Friday, April 23, 2010

ஜனாதிபதி பூட்டானிற்கு விஜயம்

Friday, April 23, 2010
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசின் புதிய அமைச்சரவையை நியமித்ததன் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ பூட்டானுக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவிருக்கின்றார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பூட்டானில் நாளை 23ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை நடைபெறவிருக்கின்ற 16ஆவது சார்க் மாநாட்டில் பங்கேற்பதற்காகவே ஜனாதிபதி அங்கு செல்லவிருக்கின்றார்.
2008ஆம் ஆண்டில் இலங்கையில் நடைபெற்ற 15ஆவது சார்க் உச்சி மாநாட்டின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது பொறுப்புக்களை பூட்டான் பிரதமரிடம் இந்த மாநாட்டின்போது ஒப்படைப்பார். 16ஆவது சார்க் உச்சி மாநாட்டில் இலங்கை தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது

ஜனநாயக மக்கள் முன்னணி ஐ.தே முன்னணியிலிருந்து விலகுகிறது?

Friday, April 23, 2010
ஐக்கிய தேசிய முன்னணியிலிருந்து விலகுவதற்கு ஜனநாயக மக்கள் முன்னணி தீர்மானித்துள்ளதாகப் பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய முன்னணி ஏற்கனவே வழங்கியிருந்த உறுதிமொழிக்கமைய தேசியப் பட்டியலில் ஆசனமொன்றைத் தமது கட்சிக்கு வழங்காமையே இதற்கான காரணமென அவர் சொன்னார்.
இவ்வாறான இணக்கப்பாடொன்றின் அடிப்படையிலேயே மனோ கணேசன் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டதாகவும் ஆனால் இணக்கப்பாட்டிற்கு அமைய ஐக்கிய தேசிய முன்னணி நடந்துகொள்ளாமையினால் தமது கட்சி இந்த முன்னணியிலிருந்து விலகி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருந்துகொண்டே சுயாதீனமாக இயங்கவுள்ளதாக அவர்எமக்குத் தெரிவித்தார்.
இதேவேளை நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற தொழிலாளர் தேசிய முன்னணியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் பி.திகாம்பரம் பாராளுமன்றத்தில் சுயாதீனமாகச் செயற்படத் தீர்மானித்துள்ளார்.
சில விடயங்களைக் கவனத்திற்கொண்டு இந்தத் தீர்மானத்தை எடுத்ததாகப் பாராளுமன்ற உறுப்பினர் பி. திகாம்பரம் கூறினார்.

இலங்கையை வழமைக்குக் கொண்டுவர, அரசாங்கம் தனக்குக் கிடைத்த ஆணையைச் சரியாகப் பயன்படுத்தவேண்டுமென அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Thursday, 22 April 2010
இலங்கையை வழமைக்குக் கொண்டுவர, அரசாங்கம் தனக்குக் கிடைத்த ஆணையைச் சரியாகப் பயன்படுத்தவேண்டுமென அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதற்காகத் தமது நாடு இலங்கையைத் தொடர்ந்தும் ஊக்குவிக்குமென அமெரிக்க உதவி ராஜாங்கச் செயலாளர் பிலிப் ஜே க்ரோலி கூறினார்.
அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற நாளாந்த செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

Followers

Blog Archive