Thursday, May 13, 2010

ஆலோசனைக் குழுவை ஐ.நா. சபை நியமிக்காது - இலங்கை அரசு நம்பிக்கை

Thursday, May 13, 2010
ஆலோசனை வழங்கும் நிபுணர்கள் குழு வை ஐ.நா. செயலாளர் பான் கீ மூன் ஒரு போதும் நியமிக்க மாட்டார் என ஐ.நாவுக்கான இலங்கைத் தூதுவர் பாலித ஹோகன்ன தெரிவித்துள்ளார். ஐ.நா. சபை போர்க் குற்றங்களுக்கான சாத்தியப்பாடு தொடர்பாக தனக்கு ஆலோ சனை வழங்குவதற்கு நிபுணர்கள் குழு ஒன் றை அமைக்கப் போவதாக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்திருந்து இரு மாதங்களின் பின்னரும் இதுவரை நிபுணர் குழு அமைக்கப்படவில்லை.
இப்போது இலங்கை அரசாங்கம் தனது சொந்த பொறிமுறை தொடர்பாக அறிவித் திருக்கின்றது என்று நியூயோர்க்கில் ஐ.நாவைத் தளமாகக் கொண்ட இன்னர் சிற்றிப் பிறஸ் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை இன்னர் சிற்றிப் பிறஸ் தெரிவித்திருப்பதாவது,
பொறிமுறை தொடர்பாக பிரசுரிக்குமாறு கொழும்புக்குத் தான் ஆலோசனை தெரிவித் ததாக ஐ.நாவுக்கான இலங்கையின் தூதுவர் பாலித ஹோகன்ன இன்னர் சிற்றிப் பிறஸ் ஸுக்குக் கூறியுள்ளார். உண்மையில் குழுவொன்றைப் பான் கீ மூன் ஒருபோதும் நியமிக்க மாட்டார் என்று அவர் எதிர்வு கூறியுள்ளார். மே 7 இல் குழு தொடர்பாகப் பான் கீ மூனின் பேச்சாளரிடம் இன்னர் சிற்றிப் பிறஸ் கேட்டது.
அத்துடன் பான் கீ மூனின் உயர் மட்ட மனிதாபிமான அதிகாரி ஜோன் ஹோம்சிடம் அரசாங்கத்தால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பா டுகள் தொடர்பாகக் கேட்கப்பட்டது. ஐ.நாவின் மனிதாபிமான செயற்பாட்டு பொதுத் திட்டத் தை நிராகரித்த விடயமும் இதில் உள்ளடக்கப் பட்டிருந்தது. வவுனியாவில் அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் உதவிகளை வழங்குவதற்குத் தடையாக இது உள்ளது. அரசாங்கத்துடனான உறவுகள் மிகக் கடினமாக இருப்பதாக கவன மான முறையில் பல தடவைகள் ஹோம்ஸ் பதிலளித்திருந்தார்.
அதனைச் சிறப்பானதாக இப்போதும் முயற்சிப்பதாகத் தோன்றுகின்றது. செஞ்சிலு வைச் சங்கத்தை நாட்டின் பல பகுதிகளிலி ருந்தும் அரசாங்கம் வெளியேற்றி விட்டதாக அவர் குறிப்பிட்டிருந்தார். அவர்கள் திரும்பிச் செல்ல முடியும் என்று எதிர்பார்ப்பதாக அவர் கூறியுள்ளார். புனர் வாழ்வு முகாம்களில் 11 ஆயிரத்திலிருந்து 12 ஆயிரம் பேர் வரை இருப்பதாகக் ஹோம்ஸ் கணிப்பிட்டுள்ளார்.
இடம்பெயர்ந்தோர் முகாம்களில் 80 ஆயிரம் பேர் இருப்பதாகவும் 2 இலட்சத்து 20 ஆயிரம் பேர் திரும்பிச் சென்று விட்டதா கவும் அவர் கூறியுள்ளார். அவர்களில் சிலர் எவ்வாறு வாக்களிக்க முடியும் என்பது பற்றி அவர் குறிப்பிட்டிருக்கவில்லை.

விசா மோசடிக்காரர்கள் 14 பேர் கைது

Thursday, May 13, 2010
சுற்றுலா விசா மூலம் இலங்கைக்கு வருகைதந்து தொழில்களில் ஈடுபட்ட 14 இந்திய பிரஜைகள் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் 11 பேர் வத்தளைப் பிரதேசத்தில் இரும்பு உருக்கும் நிலையமொன்றில் தொழில்புரிந்து கொண்டிருக்கும்போது கைது செய்யப்பட்டதாகத் திணைக்களத்தின் உதவிக் கட்டுப்பாட்டாளர் விலியம் தேவேந்திரராஜா தெரிவித்தார்.
ஏனைய மூவரும் செட்டியார் தெருவில் நகைக் கடையொன்றில் தொழில்புரிந்து கொண்டிருக்கும்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர்
இந்தியப் பிரஜைகளின் விசா காலாவாதியாகியுள்ளதாகக் குடிவரவு குடியகல்வுத் திணைக்கள உதவிக் கட்டுப்பாட்டாளர் குறிப்பிட்டார்.
அவர்களை மிரிஹானவில் உள்ள திணைக்களத்தின் தடுப்பு முகாமுக்கு அனுப்பி இந்தியாவுக்கு திருப்பியனுப்பவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறு குடிவரவு குடியகல்வுச் சட்டங்களை மீறித் தொழில்களில் ஈடுபடும் வெளிநாட்டவர்கள் மீண்டும் இலங்கைக்கு வரமுடியாதவாறு தடைசெய்யப்பட்டோர் பட்டியலில் அவர்களது பெயர்களைச் சேர்த்துள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டது.

Followers

Blog Archive