Sunday, February 27, 2011

ஜனாதிபதியின் வாழ்க்கை வரலாறு முதன் முறையாக தமிழில் வெளியீடு.

Sunday, February 27, 2011
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வாழ்க்கை வரலாற்றினை உள்ளடக்கிய நூல் முதன் முறையாக தமிழில் வெளி வந்துள்ளது. இந்நூலுக்கு ‘மஹிந்த’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மூன்று தசாப்தங்களாக இலங்கை மக்களை துன்புறுத்திய பயங்கர வாதத்திலிருந்து நாட்டைக் காப்பாற்றி மக்கள் அனைவரும் சமாதானமாகவும், ஒற்றுமை யாகவும், புரிந்துணர்வுடனும் வாழ வழியமைத்துக் கொடுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விற்கு தமிழ் மக்கள் சார்பாக

நன்றியினைத் தெரிவிக்கும் முகமாக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது.

சிறுவயது முதல் ஜனாதிபதி மாளிகை வரையிலான மஹிந்த ராஜபக்ஷவின் விசேட நிகழ்வுகள் இந்நூலில் வர்ணப் புகைப் படங்களுடன் உள்ளடக்கப்பட்டுள்ளமை இதன் சிறப்பம்சமாகும்.

நாட்டின் சகல இன மக்களினதும் மனிதாபிமான உரிமைகளை பெற்றுக் கொடுத்த தலைவரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பற்றி தமிழ் மக்கள் கூறும் கருத்துகளும் இந்நூலில் உள்ளடக் கப்பட்டுள்ளன.

தினகரன் நாளிதழின் பிரதம ஆசிரியரான எஸ். தில்லைநாதனினால் இந்த வரலாற்று நூல் எழுதப்பட்டுள்ளது.
இந்நூலின் முதற் பிரதி கடந்த வாரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் ஜனாதிபதி மாளிகையில் வைத்து நூலாசிரியர் தில்லைநாதனால் கையளிக் கப்பட்டது. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வரும், எஸ். தில்லைநாதனின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.

மொபைல் போனில் ஆபாச வீடியோவா?4 மாதம் சிறை செல்ல நேரிடும்.

Sunday, February 27, 2011
மொபைல் போனில் ஆபாச வீடியோக்களை வைத்திருப்பவர் களுக்கு எதிராக சட்டம் கடும் நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் மொபைல் போனில் ஆபாச வீடியோ வைத்தி ருந்த நபர் ஒருவருக்கு நீதிமன்றத்தால் நான்கு மாதம் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கடந்த செவ் வாய்க்கிழமை தெல்லிப்பளைப் பொலி ஸாரால் சோதனைக்கு உட்படுத் தப்பட்ட இளைஞர் ஒருவரின் மொபைல் போனில் ஆபாச வீடியோ இருந் துள்ளது. பொலிஸார் குறிப்பிட்ட இளைஞரை மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்படுத்தி தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்றன.

விசாரணைகளுக்கு அமைய குறிப்பிட்ட இளைஞர் குற்றவாளியாக இனம் காணப்பட்டார். அவருக்கு நான்கு மாதங்கள் சிறைத் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கல்லூரி செல்லும் இளைஞர்கள் தொடக்கம், பள்ளி செல்லும் மாணவர்கள் வரை பலரது மோபைல் போன்களில் இவ்வாறான ஆபாசப்படங்கள் பரவலாகக் காண்பபடுகிறது. இது போன்ற படங்களை மாணவிகளுக்கு காண்பித்து உணர்ச்சிகளைத் தூண்டி சிலர் அதில் குளிர் காய்வதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

முஸ்லிம் காங்கிரஸின் பலம் தேர்தலில் வெளிப்படும்.

Sunday, February 27, 2011
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸி டமிருந்து பறித்தெடுக்கப்பட்ட பேரம் பேசும் அரசியல் பலத்தை மீளப் பெறுவதற்கானதோர் சந்தர்ப்பமே எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலாகும்.

இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும், உள்நாட்டு வர்த்தக, கூட்டுறவுத்துறை பிரதி அமைச்சருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்தார். எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலில், நிந்தவூர் பிரதேச சபைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையி லேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஸ்ரீல. மு. காங்கிரஸ் நிந்தவூர் மத்திய குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இக் கூட்டத்தில் (2011-02-25) திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். சி.பைசால் உட்பட பெருந்தொகை யான பொது மக்களும் கலந்து கொண்டனர்.

பிரதி அமைச்சர் பசீர் சேகுதாவூத் மேலும் பேசியதாவது, கிழக்கு மாகாண சபைக்கான அடுத்த தேர்தலில் முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரை பெற்றுக் கொள்வதற்கான முதற்கல்லை நடுகின்ற நாளாக எதிர்வருகின்ற மார்ச் 17 ஆம் திகதி அமையப் போகின்றது. இதற்காக முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மரச் சின்னத்திற்கு இந்த உள்ளூராட்சி சபைத் தேர் தலில் வாக்களிக்க கடமைப்பட்டுள் ளனர். கிழக்கு மாகாண சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்போ, அரசாங்கக் கட்சியோ அடுத்து வரும் தேர்தலில் தனித்து வெல்ல முடியாத ஒரு சூழலில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசுடனோ தமிழ் தேசிய கூட்டமைப்புடனோ சேர்வதன் மூலம் ஆட்சியமைப் பதற்கான காலம் நிச்சயம் வரும்.

முஸ்லிம்களுக்கென்று தனி யலகு கோரிக்கைக்கான அரசியல் போராட்டம் கைவிடப்படாத நிலையில் கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரை பெற்றுக் கொள்வதற்கான வியூகங்களுக்கு வலுச் சேர்க்க வேண்டிய காலம் இது. இச்சந்தர்ப் பத்தில் தமிழ் மக்களுக்கும் நீதியான நேர்மையான தீர்வு கிடைக்க வேண்டும் என பிரார்த் திக்கின்றோம்.

எனவே தான் முஸ்லிம்களின் அரசியல் அபிலாஷைகளை அடைந்து கொள்வதற்கான போராட்ட வியூகத்திற்கு வழிசேர்க் கின்ற தேர்தலாக இந்த தேர்தலை முஸ்லிம் மக்கள் பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் செல்வாக்கை தேசிய அரசியலில் இருந்தும், சமூக அரசியலில் இருந்தும் ஒரு போதும் ஓரங்கட்ட முடியாது என்ற செய்தியை வெளிக்காட்ட முடியும் எனக் கூறினார்.

இக் கூட்டத்தில் மு.கா. வேட்பாளர் களான எம்.ஏ.எம். தாஹிர், ஏ.ஏ.எம். நெளசாத், எம்.ரீ. ஜப்பார் அலி, எம்.எம். அன்சார், றியாஸ் உட்பட பலரும் உரையாற்றினர்.

Followers

Blog Archive