Monday, August 29, 2011

யாழ். பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகளை தெரிவிக்க தமிழில் விண்ணப்பங்கள்!

Monday, August 29, 2011
யாழ். மாவட்ட பொலிஸ் நிலையங்களில் பொது மக்கள் தமது முறைப்பாடுகளை செய்வதில் காணப்படும் மொழிப்பிரச்சினையை நீக்கும் முகமாக பொது மக்கள் தமது முறைப்பாடுகளை தமிழில் எழுதிக் கொடுக்கத்தக்கவாறான படிவங்கள் பொலிஸ் நிலையங்களில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை யாழ்ப்பாணம் , கிளிநொச்சி பொலிஸ் நிலையங்களின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் என்.டி தளுவத்த பொது மக்களுக்கு அறிவித்துள்ளார். கடந்த காலத்தில் பொதுமக்கள் தமது முறைப்பாடுகளைச் செய்வதற்கு சிங்களம் தெரிந்த தரகர்களை பொலிஸ் நிலையங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டிய நிலைமை காணப்பட்டது

தற்போது, பொது மக்கள் தமது பிரச்சினைகளை தமிழ் மொழியில் தாமே எழுதிக் கொடுத்து தமது பிரச்சினைக்கான தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Thursday, August 25, 2011

அவசரகால சட்டம் நீக்கம்!

Thursday, August 25, 2011
இலங்கையில் தற்போது நடைமுறையில் அவசரகால சட்டம் நீக்கப்படுவது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் இன்று பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பை மேற்கொள்வார் என இந்தியாவை தளமாக கொண்டு இயங்கும் த இந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

1971 ம் ஆண்டு இலங்கiயில் இடம்பெற்ற கிளர்ச்சியைத் தொடாந்து அவசரக்காலச் சட்டம் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன் பின்னர் அந்த சடட்ம் நீக்கப்பட்ட நிலையியல் பின்னர் 2005ம் ஆண்டு முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொலை செய்யப்பட்டதன் பின்னர் மீண்டும் இச்சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

தற்போதைய நிலையில் யுத்தம் முடிவடைந்து இரண்டு வருடங்கள் கடந்து விட்டதனாலும், இலங்கையில் புலியினர் ஒழிக்கப்பட்டு அவர்களின் செயற்பாடுகள் இடம்பெறாததினால் அவசரகால சட்டத்தை நீக்கும்படி அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தொடர்ச்சியாக இலங்கைக்கு அழுத்தங்களை வழங்கி வருகின்றன.

அதுமட்டுமல்லாது மனித உரிமை அமைப்புமற்றும் சர்வேதச மன்னிப்புச் சபை என்பனவும் அவசரகால சட்டத்தை நீக்குமாறு இலங்கையை வலியுறுத்தி வந்தன.

இவ்வாறு தொடர்ச்சியாக அழுத்தங்கள் வெளிவந்த காலகட்டத்தில் அவசரகால சட்டத்தை நீக்காத விடத்து ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலைகையை நீக்கப்படுமென ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு நிபந்தனை விதித்தது.

இதனை இலங்கை அரசு பொருட்படுத்தத்தாதை அடுத்து ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை இலங்கை இழந்தது. இதனைத் தொடர்ந்து ஐ.நா சபை நிபுணர் குழு அறிக்கையில் கூட அவசரகாலச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டது.

இக்காலகட்டத்தில் இலங்கை அரசு ஐ.நா நிபுணர் குழு அறிக்கையை சர்சைக்குரிய தருஸ்மன் அறிக்கையென கூறியிருந்தது. பிற்காலத்தில் சனல் 4 ஆவணப்படத்திலும் கூட இலங்கை அவசரகாலச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.

தொடர்ச்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகியன அவசரகாலச் சட்டம் நீக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வந்தன.

இந்நிலையில் இலங்கை அரசாங்கம் அவசரக்காலச்சட்டத்தை நீக்கவுள்ளதாகவும், இதனை இன்று ஜனாதிபதி பாராளுமன்றத்தில் அறிவிக்ககூடும் எனவும் த இந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள

வடக்கில் 40 ஆயிரம் மக்களுக்கு நிரந்தர வீடுகள் இல்லை!

Thursday, August 25, 2011
வடக்கில் வாழ்ந்து வரும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் குடும்பங்கள்; இதுவரை நிரந்தர வீடுகள் இல்லாமல் இருப்பதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இந்த நிலைமை அதிகளவில் காணப்படுகிறது என சங்கத்தின் தொடர்பாடல் முகாமையாளர் மஹேஸ் ஜோனி தெரிவித்துள்ளார்.

சில குடும்பங்கள் தாமே அமைத்து கொண்ட கூடராங்களில் வாழ்ந்து வருகின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பு போன்ற சர்வதேச அமைப்புகள் தற்போது வட பகுதி மக்களை மறந்துள்ளன. இந்த மக்களுக்கு வீடுகளை அமைத்துக்கொடுக்கும் பணிகளை அரசாங்கத்தினால் மாத்திரமே தனியாக செய்ய முடியாது எனவும் மஹேஸ் குறிப்பிட்டுள்ளார்.

Tuesday, August 16, 2011

(பத்மநாபா EPRLF) தோழர்களால் திருகோணமலை மாவட்டத்தில் நடாத்தப்பட்ட கண் மருத்துவ சிகிச்சை முகாம்!

Tuesday, August 16, 2011
(பத்மநாபா EPRLF) தோழர்களால் திருகோணமலை மாவட்டத்தில் நடாத்தப்பட்ட கண் மருத்துவ சிகிச்சை முகாம்! முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஐப்பெருமாள் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி ஆரம்பித்து வைத்தார்.

திருகோணமலை கும்புறுபிட்டி மெதடிஸ்ட் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையிலும் மதியம் திருகோணமலை 6ம் கட்டை மெதடிஸ்ட் மிஷன் சிறுவர் பாடசாலையிலும் இலவச கண் மருத்துவ சிகிச்சை முகாம் மற்றும் இலவச கண்ணாடி வழங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது.

சக்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஐப்பெருமாள் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி ஆரம்பித்து வைத்தார் இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையின் செயற்பாட்டுக் காலத்து நினைவுகளை கலந்து கொண்ட மக்கள் தமக்குள் பகிர்ந்து கொண்டனர்.
(பத்மநாபா EPRLF)

புதிய யுகத்தை நோக்கி இலங்கை நகர்வு- இந்திய உயர்ஸ்தானிகர்!

Tuesday, August 16, 2011
இந்திய அரசாங்கமானது தற்போது இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் இடம்பெற்றுவரும் சீர்திருத்தச் செயற்பாடுகள் மற்றும் மீள்நிர்மான நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு வழங்கவுள்ளதுடன், எதிர்காலத்தில் தொடர்ந்து இடம்பெறவுள்ள செயற்பாடுகளுக்கும் தமது உதவிகளையும் வழங்க தயாராகவுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்தா நேற்று(ஆகஸ்ட்- 15) தெரிவித்தார்.

இந்திய உயஸ்தானிகர் அலுவகத்தில், 65 ஆவது இந்தி சுகந்திரத்தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அழகிய நாடான இலங்கை புதிய யுகத்தை நோக்கி நகர்ந்துவருவதாகவும், இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே பல நிகழ்வுகள் மூலம் உறுதியான பிணைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் தெவித்தார்
இந்தியாவின் பாரியதொரு முதலீடு மூலம், திருகோணமலை சம்பூர் பிரதேத்தில் 500 மெகாவோட் அனல் மின் உற்பத்தி செயற்ப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் தலைமைத்துவம் மற்றும் இலங்கை மக்களாலுமே இவ்விரு நாடடுகளுக்கு இடையில் சிறந்த நட்புறவு பாலம் எற்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Friday, August 5, 2011

செனல்4 ஆவணப்படம் குறித்து விசாரணை நடத்தப்படும் - LLRC

Friday, August 5, 2011
செனல்4 ஆவணப்படம் குறித்து விசாரணை நடத்தப்படும் என உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிவித்துள்ளது. பிரித்தானியாவின் செனல்4 ஊடகத்தினால் அண்மையில் ஒளிபரப்புச் செய்யப்பட்ட ஆவணப்படம் தொடர்பில் விசாரணை நடத்தி இறுதி அறிக்கையில் அந்தத் தகவல்களை உள்ளடக்குவது என தீர்மானித்துள்ளது.

இந்த ஆவணப்படம் தொடர்பில் ஆய்வு நடத்தும் விசேட நிபுணர்கள் பற்றிய தகவல்கள் அம்பலப்படுத்தப்பட மாட்டாது என உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் ஊடக ஆலோசகர் லக்ஸ்மன் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

செனல்4 ஊடகத்தினால் கடந்த முறை வெளியிடப்பட்ட ஆவணப்படத்தை ஆய்வு செய்த நிபுணருக்கு பல நெருக்கடிகள் ஏற்பட்டதாகவும் அதனால் இம்முறை நிபுணரின் பெயரை வெளியிடப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மைய ஆவணப்படத்தை நிபுணர்கள் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பார்கள் எனவும், அதனை விசாரணை செய்து இறுதி அறிக்கையில் தரவுகள் சேர்க்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நவம்பர் மாத நடுப்பகுதியில் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

வடக்கில் குறிப்பிடத்தக்க அபிவிருத்தி ஏற்பட்டுள்ளது – சுபினேய் நான்டி!

Friday, August 5, 2011
வடக்கில் குறிப்பிடத்தக்க அபிவிருத்தி ஏற்பட்டுள்ளது என ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக் கிளைக்கான வதிவிடப் பிரதிநிதி சுபினேய் நான்டி தெரிவித்துள்ளார்.

எனினும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவது தொடர்பில் பல்வேறு சவால்கள் நீடிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களுக்கு நான்டி விஜயம் செய்துள்ளார். யுத்தத்தின் பின்னர் பிரதேச மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளை அவர் நேரில் கேட்டறிந்து கொண்டார்.

அரசாங்கத்துடன் இணைந்து யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்டங்கனை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் முன்னாள் இராணுவ அதிகாரி ஜகத் டயஸ் மீது சுவிற்சர்லாந்து நடவடிக்கை எடுக்க முடியாது-ஜெர்மன் தூதுவர் மடுவேகெதர!

Friday, August 5, 2011
இலங்கையின் முன்னாள் இராணுவ அதிகாரியும் தற்போதைய வெளிநாட்டு இராஜதந்திரியுமான மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் மீது சுவிட்ஸர்லாந்து குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வழக்குத் தாக்கல் செய்துள்ள நிலையில் இராஜதந்திர ரீதியில் அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாதென ஜெர்மனிக்கான இலங்கைத் தூதுவர் ரீ.பீ.மடுவேகெதர தெரிவித்துள்ளார்.

ஜெர்மனிக்கான இலங்கையின் பதில் தூதுவராக செயற்பட்டு வரும் மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் மீது சுவிட்ஸர்லாந்தின் பொது நிர்வாக அமைச்சில் யுத்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

புலிகள் இயக்கத்துடனான யுத்தம் நிறைவுக்கு வந்தப் பின்னர் ஜெகத் டயஸ் ஜெனரல் பதவிக்கு உயர்த்தப்பட்டார். அதன் பின்னர் ஜெனர்மன் மற்றும் சுவிட்ஸர்லாந்துக்கான பதில் தூதுவராக செயற்பட்டு வருகின்றார்.

ஜெகத் டயஸ் இராஜதந்திர மட்டத்தில் தொழிற்படுவதால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது என ஜெர்மனிக்கான இலங்கைத் தூதுவர் ரீ.பீ.மடுவேகெதர பீபீசியிடம் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின்போது 57வது படைபிரிவிற்கு கட்டளையிடும் அதிகாரியாகக் கடமையாற்றி மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ், யுத்தக் குற்றம் புரிந்தார் என சுவிட்ஸர்லாந்தின் தொலைக்காட்சி சேவையொன்று அண்மையில் காணொளி ஒளிபரப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Followers

Blog Archive