Tuesday, June 29, 2010

தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்று ராஜபக்சே உறுதியளித்துள்ளார்: தங்கபாலு,

Tuesday, June 29, 2010

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வீ. தங்கபாலு, சத்தியமூர்த்தி பவனில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.


அப்போது அவர், ‘’மறைந்த காங்கிரஸ் தலைவர் மூப்பனாரின் சிலை கும்பகோணத்தில் நிறுவப்பட்டுள்ளது. இதனை ஜுலை மாதம் 3ம் தேதி மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி திறந்து வைக்கிறார்.

இந்த விழாவில் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்’’ என்று தெரிவித்தார்.

அவர் மேலும், ‘’கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டில் நான் 10 கோரிக்கைகளை முன் வைத்தேன். அவை மாநாட்டுத் தீர்மானங்களாக நிறைவேற்றப் பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

கட்சி பாகுபாடின்றி அனைத்து தமிழர்களும் மாநாட்டில் கலந்து கொண்டதும் மகிழ்ச்சிக்குரியது.

இலங்கைத் தமிழர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டுமென்று மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. மத்திய அரசும் இதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாங்களும் மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளோம்.

அண்மையில் இந்தியா வந்த இலங்கை அதிபர் ராஜபக்சேவும், தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்று உறுதியளித்துள்ளார்’’என்று தெரிவித்தார்

பொன்சேகாவின் இரண்டாவது இராணுவ நீதிமன்றுக்கு எதிரான ரிட் மனு நிராகரிப்பு,

Tuesday, June 29, 2010

இரண்டாவது இராணுவ நீதிமன்றத்துக்கு எதிராக ஜெனரல் சரத் பொன்சேகாவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த ரிட் மனுவினை மேன் முறையீட்டு நீதிமன்றம் இன்று நிராகரித்தது.

சட்ட விரோதமான முறையில் ஆயுதங்களைக் கொள்வனவு செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இராண்டாவது இராணுவ நீதிமன்றம் நிறுவப்பட்டு ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் குறித்த இரண்டாவது இராணுவ நீதிமன்றத்துக்கு எதிராக ஜெனரல் சரத் பொன்சேகாவினால் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுவினை இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட மேன் முறையீட்டு நீதிமன்றம், அதனை நிராகரித்தது.

முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவு தலைவருக்கு கடூழிய சிறைத்தண்டனை,

Tuesday, June 29, 2010

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பாதுகாப்பு பிரிவு தலைவரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் கருணாரத்னவுக்கு கண்டி மேல் நீதிமன்ற நீதிபதி பிரீத்தி பத்மன் சுரேஷன் நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனையுடன் 50 ஆயிரம் தண்டப்பணமும் விதித்து தீர்ப்பளித்தார்.

2001 நவம்பர் 21ஆம் திகதி ஹங்குராங்கேத்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குணரத்தன பண்டாரவை, பொரமதுல்ல மகா வித்தியாலய மைதானத்தில் வைத்து அச்சுறுத்தினார் என்ற குற்றச்சாட்டுக்காகவே அவருக்கு இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

Followers

Blog Archive