Thursday, May 19, 20112 ஆயிரத்து 600வது ஸ்ரீ சம்புத்தத்த ஜயந்திக்கு ஒத்ததாக “பிங்பர லங்கா” என்ற பெயரில் தேசிய மரபுரிமை புத்த கண்காட்சி தேசிய நூதனசாலை வளாகத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜாபக்சவின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட இந்த கண்காட்சி எதிர்வரும் 31ஆம் திகதி வரை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால், ஆரம்பித்து வைக்கப்பட்ட கண்காட்சியில், துட்ட கைமுனு அரசனின் அஸ்தி உட்பட பல புராதன பொருட்கள் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மகிந்த ராஜபக்ச தேசிய நூதனசாலையின் புராதன சொத்துக்களையும் பார்வையிட்டுள்ளார்.
இதனிடையே, ரஷ்ய கூட்டிணைவு நாடுகளின் கல்மக்கியா இராச்சியத்தின் முன்னாள் ஜனாதிபதி மற்றும் உலக செக் சங்கத்தின் தலைவர் கிருஷான் இலும்பினோவ் ஆகியோர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை இன்று சந்தித்துள்ளனர்.
இந்த சந்திப்பு அலரி மாளிகையில் இடம்பெற்றது.

