Sunday, August 1, 2010

பாடசாலை மாணவர் மத்தியில் அதிகரிக்கும் போதைப் பழக்கம்!

Sunday, August 1, 2010
இலங்கையில் தற்போது போதைப் பொருள் பாவனையின் வீதம் அதிகரித்தவண்ணமே உள்ளது. போதைப் பொருளை தடுக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் முன்வைக்கப்படினும் பல்வேறு சட்டங்கள் இருப்பினும் அதனை முற்றாக ஒழித்துக்கட்ட முடியாதுள்ளது.

அதேவேளை பாடசாலை மாணவர்களும் இப் போதை பாவனைக்கு அடிமையாகியுள்ளனர். இதன் வீதம் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

கொழும்பு நகரில் மாத்திரமல்லாது அதிகளவில் பொலன்னறுவை மாவட்டத்திலும் பாடசாலை மாணவர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாகயுள்ளமை தெரிய வந்துள்ளது.

பொலன்னறுவயில் கடந்த 17ஆம் திகதி 3 மாணவர்கள் பாடசாலை சீருடையுடன் போதைப் பொருளை வைத்திருந்தார்கள் என்பதன் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு பாடசாலை செல்லும் இளம் வயது சிறார்கள் சிகரட் மற்றும் போதை ஏற்படுத்தும் பொருட்களுக்கு அடிமையாகி வருகின்றனர்.

இளம் வயதினரில் 13 தொடக்கம் 20 வயதிற்கிடைப்பட்ட மாணவர்கள் பலர் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி உள்ளனர் என போதைப் பொருள் தடுப்புப் பிரிவு தெரிவிக்கின்றது.

இவ்வாறு இளம் வயதினர் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாவதற்கு அவர்களின் நண்பர்களே முக்கிய காரணம் எனத் தெரியவந்துள்ளது.

இவ்வாறானவர்களில் 88.2 வீதமானவர்கள் நண்பர்கள் மூலமும் 10 வீதமானவர்கள் உறவினர்கள் மூலமும் 1.8 வீதமானவர்கள் உல்லாசப் பயணிகள் மூலமும் போதைக்கு அடிமையாகின்றனர்.

நாட்டின் எதிர்காலம் வளரும் சமுதாயத்தின் கரங்களில் உண்டு என்பார்கள். ஆனால் இவ்வாறான நிலைமை தொடருமானால் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்பதில் சந்தேகமில்லை.

ஆதலால் இளம் மாணவர்கள் போதைக்கு அடிமையாவது தடுக்கப்பட வேண்டியது அவசியமாகும். இதற்கான பொறுப்பு எம் அனைவரையுமே சாரும் என்பதால் அனைவருடைய ஒத்துழைப்புடனும் சமுதாயத்தைக் காப்போம்.

சர்வதேச ரீதியில் இயங்கும் புலிகளை கைது செய்ய அரசு தயாராகவுள்ளது!

Sunday, August 1, 2010
புலிகள் இயக்கத்து டன் இணைந்து சர்வதேச ரீதியாக இயங்கும் எவரையும் கைது செய்வதற்கு தயாராக இருப்பதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
புலிகள் உள் நாட்டில் அழிக்கப்பட்டிருப்பினும் சர்வதேச ரீதியாகத் தொடர்ந்து இயங்கி வருவதாக அரசாங்கம் அண்மையில் தெரிவித்திருந்தது.இது தொடர்பில் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக் ஸ்மன் குலுகல்ல தெரிவிக்கையில்,

புலிகளின் சர்வதேச செயற் பாடுகளைக் கட்டுப்படுத்த அவசியம் ஏற்படின் இன்ரல்போல் எனப்படும் சர்வதேச பொலி ஸாரையும் பயன்படுத்தவிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் சர்வதேச ரீதியில் புலிகள் தடை செய்யப்பட்ட இயக்கம் என்ற வகையில் அதனுடன் இணைந்து இயங்கும் எவரையும் கைது செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Followers

Blog Archive