Wednesday, April 21, 2010

பொதுத் தேர்தலில் ஆளும் கட்சிக்கு 144 ஆசனங்கள்

Wednesday, 21 April 2010
நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தேசியப் பட்டியல் ஆசனங்களுடன் மொத்தம் 144 ஆசனங்களைப் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளது.

ரத்துச் செய்யப்பட்டிருந்த திருகோணமலை - கும்புறுப்பிட்டி, நாவலப்பிட்டி தேர்தல் பிரிவுகளின் முடிவுகள் நேற்று இரவும் இன்று காலையும் அறிவிக்கப்பட்டதையடுத்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நாடெங்கிலுமிருந்து மொத்தமாக 4,846,388 வாக்குகளைப் பெற்றுள்ளது.

அது இம்முறை வாக்காளர் அளித்த மொத்த வாக்குகளில் 60.33 சதவீதமாகும்.

இந்த வாக்குகளின் அடிப்படையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, வாக்களிப்பின் மூலம் 127 பாராளுமன்ற ஆசனங்களும், தேசியப் பட்டியலின் மூலம்17 ஆசனங்களுமாக மொத்தம் 144 ஆசனங்களைப் பெற்றுள்ளது.

2,557,057 வாக்குகளைப் பெற்ற ஐக்கிய தேசிய முன்னணிக்கு வாக்களிப்பின் மூலம் 51 ஆசனங்களும் தேசியப்பட்டியல் மூலம் 9 ஆசனங்களுமாக மொத்தம் 60 ஆசனங்கள் கிடைத்துள்ளன.

இவ்விரு கட்சிகளைத் தவிர ஆசனங்கள் அடிப்படையில் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சி 233,190 வாக்குகளைப் பெற்றுள்ளது.

வாக்களிப்பின் மூலம் அக்கட்சி 13 ஆசனங்களையும் தேசியப் பட்டியல் மூலம் ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளது.

ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பு மொத்தமாக 441,261 வாக்குகளைப் பெற்றிருந்தாலும் அக்கட்சிக்கு வாக்களிப்பின் மூலம் 5 ஆசனங்களும்தேசியப் பட்டியல் மூலம் 2 ஆசனங்களுமாக மொத்தம் 7 ஆசனங்களே கிடைத்துள்ளன.

No comments:

Post a Comment

Followers

Blog Archive