Sunday, October 17, 2010

எஸ்.எம். கிருஸ்ணா நவம்பரில் இலங்கை விஜயம்.

Sunday, October 17, 2010
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா தமது பதவியேற்றதன் பின்னரான முதலாவது இலங்கை விஜயத்தை எதிர்வரும் நொவெம்பர் மாதம் 25 ம் திகதி மேற்கொள்ளவுள்ளார்.

இந்த தகவலை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் வெளியிட்டுள்ளார்.

மூன்று நாட்கள் இலங்கையில் தங்கியிருக்கும் அவர் இலங்கை - இந்திய ஒருங்கிணைப்பு ஆணையக கூட்டத்தில் இந்திய தரப்பின் தலைவராக பங்கேற்கவுள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் இந்த விஜயத்தின் போது யுத்தத்தினால் பாதிப்படைந்த பிரதேசங்களுக்கு நேரடியாக செல்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிப்படைந்த பிரதேசங்களின் புனரமைப்பிற்கு பங்களிப்பை மேற்கொள்ள இந்தியா ஏற்கனவே உறுதி அளித்துள்ளது.

தென்னிந்திய கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 78 வயதான சோமன் ஷலி மல்லையா கிருஷ்ணா இந்தியாவின் அரசியலில் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவர் என்பதுடன் கடந்த 5 தசாப்தங்களாக பல்வேறு உயர் பதவிகளை வகித்துள்ளார்.

இவர் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கின் தலைமையிலான அமைச்சரவையில் இணைவதற்கு முன்னர், கர்நாடக மாநிலத்தின் தலைமை அமைச்சராக 1999 ம் ஆண்டுமுதல் 2004 ம் ஆண்டுவரை பதவி வகித்துள்ளார்.

அதற்கு முன்னர் மாகாராஷ்டிரா மாநிலத்தில் ஆளுநராக 2004 ம் ஆண்டுமுதல் 2008 ம் ஆண்டுவரை பணியாற்றியுள்ளார்.

இந்திய தகவல் தொழினுட்ப துறையின் முக்கிய பங்காற்றும் பங்களுரின் நவீன தந்தையென இவர் கல்விமான்களினால் புகழாரம் சூட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்ளுராட்சிசபை தேர்தல் வேட்பாளர் தெரிவுகளை ஆரம்பிக்கவுள்ளதாக அரசாங்கம் அறிவிப்பு.

Sunday, October 17, 2010
உள்ளுராட்சி சபை திருத்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர் தமது வேட்பாளர் தெரிவுகளை ஆரம்பிக்கவுள்ளதாக ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தெரிவி;த்துள்ளது.

இந்த தகவலை அமைச்சர் ராஜித்த சேனாரட்ன எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார்;.

இதனிடையே, மாகாண சபைகளின் அனுமதிகள் கிடைத்தவுடன் திருத்த சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளதாக அவர் குறிப்பி;ட்டார்.

அதனைத் தொடர்ந்து, பரிந்துரைகளுக்கு அமைய அந்தந்த தொகுதிகளுகளின் மக்களுக்கு சேவையாற்றக் கூடிய பிரதிநிதிகளை தெரிவு செய்யவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, ஐக்கிய தேசிய கட்சி உள்ளுராட்சி சபை தேர்தல்களுக்கான வேட்பாளர் தெரிவுகளை நேற்று ஆரம்பித்துள்ளது.

தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ள உள்ளுராட்சி திருத்த சட்டமூலத்திற்கு ஏற்ற வகையில் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்யவுள்ளதாக கட்சியின் ஊடகப் பேச்சாளர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

Followers

Blog Archive