Friday, February 4, 2011

நாட்டின் எதிர்காலப் பாதை தீர்மானம் மிக்கது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்!

Friday, February 4, 2011
முப்பது வருடகால பயங்கரவாதம் காரணமாக தேசத்திற்கு ஏற்பட்டுள்ள உயிரிழப்புக்களைத் தவிர ஏனைய அனைத்தையும் பெற்றுக் கொடுக்க வேண்டிய சவாலை எதிர்நோக்கியுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

சுதந்திரத்தை வென்றெடுப்பது இனமொன்றின் முன்பாகவுள்ள சவாலாக அமைந்துள்ளதாகவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

இத்தகு சுதந்திரத்தைப் பாதுகாத்துக் கொள்வது அதனைவிட பாரிய சவாலாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இன்று முற்பகல கதிர்காமத்தில் நடைபெற்ற 63 ஆவது சுதந்திரதினக் கொண்டாட்ட தேசிய நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இந்த விடயங்களைக் கூறினார்.

காலநிலை மாற்றம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களின் தரத்தை மேம்படுத்துவதற்கும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக இதன்போது ஜனாதிபதி தெரிவித்தார்.

சுதந்திரத்தினை பெற்றுக் கொள்வது என்பது நாட்டிற்கு மிகவும் சவாலான விடயமாகும் என்றும் பெற்றுக் கொண்ட சுதந்திரத்தினைப் பாதுகாப்பது அதனைவிட சவாலான விடயமாகும் எனவும் ஜனாதிபதி தனது உரையில் சுட்டிக்காட்டினார்.

இந்த சுதந்திரத்தினை அடைவதற்காகவும் அதனை எமது தாய் நாட்டில் பாதுகாப்பதற்காகவும் யாருமே முயற்சித்திராத பல முயற்சிகளை தாம் மேற்கொண்டதாக ஜனாதிபதி கூறினார்

நாட்டின் எதிர்காலப் பாதை தீர்மானம் மிக்கதாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கடந்த காலங்களில் கொழும்பில் மட்டுமே நடைபெற்ற தேசிய சுதந்திரதின நிகழ்வு தற்போது கிராமத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

எனவே சட்டத்திற்கு மதிப்பளிக்கும் சமூகத்தினை உருவாக்க வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்திய ஜனாதிபதி பிரபல்யமான தீர்மானங்களை எடுப்பதனால் மட்டும் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது என்றும் கூறினார்.

நாட்டிற்காக தீர்மானங்ளை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஜனநாயத்தினை போன்றே தாய்நாட்டின் ஒருமைப்பாட்டினையும் ஐக்கியத்தையும் பாதுகாக்க வேண்டியுள்ளதாக தமது சுதந்திரதின உரையில் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மெதிரிகிரிய கவுடுல்ல ஓயா நீர்த் தேக்கத்தின் வான்கதவுகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளன!

Friday, February 4, 2011
மெதிரிகிரிய கவுடுல்ல ஓயா நீர்த் தேக்கத்தின் வான்கதவுகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளதால் அண்மித்த பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக சுற்றுப்புறப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அந்த இடங்களில் இருந்து அகற்றப்பட்டு வருவதாக பொலநறுவை இடர்முகாமைத்துவ இணைப்பதிகாரி உபுல் நாணயக்கார குறிப்பிட்டார்.

மாவட்ட செயலாளரின் ஆலோசனைக்கமைய இராணுவம் மற்றும் பொலிஸாரின் ஒத்துழைப்புக்களும் இந்த நடவடிக்கைக்காக பெறப்பட்டுள்ளன.

சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு ஐந்தாம்கட்ட நிதியுதவி வழங்கப்படவுள்ளது!

Friday, February 4, 2011
இலங்கையின் பொருளாதாரதிற்கு ஒத்துழைப்பு வழங்கும் செயற்திட்டத்தின் கீழ் சர்வதேச நாணய நிதியத்தினால் ஐந்தாம் கட்ட நிதியுதவியை வழங்குவதற்கான நிறைவேற்றுக் குழுவின் அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் பிரகாரம் இலங்கைக்கு 216 தசம் 6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படவுள்ளன.

இதனுடன் சேர்த்து மொத்தமாக ஒன்று தசம் 516 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவி சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்படவுள்ளது.

இதற்கு முன்னர் வழங்கப்பட்ட நிதி இலங்கை அதிகாரிகளால் சிறந்த முறையில் பயன்படுத்தப்படாமையால் தொடர்ந்தும் நிதியுதவி வழங்குவதற்குத் தீர்மானித்ததாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழுவின் பிரதிப் பணிப்பாளரும் பதில் தலைவருமான நயோயுகி சினொகரா கூறினார்.

2009 ஆம் ஆண்டு ஜூலை 24 அம் திகதி இலங்கைக்கு இரண்டாயிரத்து 599 தசம் 4 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தினால் அனுமதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Followers

Blog Archive