Tuesday, September 27, 2011தன் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கு விசாரணையின் போது சமர்ப்பிப்பதற்கு தன்னிடம் உரிய ஆவணங்கள் உள்ளதாக சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயோர்க் நீதிமன்றத்தில் என்மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கின் பின்னணியாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.ருத்திரகுமாரனே உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் கொள்வனவு செய்தது தொடர்பில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் மற்றும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துக்கும் இருந்த தொடர்புகள் குறித்தான ஆவணங்கள் வெள்ளிமுள்ளிவாய்க்கால் பகுதியில் கிடைத்துள்ளது. விசாரணையின் போது இந்த ஆவணங்களை சமர்ப்பிக்கவுள்ளேன்.
இதேவேளை, தான் வீட்டில் இல்லாத நேரமே தனக்கு நீதிமன்ற அழைப்பாணை கிடைக்கப்பெற்றதாகவும் இது தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு தெரியப்படுத் தியுள்ள தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
