Thursday, October 28, 2010

முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் அ.வரதராஐபெருமாள் அவர்கள் புலம்பெயர் மக்களை நேரில் சந்தித்து கலந்துரையாட சுவிஸ்நாட்டிற்கு 31.10.2010 அன்று விஐயம்!


சர்வதேசபிராந்திய மகாநாட்டில் கலந்து கொள்ள ஐரோப்பிய நாடுகளுக்குவிஐயம் மேற்கொண்டிருக்கும் தோழர் வரதராஐப்பெருமாள் பிரான்ஸ் நாட்டில் மகாநாட்டை நடாத்தி முன்னணிதோழர்களையும் மக்களையும் சந்தித்தபின் சுவிஸ் நாட்டிற்கு எங்கள் மக்களை காண வருகைதரவுள்ளார். வடக்கு கிழக்கு முன்னாள் முதலமைச்சரை நீங்கள் நேரில் சந்தித்து உரையாடுவதற்கும் உங்கள் கருத்துக்கள் எதுவானாலும் அமைச்சரிடம் கூறி அவரிடமிருந்து தெளிவான பதில்களை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். புலம் பெயர் மக்களையும் தோழர்களையும் சந்தித்து உரையாட முன்னாள் முதலமைச்சர் மிகவும் ஆவலாகவுள்ளார் என்பதினை மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்!!!

தோழர் வரதராஐப்பொருமாள் அவர்களை சுவிஸ் நாட்டில் பேர்ன் சூரிச் ஆகிய மானிலங்களில் மக்களை சந்தித்து கலந்துரையாட எற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பேர்ன் மானிலத்தில் 31.10.2010 காலை 10.00முதல் 13.00 மணிவரை கலந்துரையாடல் நடைபெறும்
முகவரி
mattenhof str 32
3007 Bern
swiss
மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள!!!பேர்ன் தொடர்புகட்கு!!!
0041798117280 Bern
0041797541317 Bern
0041786859598 freiburg
0041783130889 Bern
சூரிச் மானிலத்தில் 31.10.2010 பிற்பகல் 15.00முதல் 18.00 வரை கலந்துரையாடல் நடைபெறும்
முகவரி
widmer str 100
8038 zürich
swiss
மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள!!! சூரிச் தொடர்புகட்கு!!!
0041792613331 zü
0041797538517 Ag
0041764061799 Ag
0041783164174 வஸ்
பத்மநாபா EPRLF சர்வதேச கிளைகளின் ஒன்றியம்.

சந்திரிகா கொலைமுயற்சி வழக்கு எதிரிக்கு 290 வருட கடூழியச்சிறை!

Thursday, October 28, 2010
1999ஆம் ஆண்டு கொழும்பு நகரசபை மைதானத்தில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்த லின் இறுதிக் கூட்டத்தின் போது முன்னாள் ஜனா திபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை கொலை செய்ய முயன்றதை ஒப்புக்கொண்ட நபருக்கு 290 வருட கடூழிய சிறைத் தண்டனையை கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி விதித்தார்.

கொழும்பு நகரசபை மண்டப வளவில் இடம் பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றின் போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை இலக்கு வைத்து 1999ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தற்கொலைக் குண்டுதாரி ஒருவரால் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு உதவி ஒத்தாசை வழங்கினார் என்ற வழக்கில் கொழும்பு நீதிமன்றம் சத்தியவேல் இலங்கேஸ் வரன் (வயது 30) என்கிற இளை ஞனுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 290 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.

இத்தாக்குதலில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க வின் கண் ஒன்று பறிபோனது. பிர திப் பொலிஸ் மா அதிபர் ஒருவர், பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர், சில பொலிஸ் உத்தியோகத்தர்கள், இராணுவ அதிகாரி ஒருவர், பெளத்த பிக்கு ஒருவர், சிவிலியன்கள் ஆகி யோர் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர். 80 பேர் காயமடைந்தனர்.

இத்தாக்குதல் சம்பந்தமாக நால்வருக்கு எதிராக கொழும்பு நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய் யப்பட்டு 2002ஆம் ஆண்டு மே மாதம் 30ஆம் திகதி குற்றப்பத்திர மும் தாக்கல் செய்யப்பட்டது. வேலாயுதன் வரதராஜா (உத யன்),சத்தியவேல் இலங்கேஸ்வரன், பூசகர் எஸ்.ரகுபதிசர்மா, பூசகர் ரகு பதிசர்மாவின் மனைவி சந்திரா ரகு பதி ஆகியோரே வழக்கின் எதிரிகள். இத்தாக்குதலுக்கு உதவி ஒத்தாசை வழங்கினர். 26 பேரின் மரணங்களுக்கும் 80 பேரின் படுகாயங் களுக்கும் காரணமாகினர்.நாட்டின் முதல் பிரஜையை கொல்லச் சதித் திட்டம் தீட்டி இருந்தனர். ஆகியன உட்பட 110 குற்றச்சாட்டுக்கள் இவர் கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.

எதிரிகளில் ஒருவரான இலங்கேஸ் வரன்,அவருக்கு எதிரான குற்றச்சாட் டுக்களை ஒப்புக்கொண்டு விட்டார். இத் தற்கொலை தாக்குதலுக்கு தேவையாக இருந்த வெடிகுண்டை புத்தளத்திலிருந்து முஸ்லிம் வர்த் தகர் ஒருவருடைய வாகனத்தில் கொழும்புக்கு கடத்திவந்தார் என்று நீதிமன்றில் சட்டத்தரணி மூலம் ஒப்புக்கொண்டு குறைந்தபட்ச தண் டனை வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இவ் வழக்கை விசாரித்து வரும் நீதிபதி ரி.எம்.பி.வி.வெரவெல இவ ருக்கு நேற்று 290 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தார். சட்டமா அதிபரின் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கபில விஜே வர்தன ஆஜராகி வாதாடி வருகிறார். இவ் எதிரியின் சார்பில் சட்டத்தரணி ரவீந்திர டீ சில்வா ஆஜராகினார்.

விளம்பரப் பலகை பொருத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி தேவை!

Thursday, October 28, 2010
கொழும்பு நகரில் விளம்பரப் பலகைகளை பொருத்தவேண்டுமாயின் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும் என அறி வுறுத்தப்பட்டுள்ளது.முன்னர் இதற்கான அனுமதிகளை கொழும்பு மாந கரசபை வழங்கி வந்தது.

இனிமேல் விளம்பரப் பலகைகளை வைப்பதற்கான விண்ணப்பங் களை பாதுகாப்பு அமைச்சிடம் சமர்ப்பித்து ஒப்புதல் பெறவேண்டும் என கொழும்பு மாநகர விசேட ஆணையாளர் ஓமர் காமிலுக்கு உயர் மட்டத்தி லிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி அதிகார சபையின் பரிந்துரை கிடைத்த பின்னரே பாது காப்பு அமைச்சு அனுமதியை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் அரசாங்கத்தில் இந்த நடவடிக்கையினால் கொழும்பு மாநகரசபைக்கு கிடைத்து வந்தவருமானம் இல்லாமல் போகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை கொழும்பு நகரில் உள்ள சகல பாதுகாப்பு காவலரண்களை யும் அகற்றும் நடவடிக்கை நேற்றுமுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணு வப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவல தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் வெள்ளவத்தை மற்றும் பம்பலப்பிட்டி ஆகிய இடங்களிலுள்ள காவலரண்கள் அகற்றப்பட்டுள்ளன.

கொழும்பு நகர எல்லைக்குள் இருக் கும் ஏனைய காவலரண்கள் அனைத் தும் அடுத்த சில தினங்களில் அகற்றப் படவுள்ளன எனவும் இராணுவப் பேச்சாளர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை யாழில் நான்கு நாட்கள் நடைபெறும்!

Thursday, October 28, 2010
கற்றுக்கொண்ட பாடங்கள் மற் றும் நல்லிணக்க ஜனாதிபதி ஆணை க்குழு யாழ்ப்பாணத்தில் 11ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை 4 நாட்கள் சாட்சியங்களைப் பெற் றுக்கொள்ளவுள்ளது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்வினால் அமைக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றம் நல்லி ணக்க ஆணைக்குழு நாட்டில் பல் வேறு தரப்பினரிடம் இனப்பிரச்சினை, போரின் பாதிப்புக்கள் குறித்து சாட்சியங்களைப் பெற்றுவருகிறது.

யாழ்.மாவட்ட மக்களிடம் எதிர் வரும் 11ஆம் திகதி முதல் 14ஆம் திகதிவரை 4 நாட்கள் சாட்சியங்களைப் பதிவு செய்யவுள்ளது. எதிர்வரும் 11ஆம் திகதி காலை 9 மணிக்கு செயலகபிரிவு குருநகர் கலாசார மண்டபத்திலும், முற்பகல் 11.30 மணிக்கு நல்லூர் பிரதேச செய லக பிரிவு மக்களிடம் அரியாலை சரஸ்வதி சனசமூக நிலைய மண்ட பத்திலும், பி.ப. 2.00 மணிக்கு கோப் பாய் பிரதேச செயலக மக்களிடம் நீர் வேலி கிராம அபிவிருத்திச் சங்க மண் டபத்திலும் சாட்சியங்கள் பதிவு செய் யப்படவுள்ளது.மறுநாள் 12ஆம் திகதி காலை 9.00 மணிக்கு தெல்லிப்பழை, உடுவில் பிரதேச செயலகபிரிவு மக்களி டம் அளவெட்டி மகாஜனசபை மண்ட பத்திலும் மாலை 4.00 மணிக்கு சண்டிலிப்பாய், சங்கானை மற்றும் காரைநகர் பிரதேச செயலக பிரிவு மக்களிடம் சித்தன்கேணி மகளிர் அபிவிருத்தி சங்க மண்டபத்திலும் சாட்சியங்களை பதிவு செய்யவுள்ளது.

எதிர்வரும் 13ஆம் திகதிகாலை 9.00 மணிக்கு பருத்தித்துறை மரு தங்கேணி பிரதேச செயலக பிரிவு மக்களிடம் குடத்தனை தேவா லயத்திலும், பிற்பகல் 2.30 மணிக்கு கரவெட்டி பிரதேச செயலக பிரிவு மக்களிடம் நெல்லியடி முருகன் கோயிலிலும் மாலை 3.30 மணிக்கு சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவு மக்களிடம் சாவகச்சேரி கலாசார மண்டபத்திலும் சாட்சியங்கள் பதிவு செய்யப்படும்.

இறுதி நாளான எதிர்வரும் 14 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு ஊர்காவற்றுறை, நெடுந்தீவு உதவி அரசாங்க அதிபர் பிரிவு மக்களிடம் ஊர்காவற்றுறை புனித அந்தோ னியார் தேவாலயத்திலும்,மாலை 4.30 மணிக்கு வேலணை பிரதேச செயலக பிரிவு மக்களிடம் மண்கும் பான் பிள்ளையார் ஆலய கல்யாண மண்டபத்திலும் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஜனாதிபதி ஆணைக்குழு சாட்சியங்களை பதிவு செய்யவுள்ளது.

Followers

Blog Archive