Saturday, April 24, 2010

'மஹிந்த சிந்தனை' கீழ் இவ்வருடம் 20,000 குடும்பங்களுக்கு வீடு

SATURDAY, APRIL 24, 2010
மஹிந்த சிந்தனை எதிர்காலத் திட்டத்துக்கு அமைவாக 2010 ஆம் ஆண்டில் மேலும் 20 ஆயிரம் குடும்பங்களுக்கு வீடுகளை அமைத்துக்கொடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பொது முகாமையாளர் தெரிவித்தார்.
கடந்த நான்கு வருட காலத்தில் 91 ஆயிரம் குடும்பங்களுக்கு வீடமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாகவும் இதற்காக 4,127 மில்லியன் ரூபா செலவிடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஒரு வீட்டுக்கு அதிகபட்ச நிதியுதவியாக 50 ஆயிரம் ரூபா வழங்கப்படுவதாகவும் இதற்குப் புறம்பாக 2010 ஆம் ஆண்டு 'நகரத்தைக் கட்டி எழுப்புவோம்' திட்டத்தின் கீழ் 1500 அடுக்குமாடி வீடுகளை அமைக்க உத்தேசித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ரணில் இருக்கும்வரை ஐதேமுவுடன் தொடர்பில்லை : மனோ கணேசன்

SATURDAY, APRIL 24, 2010
ஐக்கிய தேசிய முன்னணியில் ரணில் விக்கிரமசிங்க தலைமைப் பொறுப்பில் இருக்கும் வரை தாம் ஐக்கிய தேசிய முன்னணியுடன் எது வித தொடர்புகளையும் ஏற்படுத்திக் கொள்ளப் போவதில்லை என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய முன்னணியில் இருந்து தாம் முற்றாக விலகியுள்ளதுடன்' இனி வரும் காலங்களில் தொடர்ந்து தனித்து செயற்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இன்று மலை 5.00 மணிக்கு கொழும்பு புதிய நகர மண்டபத்தில் நடைபெற இருக்கும் மத்திய குழு கூட்டத்தின் போது' இவ்விடயம் தொடர்பாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஜனநாயக மக்கள் முன்னணியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து' மனோ கணேசனிடம் தொடர்பு கொண்டு கேட்ட போதே எமது இணையத் தளத்திடம் மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்

பதவியை எதிர்பார்க்காமல் ஜனாதிபதிக்கு தொடர்ந்தும் உதவி - போகொல்லாகம

SATURDAY, APRIL 24, 2010
பதியிடம் தாம் எந்தப்பதவியையும் கேட்கப்போவதில்லை என முன்னாள் வெளிவிவகார
அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்துள்ளார்.
தன்னுடைய அரசியல் செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுக்கப்போவதாகவும்,தேசத்தை கட்டியெழுப்புவதில் ஜனாதிபதிக்கு தாம் முழு உதவிகளையும் வழங்கப்போவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதியிடம் ஏதாவது பதவிகளை கேட்பீர்களா என்று போகொல்லாகமவிடம் வினவியது.
தன்னுடைய வாழ்க்கையில் யாரிடமும் தாம் பதவிகளை கேட்டதில்லை என்று போகொல்லாகம இதற்கு பதிலளித்தார்.
எனினும்,தாம் மக்களிடம் வாக்குகளை மாத்திரம் கேட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

Followers

Blog Archive