Wednesday, April 21, 2010

கிழக்குப் பல்கலை திருமலை மாணவரை வெளியேற உத்தரவு

Wednesday, 21 April 2010
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலைக் கட்டடத்திலிருந்து, மாணவரை இன்று மாலை 4 மணிக்கு முன்னர் வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக் கழக நிர்வாகத்துக்கும் மாணவருக்குமிடையில் ஏற்பட்டுள்ள பிரச்சனை காரணமாக இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
கட்டிடத்தில் நீர் வசதிகள் உட்பட பல வசதியீனங்கள் மத்தியில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டி ஏற்பட்டுள்ளதாக மாணவர் சங்கத்தின் தலைவர் புத்திக திசாநாயக்க தெரிவித்தார்.
பல்கலைக்கழக அதிகாரி ஒருவரிடம் இது தொடர்பாக வினவியபோது பல்கலைக்கழகத்தில் தண்ணீர்ப் பிரச்சனை இருப்பதை ஏற்றுக்கொண்டார்.
நேற்று ஏற்பட்ட அமைதியின்மையின்போது மாணவர்கள் பல்கலைக்கழக ஊழியர் ஒருவர்மீது தாக்குதல் நடத்தியதாகவும் அவர் சொன்னார்.

வவுனியாவில் சிறுமி கொலை

Wednesday, 21 April 2010
வவுனியா திருநாவற்குளம் பகுதியில் 9 வயதான சிறுமியொருத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
புகுந்து கொள்ளையிட்ட சிலர் இந்தக் கொலையைப் புரிந்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகப் பொலிசார் தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்

பொதுத் தேர்தலில் ஆளும் கட்சிக்கு 144 ஆசனங்கள்

Wednesday, 21 April 2010
நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தேசியப் பட்டியல் ஆசனங்களுடன் மொத்தம் 144 ஆசனங்களைப் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளது.

ரத்துச் செய்யப்பட்டிருந்த திருகோணமலை - கும்புறுப்பிட்டி, நாவலப்பிட்டி தேர்தல் பிரிவுகளின் முடிவுகள் நேற்று இரவும் இன்று காலையும் அறிவிக்கப்பட்டதையடுத்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நாடெங்கிலுமிருந்து மொத்தமாக 4,846,388 வாக்குகளைப் பெற்றுள்ளது.

அது இம்முறை வாக்காளர் அளித்த மொத்த வாக்குகளில் 60.33 சதவீதமாகும்.

இந்த வாக்குகளின் அடிப்படையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, வாக்களிப்பின் மூலம் 127 பாராளுமன்ற ஆசனங்களும், தேசியப் பட்டியலின் மூலம்17 ஆசனங்களுமாக மொத்தம் 144 ஆசனங்களைப் பெற்றுள்ளது.

2,557,057 வாக்குகளைப் பெற்ற ஐக்கிய தேசிய முன்னணிக்கு வாக்களிப்பின் மூலம் 51 ஆசனங்களும் தேசியப்பட்டியல் மூலம் 9 ஆசனங்களுமாக மொத்தம் 60 ஆசனங்கள் கிடைத்துள்ளன.

இவ்விரு கட்சிகளைத் தவிர ஆசனங்கள் அடிப்படையில் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சி 233,190 வாக்குகளைப் பெற்றுள்ளது.

வாக்களிப்பின் மூலம் அக்கட்சி 13 ஆசனங்களையும் தேசியப் பட்டியல் மூலம் ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளது.

ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பு மொத்தமாக 441,261 வாக்குகளைப் பெற்றிருந்தாலும் அக்கட்சிக்கு வாக்களிப்பின் மூலம் 5 ஆசனங்களும்தேசியப் பட்டியல் மூலம் 2 ஆசனங்களுமாக மொத்தம் 7 ஆசனங்களே கிடைத்துள்ளன.

கிளிநொச்சி கிழக்குக்கான மீள்குடியேற்றப் பணிகளை அடுத்துவரும் ஒரு வாரகாலத்தில் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட அரசாங்க அத

WEDNESDAY, APRIL 21, 2010
மோதல்களின்போது இடம்பெயர்ந்தவர்கள் இதுவரை கிளிநொச்சி மேற்கிலேயே குடியமர்த்தப்பட்டு வந்தனர். இந்நிலையில் முதற்தடவையாக எதிர்வரும் ஒரு வார காலப்பகுதியினுள் கிளிநொச்சி கிழக்கிலும் மீள்குடியேற்றப் பணிகள் ஆரம்பிக்கப்பட விருப்பதாக அவர் கூறினார். கிளிநொச்சி கிழக்கில் ஒரு மாத காலப்பகுதிக்குள் ஆகக்குறைந்தது 2,900 குடும்பங்களை மீளக் குடியேற்றும் வகையில் அதற்கான ஒழுங்குகளை அரசாங்க அதிபர் அலுவலகம் முன்னெடுத்து வருகிறது.
தற்போது அப்பகுதியில் திருவையாறு, கனகாம்பிகை குளம், ரத்தினபுரம் மற்றும் மருத நகர் ஆகிய இடங்களில் நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்டு மீள்குடியேற்றத்துக்கு ஏற்ற வகையில் தயார்படுத்தப்பட்டுள்ளது. வவுனியா நிவாரணக் கிராமத்தில் தங்கியிருக்கும் கிளிநொச்சி கிழக்கைச் சேர்ந்தவர்கள் தொடர்பான பெயர் விபரங்கள் தற்போது திரட்டப்பட்டு வருகின்றன. எதிர்வரும் ஒரு வார காலப்பகுயினுள் அவர்கள் தமது சொந்த இடங்களில் குடியேற்றப்படுவரெனக் கூறிய அரச அதிபர் ஏனைய பகுதிகளில் நிலக் கண்ணிவெடிகள் அகற்றும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்

வடக்கில் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு 10 கோடி ரூபா ஒதுக்கீடு!


WEDNESDAY, APRIL 21, 2010 இடம் பெயHந்த மக்கள் வடக்கில் மீன்பிடி நடவடிக்கைகளை ஆரம்பிக்க அரசாங்கம் 10 கோடி ரூபாவை ஒதுக்கியூள்ளதாக வட மாகாண ஆளுநா; மேஜா; ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்தாh;.
தெரிவூ செய்யப்பட்ட 50 மீனவா;களுக்கு இந்த நிதி வழங்கப்படவூள்ளதாகவூம் அவா; கூறினாh;.
முல்லைத்தீவூ மற்றும் கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு இடம்பெயா;ந்தவா;களுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படும் எனவூம் மீன்பிடிப் படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் இவா;களுக்கு இலகுக் கடன் அடிப்படையில் வழங்கப்படவூள்ளதாகவூம் அவா; மேலும் தெரிவித்தாh
WEDNESDAY, APRIL 21, 2010
திருகோணமலை தேர்தல் தொகுதியில் இலங்கை தமிழரசுக்கட்சி 20,578 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

சற்றுநேரத்துக்கு முன்னர் வெளியிடப்பட்ட முடிவின்படி திருகோணமலைத் தொகுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 10,961 வாக்குகளையும், ஐக்கிய தேசியக் கட்சி 8,718 வாக்குகளையும் பெற்றுள்ளன.

திருகோணமலைத் தொகுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 59,784 வாக்குகளையும் ஐக்கிய தேசியக் கட்சி 39,691 வாக்குகளையும் இலங்கைத் தமிழரசுக்கட்சி 33,268 வாக்குகளையும்பெற்றுள்ளன.

இதற்கிணங்க ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 2 ஆசனங்களையும் ஐக்கிய தேசியக் கட்சி 1 ஆசனத்தையும் இலங்கைத் தமிழரசுக் கட்சி 1 ஆசனத்தையும் பெற்றுள்ளதாக தகவல் திணைக்களத்தின் இணையத்தளம் தெரிவிக்கிறது..

பொன்சேகாவுக்கு எதிரான 2வது இராணுவ நீதிமன்றத்தின் விசாரணை மே 4க்கு ஒத்திவைப்பு

WEDNESDAY, APRIL 21, 2010
முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான இரண்டாவது இராணுவ நீதிமன்றத்தின் அடுத்த விசாரணை எதிர்வரும் மே மாதம் 4ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டு ள்ளது.
‘இரு தரப்பினரும் தமது வாதங்களை எழுத்து மூலம் எதிர்வரும் 30ம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு நேற்று கூடிய இராணுவ நீதிமன்றம் கோரியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.
மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் தலைமையில் கடற்படைத் தலைமையகத்தில் நேற்றைய தினமும் கூடிய 2வது இராணுவ நீதிமன்றம் விசாரணைகளை நடத்தியது.
காலை 11.00 மணியளவில் கூடிய இந்த நீதிமன்றத்தின் அமர்வு பிற்பகல், 1.30 மணிவரை நடைபெற்றுள்ளது.
இரண்டு இராணுவ நீதிமன்றத்தின் நீதவான் அட்வகேட்டாக செயற்படும் ரியர் அட்மிரல் டபிள்யூ. டபிள்யூ. ஜே. எஸ். பெர்னாண்டோவிடம் இரு தரப்பினரினதும் எழுத்து மூல வாதங்களைச் சமர்ப்பிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.
எதிர்வரும் மே மாதம் 4ம் திகதி பிற்பகல் 2.30 மணிக்கு அடுத்த நீதிமன்ற அமர்வு இடம்பெறவுள்ளது.
இராணுவத்திற்கான கொள்வனவு மற்றும் இராணுவ நடைமுறையை மீறியமை என்ற அடிப்படையில் நான்கு குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்தவே நேற்றைய தினமும் இந்த இராணுவ நீதிமன்றம் கூடியது.

ஏழாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு நாளை

WEDNESDAY, APRIL 21, 2010
இலங்கையின் ஏழாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு நாளை 22ஆம் திகதி நடைபெறவுள்ளது.
நாளை காலை 9.30க்கு பாராளுமன்ற அமர்வு ஆரம்பமாகிறது. சபையின் முதலாவது நடவடிக்கையாக சபாநாயகர் தெரிவு இடம்பெறும். சபாநாயகராகத் தெரிவு செய்யப்படும் நபர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட பின்னர் ஏழாவது பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட 225 உறுப்பினர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களாக சத்தியப்பிரமாணம் செய்து கொள்வர்.
இதனைத் தொடர்ந்து பிரதி சபாநாயகர் தெரிவு, குழுக்களின் பிரதித் தலைவர் தெரிவு, ஆளும் தரப்பு, எதிர்த்தரப்பு பிரதம கொரடா, அவைத்தலைவர் தெரிவுகள் இடம்பெறும். நாவலப்பிட்டி மற்றும் திருகோணமலை கும்புறுப்பிட்டி பகுதிகளில் நடைபெற்ற மீள் வாக்குப் பதிவுகளின் பின்னர் இன்று வெளியிடப்படும் தேர்தல் முடிவுகளின் பின்னர் ஆளும் தரப்பு, எதிர்த்தரப்பு, மற்றும் தேசியப் பட்டியல்கள் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ள 225 உறுப்பினர்களும் நாளை பாராளுமன்றம் செல்கின்றனர்.
இவர்களுள் சுமார் 70 பேர் வரையில் புது முகங்களாக உள்ளனர்.
இதுவரை கிடைத்துள்ள தேர்தல் முடிவுகளின்படி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப்பட்டியல் இன்று தேர்தல் ஆணையாளரிடம் கையளிக்கப்படவுள்ளது.
தமக்குக் கிடைத்த வாக்குகளின் படி கிடைக்கவுள்ள தேசியப்பட்டியல் தொடர்பாக இலங்கை தமிழரசு கட்சி முடிவு ஒன்றை எடுத்துள்ளதாகக் கட்சியின் தலைவர் இரா. சம்பந்தன் அறிவித்துள்ளார்.
எனினும், ஐ. தே. க. தேசியப் பட்டியல் விவகாரத்தில் இழுபறி நிலையிலேயே உள்ளது. அத்துடன் ஐ. தே. க.- ஜனநாயக தேசியக் கூட்டமைப்புக்கு இடையே எதிர்க்கட்சித் தலைமை பொறுப்பு ஏற்பது தொடர்பாக இழுபறி நிலை தொடர்கிறது. (ள)

Followers

Blog Archive