபவத்தையுடையவர். சுக ஊடாடத்திலுள்ளனர். பல்வேறு நெருக்கடி பாதைகளால் பயணித்து வந்தவர். ஆகவே நடைமுறைக்குரிய திட்டங்கள் நிலைப்பாடுகள் என்பவற்றைப் பற்றி சிந்திக்க வேண்டிய பொறுப்பில் இன்று இவர் இருக்கின்றார். கூட்டமைப்பிலுள்ளோரில் அதிக ஆற்றலும் நம்பிக்கையும் தரக்கூடியவர் சுரேஷ் பிரேமச்சந்திரன்தான். தலைமைத்துவப் பண்பு நிறைய பெற்றவரும் அவர்தான்.

எனவே சுரேஷ் பிரேமச்சந்திரன் இன்று கூட்டமைப்பின் மையச் சுழற்சியைத் தீர்மானிக்க வேண்டிய பொறுப்பிலிருக்கிறார். கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நோய்வாய்ப்பட்டிருப்பதுடன் முதுமை நிலையில் இருக்கின்றார். இதேவேளை சம்பந்தனும் சுரேஷ் பிரேமச்சந்திரனும் அதிகம் முரண்பாடற்ற நிலைப்பாட்டை உடையவர்கள்.

எனவே இன்றுள்ள நிலையில் தமிழ் பேசும் சமூகங்களின் அரசியற் தீர்வைப் பற்றி சிந்திக்க வேண்டுமாயின் இன்னொரு யதார்த்தத்தையும் மனங்கொள்வது அவசியம். அதாவது தமிழ் பேசும் சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியற் கட்சிகளில் (மலையகம்- முஸ்லீம் தரப்பு மற்றும தமிழ் தரப்பு ஆகியவற்றில்) பெரும்பாலானவை அரசாங்கத்துடன் இணைந்திருக்கின்றன. அல்லது அரச ஆதரவை கொண்டிருக்கின்றன. டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி, பிள்ளையான் எனும் சிவனேசதுரை சந்திரகாந்தனின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ், ரிஷாத் பதியுதீனின் அணி, இ.தொ.கா, மலையக மக்கள் முன்னணி, இப்படி பல கட்சிகளும் புலிகளின் பரிவுகள் கே.பி அணியினர் வரையில் அரசு வட்டத்துக்குள் உள்ளடக்கப்பட்டு விட்டன.

ஆனாலும் இந்தத் தரப்பினரில் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும் தமிழ் பேசும் மக்களின அரசியல் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டு- அபிவிருத்தி நடவடிக்கைகள் வரையிலும் செயற்பட்டு வருகின்றன.

ஆகவே இனப்பிரச்சினைக்கான தீர்வு தமிழ் பேசும் சமூகங்களின் அபிவிருத்தி வடக்கு-கிழக்கு பிரதேச மேம்பாடு என்றெல்லாம் பேசப்படும் போது இந்தத் தரப்புக்களும் தமக்குரிய இடத்தைக் கோரும். அத்துடன் பெரும்பாலான தரப்புகள் அரச தரப்பு நிலைப்பாட்டுடன் இருக்கும போது வெளித்தரப்புக்களின் பலமும் நியாயப்பாடுகளும் கேள்விக்குரியதாகவே காணப்படும்.

புலிகள் பலமான நிலையில் இருந்தபோது முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் வேறு. அவர்கள் வெளிப்படுத்திய நிலைப்பாடுகள் வேறு. தாம் தெரிவித்த நிலைப்பாட்டை நோக்கி நகரும் செயற்பாடு முறையைப் புலிகள் கொண்டிருந்தனர். ஆனால் புலிகள் முன் முன்வைத்த தனிநாட்டுக் கோரிக்கை அதற்கான போராட்டம் என்பன இன்று தோல்வி கண்டிருப்பதற்கு புலிகளால் முன்வைத்த உப கோரிக்கைகளே நிறைவேற்றப்படவில்லை.

உதாரணமாக பொருளாதாரத்தடை நீக்கம், கடல் வலயச் சட்டம், சில குறிப்பிட்ட பாதைகளை பொதுமக்களுக்கு திறந்து விடுதல். அரசியல் கைதிகளின் விடுதலை, சுனாமியினால் ஏற்பட்ட பாதிப்புக்களை மீள் கட்டமைப்புச் செய்வதற்கான ஒருங்கிணைவு போன்றவற்றிலேயே வெற்றியை காண முடியவில்லை புலிகளால்.

இவ்வாறான ஒரு பின்னணியில் எடு;த்த எடுப்பிலேயே சிங்களத் தரப்பை மீண்டும் கலவரமடைய வைக்கும் இனவாதிகளுக்கு அதிக வாய்ப்பைக் கொடுக்கும் கோரிக்கைகளை தமிழர்கள் முன் வைக்க முடியுமா? அதாவது சமஷ்டி, சுயாட்சி, வடக்கு கிழக்கு இணைப்பு என்ற வகையிலான கோரிக்கைகள் மீண்டும் இனவாதத்தை வளர்க்கவே வாய்ப்பளிக்கும். பிரச்சினையைத் தீர்க்கவோ தமிழ் பேசும் மக்களுக்கு நன்மை பயக்கவோ மாட்டாது.

இதேவேளை தமிழ் பேசும் மக்களுக்கு இவை அடிப்படையானவை. எந்த நிலையிலும் விட்டுக்கொடுக்க முடியாதவை. எனவே இந்த இரு யதார்த்த நிலைமையில் விடயங்களை புத்திபூர்வமாக கையாள்வது மட்டுமே சாத்தியமான வெற்றிகளைத் தருவதாக இருக்கும்.

இதற்கு மாற்றுச் சொற்கள் மாற்று அணுகுமுறைகளைப் பற்றி சிந்திப்பது அவசியம். அதாவது அடைய முடியாத மகாதேவிக்காக வெற்றி வெளியில் வாளை வீசுவதை விடவும் அடையக்கூடிய ஸ்ரீதேவியை வரவேற்பது கட்டாயமானது.

இன்னும் இனப்பிரச்சினையை நீடிக்க முடியாது. இன்றும் தமிழ் பேசும் மக்களின் துயரங்களும் அவலங்களும் நீடிக்கக் கூடாது. அவ்வாறு அவை நீடிக்குமானால் அதற்குப் பொறுப்பு தமிழ் பேசும் சமூகங்களை பிரதிநிதித்துவபடுத்தும் கட்சிகளும் அவற்றின் தலைமையாளர்களும் இவற்றை வழி மொழியும் ஊடகங்களுமே

Sunday, February 20, 2011

வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டோர் வேறு வழிகளில் பிரசாரம் செய்ய முடியாது: தேர்தல் ஆணையாளர்!

Sunday, February 20, 2011
எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலுக்கு வேட்பு மனுக்கள் சமர்ப்பித்து நிராகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள், உள்ளூராட்சித் தேர்தலுக்குப் போட்டியிடும் வேறு அரசியல் கட்சிகள் சுயேட்சைக் குழுக்கள் சார்பாகத் தமது பெயர்களைப் பதிலீடு செய்து தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்வதாகத் தெரிய வந்துள்ளது.

இது குறித்து தமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ள தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்கா இது குறித்து நேற்று முன்தினம் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

போட்டியிடுகின்ற ஏதேனும் ஒரு அரசியல் கட்சியின் அல்லது ஒரு சுயேட்சைக் குழுவின் வேட்பாளர்கள் சார்பாக உரிய தேர்தல் சின்னம் மற்றும் வேட்பாளர்களின் இலக்கங்களின் கீழ் போட்டியிட வேறெந்தவொரு நபருக்கும் உள்ளூர் அதிகார சபைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஏற்பாடுகள் செய்யப்படவில்லையென்றும் எவரேனும் ஒரு வேட்பாளரின் பெயரைப் பதிலீடு செய்ய முடியாதெனவும் அனைத்து வேட்பாளர்களுக்கும் வாக்காளர்களுக்கும் இத்தால் அறிவிக்கப்படுகின்றது.

உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலொன்றில் வாக்கெடுப்பு முடிவடைந்ததன் பின்னர், போட்டியிட்ட அரசியல் கட்சிகள் அல்லது சுயேட்சைக் குழுக்கள் என்பவற்றினால் பெற்றுக் கொள்ளப்பட்ட வாக்குகளுக்கு விகிதாசாரமாக குறித்த கட்சி அல்லது குழு உரித்தாக்கிக் கொண்டுள்ள உறுப்புரிமைகளின் எண்ணிக்கை அதி கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ள வேட்பாளர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும்.

எவரேனும் ஓர் உறுப்பினரின் மரணம், கேட்டு விலகல் மற்றும் வேறெனுமொரு காரணமொன்றினால் வெற்றிடம் ஏற்படுகின்ற போது அவ்வெற்றிடத்திற்குத் தகுதியான நபரொருவராக அக்கட்சியின் அல்லது அக்குழுவின் கீழ் போட்டியிட்டு கணிசமானளவு விருப்புக்களைப் பெற்றுள்ள வேட்பாளர்கள் உரிய கட்சிச் செயலாளரால் அல்லது சுயேட்சைக் குழுத் தலைவரால் குறிப்பாகப் பெயர் குறிப்பிடப்படுகின்ற வேட்பாளரே தேர்ந்தெடுக்கப்படுவார். இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகில் பயங்கரவாதத்தை தோற்கடிக்க பெளத்தநாடுகள் ஒன்றிணைய வேண்டும் - ஜனாதிபதி!

Sunday, February 20, 2011
போர்ப் பயம் மற்றும் பயங்கர வாதத்திலிருந்து விடுபட்ட ஒரு உலகத்தை தோற்றுவிப்பதற்கு சர்வதேச ரீதியாக உள்ள பெளத் தர்கள் மற்றும் பெளத்த நாடுகளும் ஒத்துழைப் புடன் செயற்பட வேண்டு மென ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ தெரிவித்துள்ளார்.

இது தற்காலத்திற்கு ஏற்ற அத்தியாவசிய தேவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நிப்போன் சிறிலங்கா கல்வி மற்றும் கலாசார கேந்திரத் தின் பொதுச் செயலாளர் சாஸ்திரபதி மீகஸ்தென்னே சந்திரசிறி தேரருக்கு, சிறி ஜெயவர்த்தனபுர பிரதான சங்க நாயகர் பதவி வழங்கப்பட்டதை முன் னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உப சார நிகழ்வில் கலந்துகொண்டு உரை யாற்றும் போதே ஜனாதிபதி இவ் வாறு தெரிவித்தார்.

இந்த உபசார நிகழ்வு அலரி மாளிகையில் நேற்று இடம்பெற் றுள்ளது. இதன்போது மீகஸ் தென்னே சந்திரசிறி தேரர், கல்வி மற்றும் கலாசார மேம்பாட்டுக்காக ஆற்றிய சேவை தொடர்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ பாராட்டு தெரிவித்துள்ளார்.

Sunday, February 13, 2011

யாழ்ப்பாண மீனவர்களின் பிரதிநிதிகளை இந்தியத் துணைத் தூதுவர் இ.மகாலிங்கம் கடந்த வெள்ளிக்கிழமை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்!

Sunday, February 13, 2011
யாழ்ப்பாண மீனவர்களின் பிரதிநிதிகளை இந்தியத் துணைத் தூதுவர் இ.மகாலிங்கம் கடந்த வெள்ளிக்கிழமை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளனத் தலைவர் சி.தவரட்ணம், வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத் தலைவர் அ.ஸ்ரனிஸ்லஸ் ஆகியோரை, யாழ் பலாலி வீதியில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது, இந்திய – இலங்கை மீனவர்களுக்கு இடையேயான பிரச்சினைகளுக்கு முடிவு காண்பதற்கு இரு நாட்டு மீனவர்களும் தமக்கிடையில் உறவைப் பேண வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இரு நாட்டு மீனவர்களும் தமக்கிடையே புரிந்துணர்வுகளை வளர்ப்பதன் மூலமும் தொடர்புகளை ஏற்படுத்துவதன் மூலமும், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியும் என்றும், இந்தியத் துணைத் தூதுவர் இ.மகாலிங்கம் தெரிவித்தார். இதேவேளை, யாழ்ப்பாண கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக யாழ் கடற்றொழிலாளர் சங்க சமாசத் தலைவர்கள் கூட்டாக இணைந்து, கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் ஆர். ரவீந்திரனிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அடிக்கடி குடாநாட்டுப் பரப்புக்குள் பிரவேசிக்கின்ற இந்திய றோலர்களாலும், குடாநாட்டில் குருநகர் உள்ளிட்ட சிறு பிரதேச கடற்றொழிலாளர்களால் மேற்கொள்ளப்படுகின்ற றோலர் தொழிலாலும், குடாநாட்டுக் கடல்வளம் அழிவதோடு தொழிலாளர்களின் வலைகளும் நாசமாக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

மன்னார் கடற்பகுதியில் எண்ணெய் அகழ்வை மேற்கொள்வதில் இந்தியா, சீனா, ரஸ்யா உள்ளிட்ட பல நாடுகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது

Sunday, February 13, 2011
மன்னார் கடற்பகுதியில் எண்ணெய் அகழ்வை மேற்கொள்வதில் இந்தியா, சீனா, ரஸ்யா உள்ளிட்ட பல நாடுகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மன்னார் கடற்படுக்கையில் எண்ணெய் மற்றும் எரிவாயு வளம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ள பகுதிகளை சிறிலங்கா அரசாங்கம் எட்டு பகுதிகளாகப் பிரித்துள்ளது. இவற்றில் இரண்டு பகுதிகள் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் வழங்கப்பட்டுள்ளன. முன்னதாக இந்திய அரச நிறுவனமான 'கெய்ன் இந்தியா' என்ற நிறுவனத்துக்கே இந்த பகுதி ஒன்று வழங்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் சீனாவுக்கும் ஒரு பகுதி வழங்கப்பட்டுள்ளதாக தற்போது தெரிவிக்கப்படுகின்றன

ஏனைய ஐந்து பகுதிகளையும் விரைவில் அனைத்துலக மட்டத்தில் ஏலத்தில் விற்பதற்கு இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இந்தியாவின் கெய்ன் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட பகுதியில் எதிர்வரும் ஜுலை மாதம் எண்ணெய் கிணறு துளையிடும் பணிகள் மேற்கொள்ளப்பபடவுள்ளன. இதற்கென ஆழ்துளையிடும் கப்பல் ஒன்று மன்னார் கடற்பகுதிக்கு கொண்டு வரப்பட்டு அது சார்ந்த ஆய்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கெய்ன் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது

தமிழக தேர்தல்களை இலக்கு வைத்து புலிகள் தாக்குதல் நடத்தக் கூடும்?.

Sunday, February 13, 2011
தமிழக சட்ட சபை தேர்தல்களை இலக்கு வைத்து புலிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என இந்திய மத்திய புலனாய்வுப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தின் அதி முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் பிரமுகர்களை இலக்கு வைத்து புலிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

புலிகளின் சில உறுப்பினர்கள் தமிழகத்திற்குள் ஊடுறுவியுள்ளதாக இந்திய உள்துறை அமைச்சு தமிழகத்தின் முக்கிய அரசியல்வாதிகளுக்கு எச்சரிக்கை அறிக்கை விடுத்துள்ளது.

ஊடுறுவிய புலி உறுப்பினர்கள் மறைவிடமொன்றில் பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகளில் குறித்த புலி உறுப்பினர்கள் ஆர்வம் காட்டி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

புலிகளின் நிதி மற்றும் விமானப்படைப் பிரிவைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் பலர் சென்னையில் தங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தற்கொலைப் போராளிகள் இலங்கை அகதிகள் தங்கியிருக்கும் முகாம்களில் ஊடுறுவியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

இதேவேளை, தமிழகத்தில் புலிகள் உறுப்பினர்கள் எவரும் கிடையாது என மாநில காவல்துறை ஆணையர் லத்திக்கா சரண் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், எச்சரிக்கை அறிக்கைகளுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Friday, February 4, 2011

நாட்டின் எதிர்காலப் பாதை தீர்மானம் மிக்கது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்!

Friday, February 4, 2011
முப்பது வருடகால பயங்கரவாதம் காரணமாக தேசத்திற்கு ஏற்பட்டுள்ள உயிரிழப்புக்களைத் தவிர ஏனைய அனைத்தையும் பெற்றுக் கொடுக்க வேண்டிய சவாலை எதிர்நோக்கியுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

சுதந்திரத்தை வென்றெடுப்பது இனமொன்றின் முன்பாகவுள்ள சவாலாக அமைந்துள்ளதாகவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

இத்தகு சுதந்திரத்தைப் பாதுகாத்துக் கொள்வது அதனைவிட பாரிய சவாலாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இன்று முற்பகல கதிர்காமத்தில் நடைபெற்ற 63 ஆவது சுதந்திரதினக் கொண்டாட்ட தேசிய நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இந்த விடயங்களைக் கூறினார்.

காலநிலை மாற்றம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களின் தரத்தை மேம்படுத்துவதற்கும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக இதன்போது ஜனாதிபதி தெரிவித்தார்.

சுதந்திரத்தினை பெற்றுக் கொள்வது என்பது நாட்டிற்கு மிகவும் சவாலான விடயமாகும் என்றும் பெற்றுக் கொண்ட சுதந்திரத்தினைப் பாதுகாப்பது அதனைவிட சவாலான விடயமாகும் எனவும் ஜனாதிபதி தனது உரையில் சுட்டிக்காட்டினார்.

இந்த சுதந்திரத்தினை அடைவதற்காகவும் அதனை எமது தாய் நாட்டில் பாதுகாப்பதற்காகவும் யாருமே முயற்சித்திராத பல முயற்சிகளை தாம் மேற்கொண்டதாக ஜனாதிபதி கூறினார்

நாட்டின் எதிர்காலப் பாதை தீர்மானம் மிக்கதாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கடந்த காலங்களில் கொழும்பில் மட்டுமே நடைபெற்ற தேசிய சுதந்திரதின நிகழ்வு தற்போது கிராமத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

எனவே சட்டத்திற்கு மதிப்பளிக்கும் சமூகத்தினை உருவாக்க வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்திய ஜனாதிபதி பிரபல்யமான தீர்மானங்களை எடுப்பதனால் மட்டும் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது என்றும் கூறினார்.

நாட்டிற்காக தீர்மானங்ளை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஜனநாயத்தினை போன்றே தாய்நாட்டின் ஒருமைப்பாட்டினையும் ஐக்கியத்தையும் பாதுகாக்க வேண்டியுள்ளதாக தமது சுதந்திரதின உரையில் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மெதிரிகிரிய கவுடுல்ல ஓயா நீர்த் தேக்கத்தின் வான்கதவுகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளன!

Friday, February 4, 2011
மெதிரிகிரிய கவுடுல்ல ஓயா நீர்த் தேக்கத்தின் வான்கதவுகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளதால் அண்மித்த பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக சுற்றுப்புறப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அந்த இடங்களில் இருந்து அகற்றப்பட்டு வருவதாக பொலநறுவை இடர்முகாமைத்துவ இணைப்பதிகாரி உபுல் நாணயக்கார குறிப்பிட்டார்.

மாவட்ட செயலாளரின் ஆலோசனைக்கமைய இராணுவம் மற்றும் பொலிஸாரின் ஒத்துழைப்புக்களும் இந்த நடவடிக்கைக்காக பெறப்பட்டுள்ளன.

சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு ஐந்தாம்கட்ட நிதியுதவி வழங்கப்படவுள்ளது!

Friday, February 4, 2011
இலங்கையின் பொருளாதாரதிற்கு ஒத்துழைப்பு வழங்கும் செயற்திட்டத்தின் கீழ் சர்வதேச நாணய நிதியத்தினால் ஐந்தாம் கட்ட நிதியுதவியை வழங்குவதற்கான நிறைவேற்றுக் குழுவின் அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் பிரகாரம் இலங்கைக்கு 216 தசம் 6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படவுள்ளன.

இதனுடன் சேர்த்து மொத்தமாக ஒன்று தசம் 516 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவி சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்படவுள்ளது.

இதற்கு முன்னர் வழங்கப்பட்ட நிதி இலங்கை அதிகாரிகளால் சிறந்த முறையில் பயன்படுத்தப்படாமையால் தொடர்ந்தும் நிதியுதவி வழங்குவதற்குத் தீர்மானித்ததாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழுவின் பிரதிப் பணிப்பாளரும் பதில் தலைவருமான நயோயுகி சினொகரா கூறினார்.

2009 ஆம் ஆண்டு ஜூலை 24 அம் திகதி இலங்கைக்கு இரண்டாயிரத்து 599 தசம் 4 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தினால் அனுமதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Followers

Blog Archive