Thursday, September 2, 2010

சீனாக் குழுவினர் ஜனாதிபதி சந்திப்பு.

September 3, 2010
சீனாவில் இருந்து உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை இலங்கைக்கு மேற்கொண்டிருக்கும் உயர்மட்டக் குழுவினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் இன்று சந்தித்து உரையாடினர். இவர்கள் யுனான் மாகாணத்தில் இருந்து வருகை தந்துள்ளார்கள்.

இவ்வுயர் மட்டக் குழுவுக்கு யுனான் மாகாண ஆளுநர் Qin Guangong தலைமை தாங்குகின்றார். இவர்களுடன் சீனத் தூதுவரும் ஜனாதிபதியை வந்து சந்தித்தார். இலங்கைத் தரப்பில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உட்பட அமைச்சுக்களின் செயலாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்

முள்ளிகுளம் பிரதேசத்தில் தலைமைக் காரியாலயம்.

September 3, 2010
கடற்படையினரின் வடமேல் பிராந்திய தலைமைக் காரியாலயம் இன்று மன்னார் மாவட்டத்தின் முள்ளிகுளம் பிரதேசத்தில் பாதுகாப்பு அமைச்சுச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவால் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இத்தலைமைக் காரியாலயம் இது வரை காலமும் புத்தளத்தில் இருந்து வந்த நிலையில் இப்புதிய இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் திஸாரா சமரசிங்கவின் அழைப்பின்பேரில் பாதுகாப்புச் செயலாளர் இங்கு வந்து புதிய தலைமைக் காரியாலயத்தைப் பார்வையிட்டு திறந்து வைத்தார்.

இந்த இட மாற்றம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று கடற்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முப்படைகளைச் சேர்ந்த உயரதிகாரிகள், சர்வமத குருமார் உட்பட அரச உயர் மட்டத்தினர் பலரும் வைபவத்தில் கலந்து கொண்டார்கள்.

பதில் பிரதம நீதிபதியாக ஷிரானி பதவிப் பிரமாணம்.

September 3, 2010

நீதிபதி டாக்டர் ஷிரானி பண்டாரநாயக்க, பதில் பிரதம நீதிபதியாக இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

இது தொடர்பான நிகழ்வு இன்று ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. நிகழ்வில் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்கவும் கலந்து கொண்டார்.

அம்பாந்தோட்ட பட்ட அத்த விவசார விஞ்ஞாக தொழினுட்ப பூங்காவில் ஜனாதிபதியினால் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

3/09/2010
இளைஞர்கள் மத்தியில் விவசாயம் தொடர்பில் ஆர்வத்தை ஊட்டும் தொளிப் பெருளிலான விவசாய வாரமும், கண்காட்சியும், இன்று ஆரம்பிக் கப்பட்டுள்ளது.

இது அம்பாந்தோட்ட பட்ட அத்த விவசார விஞ்ஞாக தொழினுட்ப பூங்காவில் ஜனாதிபதியினால் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

விடுதலை பெற்ற ஒரு நாட்டை தன்னிறைவு பெற்றதாக மாற்றுவது அரசாங்கத்தின் பொறுப்பு என இதன்போது ஜனாதிபதி குறிப்பிட்டார்.

உள்ளுர் விவசாயிகளை பலப்படுத்துவதற்கு, விதைகளை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதன் அவசியம் குறித்தும் அவர் அதன் போது வலியுறுத்தினார். விதைகளை போதியளவு பணம் இல்லை எனக்கூறி அதனை விடமுடியாது . பணம் இல்லை என்பதை காரணமாக கொண்டு அபிவிருத்தியை பிற்போடுவது கூடாது. நாட்டில் யுத்தம் இருந்த சந்தர்ப்பத்திலும் பணம் இல்லை என்றே கூறப்பட்டது அதன் பொருட்டு உடன்படிக்கையும் செய்துக்கொள்ளப்பட்டது. எனினும் தமது அரசாங்கம் பணம் இல்லை என்பதை கருத்திற்கொள்ளாது யுத்தத்தை முடித்து வைத்ததாக ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்த விவசாய வாரமும் கண்காட்சியும் எதிர்வரும் 5 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது.

இதனிடையே, இந்த அம்பாந்தோட்ட பட்ட அத்த விவசாய விஞ்ஞான தொழினுட்ப பூங்கா இன்று முதல் ஷமல் ராஜபக்ஸ விவசாய விஞ்ஞான தொழினுட்ப பூங்கா என பெயர் மாற்றம் பெற்றுள்ளது.

Followers

Blog Archive