Wednesday, March 9, 2011

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இன்று மன்னாரில் ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ.

Wednesday, March 09, 2011
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இன்று மன்னாரில் ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ கலந்துகொண்டார்.

மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் பொதுக்கூட்டத்தில் வடமாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திர சிறி, அமைச்சர்கலான றிஸாட் பதியுதீன், மில்றோய் பேணாண்டோ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கலான உவைஸ் பாரூக், உள்ளிட்டோரும்; கலந்து கொண்டனர்.

சகல அரச திணைக்கலங்களில் இருந்தும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மன்னார் மாவட்டத்தில் உள்ளுராட்சி சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களும் கலந்து கொண்டனர்.

சர்வதேச பெண்கள் தினம்:சவால்களை எதிர்கொண்டு முன் செல்ல சில கருத்துக்கள் - சிறிதரன். (பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப்).

Wednesday, March 09, 2011
சர்வதேச பெண்கள் தினம் உலகளாவிய அளவில் நினைவு கூரப்படும் நிலையில் இலங்கையில் பெண்கள் நிலையையும் ,பால் சமத்துவமின்மையையும் எண்ணிப்பாhர்க்க வேண்டும். இலங்கை யுத்தத்தில் மரணமடைந்தவர்கள் போக வடக்கு கிழக்கில் பெரும்பான்மையான குடும்பங்கள் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களாகவே இருக்கின்றன.

இவர்கள் பல்வேறு சவால்களை எதிர் நோக்குகிறார்கள் .பாலியல் தக்குதல்கள் வீட்டிலும் வெளியிலும் இவற்றையும் தாண்டி வீட்டின் பொருளாதாரம், பிள்ளைகளின் கல்வி இன்னோரன்ன விடயங்களுக்கான தேவைகளுக்காககவும் அலைய வேண்டியருக்கிறது

சிறையிலுள்ள பிள்ளைகளின் விடுலைக்காக சிறப்பு முகாகளுக்கும் சிறைகளுக்கும் இவர்களே பெரும்பாலும் செல்ல வேண்டியிருக்கிறது. வீட்டைப்புனரமைப்பது ,நிவாரணம் மற்றும் கடன்களுக்காக இவர்களே அலைகிறார்கள். குடும்பத்திற்கு வருமானத்தைப் பெறுவதற்காக அன்றாட உழைப்பிலும் இவர்களே ஈடுபட வேண்டியிருக்கிறது.

கடந்த 30 வருட வன்முறை மயப்பட்ட சூழல் ,அதற்குப் பிந்திய சூழலில் கூடுதலாகப் பாதிக்கபட்டவர்கள் பெண்களே. வீடுகள் தனிமைத்துவங்கள் இழக்கப்பட்டதால் அசௌகரியங்களை எதிர்நோக்குபவர்கள் பெண்களே.

தனிமை, சமூகப்பாதுகாப்பின்மை என்பன எமது சமூகத்தில் மிக மோசமான பிரச்சனைகளாகும். மத்திய கிழக்கிலும், மேற்காசியாவிலும் வேலைக்குச் சென்ற பெண்கள் அனுபவிக்கும் துன்பங்கள் நாளாந்தச் செய்திகள் ஆகிவிட்டன.

சவுதி அரேபியாவில் மரணதண்டனையை எதிர் நோக்கி நிற்கும் மூதூர் சபீனா நாபிக் சிறுமியாக கைதுசெய்யப்பட்டு செய்யாத குற்றத்திற்கு மரணதண்டனை விதிக்கப்பட்டு பல வருடங்களாக சிறை வாசம் அனுபவித்து வருகிறார். சவுதி அரேபியாவின் மானிடதர்மங்களற்ற அந்தக நீதிதிதுறையோ, அரசோ உலக மனிதாபிமானக் குரலுக்கோ அல்லது பகுத்தறிவு, உண்மைக்கோ செவிசாய்ப்பதாக இல்லை. மாத்தறையைச் சேர்ந்த இன்னொரு பெண்ணுகோ சிலுவை சுமந்த யேசுவிற்கு நடந்த கொடுமைகளை விட அதிகமாக கொடுமைகள் நடந்துள்ளன.

அவருக்கு வேலை வழங்கியவன் அவரின் உடல் முழுவதும் இரும்பாணிகளைச் செலுத்தியுள்ளான். பாலியல் வன்முறை சித்திரவதைகளுக்குள்ளான பெண்களும், பலசநதர்ப்பங்களில் கொல்லபட்ட பெண்களின் சவப்பெட்டிகளும் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வந்திறங்குவது சர்வ சாதாரணமாகி வருகிறது. அரசியல் சண்டியர்கள் பெண்கள் மீது நடத்தும் தூற்றுதல் அவதூறுகள் வன்முறைகள் என்பவற்றுக்கும் குறைவில்லை.

ஊடகத்துறையைச் சேர்ந்த பெண் ஒருவர் மீது நடத்தப்பட்ட மோசமான தாக்குதல் பலருக்கு ஞாபகமிருக்கும். அரசியலிலும் சினிமாவிலும் பிரபலமான பெண் ஒருவர் அண்மையில் உயிராத்தை விளைவிக்கும் விதமாக அவரின் தலையில் அவரது கணவரால் தாக்கப்பட்டுள்ளார்.

யுத்த சூழ்நிலையில் திருமணம் செய்ய நிர்பந்திக்கபட்டவர்கள் பலாத்காரமாக பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டவர்கள் உயிரிழந்தவர்கள் பெரும்பாலும் பெண்களும் சிறுமிகளுமாகவே காணப்படுகின்றனர். சில சிறுமிகள் தமது அவலத்தைப்பற்றி பங்கர்கள் காப்பரண்களிலிருந்து எழுதிய கடிதங்கள் மன அதிர்ச்சியை ஏற்படுத்துபவை.

1930 களில் சர்வசன வாக்குரிமை வழங்கப்பெற்ற நாடாக இலங்கை இருப்பினும் தீர்மானம் எடுப்பதற்கான நிலைகளில் அரசியலில் பெண்களின் பங்காற்றல் குறைவாகவே இருக்கிறது. வவுனியா யாழப்;பாணம் கிளிநொச்சி மாவட்டசெயலாளர்களாக பெண்களே இருக்கிறார்கள்

எனினும், இலங்கையில் ஒட்டு மொத்த சமூக நிலைகளிலும் ஆணாதிக்க நிலைகளில் பெண்களுக்கெதிரான வன்முறைகளில் பெரிய மாற்றங்கள் எதுவும் ஏற்பட்டு விடவில்லை. பின்நோக்கிய நிலையே காணப்படுகிறது. வன்முறைகள் அதிகரித்துள்ளன.

யுத்தம் தேசிய விடுதலை இயக்கம் என்பவற்றால் பெண்களின் நிலையில் மாறுதல் ஏதும் ஏற்பட்டு விடவில்லை. தேசிய விடுதலை இயக்கம் பாசிசமாக உருத்திரிபடைந்தபோது ஜனநாயக இயத்தினுள் செயற்பட்ட பெண்கள் கொல்லபட்டதோடு தெருவுக்கு விரட்டப்பட்டார்கள். அவர்கள் கால வெளியில் உருவானகறுப்பு வெற்றிடத்தில் இழுக்கபட்டு உருவழிந்து போனார்கள.; தனது யுத்த யந்திரத்தேவைக்காக பாசிசம் பெண்களை தற்கொலை குண்டுதாரிகளாகவும் ,துப்பாகிதாரிகளாகவும் அணிதிரட்டியது.. பல சந்தர்பங்களில் பலவந்தம் செய்தது- ஈவிரக்கமற்ற கட்டாய ஆட் சேர்ப்பு முறையாக. இதன் விபரித விளைவு பேரினவாதம் பாலியல் பலாத்காரம், ஆட்கடத்தல் உட்பட பெண்ளுக்கெதிரான வன்முறை கட்டவிழ்த்து விட்டது.

தவிர எமது சமூகத்தில நிலவும் தீண்டாமைக் கொடுமைகளுடன் குறிப்பாக கிராமியத்தொழிலாளர்கள் என்ற அடிப்படையில் பேரினவாத ஒடுக்குமுறைகளுடன் மேலதிக சுமைகளைச் சுமந்தார்கள். யுத்தத்திலும் இந்த விழிம்பு நிலை பெண்களே பெருமளவுக்கு ஈடுபடுத்தப்பட்டார்கள். பெருமளவற்கு பிள்ளைகளின் இழப்பையும், வன்முறையையும் சந்தித்தார்கள். இது முழு வடக்குகிழக்கிற்கும் பொதுவானது.

தவிர எல்லையோரக்கிராமங்களில் வாழ்ந்த பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் அடிக்கடி வன்முறை தாக்குதல்களை எதிர் கொண்டார்கள். பாலியல் துன்புறுத்தல்களுக்குள்ளானார்கள்;. இவர்கள் அனுபவித்த துன்பங்கள் பற்றிய யதார்த்த சினிமாக்கள் வெளிவந்துள்ளன.

காணாமல் போதல் யுத்தத்தில் பிள்ளைகளைப் பலிகொடுத்தல் என்பன தமிழ் சிங்கள சமூங்களிடையே பாரிய அளவில் நடந்துள்ளது. உடுத்த துணியுடன் விரட்டப்பட்ட வடபகுதி முஸ்லீம் பெண்கள் புத்தளத்திலும் அனுரதபுரம் போன்ற பகுதிகளிலும் அனுபவித்த துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.

இந்த 3 வருடங்களும் நிகழ்ந்த இடம்பெயர்வு வங்க கடலை கடந்து அகதிகளாகச் செல்கையில் இறந்தவர்கள் அதிகமாக பெணகளும் குழந்தைகளுமே. சுனாமி அனர்த்தம், கிழக்கு- தெற்கு- வடக்கு கரையோரங்களிலும் இந்தோனேசியா இந்தியா, தாய்லாந்து போன்ற நாடுகளிலும் பெருமளவிற்கு பெண்களையே காவு கொண்டது. எமது கரையோரச்சமூகங்களில் பாரிய அளவில் வெற்றிடம் ஒன்றைத்தோற்றுவித்துள்ளது.

மூதூர் மட்டக்களப்பு வன்னி இடம்பெயர்வுகளில் அகதி முகாம்களில் பெண்கள் அனுபவித்த துன்பங்கள் அளிவிடமுடியாதவை.

அவர்கள் யுத்தத்;தின் போதும் இடம்பெயர்வுகளின்போதும், சிறை சித்திரவதை முகாம்களிலும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத துன்பங்களை அனுபவித்தார்கள்.

யுத்தம் ஓய்ந்த பின்னர் புதிய வடிவங்களில் பெண்கள் மீதான வன்முறைகள் உருவாகியிருக்கின்றன. வன்முறையின் சாயல்கள் எமது சமூகத்திலிருந்து ஓய்ந்துவிடவில்லை. தற்போது நிகழும் ஆட்கடத்தல் காணாமல் போதலிலும் பெண்களே பெருமளவில் இலக்காகிறாhர்கள.;

திருமணம் என்பது மனிதர்களின் வாழ்க்கையில் நிகழும் முக்கிய நிகழ்ச்சி .ஆனால் ஆணாதிக்க நிலையை வலியுறுத்தும் சடங்காசாரங்கள் இன்று பெரும் எடுப்பிலேயே மேற்கொள்ளப்படுகின்றன.

பூப்புனித நீராட்டு விழா என்று சிறப்பு அழைப்பிதழ்கள் அச்சடிக்கபடுகின்றன. மனித உடலில் நிகழும் இயற்கை மாறுதல்களுக்கு விழா எடுப்பவர்கள் உலகத்தமிழர். கேட்க சற்று வெட்கமாகத்தான் இருக்கிறது.

எமது சமூகத்தின் தாரதம்மியத்தை உணர்த்துவதாக இவை அமைந்துள்ளன. ஒரு கடைந்தெடுத்த பிற்போக்கு உணர்வுநிலைமட்டம் காணப்படுகிறது.

எட்டுத்திக்கும் சென்றிருந்தாலும் பாமரராய் ,விலங்குகளாய் வாழ்கிறோம். கல்வி. தொழில் ஆகிய விடயங்களில் ஆண்களை விஞ்சிய நிலையில் பெண்கள் இருந்தாலும் சடங்காசாரங்கள் சம்பிருதாயங்கள் அவர்கள் மீது அடிமை உடைமைப்பிரகடனம் செய்கின்றன. வாழ்க்கையின் ஏணிப்படிகளில் அவர்கள் மேலே வருவதற்கு அவர்கள் பல சவால்களைச் சந்திக்கவேண்டியருக்கிறது.

தகவல்தொழில் நுட்பம் மல்டி மீடியாக்கள் போன்ற வசதிகள் பெண்களை ஆபாசமாகச் சித்தரிப்பதிலும் பிளக் மெயில்;;; செய்வதிலும் பயன் படுகின்றன. குறிப்பாக தமிழ் சூழலில் மெகா தொடர்களும், சினிமாவும் பெருமளவுக்கு பெண்களுக்கெதிரான வன்முறைகளை நியாயப்படுத்துகின்றன. அடங்கிப்போதல் .பொறுமை என்ற மந்திர உச்சாடனங்களைச் செய்கின்றன. எத்தகைய வன்முறைகளையெல்லாம் பெண்களுக் கெதிராக பிரயோகிக்கலாம் என்ற புதிய புதிய கண்டு பிடிப்புக்களை எல்லாம் செய்கின்றன.. பெண்களைப்பற்றிய ஒரு பாசிச மன நிலையுடன் இவை செயற்படுகின்றன. ஆனால் தமிழ் பெண்களில் ஒரு பகுதியினர்; உலகளாவிய அளவில் இந்த மெகாத்தொடர் போதையில் கிறங்கி கிடக்கிறார்கள்.

ஒருசில விதிவிலக்குள் இருக்கின்றன. அங்காடித்தெரு திரைப்படம் நகர்ப்புற ஜவுளிக்கடைகளில் வேலை செய்யும் பெண்கள் அனுபவிக்கும் துன்பங்கள் பற்றிய அதிர்ச்சியான செய்தியை எமக்களிக்கிறது. பெரும்பாலானவை அடி. உதை, படுகொலை, சகித்துப்போ என்பது போல்தான் இருக்கின்றன. பாதகம் செய்பவரை கண்டால் நீ பயங்கொள்ளலாகாது பாப்பா மோதி மிதித்துவிடு பாப்பா அவர் முகத்தில் உமிழந்து விடு பாப்பா என்பது போல் விடயங்கள் இல்லை.

யதார்தத்தை பிரதிபலிப்பதாகக் கூறி இந்த தொடர் தயாரிப்பாளர்கள் முடிவற்ற வன்முறையை சித்தரிக்கிறார்கள். இதுவே சமூக நியதி என மனதில் பதிய வைக்கப்படுகிறது. பெண்களைப்போகப் பொருளாக சித்தரிக்கும் போக்கு உலகமயமாக்கலுடன் முன்னெப்போதும் கண்டிராத அளவிற்கு மோசமடைந்துள்ளது

தமிழில் மட்டரகமான ஆண் மேலாதிக்கம் கொண்ட இரட்டை அர்த்தப்பாடல்கள் ,குரூர நகைச்சுவைகள் அதிகரித்துள்ளன. உயிரியல் தொழில் நுட்பத்தை வைத்து பிறக்கும் குழந்தை ஆணா பெண்ணா என கருவிலேயே தீர்மானித்து அழித்து விடும் போக்குள் அதிகரித்துள்ளன.

ராஜம் கிருஸ்ணனின் மண்ணகத்துப் பூந்தளிர்கள் நாவலில் வரும் கள்ளிப்பால் பருக்குவது, மூக்கினுள் நெல்மணியைச் செலுத்துல் எல்லாம் மாறி பெண் குழந்தைகளை கருவறுக்கும் செயற்பாடுகள அதிகரித்துள்ளன. தமிழ் சமூகத்தில் பெண்களின் பண்பாட்டு புரட்சி ஒன்று தேவைப்படுகிறது. அதுவும் ஒரு சமூக இயக்கமாக முன்னெடுத்துச் செல்லப்படவேண்டும்.

இந்த விடயத்தல் தமிழர்கள் மத்தியில் நிலவும் ஆதிக்க கருத்துக்கள் மிகவும் கயமைத்தனம் நிறைந்ததும் நயவஞ்சகத்தனமானது என்பதிலும் எதுவித ஐயமும் இல்லை. ஆதனால் தான் வரலாற்று வெளிப்பாடாக தந்தை பெரியார் தோன்றினார். தந்தை பெரியாரின் முனைப்பான போராட்டம் சாதியமைப்பு பெண்ணடிமைத்தனம் இவற்றுக்கெதிராகவே.

திராவிடப்பேரியக்கம் இருந்த சூழலில் தமிழகத்தில் ஜனரஞ்சக சினிமாவில் எங்காவது பெரியாரின் சுயமரியாதை திருமணத்தைப் பார்த்திருக்கி;றீர்களா? பட்டிதொட்டியெல்லாம் பெரியார் இயக்கம் நடத்தியே அதனைச்செய்யமுடியவில்லையே.

பெண்கள் பலதுறைகளில் சவால்களுக்கு மத்தியில் முன்னேறி இருந்தாலும் .பெண்கள் இரண்டாம் பட்சமானவர்கள் அவர்களை இரட்சிக்க கதாநாயகர்கள் தேவை என்றெல்லவா வலியுறுத்தப்படுகிறது. பெண்களின் சுதந்திரதிற்கான இயக்கம் ஒரு தொடர் போராட்டமாகும்.

பொருளாதார சமத்தும் கல்வி என்பன இங்கு முக்கியமான விடயங்கள். இன்று பெருமளவிற்கு ஊதியமில்லாத உழைப்பாளர்கள் கீழைத்தேசத்துப் பெண்களே. குடும்ப உழைப்பிற்காக பெண்களுக்கு எதுவும் தரப்படுவதில்லை.வன்முறையற்ற சமூக ச+ழல், சட்டங்களில் பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கெதிராக மாற்றம் கொண்டு வருதல், மரபுரீதியான சம்பிருதாயங்கள் தழைகளிலிருந்து விடுதலை சமூகப்பாதுகாப்பு கல்வி உத்தரவாதம் என்பன இங்கு முக்கியமான விடயங்கள்.

இந்தியாவில் பெண்களுக்குமேல் ஆண்கள் புரியும் அத்துமீறல்களுக்கெதிராக அண்மையி;ல் கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. மகளிர் காவல்நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.இலங்கையிலும் இத்தகைய அணுகுமுறைகள் தேவைப்படுகின்றன.

தமிழ் அரசியல் அரங்கைப்பொறுத்தவரை அதில் எத்தனை பெண்கள் ஈடுபட்டுள்ளார்கள் என்பதை வைத்தே தமிழ் அரசியலின் தார்மீகத்தனத்தை நாம் புரிந்து கொள்ளமுடியும்

மிகவும் வளாச்சியடைந்ததாகச் சொல்லப்படும் நாடுகளில் கூட மிகவும் விகாரமான முறையில் பெண்களி மீது வன்முறை பிரயோகிக்கப்படுவதை நாம் பார்க்க முடியும். அமெரிக்காவில் பாடசாலை சிறுமியை 20 வருடங்களுக்கு முன்னர் கடத்தி பாலியல் பலாத்காரம் புரிந்ததையும் ,இவ்வளவு காலமும் அச்சிறுமியை வீட்டினுள்ளே சிறைவைத்திருந்ததையும,; பொலிசார் அண்மையில் தான் அப்பெண்ணை மீட்ட செய்தியையும் இது போன்ற பல வக்கிர குரூர வன்முறைகளையும் கேள்விப்பட்டிருக்றோம்.

மத ஒழுக்கத்தின பெயரில் மரபுகளின் பெயரில் ஒழுக்கத்ததை மீறியதாக பெண்கள் மீது பலர் பலாத்காரம் புரிந்தசெய்திகளையும் நிர்வாண ஊர்வலங்கள் நடத்தபட்ட செய்தியையும் நாம் அடிக்கடி கேளிவிப்படுகிறோம் இவ்வாறு பாதிக்கப்படும் பெண்களுக் உடனடியாக சட்டம் ஆதரவாக இல்லை சமூகமும் ஆதரவாக இல்லை. பாகிஸ்தானில் இத்தகைய சம்பவங்களை அடிக்கடி ளே;விப்படுகிறோம்.

அன்றாடம் லட்சக்கணக்கான பெண்கள் உலகளாவிய அளவில் துன்புறுத்ல்களுக்குளாகிறார்கள. அங்சாங்சுஜி மியன்மார் மக்களின் மனங்கலந்த ஜனநாயக இயக்கத்தின் தலைவி. மியன்மாரின் இராணுவ ஆட்சியாளர்கள் உலகமே எதிர்த்துநின்றபோதும் அவருக்கெதிரான அச்சுறுத்தல்களை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

எனினும் ஒருகாலத்தில் இடதுசாரி இயக்கத்தின் கெரில்லாப் போராட்டக்காரர் இராணுவ சிறைகளில் சித்திரவதைகளை அனுபவித்தவர் டில்மா பிறேசிலின் ஜனாதிபதியாகியிருக்கிறார்.

ஒடுக்கபட்ட சமூகப் பின் புலத்தில் வந்த மீரா குமார் இந்தியாவின் சபாநாயகர் ஆகியிருக்கிறார். ஆனால் உலகில் பால் நிலை சமத்துவம் வேண்டி நெடுந்தூரப் பயணமொன்றை மேற்கொள்ளவேண்டியருக்கிறது.

பெண்களுக்கு 30 வீத நாடாளுமனற் ஒதுகீடு மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இலங்கையில் 2வீதமான பெண்கள கூட பாராளுமன்றத்தில் இல்லை என்பது வேறு கதை. சமூக பொளாதார வாழ்விலும் அரசியலிலும் சம பங்குதாரர்கள் ஆவதற்கான அடிப்படை மாற்றங்கள் நிகழ்ந்தாகவேண்டும். ஆபிரிக்க ,ஆரேபிய நாடுகளில் நிகழும் கிளர்ச்சிகளில் குறிப்பாக எகிப்தில் நடத்தப்பட்ட ஜனநாயகப் பேரியக்கத்தில் பெண்களின் பங்கு முக்கியமானது.

அந்த எழுச்சிகள் மத அடிப்படைவாதத்தை கொண்டிருக்கவில்லை.பெங்களுரில் இரவு உணவு விடுதிக்குச் சென்ற பெண்கள் தாக்கப்பட்டதை கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த காட்டுமிராண்டித்தனத்தை இந்தியாவின் அனைத்து ஊடகங்களுமே கண்டித்தன.

பிரேமனந்தா வகையறா போலிச்சாமியார்களின் பெண்களை இழிவு படுத்தும் சித்து விளையாட்டுகளுக்கெதிராகவும் பாரிய இயக்கங்கள் நடத்தப்படுகின்றன.

இலங்கையின் ஆடைத்தொழில் துறையில் ஈடுபட்டிருக்கும் குறைந்தகூலி பெறும் பெண்தொழிலாளர் பட்டாளத்தின் நிலையும் ,மலையகத் தோட்டத் தொழிலாள பெண்களின் நிலையும் இங்கு குறிப்பிட்டேயாகவேண்டும். இவர்களின் வாழ்க்கை தரம் இலங்கையின் சராசரி வாழ்க்கை தரத்தை விட கீழானது. வீடு, தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் கல்வியின்மை, போசாக்கன்மை என்பன இங்கு பாரிய பிரச்னைகள்

தொழிற்சாலைகளில் வங்கிகளில் ஏன் ஆஸ்பத்திரிகளில் ஏன் போக்குவரத்தில் பெண்கள்மீதான பாலியல் சார்ந்த துஸ்பிரயோகங்கள் அதிகமாகவே நடைபெறுகின்றன. இதனை பல சந்தர்பங்களில் நேரிடையாகவே அவதானிக்கமுடியும்

இதை விட யாழ்ப்பாணத்தல் அரச அலுவலகங்கிளில் வேலைசெய்யும் பெண்கள் சேலை அணியவேண்டும் என்று அரசாஙக அதிபர் சொன்னதாக ஒரு செய்தி இதற்கு முன்னர் நல்லூர் கோயிலுக்குவரும் பெண்கள் சேலை அணிந்து வரவேண்டும் என்று மாநகரசபை முதல்வரால் அறிவுறுத்தப்பட்டு அது ரத்துச்செய்யப்பட்டது. இவ்வாறான கருத்துக்கள் ஒருவருடைய உடைத்தேர்வு தொடர்பான ஜனநாயகப் பிரச்சனையாகும.; தென்னாசியாவில் 30 வீத்ததிற்கு மேற்பட்டபெண்கள் சுரி;தார் அணிகிறார்கள் அவர்களை நிந்தனை செய்வதுமாகும் .

ஆண்களின் அத்துமீறலுக்கு காரணம் பெண்களின் நடைஉடைபாவனைகளே என்ற பத்தாம் பசலி ஆணாதிக்க எண்ணப்பாடு இன்றளவில் எமது சமூகத்தில் நின்று நிலவுகிறது. பெண்கள் தொடர்பாக எமது சிந்தனன முறையிலும் ,சமூகச்செயற்பாடுகளிலும் மாற்றங்கள் தேவை.

அதற்கு சுதந்திரமான பிரக்ஞையுள்ள பெண்கள் இயக்கங்கள் தோன்ற வேண்டும். .இப்போது சில பெண்கள் நலன்சார்ந்த அரசார்பற்ற அமைப்புகள் இயங்குகின்றன. அவை மாத்திரம் போதாது. வரலாற்றின் தேவை இது

Followers

Blog Archive