Wednesday, June 20, 2012

சுவிஸ்சில் தோழர் நாபாவின் 22வது நினைவு தினம்!

Wednesday, June 20, 2012
தோழர் நாபாவின் 22வது நினைவு தினம்.

பாசிச புலிகளால் சென்னையில் படுகொலை செய்யப்பட்ட eprlf செயளாலர் நாயகம் தோழர் பத்பநாபா அவர்களுக்கு அவர் படுகொலை செய்யப்பட்ட தினமாகிய இன்று ஆனி 19 அன்று சுவிஸ் நாட்டில் உள்ள தோழர் பத்பநாபாவின் உண்மையான விசுவாசிகளாலும் ஆதரவாளர்களாலும் பொது மக்களாலும் நினைவு கூறப்பட்டது.

Thursday, June 14, 2012

கொலைகார புலிகளின் துப்பாக்கிச் சூட்டுப் பிரயோகத்தில் உயிரிழந்த தோழர் றொபேட்( தம்பிராசா சுபத்திரன்) நினைவுதினம்!

Thursday, June, 14, 2012
தோழர் றொபேட் (தம்பிராசா சுபத்திரன்) சுமார் கால் நூற்றாண்டுக்கும் மேலாக அரசியல், சமூக பிரச்சினைகளில் பிரக்ஞை கொண்டு செயற்பட்டவர். தமிழ் பேசும் மக்களின் விடிவிற்காக 23 வருடங்கள் தொடர்ச்சியாக அவர் ஈபிஆர்எல்எவ் இன் அரசியல் நடவடிக்கைகளில் முன்னணியிலிருந்து கருமமாற்றியவர். அவரது 9வது நினைவு தினம் இன்றாகும்.

சாவகச்சேரி நுணாவில் என்னும் இடத்தை பிறப்பிடமாக கொண்ட தோழர் றொபேட் அவரது 45ஆவது வயதில் 14.06.2003 அன்று புலிகளால் படுகொலை செய்யப்பட்டாh. தோழர் றொபேட்டின் குடும்ப சூழல், துன்ப, துயரங்கள், இன்னல்கள் ஏதுமற்றிருந்த போதும் சமூகத்தின் துன்ப துயரங்கள் சமூகத்தில் நிலவிய அநீதிகள் அகல வேண்டும் என்று அக்கறை கொண்டு பொதுவாழ்வில் ஈடுபட்டார். சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், ஒடுக்குமுறைகளுக்கு எதிராக கிளர்ச்சி செய்யத் துணிந்தார். அவரது இந்த ஈடுபாடு தான் அவர் ஈபிஆர்எல்எவ் உடன் இணைந்து கொள்ளக் காரணமாகியது. ஈபிஆர்எல்எவ் இன் அரசியல் நடவடிக்கைகளுடன் 23 வருடங்கள் முன்னணியில் இருந்து செயற்பட்ட அவர் இறுதிவரை தனது நிலைப்பாட்டில் உறுதியாய் இருந்தார். அவர் எதிர்கொண்ட எத்தகைய துன்பமும், நிதி நெருக்கடிகளும், கஷ்டங்களும், ஆசை வார்த்தைகளும், அச்சுறுத்தல்களும் அவரை சஞ்சலமடையச் செய்துவிடவில்லை.

1985ம் ஆண்டு இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட தோழர் றொபேட் 3 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை அரசின் தடுப்புக்காவலில் பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளானார். தோழர் றொபோட்டின் பெற்றோர் என்பதை தவிர எவ்வித குற்றமும் இழைத்திராத அவரது தந்தையார் 1989 இல் புலிகளால் கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். 1990 இல் அவரது தாயார் இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டார். எந்த இன்னலும், இடையூறும் அவரை நிலைகுலையச் செய்துவிடவில்லை. அவர் எதிர் கொண்ட தேர்தல்களில் எதிர்பார்த்த மக்கள் ஆதரவு கிட்டாத போதும் கொண்ட கொள்கையில் உறுதியோடும், நம்பிக்கையோடும் இறக்கும் வரை செயற்பட்டார்.

கட்சியில் யாழ் மாவட்டத்தின் இராணுவ பிரிவு தலைவராக, மத்திய குழு உறுப்பினராக, அரசியல் பீட உறுப்பினராகவும் தொடர்ச்சியாக 23 ஆண்டுகள் கட்சிக்குள் அதிகாரமுள்ள ஒருவராகவும். நிதியை கையாளும் ஸ்தானத்திலிருந்தபோதும் இவற்றை துஸ்பிரயோகம் செய்யாதார் என்ற பேச்சுக்களுக்கு இடமளிக்காத ஒருவராகவே விளங்கினார்.

இனப்பிரச்சினை தீர்வுக்கும், சமூக மாற்றத்திற்கும் ஆயுதப் போராட்டம் தான் வழி என்ற நிலைப்பாட்டுடனும் அதற்கு ஈபிஆர்எல்எவ் இன் கொள்கைகளும், வேலைத்திட்டமும் வழிவகுக்கும் என்ற நம்பிக்கையோடும் ஈபிஆர்எல்எவ் உடன் இணைந்து கொண்ட அவர் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் மாகாணசபை முறையின் கீழ் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை எட்டுவது சாத்தியம் என்ற நிலை உருவானபோது யாதார்த்தத்தை புரிந்து கொண்டு செயற்பட்டவர். சந்தர்ப்பத்தை தவறவிட்டு விட்டோம் என்று இன்று பல புத்திஜீவிகள், அரசியல் தலைவர்கள் ஏங்குகின்ற நிலையில் 25 வருடங்களுக்கு முன்னரே சரியான பக்கத்தை அடையாளம் கண்டு செயற்பட்டவர்களில் ஒருவராவார்.

தனது அரசியல் வாழ்வில் மக்களின் நம்பிக்கைகளுக்கு விசுவாசமாகவும், தனது தலைமையின் கீழ் கட்சிப் பணிகளை மேற்கொண்ட தோழர்கள் ஒவ்வொருவரது நலன் குறித்தும் அக்கறையோடு செயற்பட்டவர். தனது நலன்களை எப்போதும் மக்களின் நலன்களுக்கும், கட்சியின், தோழர்களின் நலன்களுக்கும் கீழ்ப்படுத்தி வாழ்ந்து காட்டியவர். விளைவுகளை எண்ணி கலங்காமல், பின்வாங்காமல் சரியானதை செய்து சாதனை புரியவதை சவாலாக ஏற்று செயற்பட்டவர்.

தவறுகளுக்கு எதிராக சளைக்காது போராடிய தோழர் றொபேட் திறமை எங்கிருந்தாலும் வெளிப்படையாய் பாராட்ட தயங்குவதில்லை. ஊர், பிரதேசம், இனம், நாடு, கட்சி என்ற எல்லைகளை கடந்து அவர் மனிதர்களை நேசித்தார். அவ்வாறே இன்று அவரும் நேசிக்கப்படுகின்றார். அவரது உன்னத சிந்தனைகளுக்காகவும், செயல்களுக்காகவும் என்றென்றும் நேசிக்கப்படுவார்.

மோகன் -யாழ்ப்பாணம்:
-------------------------------------------------------------------------------------
புலிகள் அரச படைகளுடன் யுத்தநிறுத்தம் செய்து இலங்கை அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டபின்னர் 14.06.2003 அன்று பாடசாலையில் மறைந்திருந்து தோழர் றொபேட் அவர்களை புலிகள் படுகொலை புரிந்தார்கள். அவரது 9வது ஆண்டு நினைவு தினம் இன்றாகும்!

தோழர் றொபர்ட் சுபத்திரன் அவர்கள் படுகொலை செய்யப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் உருண்டோடி விட்டன அவர் கால்நூற்றாண்டு காலம் தமிழ் சமூகத்தின் விடிவிற்காகவும் இலங்கையில்

இனங்களிடையே நல்லுறவை கட்டியெழுப்புவதற்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகவும் உலகளாவிய அளவில் இனவெறி நிறவெறி வன்முறை இவற்றிற்கு எதிராகவும் மானிட மேன்மையை நிலை நிறுத்துவதற்காகவும் தனது இடையறா உழைப்பை நல்கியவர் தோழர் றொபர்ட் 1970 களின் நடுப்பகுதியில் தேசிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபாடு கொண்ட தோழர் றொபர்ட் 1980 இல் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியில் இணைந்து கொண்டார். ஈழமாணவர் பொது மன்றம் என்ற வெகுஜன அமைப்பினூடாக யாழ் குடா நாட்டின் பல பகுதிகளிலும் திருமலை மட்டு ஆகிய பகுதிகளிலும் சமூகத்தினுள் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதில் சிறந்த பங்களிப்பை வழங்கியவர். மாணவர்கள் இளைஞர்களை அணிதிரட்டுவதுடன் அவர் தன்னை மட்டுப்படுத்திக் கொள்ளவில்லை. கிராமிய உழைப்பாளர்கள் வறிய விவசாயிகள் சாதி ஒடுக்குமுறையை எதிர்கொண்ட மக்கள் பெண்கள் என பல்வேறு தளங்களிலும் அவர் வேலை செய்தார். சிறு சிறு தொழிலகங்களில் கூட உழைப்பாளர்களை ஒன்றிணைக்கும் வேலையில் ஈடுபட்டார். அவர் பன்முக ஆளுமையை கொண்டிருந்தார். 1980 இல் நடைபெற்ற சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கும் மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதற்குமாக நடைபெற்ற நீண்ட பாதயாத்திரையில் பொலிசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியபோது பலருக்கு அவர் முதலுதவி சிகிச்சை அளித்தது இன்றும் பல நெஞ்சங்களில் நிழலாடுகிறது. ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மக்கள் விடுதலைப்படை அமைப்பு கட்டியெழுப்பப்பட்டபோது அதன் ஆரம்ப கர்த்தாவாக அதனை வழிநடத்துபவராக அவர் செயற்பட்டார். தோழர் பத்மநாபா தோழர் றொபர்ட்டிற்கும் மக்கள் விடுதலைப்படையின் ஏனைய சில மூத்த அங்கத்தவர்களுக்கும் மக்களுடன் கலந்திருந்து கொண்டு அவர்களின் இன்ப துன்பங்களில் பங்குபற்றிக் கொண்டு எவ்வாறு போராடுவது என்பதை நடைமுறை சார்ந்த செயற்பாடுகள் மூலம் தெளிவுபடுத்தியிருந்தார். சமூகத்தினுள்ளும் கட்சியினுள்ளும் சிறந்த அனுபவங்களை அவர் பெற்றிருந்தார். மார்க்சிய இலக்கியங்கள் யதார்த்தவாத நாவல்கள் கவிதைகள் சினிமா மற்றும் படைப்புக்களில் அவர் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தார். பிற்காலகட்டத்தில் அவர் பின்நவீனத்துவ கருத்துக்களிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். எமது சமூகத்தினுள் புழக்கத்தில் உள்ள வாய்மொழி சொற்கள் பழமொழிகள் போன்றவற்றில் அவர் களஞ்சியமாகவே காணப்பட்டார். சமயங்களில் விடயங்களை விளங்க வைப்பதில் மிக ஆற்றல் படைத்தவராக காணப்பட்டார். தனது நடைமுறைகளின் மூலம் தனது கட்சியின் தோழர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் நண்பர்களுக்கும் அவர் சிறந்த வழிகாட்டியாக காணப்பட்டார். நகைச்சுவை உணர்வு கொண்டவர் கருத்து வேற்றுமைகள் இருந்தாலும் இன்முகத்துடன் பழகுவதும் மற்றவருக்கு துன்பத்தில் உதவுவதும் அவரின் அருங்குணங்கள். இவற்றை அவர் ஆரவாரம் செய்வதில்லை.

1990 இல் சோவியத்யூனியன் கிழக்கு ஐரோப்பாவின் வீழ்ச்சியின் பின்னர் மார்க்சின் அரசியல் பொருளாதாரம் பற்றிய தேடல்களில் ஈடுபட்டார். அந்த அரசியல் பொருளாதாரமே அவரின் தீவிர ஆர்வத்துக்குரிய சமூக பொருளாதார விடயமாக இருந்தது.

அவர் எத்தகைய இடர் நேரினும் கலங்காத மனிதனாக நிதானமாக காரியமாற்றுபவராக காணப்பட்டார். அவரது வரலாற்றில் பெரும்பகுதி சோகமானதாகவும் துன்பம் நிறைந்ததாகவும் விடா உறுதியுடன் செயற்படுவதற்கான மனவுறுதியை ஏற்படுத்துவதாகவும் அமைந்திருந்தது. அவர் வாழ்க்கையின் இருண்ட பக்கங்களில்தான் வாழ்ந்து கொண்டிருந்தார், போராடிக்கொண்டிருந்தார். சித்திரவதை முகாம்களிலும் சிறைச்சாலைகளிலும் அகதி முகாம்களிலும் துன்பத்தில் உழலும் மக்கள் மத்தியிலும் வாழ்ந்து கொண்டும் போராடிக்கொண்டும் இருந்தார். மகிழச்சியானதோ மினுமினுப்பானதோ போன்ற பக்கங்கள் அவரது போராட்ட வாழ்க்கையில் இருக்கவில்லை. வசதியாக வாழ்வதற்கு அவருக்கு எத்தனையோ வாய்ப்புக்கள் இருந்தன அவர் நினைத்திருந்தால் எப்படியோ வாழ்ந்திருக்கலாம்.

ஆனால் அவர் துன்பத்திலும் அடக்குமுறையினுள்ளும் உழலும் சமூகத்திற்காக வாழ்ந்தார். அதன் நம்பிக்கையை பெறுவதற்கு அவர் இடையறாது உழைத்தார். சமூகத்தின் மீதான தனது அன்பை இதயத்தில் தேக்கி வைத்திருந்தார். எத்தகைய மூடத்தனமும் பகுத்தறிவுக்கு ஒவ்வாத விடயங்களும் அவரை அண்ட முடியாது. சமூகத்தில் சாதாரண மனிதர்கள் கல்விமான்கள், ஊடகவியலாளர்கள் படைப்பாளிகள் அரசியல் கட்சி

அங்கத்தவர்கள் தலைவர்கள் என பல திறத்தாரோடும் உறவை பேணினார். ஓரு இனிமையான நற்பண்புகள் நிறைந்த ஆளுமைமிக்க மனிதர் என்ற பெயர் அவருக்கு இருந்தது. 1985 முற்பகுதி தொடக்கம் 1987 நடுப்பகுதி வரை அவர் ஸ்ரீலங்கா அரசின் சித்திரவதை முகாம்களிலும் சிறையிலும் காலம் கழி;த்தார். சிறையில் பல்வேறு இயக்கங்கள் அரசியல் கட்சிகளை சேர்ந்த அங்கத்தவர்கள் மத்தியில் பேரபிமானம் பெற்றவராக றொபர்ட் தோழர் திகழ்ந்தார். அப்போது அவருக்கு ரஞ்சன் என்ற ஒரு பெயரும் இருந்தது. சிறையில் நடைபெற்ற உண்ணாவிரத மற்றும் சத்தியாக்கிரக போராட்டங்களில் அவர் முழுமையான ஈடுபாட்டுடன் பங்களித்தார். பல்வேறு இயக்கங்களின் போராளிகளுக்கும் அவர் ஒரு நண்பனாகவும், வழிகாட்டியாகவும் திகழ்ந்தார். இன்று உலகம் முழுவதும் பரந்துவாழும் பலநெஞ்சங்களுக்கு ஆதர்சமாக திகழ்ந்தார். ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு அவர் சமகாலத்தின் தலைசிறந்த உதாரண மனிதனாக திகழந்தார். ஒரு தோழர் குறிப்பிட்டது போல் இயக்கத்திற்கு எந்த உடையுடன் வந்தாரோ அதனோடுதான் அவர் மரணித்தார் என்பதுதான் உண்மை. சிறையில் இருந்து திரும்பியவர்கள் வீடு செல்வதற்கான ஏற்பாடுகளில் அவர் சிறையில் இருந்து மீண்ட பின்னரும் அவர் பல மாதங்கள் உழைத்தார். விடுதலை செய்யப்படாதவர்களை சிறையில் சென்று சந்தித்து அவர்களுக்கு உற்சாகமூட்டினார்.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மிகப் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கிய 80 களின் முற்பகுதியில் இருந்து நடுப்பகுதிவரை பொருளாதார சுமையை குறைப்பதற்கு அவர் வழங்கிய பங்களிப்பு முக்கியமானது.

இந்தியாவிலும் அவர் பல இலக்கிய அரசியல் முற்போக்கு சக்திகளுடன் நட்புறவை வளர்த்துக் கொண்டார். எப்போதும் இலகுவான வேலைகளை எடுத்துச் செய்வதிலும் வாய்ச்சவாடலில் ஈடுபட்டிருந்தவர்கள் மத்தியில் அவர் கடினமான பணிகளை மேற்கொண்டிருந்தார். அகதி முகாம்களில் வாழ்ந்த தோழர்களை சென்று சந்திப்பதில் அவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதில் அவர் அர்ப்பணத்துடன் செயற்பட்டார். நம்பியவர்களை நட்டாற்றில் விடக்கூடாது ,சொன்ன சொல்லை காப்பாற்ற வேண்டும் என்பவற்றில் எல்லாம் அவர் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார்.

மக்கள் மத்தியில் வேலை செய்வது நெருக்கடியான போர்க்களங்களை எதிர் கொள்வது அகதி முகாம்களில் வாழ்பவர்களின் நலன்களை கவனிப்பது மக்களுக்கு உருப்படியாக எதையாவது செய்ய வேண்டும் என்ற அவரின் குணாதிசயங்களாக இருந்தன.

1995 இற்குப் பின்னர் யாழில் வேலை செய்ய கிடைத்த சந்தர்ப்பத்தில் சமூகத்தில் நட்பையும் உறவையும் வளர்த்தார். அவர் யாழ் மாநகரசபை அங்கத்தவராக செயற்பட்ட போது ஆற்றிய உரைகள் சிந்தனையை தூண்டுபவை. புகழ்மிக்கவை. சகல கட்சிகளை சார்ந்த அங்கத்தவர்களும் யாழ் ஊடகவியலாளர்களும் அவர் மீது பெருவாஞ்சை கொண்டிருந்தனர். நிமிர்ந்த உறுதியான வசீகரமான தோற்றம் கொண்ட மனிதராக எங்கள் றொபர்ட் தோழர் காணப்பட்டார்.

யாழ்மாநகர சபையில் ஒருமக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதி என்றவகையில் அவரின் பங்களிப்பு மகத்தானது. ஒருஉள்+ராட்சிசபை அங்கத்தவர் பொறுப்பை கூட அவர் மிக நேர்த்தியாக கையாண்டார். சகல கட்சிகளின் அங்கத்தவர்கள் உறுப்பினர்களுடன் நல்லுறவைப் பேணினார். கட்சிகளுக்கப்பால் அவர்களும் தோழர் றொபேர்ட்டின் மீது பேரன்பு ,மதிப்பும் கொண்டிருந்தார்கள். ஏனைய உள்ளுராட்சிசபைகளில் அங்கத்துவம் வகித்த கட்சியின் அங்கத்தவர்களுக்கு உறுப்பினர்களுக்கு எவ்வாறு மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண்பது கையாள்வது என்பது பற்றிய சிறந்த வழிகாட்டுதலைச் செய்தார். யாழ்நூலகத்தை திறப்பதற்காக அவர் அயரா முயற்சியை மேற்கொண்டிருந்தார். தெற்கில் இருந்து வடக்கிற்கு விஜயம்செய்த ஊடகவியலாளர்கள் உள்ள+ர் அரசியல் தலைவர்கள் சாதாரணமக்கள் மனித உரிமையாளர்களுடன் உறவை வளர்த்தார்.

அதிகார பகிர்விற்காகவும் ஜனநாயகத்திற்காகவும், மனித உரிமைகளுக்காகவும், அவர் இடையறாது போராடினார். அவரை படுகொலை செய்த புலிகள் இயக்கத்திற்கு எந்த நன் நோக்கும் இருக்க முடியாது. அவர்கள் இன்றுவரை தோழர் றொபர்ட்டின் படுகொலையை உரிமைகோர முடியாத கோழைகளாகத்தான் இருக்கிறார்கள். தோழர் றொபேர்ட் தனது வாழ்வாலும் மரணத்தாலும் தமிழ் பாசிஸ்ட்டுக்களை வெட்கி தலைகுனிய வைத்தள்ளார். தமிழ் பாசிஸ்டுக்கள் எவ்வளவு கேவலமானவர்கள் என்பதை எவ்வளவு நயவஞ்சகமானவர்கள் என்பதை பாடசாலை வகுப்பறையில் மறைந்திருந்து படுகொலையை அரங்கேற்றியதன் மூலம் நிரூபித்துள்ளார்கள். தோழர் றொபர்ட் தனது மரணத்தின் மூலமும் தமிழ் புலிபாசிஸ்டுக்களை அம்பலப்படுத்திச் சென்றுள்ளார்.

அன்னாரின் வாழ்வையும் மரணத்தையும் வரலாறு உரிய முறையில் பதிவு செய்யும். அப்போது புலிபாசிஸ்டுக்கள் வரலாற்றின் குப்பைத் தொட்டியில் இருப்பார்கள்.

தோழர் றொபர்ட்டிற்கும் ஜனநாயகத்திற்கான போராட்டத்தில் மரணித்த போராட்டக்காரர்களுக்கும் மக்களுக்கும் எம் இதய அஞ்சலிகள்.

நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு த.தே.கூ. உட்படஅனைத்துக் கட்சியினரையும் அழைக்க அரசாங்கம் தொடர்ந்தும் முயற்சி-கெஹெலிய ரம்புக்வெல்ல!

Thursday, June, 14, 2012
அரசியல் தீர்வு காண்பதற்காக நிறுவப்படவுள்ள நாடாளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உட்பட அனைத்துக் கட்சியினரையும் அழைத்து வருவதற்கான முயற்சிகளில் அரசாங்கம் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றது' என்று என்று ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவையின் பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

'13ஆவது திருத்தச் சட்டம், பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் வௌ;வேறு கட்சியினருக்கும் வௌ;வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. இவை தொடர்பிலும் இந்த நாடாளுமன்றத் தெரிவுக்குழுக் கூட்டத்தின் போது கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் எட்டப்படும்' என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் சமாதானத்தை நிலைநிறுத்துவதற்காக அரசாங்கம் சில நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய கடப்பாட்டில் உள்ளது. அதற்கான முயற்சியே இந்த நாடாளுமன்றத் தெரிவுக்குழுவாகும். இதில் பங்குபற்றுவோம், பங்குபற்ற மாட்டோம் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் அடிக்கடி மாறுபட்ட கருத்துக்களை முன்வைத்து வருகின்றது.

இருப்பினும் அக்கட்சி உட்பட அனைத்துக் கட்சியினரையும் இந்த குழுவுக்குள் அழைத்து வருவதற்கான முயற்சிகளை அரசாங்கம் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றது. அனைத்துக் கட்சியினரையும் முதலில் இக்குழுவில் அமரச் செய்ய வேண்டும்.

அதன் பின்னரே நாம் அதில் என்ன பேச வேண்டும் என்பதை தீர்மானிப்போம். அதற்காக குழுக் கூட்டத்தின் போது பேசுவதற்கு எதுவும் இல்லை என்று கூறவில்லை. 13ஆவது திருத்தச் சட்டம், பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் உள்ளிட்ட பல அம்சங்கள் தொடர்பில் அதன்போது பேசப்படும்' என்று அமைச்சர் கெஹெலிய மேலும் கூறினார்.

Tuesday, June 5, 2012

நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து அமெரிக்காவிற்கும், இந்தியாவிற்கும் விளக்கம்!

Tuesday, June 05, 2012
நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து அமெரிக்காவிற்கும், இந்தியாவிற்கும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

யுத்தம் இடம்பெற்ற பகுதிகள் உள்ளிட்ட நாட்டின் சகல பகுதிகளிலும் அரசாங்கம் மேற்கொண்டு வரும் நல்லிணக்கப் பணிகள் குறித்து இரு நாடுகளுக்கும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாடு ஒன்றின் போது இந்திய மற்றும் அமெரிக்கப் பிரதிநிதிகளுக்கு இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ ஆகியோர் இவ்வாறு விளக்கமளித்துள்ளனர்.

இந்திய பாதுகாப்புச் செயலாளர் ஏ.கே. ஆன்டனி மற்றும் அமெரிக்காவின் கூட்டுப்படைகளின் தளபதி ஜெனரல் மார்டீன் டெம்ஸ்கீ ஆகியோரை இலங்கைப் பிரதிநிதிகள் தனித்தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இலங்கைப் படையினருக்கு எதிர்காலத்தில் பயிற்சிகளை வழங்குவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இரு நாட்டு பிரதிநிதிகளிடமும், பாதுகாப்புச் செயலாளர் கோரியுள்ளார்.

இந்தக் கோரிக்கை தொடர்பில் இரு நாடுகளும் சாதகமான பதிலை அளித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் இணைய தளம் தகவல் வெளியிட்டுள்ளது.

யுத்தத்தின் பின்னரான இலங்கையில் அரசாங்கம் மேற்கொண்டு வரும் நல்லிணக்க முனைப்புக்கள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.

இலங்கைக்குள் பிரவேசித்த சனல்-4 ஊடகவியலாளரும், அறிவிப்பாளருமான சிராணி சபாரட்னம் நாடு கடத்தப்பட்டார்!

Tuesday, June, 05, 2012
இலங்கைக்குள் பிரவேசித்த சனல்-4 ஊடகவியலாளரும், அறிவிப்பாளருமான சிராணி சபாரட்னம் என்ற இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட பெண் நாடு கடத்தப்பட்டுள்ளார்.குறித்த ஊடகவியலாளரின் கணவரும், சனல்- 4 ஊடகத்தின் பணிப்பாளருமான ஸ்டுவர்ட் கொஸ்ரேவும் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். இந்த இருவரும் இலங்கை குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தினால் கறுப்புப் பட்டியல் இடப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய புலனாய்வுப் பிரிவினர் குறித்த இருவரையும் கைது செய்து நாடு கடத்தியுள்ளனர். நாடு கடத்துவதற்கு முன்னர் இவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

சிரானி சபாரட்னம் ஏழரை மணித்தியாலங்கள் நாட்டில் தங்கியிருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. பிரித்தானிய கடவுச் சீட்டைப் பயன்படுத்தி அவர் நாட்டிற்குள் பிரவேசித்துள்ளார்.

இதற்கு முன்னர் பல தடவைகள் வெவ்வேறு பெயர்களில் குறித்த பெண் ஊடகவியலாளர் நாட்டிற்குள் பிரவேசித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது
.

Friday, April 20, 2012

சுஷ்மா சுவராஜுக்கு அலரிமாளிகையில் விருந்து; இந்திய குழு மலையகத்திற்கும் விஜயம்!


இந்திய மக்களவை எதிர்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் இன்று காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் அலரி மாளிகையில்  விருந்துபசாரத்தில் கலந்துகொண்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் பந்துல ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று இந்திய எதிர்க்கட்சி தலைவர் இந்த விருந்துபசாரத்தில் கலந்துகொண்டதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

இதன்போது இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் அஷோக் கே காந்தா, வெளிவிவகார அமைச்சர் பேராசி்ரியர் ஜீ.எல்.பீரிஸ்,  ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.

இதேவேளை இந்திய வம்சாவளி மக்களை சந்திக்கும் வகையில் இந்திய  நாடாளுமன்ற உறுப்பினர் குழு இன்று மதியம் ஹட்டன் நகரை சென்றடைந்தது. பெருந்தோட்ட தொழலாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் இவர்களுக்கு உற்சாக வரவேற்பளித்ததாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

அதனை தொடர்ந்து பெருந்தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த மக்களை சந்தித்து அவர்களது குறைபாடுகளையும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டறிந்து கொண்டனர்.

தமக்கு இந்திய அரசு தொடர்ந்தும் உதவிகளை வழங்கவேண்டுமென மக்கள் இதன்போது கோரிக்கை முன்வைத்ததாக இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் சுதர்ஷன நாச்சியப்பன் தெரிவித்துள்ளார்.
Friday, April, 20, 2012

பலவந்தமாக பணம் பெற்ற மூன்று பொலிஸ் கான்ஸ்ரபில்கள் கைது!

தம்பதியினரிடமிருந்து பலவந்தமாக 20 ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொண்ட மூன்று பொலிஸ் கான்ஸ்ரபில்கன் மிரிஹாண விசேட பொலிஸ் விசாரணைக் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாராளுமன்ற திடலுக்கருகில் கார் ஒன்றுக்குள் இருந்த தம்பதியினரிடமிருந்து குறித்த கான்ஸ்ரபில்கள் பணத்தை பலவந்தமாக பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களில் மிரிஹாணா பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு கான்ஸ்ரபில்களும் ஹோமாகம பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த ஒரு கான்ஸ்ரபிலும் அடங்குகின்றனர்.

பிரதேசத்திற்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய மேற்கொள்ளுப்பட்ட விசாரணைகளின்போது சந்தேகநபர்களான மூன்று பொலிஸ் கான்ஸ்ரபில்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Wednesday, March 7, 2012

53 இஸ்லாமிய நாடுகள் பேரவை இலங்கையை ஆதரிக்க தீர்மானம்!

Wednesday, March 7, 2012
ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் இலங்கைக்கு எதிராக ஏதாவது பிரேரணை கொண்டு வரப்படுமாயின் அதற்கு எதிராக இலங்கைக்கு ஆதரவு நல்குவதற்கு மேலும் பல நாடுகள் முன்வந்திருப்பதாக மகளிர் விவகார சிறுவர் அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா நேற்றுத் தெரிவித்தார்.

இவ்விவகாரத்தில் இலங்கைக்கு ஆதரவு நல்குவதற்கு 53 இஸ்லாமிய நாடுகள் அங்கம் வகிக்கும் இஸ்லாமிய மாநாட்டுப் பேரவை (ஓ.ஐ.சி) முன்வந்திருப்பதாகவும் அவர் கூறினார்.

இவ்விவகாரத்தில் இலங்கைக்கு ஆதரவு நல்குவதற்கென விசேட தீர்மானமொன்றை நிறைவேற்றி அத்தீர்மானத்தை ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைப் பேரவை மாநாட்டின் போதே இஸ்லாமிய மாநாட்டு பேரவை அறிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமை பேரவை மாநாட்டின் நிமித்தம் ஜெனீவா சென்று திரும்பியுள்ள இலங்கை அமைச்சர்கள் குழுவில் இடம்பெற்றிருந்த பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவுடன் தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ஜெனீவா மனித உரிமை பேரவை மாநாட்டின் போது இலங்கைக்கு எதிராக ஏதாவது பிரேரணை கொண்டு வரப்படுமாயின் அதற்கு எதிராக இலங்கைக்கு ஆதரவு திரட்டிக் கொள்ளுவதற்காக உலகின் பல நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களையும், முக்கியஸ்தர்களையும் நாம் சந்தித்து பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளோம். இப்பேச்சுவார்த்தைகளின் ஊடாக நல்ல முன்னேற்றங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

இவ்விவகாரம் தொடர்பாக நாம் பேச்சுவார்த்தை நடத்திய எல்லா நாடுகளும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் ஆறிக்கையை பெரிதும் வரவேற்றன.

மனித உரிமைப் பேரவை மாநாட்டில் இலங்கைக்கு எதிராக ஏதாவது பிரேரணை கொண்டு வரப்படுமாயின் அதற்கு எதிராக இலங்கைக்கு ஆதரவு நல்க வேண்டுமென 53 இஸ்லாமிய நாடுகள் அங்கம் வகிக்கும் இஸ்லாமிய மாநாட்டு பேரவை செயலாளர் நாயகம் எக்மலடின் உள்ளிட்ட முக்கியஸ்தர்களைச் சந்தித்து வேண்டுகோள் விடுத்தோம்.

இச்சந்திப்புக்கு முன்னர் மாநாட்டு பேரவையின் செயலாளர் நாயகத்தை தாம் பிரத்தியேகமாக நேரில் சந்தித்து இவ்விவகாரத்தில் இலங்கைக்கு ஆதரவு நல்க வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துக் கூறினேன்.

எமது வேண்டுகோளை ஏற்று இஸ்லாமிய மாநாட்டு பேரவை விசேடமாகக் கூடியது. இக்கூட்டத்தின் போது இப்பேரவையில் அங்கம் வகிக்கும் சவூதி அரேபியா, பங்களாதேசம், பாகிஸ்தான், மாலைதீவு போன்ற நாடுகள் மனித உரிமை பேரவை மாநாட்டில் இலங்கைக்கு எதிராக ஏதாவது பிரேரணை கொண்டு வரப்படுமாயின் அதற்கு எதிராக இலங்கைக்கு ஆதரவு அளிக்க வேண்டும் எனப் பலமாக வலியுறுத்தின.

இப்பேரவையின் கூட்டத்தின் போது பயங்கரவாதம் முழுமையாக ஒழிக்கப்பட்டு இப்போது தான் இருவருடங்களாகின்றன. அங்கு அபிவிருத்தி ஏற்படுகின்றது. அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் சிறப்பாகவும் முன்னேற்றகரமாகவும் உள்ளன. அதனால் இவ்விவகாரத்தில் இலங்கைக்கு சந்தர்ப்பமும், நேர காலமும் வழங்கப்பட வேண்டும். கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை பெரிதும் வரக்கூடியதாகவுள்ளது.

இலங்கை ஒரு சிறிய நாடு. இந்நாட்டுக்கு சந்தர்ப்பமும், நேர காலமும் வழங்காமல் அவசர அவசரமாக நடவடிக்கை எடுப்பதல்ல என்றும் சுட்டிக்காட்டப்பட்டதுடன் இலங்கைக்கு ஆதரவு நல்குவதற்கு, தீர்மானம் எடுக்கப்பட்டன. இத்தீர்மானத்தை இஸ்லாமிய மாநாட்டுப் பேரவை, மனித உரிமை பேரவை மாநாட்டின் போதும் அறிவித்தது என்றார்.

குற்றவியல் சட்டத்தில் மாற்றம் ஏற்படுத்தப்படும் - அரசாங்கம்!

Wednesday, March 7, 2012
நாட்டின் குற்றவியல் சட்டத்தில் மாற்றம் ஏற்படுத்தப்படும் எனஅரசாங்கம் அறிவித்துள்ளது.

நாட்டின் ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் சட்டத்தரணிகளை கடமையில் ஈடுபடுத்தும் வகையில் சட்டத்தில் மாற்றம் ஏற்படுத்தப்படும் என முன்னாள் சட்ட மாஅதிபரும், அரசாங்கத்தின் சட்ட ஆலோசகருமான மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அவர் இதனைக்குறிப்பிட்டுள்ளார். மக்களின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்துவதில்அரசாங்கம் கூடுதல் முனைப்பு காட்டி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக சித்திரவதைகளிலிருந்து மீளக் கூடிய வகையிலான பாதுகாப்புஏற்படுத்திக்கொடுக்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.

சித்திரவதைகளுக்கு எதிரான சர்வதேச பிரகடனங்களுக்கு அமைவாகஇலங்கையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மேலும் சட்டத் திருத்தங்கள்செய்யப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில சித்திரவதைச் சம்பவங்களுக்கு எதிராக ஏற்கனவே வழக்குத்தொடரப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சீனாவின் ஒத்துழைப்புக்கு பாதுகாப்பு செயலாளர் நன்றி பாராட்டியுள்ளார்!

Wednesday, March 7, 2012
சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வரும் இராணுவ மற்றும் பொருளாதாரஒத்துழைப்புகளுக்கு பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ நன்றி பாராட்டியுள்ளார்.

பயங்கரவாதத்தை இல்லாதொழிக்கும் மிக நெருக்கடியான முனைப்புக்களின்போது சீனாவின் ஒத்துழைப்பு அளப்பரியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எஞ்சியுள்ள புலி உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் நாட்டின்ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்த முயற்சித்து வருகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளுக்கு 55 ஆண்டுகள்பூர்த்தியாவதனை முன்னிட்டு பெய்ஜிங்கில் நடைபெற்ற விசேட நிகழ்வில் கலந்து கொண்ட போதுஅவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் மெய்யான நல்லிணக்க முனைப்புக்களை பலவீனப்படுத்தும்வகையில் சில மேற்குலக நாடுகளும் புலி ஆதரவாளர்களும் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையில் மிகவும் நெருக்கமான உறவு காணப்படுவதாகவும்இந்த உறவு தொடர்ந்தும் நீடிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Monday, February 13, 2012

யாழ். அச்சுவேலியில் படையினர் நடத்திய மருத்துவ முகாம்!

Monday, February 13, 2012
511 ஆவது படைப்பிரிவின் ஏற்பாட்டில் பிரிகேடியர் கேர்ணல் எம்.டீ.யூ.வி. குணதிலக தலைமையில் யாழ்ப்பாணத்தில் இன்று இலவச மருத்துவ முகாமொன்று இடம்பெற்றது.

அச்சுவேலி மத்திய கல்லூரியில் இடம்பெற்ற இம்முகாமில் சுமார் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சையில் ஈடுபட்டனர்.

இதன்போது, 400 பேருக்கு இலவசமாக கண்ணாடிகள் வழங்கப்பட்டன. அத்துடன் சுமார் ஐம்பது கர்ப்பிணித் தாய்மார்களுக்கு போஷாக்கான உணவும் வழங்கப்பட்டது.

அமெரிக்க குழுவினருடன் அமைச்சர் ரவூப் சந்திப்பு!

Monday, February 13, 2012
இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள தெற்காசியப் பிராந்தியங்களுக்கான வெளிவிவகார அமைச்சர் ரொபர்ட் ஓ பிளேக் , அமெரிக்காவின் பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் ஜனநாயக உரிமைகள் தொடர்பான உதவிச் செயலாளர் மரி ஒட்டே குழுவினர் நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீமை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது, நாட்டின் தற்போதைய அரசியல், பொருளாதாரம் நிலைம உட்பட பலதரப்பட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Followers

Blog Archive