Friday, March 26, 2010

பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி யின் பொதுச் செயலாளரும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்.தேர்தல் மாவட்டத்தில் இக்கட்சி சார்பாகப் போட்


SATURDAY, MARCH 27, 2010

தமிழ்மக்களின் பிரச்சினைக்கான தீர்வில் இந்தியா சிரத்தையுடன் செயற்பட்டு வருகிறது அந்நாட்டின் உதவி, ஒத்தாசைகள் என்றும் எமக்குத் தேவை

தமிழ்மக்களின் பிரச்சினைக்கான தீர்வில் இந்தியா சிரத்தையுடன் செயற்பட்டு வருகிறது அந்நாட்டின் உதவி, ஒத்தாசைகள் என்றும் எமக்குத் தேவை

தமிழ்மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் 30 வருட காலத்துக்கும் மேலாக போராடிவரும் அமைப்பே பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி. இது ஆரம்ப காலத் தில் ஒரு போராட்ட இயக்கமாகப் பரிண மித்துப் பின்னர் அரசியல் இயக்கமாகப் பரிணமித்துக் கொண்டிருக்கும் பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ் இம்முறை புளொட் அமைப்பினருடன் இணைந்து நாடாளு மன்றத் தேர்தலை எதிர் கொள்கின்றது.
அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் ஸ்ரீதரன் உதயனுக்காக வழங்கிய நேர் காணல் இது:
கேள்வி: ஆரம்பகாலத்தில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட தாங்கள் பின் அதனைக் கைவிட்டு ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் கலந்துகொண்டு செயற் படுகிறீர்கள்? இந்நிலையில் இத்தேர்தலை எவ்வாறு எதிர் கொள்ளப் போகிறீர்கள்?
பதில்: 30 வருடகாலமாக தமிழ் மக் களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம்.
கூட்டாட்சி முறை
எமது பிராந்திய நலன், புவிசார் அமை விடம் என்பவற்றைக் கவனத்திற்கொண்டு இந்தியாவே எமது பிரச்சினையைத் தீர்க்க முடியும் என்பதில் நம்பிக்கை கொண்டி ருப்பதுடன் அந்நாட்டுடன் நல்லுறவை யும் பேணி வருகின்றோம்.
எமது பிரச்சினையின் தீர்வுக்கு இந்தியா வில் இருப்பது போன்ற கூட்டாட்சி முறையே பொருத்தமானது என்றும் நம்பு கின்றோம்.
வடக்கு, கிழக்கு தாயகத்தில் எமது சுய நிர்ணய உரிமையை வலியுறுத்துகின்றோம். நாம் படிப்படியாக எம் மக்களின் பிரச் சினைகளுக்குத் தீர்வு காண வலியுறுத்து வோம். இவற்றுக்காகவே நாம் புளொட் அமைப்பினருடன் இணைந்து இத் தேர் தலை எதிர்கொள்கின்றோம்.
கேள்வி: தமிழ் மக்களின் பிரச்சினைக் கான தீர்வு தொடர்பில் தங்களுடைய நிலைப்பாடு என்ன?
பதில்: எமது மக்களுக்கான தீர்வு விட யமாக ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து மக்களும் சுதந்திரமாக, சமத்துவமாக வாழ வேண்டும். இந்த நாடு சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், பறங்கியர் என அனைவருக் கும் பொதுவானது.
தனி ஓர் இனம் இதனைச் சொந்தம் கொண்டாட முடியாது. பல்லினங்களும் ஒற்றுமையாக வாழும் பல்லின நாடாக இருக்க வேண்டும் என்பதே எமது விருப் பமாகும்.
மாகாணசபைகள் பலப்படுத்தப்பட வேண்டும். வடக்கு, கிழக்கு மாகாணங் கள் இணைக்கப்பட வேண்டும். இதற்காக கிழக்கில் இருந்தும் பலமான குரல் ஒலிக்க வேண்டும்.
கேள்வி: அப்படியானால் நீங்கள் ஒஸ்லோ பிரகடனத்தை வலியுறுத்தவில்லையா?
பதில்: ஒஸ்லோ பிரகடனத்தின் அடிப் படையில் தீர்வு காணப்படுமாக இருந்தால் நாம் மகிழ்ச்சியடைவோம். ஆனால் சிங் களத் தலைமைகள் இதனைச் செய்ய முன் வருவார்களா என்பது சந்தேகமே. இன் றைய யதார்த்த களச் சூழலுக்கு எது பொருத் தமானதோ அதனை நாம் கவனத்தில் கொள்வதுடன் இந்தியாவின் அனுசரணை யையும் பெற வேண்டும்.
கேள்வி: மாற்று அரசியல் தொடர்பாகத் தங்களுடைய நிலைப்பாடு அல்லது கருத்து என்ன?
பதில்: மாற்று அரசியல் என்பது எமது இனத்துக்கு இன்று கட்டாயம் தேவையா னது. இம்மாற்று அரசியலில் வெவ்வேறு கருத்துக்கள் உடையவர்கள் பங்கேற்க வேண்டும். ஆனால் எமது சமூகத்தில் இன்று இந்நிலைமை இல்லை. வெவ்வேறு கருத்துக்களுடன் நாகரிகமான அரசியல் உறவு நிலை ஒன்று உருவாக வேண்டும்.
அரசில் தமிழர்கள் பங்காளிகளாக வேண்டும்
மக்களுக்கு அரசியல் போதை ஏற்றும் செயற்பாடுகளுக்கு இடமளிக்கக் கூடாது. இலங்கை அரசில் தமிழ் மக்கள் பங்காளி கள் ஆக வேண்டும்.
கேள்வி: இடம்பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக என்ன நினைக் கிறீர்கள்?
பதில்: இடம்பெயர்ந்த மக்கள் அனை வரும் அவர்களின் சொந்தக் காணிகளில் குடியமர்த்தப் படவேண்டும். அவர்களுக் கான உள்ளகக் கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும்.
உயர்பாதுகாப்பு வலயங்கள் அனைத் தும் நீக்கப்படுவதுடன் 1980 ஆம் ஆண்ட ளவில் இராணுவ முகாம்கள் எந்நிலையில் இருந்தனவோ அந்நிலைக்குத் திரும்பச் செல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கி றோம். இவைதவிர மே 18 இன் பின்னர் பயங்கரவாதச் சட்டம் தேவையில்லை எனவே அச்சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டும்.
கேள்வி: தமிழ் மக்களின் பிரச்சினை போன்று இணைந்த வடக்கு, கிழக்கில் முஸ்லிம் மக்களுக்கும் பிரச்சினைகள் உண்டு. அவர்களுக்கு என்ன பதில் கூறு கிறீர்கள்?
பதில்: முஸ்லிம் மக்களுக்கு பிரச்சி னைகள் உண்டு. அதனை நாம் மறுக்க வில்லை. முஸ்லிம் மக்களுடன் நாம் இணைந்து செயற்படுவோம். முஸ்லிம் மக்கள் தாம் பெரும்பான்மையாக வாழும் அம்பாறையை கேட்டால் அதனை நாம் வழங்கத்தயார். அவ்வாறு இல்லாது அம் பாறையை தலைமையகமாகக் கொண்டு பெரும்பான்மையாக வாழும் பகுதிகளை உதாரணமாக கல்முனை, யாழ்ப்பாணத் தின் சில பகுதிகள் போன்றவற்றின் அதி காரங்களையும் நாம் வழங்கத்தயார்.
கேள்வி: எமது தாயகப் பகுதிகளில் நடத்தப்பட்டு வரும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள்...?
சிங்களப் குடியேற்றத்தை
தடுக்க இந்திய உதவி
பதில்: இது ஓர் உணர்வு பூர்வமான விடயம். நாம் தடுக்கக்கூடிய சில சந்தர்ப் பங்களை நாம் தவற விட்டுள்ளோம். இத னைத் தடுப்பதற்கு இந்தியாவின், சர்வ தேசத்தின் உதவியை நாம் பெறவேண் டும்.
இராணுவ மயப்படுத்தப்பட்ட இந்த சூழல் ஆபத்தானது. சிங்கள மக்கள் கிழக் கில் ஒரு சில இடங்களில் ஆரம்பத்தில் இருந்தனர். அதனை நாம் எதிர்க்கவில்லை. ஆனால் பெரும்பான்மையாக இருந்த தமி ழினத்தை சிறுபான்மையாக்கும் செயல் களை நாம் தடுத்தாக வேண்டும்.
கேள்வி: வன்னியுத்தத்தின் பின் பெரும் பாலான தமிழ் மக்களிடம் இந்திய விரோதப் போக்கு அதிகமாக உள்ளது. ஆனால் தாங்கள் இந்தியாவின் நலனில் அக்கறை கொண்ட அமைப்பாக உள் ளீர்கள். இந்தியா தனது பிராந்திய நல னைக் கைவிட்டு இலங்கைப் பிரச்சினை யில் உண்மையான அக்கறைகாட்டுமென நம்புகிறீர்களா?
பதில்: மக்களிடம் இந்திய விரோதப் போக்கு உள்ளது என்பதை எம்மால் ஏற் றுக் கொள்ளமுடியாது. தவிர, இந்தியா வின் பங்களிப்புடன் தான் எமது பிரச்சி னையை நாம் தீர்க்க முடியும்.
இந்தியா சர்வதேச நாடுகளில் முக்கி யத்துவம் பெற்ற நாடாக உள்ளது. இந்தி யாவிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை ஏராளம் உள்ளன.
எமது போராட்டம் பயங்கரவாதமாக நோக்கப்படுவதற்கு இந்தியாவின் இளம் தலைவர் அதுவும் பிரதமரை கொலை செய்ததால் தான் என்பதையும் நாம் உணர வேண்டும். அதற்கான பழிவாங்கல் தான் இவ் அழிப்பே தவிர தமிழ் மக்களுக்கு எதிரானதல்ல.
தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் இந்தியா சிரத்தையுடன் உள் ளது. இதனை இந்தியாவின் இராஜதந்திர உயர் அதிகாரிகள் எம்மிடம் கூறியுள்ளனர்.
கேள்வி: தமிழ் மக்களின் நம்பிக்கை யான தலைமையாக இருந்த விடுதலைப் புலிகளின் இயங்கு நிலை இன்று இல் லாமல் போய்விட்டது. இந்நிலையில் தமிழ் மக்களை வழிநடத்திச் செல்லும் தலை மையாக யாரைக் கருதமுடியும்?
நேர்மையான இளம் அரசியல் தலைமைகள் தேவை
பதில்: வரலாற்றில் தலைமைகள் இல் லாமல் போனது கிடையாது. தலைவர்கள் பலரை விடுதலைப் புலிகள் அழித்து விட் டனர்.அவர்களில் அமிர்தலிங்கம், நீலன் திருச்செல்வம், பத்மநாபா போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.
இன்றைய அரசியலில் நேர்மையான இளம் அரசியல் தலைமைகள் தேவை. இதற்கு நாம் அரசியல் ரீதியான கற்பித்தல், எழுச்சி, போராட்டம் என்பவற்றின் ஊடாக இளம் சமுதாயத்தைக் கொண்டு புதிய தலைமை உருவாக்கப்பட வேண்டும். அத்தலைமை சமூகப்பிரக்ஞையுடைய தும் நேர்மையானதாகவும் இருத்தல் வேண்டும். இன்று தாமே தலைமைகளா கவும், ஏகப்பிரதிநிதிகளாகவும் வேண்டும் எனும் நினைப்பில் தமிழ்த்தேசியக் கூட் டமைப்பு செயற்பட்டு வருகிறது. இவர்கள் கபடத்தனமாக வந்தவர்கள். இவர்களை மக்கள் தூக்கி வெளியில் போடவேண் டும்.
பல கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பிரதி நிதிகளாக தெரிவாக வேண்டும். ஏகப் பிரதிநிதித்துவம் என்னும் சொல்லையே இல்லாது செய்யவேண்டும்.
கேள்வி: விகிதாசாரத் தேர்தல் சிறு பான்மை இன மக்களுக்குப் பாதிப்பை ஏற் படுத்துகின்றது என்றும் இம்முறையைத் தவிர்க்க வேண்டும் என்றும் கூறப்படுகின் றதே....?
பதில்: யாழ்.மாவட்டத்தைப் பொறுத்த வரையில் இம்முறைமையினாலோ அல் லது தொகுதி ரீதியிலான தேர்தலைக் கொண்டு வருவதாலோ பாதிப்பு ஏற்படப் போவதில்லை. ஆனால் கிழக்கு மாகாணத் திலும் மலையகத்திலும் தொகுதி ரீதியான தேர்தல் முறைமை தமிழ்மக்களின் பிரதி நிதித்துவத்தை இல்லாது செய்துவிடும். இத்தேர்தல் முறைமையிலும் மாற்றம் அவ சியம். இதற்காக ஜேர்மனியில் உள்ளது போன்று தொகுதியும் விகிதாசாரமும் கலந்த தேர்தல் முறைமையைக் கொண்டு வரவேண்டும்.
கேள்வி: ஈழத்தமிழர்களின் பிரச்சி னைக்கான தீர்வில் புலம்பெயர் சமூகம் தவிர்க்க முடியாத சக்தி. அவர்கள் தொடர் பில் என்ன கருதுகின்றீர்கள்.
புலம்பெயர்ந்தவர்கள் நாட்டுக்கு வரவேண்டும்
பதில்: நிச்சயமாக அவர்கள் தவிர்க்கப் பட முடியாதவர்கள். நாட்டைவிட்டு வெளியேறிய அவர்கள் மீண்டும் இங்கு வரவேண்டும். இங்கு முதலீடுகளைச் செய்யவேண்டும். ஆனால் அவர்களில் பலர் கனவுலகில் உள்ளனர். அவற்றி லிருந்து அவர்கள் விடுதலை பெறவேண் டும். இளம் தலைமுறைக்கும் இம் மண் ணுக்குமான உறவு விட்டுப் போய்க்கொண்டு இருக்கிறது. அந்த இடைவெளியை நாம் நிரப்பவேண்டும். புலம்பெயர் இலக்கி யமே இன்று அழிந்துபோய்க் கொண்டுள் ளது. அங்குள்ள கலைச்செல்வங்கள் இங்கு கொண்டு வரப்படவேண்டும்.
கேள்வி: புலம்பெயர் சமூகத்துடன் தங் களுடைய உறவுநிலை எவ்வாறு உள் ளது?
பதில்: நாங்கள் அம்மக்களுடன் தொடர்ச்சியான உறவைப் பேணி வருகின் றோம். அங்குள்ள மாற்றுக் கருத்துடையவர் களையும் சந்திக்கின்றோம். அங்கு நடை பெறும் இலக்கியச் சந்திப்புக்கள், பெண் கள் வட்ட சந்திப்புக்கள் என்பவற்றில் எமது பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ள னர். அங்கிருந்தும் புதிய தலைமைகள் உருவாக வாய்ப்புகள் உள்ளன.
வரதர் வருவாரா?
கேள்வி: தங்களுடைய தலைவர் வரத ராஜப்பெருமாள் குறித்து தகவல்களை அறியமுடியவில்லையே? இலங்கையின் அரசியலில் அவர் மீண்டும் வருவாரா?
பதில்: அவர் இப்போது இந்தியாவில் உள்ளார். இணைந்த வடக்கு, கிழக்கின் முதலாவது முதல்வராக இருந்தவர். அவர் விரைவில் இங்கு வந்து அரசியல் பணி களை முன்னெடுப்பார். அவரின் பொருளி யல் அறிவு தமிழ் மக்களின் பொருளா தாரத்தை கட்டியெழுப்ப துணைநிற்கும்.
கேள்வி: உதயன் ஊடாக மக்களுக்கு என்ன கூற விரும்புகின்றீர்கள்.
பதில்: மக்கள் தமது தலைமைகளைத் தேர்ந்தெடுப்பதில் தெளிவாக இருத்தல் வேண்டும். தவிர அனைவருமே தமது வாக்குரிமையைப் பயன்படுத்தவேண் டும். வெறுமனே வாய்ப்பந்தல் போட்டு மக் களை ஏமாற்றும் தலைமைகளை விரட்டிய டிக்க வேண்டும். மக்கள் யதார்த்த பூர்வ மான, நடைமுறைச் சாத்தியமான தீர்வு குறித்து சிந்திக்கவேண்டும். தாம் பழக்கப் பட்ட கட்சிக்குப் போடாது சிந்தித்துப் போடவேண்டும். ஒரே கட்சியில் பலரை அனுப்புவது மக்களுக்கு பாதிப்பையே ஏற்படுத்தும். இம்முறை மக்கள் அனைத் துக் கட்சிகளில் இருந்து பிரதிநிதிகளைத் தேர்வு செய்யவேண்டும். அப்போதுதான் பிழைகள் விடமாட்டார்கள். வெளிநாடு களுக்குச் செல்லாது தொகுதியிலேயே இருப்பார்கள்.
மக்களே! நீங்கள் எம்மை மாத்திரம் தெரிவு செய்யுமாறு நான் கூறவில்லை. எங்களிலும் சிலரைப் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யுங்கள். தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க எமக்கும் ஒரு சந்தர்ப்பம் தாருங்கள். இத்தேர்தலில் போட்டியிடும் பத்மநாபா ஈழமக்கள் புரட் சிகர விடுதலை முன்னணியின் சின்ன மான மெழுகுதிரிக்கு உங்கள் வாக்கை இட்டு உங்கள் வாழ்வில் ஒளியேற்றுங் கள்.
*
FRIDAY, MARCH 26, 2010
மக்கள் சேவகர் இராஜரட்ணம் கோணேஸ்வரன் பத்மநாபா ஈபிஆர்எல்எஃப்-புளொட் கூட்டமைப்பு
மக்கள் சேவகர் இராஜரட்ணம் கோணேஸ்வரன்
கிராஞ்சி பூனேரி
அன்புடையீர்
புளொட் அமைப்பைச்சேர்ந்த இராஜரட்ணம் கோணேஸ்வரன் அவர்கள் உங்கள் இன்ப துன்பங்களில் பங்குபற்றி உங்களோடு வாழும் மனிதர்.
ஊரும் உறவுகளும் சொல்லொணா வேதனைகள் இழப்புக்களுடன் இடம்பெயர்ந்தபோது உங்களுடன் சகமனிதராக வாழ்ந்தவர்.
இதையும் விட பல்வேறு சமூகப் பணிகளை ஆற்றி வருபவர்.
செந்தாமரை விளையாட்டுக்கழகத்தின் தலைவர். கற்பக வினாயகர் கோயிலின் முகாமையாளராக அறப்பணியாற்றி வருபவர்.
இடம்பெயர்ந்து செட்டிகுளம்- மெனிக்பாம்- அருணாசலம் அகதி முகாமில் வாழ்ந்த போது முகாமில் மிகப்பாரிய துன்பங்களை அனுபவித்த மக்களுக்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர்.
கிராஞ்சி பூனேரியைச் சேர்ந்த திரு: கோணேஸ்வரன் அவர்கள் உங்கள் ஊரவர். உங்கள் நண்பர். உற்ற சுற்றமும் கூட.
அன்னாரைப் பாராளுமன்றம் அனுப்புவதன் மூலம் உங்கள் அருகாமையில் இருந்து அவர் சேவையாற்றும் வாய்ப்பைப் பெறுவீர்கள்.
சின்னம் மெழுகுவர்த்தி
பத்மநாபா ஈபிஆர்எல்எஃப்-புளொட் கூட்டமைப்பு

பாராளுமன்றப் பொதுத்தேர்தல்2010பத்மநாபா ஈபிஆர்எல்எப்


தமிழரின் நலன்களுக்காகத் தன்னலமின்றிப் பாடுபடும்எமது கட்சிக்கே உங்கள் வாக்குகள்......
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (பத்மநாபா)
நடைபெற இருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு -கிழக்கில் ஈபிஆர்எல்எவ் (பத்மநாபா). புளொட் ஆகிய அமைப்புக்கள் இணைந்து போட்டியிடுகின்றன.
யாழ்பாணம் திருகோணமலையில் ஈபிஆர்எல்எவ் இன் சின்னம் மெழுகுதிரியிலும் வன்னி மட்டக்களப்பில் புளொட்டின் நங்கூரம் சின்னத்திலும் போட்டியிடுகின்றனர்.
பாராளுமன்றப் பொதுத்தேர்தல்2010 திருகோணமலை
மக்களே! திருகோணமலையில் நீங்கள் கௌரவமாகவும் சுய மரியாதையுடனும் அச்சமின்றி வாழ்வதற்காக இணைந்த வடக்கு கிழக்கில் மாகாணசபையை உருவாக்கி திருகோணமலையைத் தலைநகரமாக்கியவர்கள் நாங்கள். அந்த சரித்திரம் படைத்த மாகாண சபையைத் தலைமையேற்ற முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் ஒரு சிறந்த கல்விமான் என்பதும் புத்திசாலித்தனமும் தீர்க்க தரிசனமும் மிக்க தலைவர் என்பதும் நீங்கள் அறிந்ததே. அவர் எமது பத்மநாபா ஈபிஆர்எல்எப் கட்சியின் தலைவர்களில் ஒருவர்.அறிவும் ஆற்றலும் அர்ப்பண உணர்வும் கொண்ட தோழர்கள் எம்முடன் இருக்கிறார்கள். எதையும் செயலுருவில் செய்து காட்டும் செயல் வீரர்கள்.நீங்கள் சந்;தித்த துன்பங்கள் இழப்புக்கள் எல்லாவற்றுக்குமே ஒரு விடிவு வேண்டும். நீதி நியாயம் வேண்டும்.
பாராளுமன்றப்; பொதுத் தேர்தல் 2010மக்களே!மாற்றத்திற்கு தயாராகுங்கள். மாற்றமொன்றே உங்கள் விமோசனத்திற்கு வழி
எமது அன்பிற்கினய திருகோணமலை மக்களே!நீங்கள் பட்ட வேதனைகள் துன்பங்கள் இந்த உலகம் அறியாததல்ல. உங்களுக்கு ஏற்பபட்ட இழப்புக்களும் வேதனைகளும் மனச்சாட்சியை நெருடியவை.மக்களே! திருகோணமலையில் நீங்கள் கௌரவமாகவும் சுய மரியாதையுடனும் அச்சமின்றி வாழ்வதற்காக இணைந்த வடக்கு கிழக்கில் மாகாணசபையை உருவாக்கி திருகோணமலையைத் தலைநகரமாக்கியவர்கள் நாங்கள். அந்த சரித்திரம் படைத்த மாகாண சபையைத் தலைமையேற்ற முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் ஒரு சிறந்த கல்விமான் என்பதும் புத்திசாலித்தனமும் தீர்க்க தரிசனமும் மிக்க தலைவர் என்பதும் நீங்கள் அறிந்ததே. அவர் எமது பத்மநாபா ஈபிஆர்எல்எப் கட்சியின் தலைவர்களில் ஒருவர்.அறிவும் ஆற்றலும் அர்ப்பண உணர்வும் கொண்ட தோழர்கள் எம்முடன் இருக்கிறார்கள். எதையும் செயலுருவில் செய்து காட்டும் செயல் வீரர்கள்.நீங்கள் சந்;தித்த துன்பங்கள் இழப்புக்கள் எல்லாவற்றுக்குமே ஒரு விடிவு வேண்டும். நீதி நியாயம் வேண்டும்.உங்கள் நிலம் ,பொருளாதாரம் ,மனித உரிமை என்பன பாதுகாக்கப்பட வேண்டும். மேம்படுத்தப்படவேண்டும்.இலங்கையின் ஏனைய பகுதிகளில் பாரிய அபிவிருத்திப் பணிகள் நடைபெறும் போது கடந்த 25 வருடங்களுக்கு மேலாக எந்த விதமான முன்னேற்றமோ அபிவிருத்தியோ இன்றி திருமலை ஸ்தம்பிதமடைந்து காணப்படுகிறது.எமது பாரம்பரிய தொழில் துறையான விவசாயமும், மீன் பிடியும், சுற்றுலாத்துறையும் புத்துயிர் பெறவேண்டும்.தொழில் துறைநகரமாக திருமலை நிர்மாணிக்கப்படவேண்டும். இளைஞர்கள் பெண்கள் எதிர் நோக்கும் பாரிய வேலை இல்லாப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும்.கல்விச்சாலைகள் பரவலாக நிர்மாணிக்கப்படவேண்டும்.எமது வீதிகள் வீட்டு வசதிகள் விஸ்தரிக்கப்படவேண்டும்.எல்லாவற்றுக்கும் மேலாக பீதியும் பதட்டமும் இல்லாதொழிக்கப்படவேண்டும்.நிலம், நிதி, காவல்துறை மீது அதிகாரம் கொண்டதாக மாகாணத்திற்கு அதிகாரப்பகிர்வு வேண்டும்.வழமையாக நீங்கள் தெரிவு செய்தவர்கள் உங்களுக்காக என்ன செய்தார்கள். உங்கள் வாக்குகளைப் பெற்று விட்ட திருமலையை எட்டிப்பாக்காதவர்களாகத்தானே அவர்கள் இருந்தார்hகள்.தற்போது உங்களுக்காக உங்கள் இன்பதுன்பங்களில் பங்கெடுத்து வாழ்பவர்களைத் தெரிவு செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது.மக்களே!மாற்றத்திற்கு தயாராகுங்கள். மாற்றமொன்றே உங்கள் விமோசனத்திற்கு வழி
மாற்றத்தை செயற்படுத்த ஆற்றலும், தீர்க்கதரிசனமும், அரசியல் ஞானமும் கொண்ட இந்தியாவின் நட்பை நேசிக்கும் பத்மநாபா ஈபிஆர்எல்எப் இன் தோழர்களுக்கு வாக்களியுங்கள்.எமது சின்னம் மெழுகுதிரி பத்மநாபா ஈபிஆர்எல்எப்

Followers

Blog Archive