Friday, April 2, 2010

FRIDAY, APRIL 02, 2010
ஐக்கிய நாடுகள் சபையின் இரட்டை நிலைப்பாடு குறித்து இலங்கை கேள்வி எழுப்பியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் இரட்டை நிலைப்பாடு குறித்து இலங்கை கேள்வி எழுப்பியுள்ளது.
இலங்கை குறித்து விசாரணை நடத்துவதற்காக ஒன்பது மாத காலத்திற்குள் நிபுணர் குழுவொன்றைஅமைக்க ஐக்கிய நாடுகள் சபை முயல்வதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்தார்.
இதேவேளை, ஈராக்கில் பிரிட்டன் இராணுவத்தினருக்கு எதிரான விசாரணைகளை நடத்துவதற்கான குழுவொன்றை அமைப்பதற்கு ஒன்பது வருட காலத்தை ஐக்கிய நாடுகள் சபை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த நிலையிலேயே, ஐக்கிய நாடுகள் சபையின் இரட்டை நிலைப்பாடு குறித்து அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம கேள்வி எழுப்பினார்.
FRIDAY, APRIL 02, 2010

தேர்தல் தொடர்பில் நியாயமான நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டுமென நீதிமன்றம் உத்தரவு

தேர்தல் தொடர்பில் நியாயமான நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டுமென உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையாளருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரியவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்பான விசாரணைகளின் போது உச்ச நீதிமன்றம் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளது.
தேர்தல் தொடர்பில் சரியான வழிகாட்டுதல்கள் முன்வைக்கப்பட வேண்டுமெனக் கோரி கரு ஜயசூரிய இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தார்.
தேர்தல் ஆணையாளர் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
தேர்தல் ஆணையாளர் நேரத்திற்கு நேரம் வெளியிட்டு வரும் கருத்துக்கள் மக்கள் மத்தியில் நகைப்புக்கு உரியதாக மாறியுள்ளதென கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
சகல மக்களினதும் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் தேர்தல் நியாயமானதும் சுதந்திரமானதுமாக நடைபெறுவதற்கு தேர்தல் ஆணையாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
FRIDAY, APRIL 02, 2010

கொழும்பு மாவட்ட ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளர் கைது

கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளர் சிசில் கின்டல்பிட்டிய இன்று காலை வெலிக்கடை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பாலியல் துன்புறுத்தல்கள் மேற்கொள்ள முயற்சித்ததாக பெண்மணி ஒருவர் நேற்று இரவு பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ததையடுத்து, இவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் பிரஷாந்த ஜயக்கொடி குறிப்பிட்டார்

Followers

Blog Archive