Saturday, January 7, 2012

வல்லரசுகளால் இழக்கப்பட்டவைகள் மீளப்பெறும் தருணம்- ஜனாதிபதி!

Saturday, January 7, 2012
வல்லரசு நாடுகளின் ஆட்சியாளர்களிடம் சிக்கியதால் மலையகத்தில் இழக்கப்பட்ட அனைத்தையும் மீளப் பெறக் வேண்டிய தருணம் தற்போது ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஹங்குரன்கெத்த – ரிகில்லகஸ்கட வீதியை காபட் இட்டு மேம்படுத்தும் செயற்றிட்டம் இன்று முற்பகல் ஆரம்பித்து வைக்கப்பட்ட போதே ஜனாதிபதி இந்த கருத்தை வெளியிட்டார்..

குறித்த வீதியை புனரமைப்பதற்காக 7 ஆயிரத்து 307 மில்லியன் ரூபா நிதி செலவிடப்படவுள்ளது.

இதேவேளை, இன்று இடம்பெற்ற நிகழ்வுகள் குறித்த மேலதிக விபரங்களுடன் எமது செய்தியாளர் இணைந்து கொள்கிறார்..

இந்திய கடல் எல்லையில் இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தவில்லை - இந்திய மத்திய அரசு!

Saturday, January 7, 2012
இந்திய கடல் எல்லையில் இலங்கை கடற்படையினர் இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை என மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றில் மத்திய அரசாங்கம் இதனைக் குறிப்பிட்டுள்ளது.

இலங்கைக் கடற்பரப்பில் வைத்து இந்திய மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்திய மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு நீதிமன்ற விடுத்த உத்தரவினை மத்திய அரசாங்கம் உரிய முறையில் அமுல்படுத்தவில்லை எனத் தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு விசாரணைகளில் இந்திய மத்திய அரசாங்கம் இதனைக் குறிப்பிட்டுள்ளது.

இந்திய கடற்பரப்பில் மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தியமைக்கான ஆதாரங்கள் கிடையாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சர்வதேச கடல் பரப்பில் இந்திய கரையோரப் பாதுகாப்புப் பிரிவினர் தொடர்ச்சியாக கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

எஸ்.எம்.கிருஷ்ணா, ராஜதந்திர ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்தவே இலங்கை வருகின்றார் - லலித் வீரதுங்க!

Saturday, January 7, 2012
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, ராஜதந்திர ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்துவதற்காகவே, இலங்கை வருவதாகவும் அவரது வருகை இலங்கை அரசாங்கத்திற்கு எந்த விதத்திலும் அழுத்தங்களை கொடுக்கும்படி இருக்காது எனவும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.

இந்திய அமைச்சர் தனது விஜயத்தின் போது, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் கருத்துக்களை பரிமாறிக்கொள்ள வாய்ப்புள்ளதாகவும் ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து, இதுவரை இந்தியாவிடம் இருந்து பாதகமான கருத்துக்களை இந்தியா வெளியிடவில்லை எனவும் வீரதுங்க மேலும் கூறியுள்ளார்.

Followers

Blog Archive