Friday, September 16, 2011ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையினால் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் எந்தவொரு பிரேரணையும் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிடுகின்றார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 18 ஆவது கூட்டத் தொடரில் கலந்துகொண்டு இன்று மீண்டும் நாடு திரும்பிய சந்தர்ப்பத்திலேயே அமைச்சர் இந்தக் கருத்தினைக் கூறினார்.
மனித உரிமைகள் பேரவையை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய 46 உறுப்பு நாடுகளின் ஆதரவை இலங்கைக்கு பெற்றுக்கொள்வதற்காகவும் இலங்கை பிரதிநிதிகள் குழு நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.
பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் இலங்கையின் அபிவிருத்தி செயற்பாடுகள் குறித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் நவனீதம்பிள்ளையை தெளிவுபடுத்தியுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
