Sunday, April 24, 2011

நாடு கடந்த தமிழ அரசின் பிரதிநிதிகளை சந்திக்கவே TNA சிங்கப்பூர் பயணம்!

Sunday, April 24, 2011
தமிழர்களின் பிரச்சினை பற்றி என்ன பேசப்போகிறோம் என்ற தீர்மானம் எடுப்பதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்கள் சிங்கப்பூர் தான் செல்ல வேண்டுமா? நிச்சயமாக இவர்கள் அங்கு நாடு கடந்த தமிழ அரசின் பிரதிநிதிகளை சந்திக்கவே சென்றுள்ளார்கள் என தான் நம்புவதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் இங்கு பெரும் சிரமத்தில் இருக்கும்போது உல்லாசமான ஒரு வாழ்க்கையை வாழ்வதற்கு சிங்கப்பூரில் போய் உல்லாச விடுதியிலிருந்து தான் தமிழர்களின் பிரச்சினை பற்றி என்ன பேசப் போகிறோம் என்பதைப் பற்றி தீர்மானம் எடுக்க சிங்கப்பூர் தானா செல்லவேண்டும். ஏன் யாழ்ப்பாணத்தி லிருந்து தீர்மானம் எடுக்க முடியாதா? மட்டக்களப்பில் இருந்து தீர்மானம் எடுக்க முடியாதா? திருகோணமலையில் சிறந்த ஹோட்டல்கள் எல்லாம் உள்ளன அங்கிருந்து தீர்மானம் எடுக்க முடியாதா? என்றும் பிரதியமைச்சர் முரளிதரன் கேள்வி எழுப்பினார்.

நிச்சயமாக இவர்கள் வேறு யாரையாவது சந்திக்கத்தான் சென்றிருக்க வேண்டும். வெளிநாட்டிலுள்ள தமிழர்களை நாடுகடந்த தமிbழம் என்ற ஒரு பிரிவின் அணி திரட்டிக் கொண்டுள்ளனர். இதேவேளை ஜெயானந்த மூர்த்தி உட்பட 28 பேர் நாடு கடந்த தமிbழத்திலிருந்து வெளியேறியுள்ளனர். நாடு கடந்த தமிbழம் என்பது வெறும் வெற்று வேட்டு என்பதை உணர்ந்திருக் கிறார்கள். இதனாலேயே இவர்கள் 28 பேரும் ஒதுங்கியுள்ளனர். இப்படியான ஒரு அணியுடன் தமிழ்த் தேசிய கூட்ட மைப்பு சேருமாக இருந்தால் மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டத்துக்கு வழிவகுக்கும் செயலாகவே அமையும். இதே செயலில்தான் தமிழர் விடுதலைக் கூட்டணியும் கடந்த காலங்களில் செய்தது, என்றும் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

புலித்தேவனையும் நடேசனையும் புலிகளே கொலை செய்தனர் முன்னாள் எம்.பி கனகரட்னம்!

Sunday, April 24, 2011
2008 ஒக்டோபர் முதலாம் திகதிக்கும் 2009 மே 18ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் வன்னிப் பகுதியில் வைத்து 600 அப்பாவி தமிழ் மக்கள் கட்டாக்காலி நாய்கள் போன்று சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். இருந்த போதும் புலிகளுக்கு எதிரான போரின் போது இலங்கைப் படையினரால் ஒரு சிவிலியன் கூட கொலைசெய்யப்படவில்லை என முன்னாள் வன்னி மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி.எஸ். கனக ரத்தினம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் பான் கீ மூனின் நிபுணர்கள் குழுவின் அறிக்கை குறித்து ‘ஏசியன் டிரிபியூன்’ இணையத்தளத்திற்கு அளித்துள்ள பேட்டியிலே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பொது மக்களை புலிகள் மனிதக் கேடயமாக பயன்படுத்தி தடுத்து வைத்திருந்த போது இவரும் (கனகரத்தினமும்) பொதுமக்களுடன் புதுமாத்தளத்தில் தங்கியிருந்தார். அங்கு நடந்த சம்பவங்களை ஐ.நா. செயலாளரின் நிபுணர்கள் குழு திரிபுபடுத்தி கூறியிருப்பதை மறுத்துள்ள அவர், நிபுணர் குழுவின் அறிக்கை தவறானதென்றும் திரிபுபடுத்தி தயாரிக்கப்பட்ட அறிக்கை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐ.நா.செயலாளரின் பழிவாங்கும் மனப்பான்மையையே இந்த அறிக்கை சித்த ரிப்பதாகவும் மேற்கு நாடுகளில் உள்ள மனித உரிமை அமை ப்புகள் மற்றும் மேற்கு நாட்டு தலைவர்களின் கருத்தை பிரதிபலிப்பதையே வெளிப்படுகிறது எனவும் அவர் தனது பேட்டியில் தெரி வித்துள்ளார். இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வன்னியில் நிகழ்ந்த சம்பவங்கள் குறித்து விளக்கியுள்ள அவர் பொதுமக்க ளுடன் தங்கியிருந்து தான் நேரில் கண்ட வற்றை முதற் தடவையாக பகிரங்கப் படுத்தியுள்ளார்.

வன்னி மக்களின் பிரதிநிதி என்ற வகையில் அந்த மக்களுடன் தங்கியிருந்து அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கியதாக குறிப்பிட்டுள்ள அவர் உக்கிர யுத்தத்தின் போது அப்பாவி தமிழ் மக்கள் துப்பாக்கி ஏந்திய புலிகளி னால் கட்டாக்காலி நாய்கள் போன்று ஈவிரக்கமின்றி சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவித்தார். உச்சக்கட்ட யுத்தத்தின்போது அரசாங்க உத்தரவையும் மீறி புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் தங்கியிருந்ததாக முன்னாள் எம்.பி. கனகரத்தினத்திற்கு எதிராக அரசாங்கம் குற்றஞ்சாட்டியிருந்தது.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம் பெற்ற சம்பவங்கள், பாரதூரமான கொலை கள் பற்றிய நேரடி தகவல்களை ஐ. நா.வோ மேற்கு நாடுகளோ அறிந்திருக்க வில்லை என்று தெரிவித்துள்ள அவர், ஐ. நா. செயலாளரின் நிபுணர் குழுவின் அறிக்கையை முற்றாக நிராகரித்துள்ளார். மூன்றாவது அல்லது நான்காவது நபருக் கூடாக வெளியான அறிக்கைகள் மற்றும் புலி ஆதரவாளர்கள் மற்றும் அவர்கள் தொடர்பில் அக்கறையுள்ள அமைப்புகள் மூலம் கிடைத்த முறையற்ற தகவல்கள் என்பவற்றின் அடிப்படையிலே நிபுணர் குழு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தனது பேட்டியில் சுட்டிக்காட்டி யுள்ளார். நிபுணர் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மையை உறுதிபடக் கூற முடியுமா என அவர் ஐ. நா. நிபுணர்கள் குழுவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வன் னிப் பகுதியில் இருந்த மக்கள் பங்கர்களில் இருந்து வெளியே வர முடியாதிருந்தனர். வெளியில் வந்த மக்கள் புலி துப்பாக்கி தாரிகளின் கட்டுப் பாட்டில் வைக்கப் பட்டனர். இந்த நிலையில் அந்த மக்கள் பற்றிய நேரடி தகவல் எதுவும் வெளி வந்திருக்க முடியாது எனவும் முன்னாள் எம்.பி. கனகரத்தினம் கூறியுள்ளார். வெள்ளைக்கொடி ஏந்திவந்த புலித் தலைவர்கள் படையினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்தும் அவர் கருத்துத் தெரிவித்துள்ளார். முக்கிய புலி தளபதிகள் எவரும் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் செல்வதை பிரபாகரன் விரும்பவில்லை. அவர்கள் எப்பொழுதும் பிரபாகரனின் ஆயுதக் குழுவினால் சுற்றி வளைக் கப்பட்டே இருந்தனர். யாராவது புலித் தலைவர் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு செல்ல முயன்றால் அவரை சுடுமாறு பிரபாகரன் உத்தரவிட்டிருந்த தாகவும் அவர் கூறினார்.

புலி உறுப்பினர்களுக்கு பிரபாகரன் சயனைட் கலாசாரத்தை அறிமுகப்ப டுத்தியிருந்தார். படையினரைத் தோற் கடிக்க முடியாத நிலையில் சயனைட் வில்லைகளை கடித்து தற்கொலை செய்யு மாறு பணிக்கப்பட்டிருந்தனர். இதனை எவரும் மீறுவதை பிரபாகரனால் சகிக்க முடியாதிருந்தது. நடேசனும் மற்றும் தலைவர்களும் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு செல்லும் நம்பிக்கைத் துரோகத்தை பிரபாகரன் ஒருபோதும் ஏற்றிருக்கமாட்டார். அவ்வாறான சந்தர்ப்பத்தில் பிரபாகரன் அவர்களை சுட்டுக்கொன்றிருக்கக் கூடும் என்றும் அவர் கருத்துக் கூறியுள்ளார்.

1983 ஆம் ஆண்டு தின்னவேலியில் (திருநெல்வேலி) வைத்து இராணுவ படையணி மீது நடத்திய தாக்குதலையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார். அந்தத் தாக்குதலில் பிரபாகரன், கிட்டு, ஐயர், புலேந்திரன், சந்தோசம், செல்லக்கிளி, அப்பையா ஆகியோர் தொடர்புபட்டிருந்தனர். செல்லக்கிளி தனது இளைய சகோதரன் என்று கூறியுள்ள கனகரத்னம், இந்த தாக்குதலின் போது அவர் மர்மமான முறையில் கொல்லப்பட்டதாக கூறினார். இந்த சம்பவத்தையடுத்து தமது குடும்பத்தினர் புலிகளுடன் எந்த வகையிலும் தொடர்பு வைத்திருக்கவில்லை என்றும் கனகரத்தினம் கூறியுள்ளார்.தமிழ் செல்வனே தன்னை 2004 பொதுத் தேர்தலின் போது வன்னி மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட் பாளராக நிறுத்தியதாக தெரிவித்துள்ள அவர் தனது பெயர் வேட்பாளர் பட்டி யலில் இருப்பதை கண்டு வியப்படைந் ததாகவும் கூறியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானது முதல் தான் வன்னி மக்களுடன் தங்கியிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

Saturday, April 16, 2011

ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பில் அரசாங்கம் ஆராய்வு!

Saturday, April 16, 2011

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனினால் நியமித்திருந்த மூவர் கொண்ட நிபுணர் குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளதுடன் அவ்வறிக்கை தவறானது என்பதுடன் பாரபட்சமானதாகும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காக பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட குழு தனது அறிக்கையை கடந்த செவ்வாய்க்கிழமை செயலாளர் நாயகத்திடம் கையளித்துள்ளது. இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை அடிப்படையில் பல தவறுகளைக் கொண்டுள்ளதென்றும், பல குறைபாடுகள் இருப்பதாகவும், எந்த வகையிலும் உறுதிப்படுத்தாமல் பல தகவல்கள் பரவலாக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், பாரபட்சமான தகவல்களை பயன்படுத்தியே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சின் ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை ஐ.நா. சபையின் நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பில் அரசாங்கத்தின் உயர்மட்ட குழுவொன்று ஆராய்ந்து வருவதாகவும் தமது தரப்பு விளக்கத்தை நாளை ஞாயிற்றுக்கிழமை உத்தியோகபூர்வமாக தெளிவுபடுத்துவதற்கு கலந்துரையாடி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Thursday, April 7, 2011

ஐக்கிய இராச்சியத்துக்கு புதிய விமானசேவை.

Thursday, April 7, 2011

ஐக்கிய இராச்சியத்துக்கு புதிய விமானசேவையை ஆரம்பிக்க அரசு முடிவு செய்துள்ளது. சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவின் பிரேரணைக்கு ஏற்ப ஐக்கிய இராச்சியத்துக்கும் இலங்கைக்கும் இடையில் புதிய விமான சேவையை மேற்கொள்வதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை இன்று தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.

Sunday, April 3, 2011

ராகுல் பிரசாரம் ஒருநாள் மட்டும் ; தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.

Sunday, April 3, 2011

தமிழக சட்டசபை தேர்தலில் காங்., தரப்பில் சோனியா, வருவாரா என்ற கேள்விக்கு 5 ம் தேதி பிரசாரம் என்று முடிவு வந்தது. இந்நிலையில் காங்., பொதுசெயலர் ராகுல் வருவாரா என்ற கேள்விக்கும் முற்றுப்புள்ளி வைத்து விட்டது காங்கிரஸ் மேலிடம் ஆனால் தமிழகத்தில் ஒருநாள் மட்டும் பிரசாரம் எந்தளவிற்கு பயன்தரும் என்று காங்கிரஸ் இளஞைர் காங்கிரசார் சற்று உள்ளம் சோர்ந்து போய் உள்ளனர். வரும் 6ம் தேதி ஈர‌ோட்டில் பிரசாரம் செய்கிறார். தமிழக சட்டசபை தேர்தல் வரும் 13ம் தேதி நடக்கவுள்ளது. இதற்கான பிரசாரம் சூடுபிடித்துள்ளது. இம்முறை, சென்னையை விட்டு வெளி மாவட்டங்களிலேயே முக்கிய தலைவர்கள் அதிக பிரசாரம் மேற்கொண்டுள்ளனர். தி.மு.க.,வின் கோட்டை என கூறப்பட்ட சென்னையில், கடந்த முறை ஏழு தொகுதிகளை அ.தி.மு.க., கைப்பற்றியது. லோக்சபா தேர்தலிலும் மூன்றில் ஒரு இடத்தை அ.தி.மு.க., பெற்றது. இந்நிலையில், தி.மு.க., வேட்பாளர்கள் வெளிமாவட்டங்களில் போட்டியிடுகின்றனர். சென்னையில் ஐந்து தொகுதிகளில் காங்., வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். பிரசாரம் முடிய இன்னும் 10 நாட்கள் உள்ளதால், சென்னையில் பிரமாண்ட பிரசார கூட்டம் நடத்த தி.மு.க., முடிவு செய்துள்ளது. இதில், கூட்டணி தலைவர்கள் ஒரே மேடையில் பங்கேற்று பேச உள்ளனர். குறிப்பாக, காங்கிரஸ் தலைவர் சோனியாவை பங்கேற்க வைக்க மத்திய அமைச்சர் சிதம்பரம் மூலம் தீவிர ஏற்பாடுகள் நடக்கின்றன. புதுச்சேரி மற்றும் திருவனந்தபுரத்தில் நடக்கவுள்ள தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்க சோனியா ஒப்புதல் அளித்துள்ளார். அதேநாளில், சென்னை பிரசார கூட்டத்தில் பேச அவருக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதற்காக, தி.மு.க., நிர்வாகிகள் வேண்டுகோளின்படி, புதுவையைச் சேர்ந்த மத்திய அமைச்சர் நாராயணசாமி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் ஆதரவாளர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர். வரும் 5ம் தேதி தீவுத்திடலில் கூட்டம் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி, மத்திய உள்துறையைச் சேர்ந்த பாதுகாப்பு அதிகாரிகளான ஏ.எஸ்.எல்., படையினர், கடந்த சில தினங்களுக்கு முன், சென்னை வந்தனர். தி.நகர் பனகல் பார்க் அருகே தி.மு.க., கூட்டம் நடத்த முடிவு செய்துள்ள இடம், தீவுத்திடல் ஆகியவற்றை பார்வையிட்டு நேற்று டில்லி சென்றனர்.கடந்த லோக்சபா தேர்தலில் தி.மு.க., கூட்டணியின் பிரசார கூட்டம் தீவுத்திடலில் நடந்தது. இந்த கூட்டம் சென்டிமென்டாக வெற்றி பெற்றதால், இம்முறையும் அதே இடத்தில் கூட்டணி தலைவர்களுடன் கரம் கோர்த்து பிரசாரம் செய்யவும், காங்கிரசுக்கும், எங்களுக்கும் எந்த பிரச்னையும் இல்லை, ஒற்றுமையுடன் இருக்கிறோம்' என மக்களுக்கு உணர்த்தும் வகையிலும் இக்கூட்டத்தை நடத்த, தி.மு.க., முடிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து, ராகுலை வரவழைக்க வாசன் அணியில் உள்ள இளைஞர் காங்கிரசுக்கு பொறுப்பு தரப்பட்டுள்ளது. வரும் 6, 7 ஆகிய தேதிகளில் ஈரோடு, திருச்சி போன்ற பகுதிகளில் ராகுல் பிரசாரம் செய்வார் என தெரிகிறது. ஆனால், "அவர் சென்னைக்கு வந்து தி.மு.க., தலைவருடன் ஒரே மேடையில் பேசுவாரா? என்பது தெரியாது' என காங்., வட்டார தகவல்கள் கூறுகின்றன. புதுச்சேரியிலும் பிரசாரம் : காங்., தலைவர் சோனியா, வரும் 5ம் தேதி சென்னை கூட்டத்தை முடித்துவிட்டு, அங்கிருந்து புதுச்சேரி செல்கிறார். அங்கு நடக்கும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று, தி.மு.க., - காங்., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார். அதுபோல், காரைக்காலில் காங்., கூட்டணி கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி, பிரதமர் மன்மோகன் சிங் பேசுகிறார். இதற்கான தேதி முடிவு இன்னும் செய்யப்படவில்லை.

இலங்கை வாழ் தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளனர் திருப்பதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

Sunday, April 3, 2011

இலங்கையில் தமிழர்களுக்கு தற்போது எந்த பாதிப்பும் இல்லை. அவர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்று திருப்பதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித் துள்ளார். மும்பையில் இந்தியா - இலங்கை அணிகள் மோதும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தைக் காண ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியா வந்துள்ளார். அவர் தனது குடும்பத்துடன் சென்னையில் இருந்து கார் மூலம் திருப்பதி சென்றார். அவருக்கு வழி நெடுகிலும் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. திருப்பதி மலைப் பாதையில் அதிரடிப்படை பொலிஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திருப்பதி கோவிலில் மத்திய பொலிஸ் படையினர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர். திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். வேத பண்டிதர்கள் அவரை நுழைவு வாயிலில் இருந்து கருவறைக்கு அழைத்து சென்றனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நன்றாக சாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக சாதாரண பக்தர்கள் தரிசனத்தை தேவஸ்தான அதிகாரிகள் நிறுத்தி வைத்தனர். மஹிந்த ராஜபக்ஷ சுமார் 45 நிமிடம் வரை கருவறையில் சாமிதரிசனம் செய்தார். அப்போது எழுமலையானுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தரிசனத்திற்கு பிறகு ஜனாதிபதிக்கு வேத பண்டிதர்கள் பட்டு வஸ்திரம் அணிவித்து லட்டுகள் மற்றும் அனைத்து விதமான பிரசாதங்களையும் கொடுத்து ஆசி வழங்கினர். ஏழுமலையான் கோவிலில் தனது எடைக்கு எடையாக ரூ. 55 ஆயிரத்து நாணயங்களை துலாபாரம் செலுத்தினார். பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிருபர்களிடம் கூறியதாவது, இலங்கையில் உள்ள தமிழர்கள் தற் போது பாதுகாப்பாக உள்ளனர். அவர்க ளுக்கு எந்தவித பாதிப்போ, பிரச்சினையோ இல்லை. இலங்கை மக்கள் அனைத்து துறையிலும் முன்னேறவும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெறவும் ஏழுமலை யானை வேண்டினேன் என்று தெரிவித்தார். பின்னர் அவர் ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டியை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.

Followers

Blog Archive