Friday, July 2, 2010

இன்று தமிழ் அரசியல் அமைப்புக்கள்; ஒன்றுகூடி இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாகவும் மக்கள் எதிர்நோக்கும் அன்றாட நிலைமைகள் தொடர்பாகவும் ஆராய்ந்தனர்.,

Friday, July 2, 2010
இன்று தமிழ் அரசியல் அமைப்புக்கள்; ஒன்றுகூடி இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாகவும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் யுத்தத்திற்கு பிந்திய அன்றாட நிலைமைகள் தொடர்பாகவும் ஆராய்ந்தனர்.

இந்தக் கூட்டத்தில் த.வி.கூ ஈ.பி.டி.பி பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப் புளொட் ஜனநாயக மக்கள் முன்னணி தமிழர் விடுதலை முன்னணிதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆகிய அமைப்புக்கள் பங்கு கொண்டிருந்தன.

இவ் அமைப்புக்களின் தலைவர்களான திரு. வீ. ஆனந்தசங்கரி திரு. டக்ளஸ் தேவானந்தா திரு. சந்திரகுமார் திரு. வரதராஜப்பெருமாள் திரு. ஸ்ரீதரன் திரு. சித்தார்த்தன் திரு. ராகவன் திரு. சிவாஜிலிங்கம் திரு. உதயராஜா திரு. குமரகுருபரன்செரின் சேவியர் மேகலா சண்முகம் திரு. சந்திரஹாசன் திரு. கைலேஸ்வரராஜா திரு. பிரசாந் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். மேலும் அக்கட்சிகளின் வேறு சில பிரதிநிதிகளும் பங்குபற்றினர்

இனப்பிரச்சினைக்கான அரசியற் தீர்வு வடக்கு கிழக்கில் இயல்பு நிலை ஏற்படல் நீண்டகாலமாக அகதிகளாக இருக்கும் மக்கள் தமது சொந்த இடங்களில் மிகவிரைவாக மீளக்குடியேற்றப்பட வேண்டியமை சிறப்பு முகாம்களில் உள்ள பிள்ளைகள் விடுவித்தல் முற்றும் Nவுற சில அடிப்படைப் பிரச்சினைகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டதுடன் இவை தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனாதிபதியுடன் பேச வேண்டும். எனவும் இப்போது ஏற்பட்டுள்ள முயற்சி தமிழ் மக்களின் பொது அரங்காக தொடர்ந்து செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

மேலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட பல்வேறு கட்சிகளுடனும் பேச வேண்டு;ம் மலையக மக்களின் அரசியல் தலைவர்கள் முஸ்லீம் மக்களின் அரசியல் தலைவர்கள் மற்றும் சிங்கள முற்போக்கு ஜனநாயக சக்திகளுடனும் கூட்டு உடன்பாடுகளைக் கண்டு இணைந்து செயற்பட வேண்டும் என்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

இந்த கூட்டுச் செயற்பாடு பிளவுகளுக்கு இடமளியாமல் கருத்து பரிமாற்றங்களினூடாக தொடர்ந்து விஸ்தாரமாக நம்பிக்கைகளை வளர்க்கும் வகையில் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டுமென்றும் கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன.

கூட்ட முடிவில் எதிர்வரும் கட்டங்களைப் பற்றிய ஒரு அடிப்படையை வரையறுப்பதற்கென கட்சிகளின் பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு கமிட்டியும்; அமைக்கப்;பட்டுள்ளது

புத்தர் பெயரில் மதுசாலை;தகவல் திரட்ட தூதரகங்களுக்கு இலங்கை அரசு உத்தரவு,

Friday, July 2, 2010
புத்தரின் பெயரில் இயங்கும் மதுபான சசாகள் ("புத்தாஸ் பார்") தொடர்பில் தகவல் திரட்டி அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு சர்வதேச நாடுகளில் இயங்கிவரும் இலங்கைக்கான தூதுவராலயங்களுக்கு அரசாங்கம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

பாரிஸ் நகரில் இயங்கி வரும் "புத்தாஸ் பார்"இன் கிளை நிலையங்கள் வேறு சில நாடுகளிலும் இயங்கி வருவதாக கிடைத்த தகவலை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவித்தன.

குறித்த பெயரில் இயங்கி வரும் மதுபான சாலைகள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் அந்தந்த நாட்டு அரசாங்கங்களுடன் கலந்துரையாடி அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.

இதேவேளை, பெளத்த மதத்தை இழிவு படுத்தும் வகையில் நிறுவப்பட்டுள்ள இந்த மதும்பான நிலையங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் டி.எம்.ஜயரத்ன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஞாயிறன்று இந்தியா விஜயம்; மன்மோகனுடன் சந்திப்பு!

Friday, July 2, 2010
தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் அடங்கிய தூதுக்குழுவொன்று நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுக்கு பயணமாகவுள்ளது.

வடக்கில் இடம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களின் நிலைமை, தேசிய பிரச்சினைக்கான அரசியல் தீர்வு உள்ளிட்ட இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடும் வகையிலேயே இந்த விஜயம் அமையவுள்ளது.

அந்தவகையில் இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கை சந்திக்கவுள்ள இந்த தூதுக்குழு மேற்படி விடயங்கள் தொடர்பில் அவர்களுடன் கலந்துரையாடவுள்ளதாக கூட்டமைப்பு எம்.பி.யான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் , மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் ஏ.விநாயகமூர்த்தி ஆகியோர் இந்த விஜயத்தில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Followers

Blog Archive