Wednesday, June 1, 2011

சர்வதேச பயங்கரவாதத்தை முறியடிக்க இலங்கையின் அனுபவம் வலுச்சேர்க்கும்-கோத்தாபய ராஜபக்'!

Wednesday, June 01, 2011
பயங்கரவாதம் ஒரு சர்வதேச ரீதியிலான அச்சுறுத்தலாகும். இலங்கை இதனால் துன்பப்பட்டதைப் போன்று வேறு எந்தவொரு நாடும் துன்பப்படவோ அழிந்திடவோ கூடாது என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ நேற்று கூறினார்.

வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்துள்ள இராணுவ உயர் அதிகாரிகள் இலங்கை கற்றுக்கொண்ட பாடங்களை பயன்படுத்தி சர்வதேச ரீதியில் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்து, உலக மக்கள் அனைவரும் நிம்மதியாக வாழக்கூடிய சூழ்நிலையை உலக நாடுகளில் ஏற்படுத்துவதற்கு உதவி புரிய வேண்டுமெனவும் அவர் கூறினார். பயங்கரவாத ஒழிப்பு மற்றும் இலங்கையின் அனுபவம் என்ற தொனிப்பொருளில் இலங்கை இராணுவம் ஏற்பாடு செய்த மூன்று நாள் சர்வதேச கருத்தரங்கு நேற்று கலதாரி ஹோட்டலில் ஆரம்பமானது. இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதான உரை நிகழ்த்தும் போதே பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜெயசூரிய தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில், வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக அமுனுகம, வெளிநாட்டில் இருந்து வருகை தந்த டொக்டர் அஹமட் எஸ். ஹாசிம், டொக்டர் ரொஹான் குணரட்ன ஆகியோர் கலந்து கொண்டனர்.

மிகவும் பிரமாண்ட முறையில் நடைபெறுகின்ற இந்த கருத்தரங்கில் 42 நாடுகளின் பாதுகாப்பு, இராணுவ உயர் அதிகாரிகள், வெளிநாட்டு தூதுவர்கள், தூதரக பாதுகாப்பு இணைப்பாளர்கள் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி எயார் சீப் மார்ஷல் ரொஷான் குணதிலக்க, முப்படைத் தளபதிகள் உட்பட உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டார்கள்.

இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட அவர் மேலும் கூறியதாவது :- இன்று உலகிலுள்ள பெரும்பாலான நாடுகள் உள்ளூர் மற்றும் சர்வதேச பயங்கரவாதத்தை எதிர்நோக்கிய வண்ணமிருக்கிறது.

பயங்கரவாதத்தை முறியடிப்பதற்கு இலங்கை ஆயுதப்படையினர் கையாண்ட யுக்திகளையும், யுத்த தந்திரங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கும் நாம் பெற்ற இந்த அனுபவத்தை உங்களுக்கு எடுத்துரைப்பதற்கும் தயாராக இருக்கிறோம். யுத்தத்தை நடத்திக் கொண்டிருந்த காலகட்டத்திலும், எங்கள் அரசாங்கம் மனிதாபிமான உதவிகளை யுத்தத்தினால் இடம்பெயர்ந்த அப்பாவி மக்களுக்கு செய்யத் தவறவில்லை. நாம் இது விடயத்தில் அரசியல் ரீதியிலும் சர்வதேச நியதிகளுக்கு ஏற்புடைய வகையிலும் நடந்து கொண்டோம். நாம் யுத்தத்தில் பெற்ற அனுபவங்களும் கற்றுக் கொண்ட பாடங்களும் எங்கள் நெருங்கிய நண்பர்களான உங்களுக்கு பேருதவியாக இருக்குமென்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது. இதன் மூலம் சர்தேச பயங்கரவாதத்தை முறியடிப்பதற்கும் உங்களுக்கு வலுவை பெற முடியும்.

இலங்கையில் பயங்கரவாதம் 1970 ஆம் ஆண்டு தசாப்தத்தில் ஆரம்பமாகியது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2005 டிசம்பர் மாதத்தில் ஜனாதிபதி பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இலங்கையில் பயங்கரவாத நடவடிக்கைகள் ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு நீண்டு கொண்டிருந்தது. இன்றைய ஜனாதிபதிக்கு முன்னர் பதவியிலிருந்த நான்கு ஜனாதிபதியும், பலதரப்பட்ட கட்சிகளின் அரசாங்கங்களும் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் அவை எதிர்பார்த்த வெற்றியை அளிக்கவில்லை. பல்லாண்டு காலமாக அரசாங்கங்கள் இராணுவ நடவடிக்கைகள், சமாதானப் பேச்சுவார்த்தைகள் மட்டுமன்றி சர்வதேச மத்தியஸ்தத்தின் மூலம் தீர்வு காண பல சந்தர்ப்பங்களில் நாம் முயற்சிகளை மேற்கொண்டோம். அத்தகைய முயற்சிகள் எவையும் வெற்றியளிக்கவில்லை. எல். ரி. ரி. ஈ இயக்கம் பிடிவாதத்துடன் தன்னுடைய வன்முறைகளை விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லாத கொள்கையை கடைப்பிடித்ததனால் சமாதான முயற்சிகள் படுதோல்வியடைந்தன.

கடந்த பல்லாண்டு காலத்தில் எல். ரி. ரி. ஈ ஒரு சிறிய அமைப்பாக இருந்து நவீன ஆயுதங்களைக் கொண்ட படு பயங்கரமான இயக்கமாக உருவெடுத்தது. எல். ரி. ரி. ஈ இயக்கம் வலுவுடன் இருந்த போது ஆயுத போராட்டத்தில் அனுபவமிக்க 30 ஆயிரம் போராளிகள் அதில் இருந்தார்கள். இவ்வியக்கம் நவீன ஆயுதங்களையும், யுத்த உபகரணங்களையும் பெருமளவில் களஞ்சியப்படுத்தி பதக்கி வைத்திருந்தது.

2005 ஆம் ஆண்டளவில் இலங்கையில் எல். ரி. ரி. ஈ பயங்கரவாதிகள் நாட்டின் 25 சதவீதப் பிரதேசத்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தனர். அத்துடன் கடற்கரையோரப் பகுதிகளில் மூன்றில் இரண்டு பகுதியையும் எல். ரி. ரி. ஈயினர் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். சர்வதேச ரீதியில் ஒழுங்கு செய்யப்பட்ட யுத்த நிறுத்த உடன்பாடு ஏற்பட்ட போதிலும், எல். ரி. ரி. ஈ தனது 8pனிt@!pநி} கீழ் உள்ள பகுதியில் ஆட்சி உரிமையை தனது கையிலேயே வைத்திருந்தனர். எல். ரி. ரி. ஈ உலகில் இருந்த படு பயங்கரவாத இயக்கம் என்பதை நாம் புரிந்து கொள்வது அவசியமாகும். எல். ரி. ரி. ஈ புரிந்த கொடுமைகள் பற்றி நாம் பட்டியல்படுத்தி சொல்லக்கூடிய நிலையில் இருக்கிறோம். கடந்த பல்லாண்டு காலத்தில் எல். ரி. ரி. ஈ வடக்கில் இருந்து சிங்கள, முஸ்லிம் மக்களை விரட்டியடித்தது மட்டுமன்றி, இவ்வியக்கம் எவ்வித தயவு தாட்சண்யமும் காட்டாமல் பொதுமக்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டு ஆயிரக்கணக்கானோரை மரணிக்கச் செய்தனர். அநுராதபுரத்தின் ஸ்ரீ மஹாபோதி, கண்டியின் தலதா மாளிகை போன்ற இரு பிரதான பெளத்த தலங்கள் மீதும் தாக்குதல்களை நடத்தியது. எல். ரி. ரி. ஈயினர் பள்ளிவாசல்கள், தேவாலயங்களிலும் தாக்குதல்களை மேற்கொண்டு படுகொலை செய்தனர். நாட்டின் தேசிய கட்டமைப்பு வசதிகளுக்கு உறுதுணை புரிந்த சர்வதேச விமான நிலையம், மத்திய பஸ்தரிப்பு நிலையம், கொழும்பிலுள்ள பிரதான ரயில் நிலையம் ஆகியவற்றின் மீதும், பொருளாதாரத்தை கட்டிக்காக்கும் மத்திய வங்கி, உலக வர்த்தக நிலையம், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், சிவிலியன் துறைமுகங்கள் ஆகியவற்றின் மீதும் தாக்குதல்களை மேற்கொண்டது. எல். ரி. ரி. ஈ நூற்றுக்கணக்கான கார் குண்டுகள், லொறி குண்டுகள், கிளைமோர் கண்ணிவெடிகள் ஆகியவற்றை மக்கள் கூடுதலாக இருக்கும் இடங்களில் வெடிக்கச் செய்ததன் மூலம் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களை படுகொலை செய்தது. எல். ரி. ரி. ஈ தற்கொலை குண்டு தாக்குதல்களை நடத்துவதில் தன்னிகரற்ற நிலையில் இருந்தது.

எல். ரி. ரி. ஈ கட்டுப்பாட்டில் உள்ள மக்கள் நடை பிணங்களைப் போன்று வேதனையில் மூழ்கியிருந்தார்கள். எல். ரி. ரி. ஈ தன்னுடைய மக்களுக்காக உதித்த விடுதலைப் போராளிகள் அல்ல என்பதும் இதன் மூலம் புலனாகியது. எல். ரி. ரி. ஈயினர் தனது கொடுமையான சர்வாதிகாரத்தின் மூலம் தங்கள் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் உள்ள மக்களை அடிமைகளைப் போல் நடத்தினார்கள். எல். ரி. ரி. ஈ தனக்கு எதிரான எதிர்ப்புகளை கொடுமையான முறையில் அடக்கியது. எல். ரி. ரி. ஈ வேறு ஆயுத போராளிக் குழுக்களின் தலைவர்களை படுகொலை செய்தது. அதன் மூலம் பல தமிழ் போராளிக் குழுக்களை முற்றாக துவம்சம் செய்யவும் தவறவில்லை. எல். ரி. ரி. ஈ மிதவாத ஜனநாயக தலைவர்களையும், தமிழ் மக்கள் மீது அதிக செல்வாக்கை பெற்றுள்ள கல்விமான்களையும் படுகொலை செய்து மக்களை அச்சுறுத்தியது.

எல். ரி. ரி. ஈ யுத்த நிறுத்த உடன்படிக்கையை மூர்க்கத்தனமாக உடைத்தெறிந்து பிரதான இராணுவ இலக்குகள் மீது தாக்குதல்களை மேற்கொண்டு பல சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளையும் பொதுமக்களையும் படுகொலை செய்தது. கெப்பட்டி கொல்லாவையில் மேற்கொள்ளப்பட்ட எல். ரி. ரி. ஈ கிளைமோர் கண்ணிவெடி தாக்குதலினாலும் ஏனைய தாக்குதலினாலும் நூற்றுக்கான ஆண்கள், பெண்கள், சிறுவர், பிள்ளைகள் படுகொலை செய்யப்பட்டனர். எல். ரி. ரி. ஈயின் தோல்விக்கு ஆரம்பமாக மாவில்லாறு வான்கதவை மூடிய நிகழ்வாகும். இந்த வான்கதவு மூலம் கிழக்கு மாகாணத்தில் உள்ள பெரும்பாலான நெற்காணிகளுக்கு நீர்ப்பாசன வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது. இதனால் எல். ரி. ரி. ஈ மேற்கொண்ட மனிதாபிமானமற்ற கொடுமையான செயலினால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலம் பாழடைந்து அப்பகுதி மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியது.

அரசாங்கத்திற்கு இனிமேலும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாத கட்டம் எழுந்த காரணத்தினால் அரசாங்கம் இராணுவ பலத்தை பிரயோகித்து மாவில்லாறு வான்கதவுகளை திறந்துவிட்டது. இதுவே எல். ரி. ரி. ஈயின் அழிவின் ஆரம்பமாகும்.

ஜனாதிபதி அவர்கள் ஆயுதப்படைகளின் பிரதம தளபதி என்ற முறையில் எல். ரி. ரி. ஈக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை சிறந்த ஆளுமையின் மூலம் வழிநடத்தினார். இந்த இராணுவ நடவடிக்கைகளின் போது இராணுவத் தரப்பில் பலர் மரணமடைந்தும், காயமடைந்தும் பாதிப்பிற்குள்ளானார்கள். அத்துடன் சர்வதேச ரீதியிலும் அரசாங்கத்தின் மீது கண்டனக் குரல் எழுந்தது. எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும் இலங்கை ஜனாதிபதி நிலையாக இருந்து, தொடர்ந்தும் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டார். எல். ரி. ரி. ஈயை முற்றாக முறியடித்து அடிபணிய வைக்கவேண்டுமென்ற நிலையிலேயே செயற்பட்டார்.

அரசாங்கம் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த காலகட்டத்தில் அரசாங்கம் பலவீனமடைந்திருந்தால் எமது முயற்சிகள் அனைத்துமே செயல் இழந்திருக்கும்.

1987 ஆம் ஆண்டில் எல். ரி. ரி. ஈயை வாபஸ்பெற வைத்து வடமராட்சி யுத்தத்தில் அதனை படுதோல்வியடைய செய்யும் கட்டத்தில் அரசாங்க படையினர் நெருங்கிக் கொண்டிருந்த போது இந்திய அரசாங்கம் தலையிட்ட காரணத்தினால் எல். ரி. ரி. ஈ அடையவிருந்த படுதோல்வி தவிர்க்கப்பட்டது.

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான நட்புறவை சரியான முறையில் நடைமுறைப்படுத்த தவறியமையால் 1987 ஆம் ஆண்டு பிரச்சினை உருவாகியது.

எனினும் அதற்கு மாறாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதியாக தெரிவாகியவுடன் இந்திய அரசாங்கத்திற்கு இலங்கையின் செயற்பாடுகள் குறித்து உரிய முறையில் எடுத்துரைத்தார். மற்ற நாடுகள் இலங்கை மீது ராஜதந்திர பொருளாதார அழுத்தங்களை ஏற்படுத்தினாலும் இந்தியா தி!rதிரமே இராணுவ செல்வாக்கை பயன்படுத்த முடியுமென்று எங்கள் ஜனாதிபதி நன்கு அறிந்திருந்தார். இதனால் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் நட்புறவை ஏற்படுத்துவதற்காக ஜனாதிபதி ஒரு குழுவை உருவாக்கினார். அதில் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக பசில் ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் லலித்வீரதுங்க மற்றும் நானும் இடம்பெற்றேன். இந்தியத் தரப்பில் தேசிய பாதுகாப்பு ஆலேசகர் எம். கே. நாராயணன், அன்றைய வெளிவிவகார அமைச்சர் சிவசங்கர் மேனன், பாதுகாப்பு செயலாளர் விஜய சிங் ஆகியோர் இடம்பெற்றனர். இவ்விரு குழுவினரும் அடிக்கடி சந்தித்து உரையாடி உணர்வு பூர்வமான பிரச்சினைக்கு தீர்வு காண்பதிலும் வெற்றி கண்டனர்.

தமிழ் பிள்ளைகளுக்கு கல்வியை பெறுவதற்கான வாய்ப்போ நல்ல வாழக்கையை அனுபவிப்பதற்கான சந்தர்ப்பமோ மறுக்கப்பட்டது. இந்த தமிழ் சிறுவர்கள் எல். ரி. ரி. ஈ யின் போராளிகளாக சேர்க்கப்பட்டு 12, 13, 14 வயது சிறுவர்களை யுத்த முனைக்கு அனுப்பி எல். ரி. ரி. ஈயினால் படுகொலை செய்யப்பட்டார்கள். இலங்கையிலுள்ள தமிழ் சமூகத்திற்கு எதிராக சிங்களவரோ, ஆயுதப்படையினரோ அரசாங்கமோ தீங்கிழைக்கவில்லை. எல். ரி. ரி. ஈ இயக்கமே அவர்களுக்கு திங்கிழைத்து அந்த மக்களின் மனிதாபிமான உரிமைகளை வடக்கிலும், கிழக்கிலும் பறித்த கொடுமை புரிந்தது.

எல். ரி. ரி. ஈயினர் அரசாங்கப் படைகளுக்கு எதிரான மோதல்கள் பலவற்றில் வெற்றியும் ஈட்டியுள்ளனர். அவர்கள் 1993ல் பூநகரி இராணுவ முகாமையும், 1996 முல்லைத்தீவு இராணுவ முகாமை தாக்கி பல்லாயிரக்கணக்கான இராணு வீரர்களை படுகொலை செய்தனர். 1998 முதல் 99 வரையில் எல். ரி. ரி. ஈ தாக்குதல்களினால் பல்லாயிரக்கணக்கான இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டார்கள். 2000 ஆவது ஆண்டில் 12 ஆயிரம் இராணுவ வீரர்கள் நிலை கொண்டிருந்த ஆணையிறவையும் எல். ரி. ரி. ஈயினர் கைப்பற்றினர். 2005இல் எல். ரி. ரி. ஈ 26 ஆயிரத்திற்கும் அதிகமான ஆயுதப்படை வீரர்களை படுகொலை செய்தது.

உலகிலுள்ள பயங்கரவாத இயக்கங்களில் எல். ரி. ரி. ஈ மாத்திரமே கடற்படை ஒன்றும் கொழும்பில் வந்து குண்டுகளைப் போடும் விமானங்களும் இருந்தன. யுத்தம் முடிவடையும் காலகட்டத்தில் எல். ரி. ரி. ஈயினர் 2 லட்சத்திற்கும் கூடுதலான பொதுமக்களை தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறச் செய்து, தங்கள் இராணுவ நடவடிக்கைகளுக்கு ஆயுதமாக பயன்படுத்தினார்கள். யுத்தத்தின் போது பொதுமக்களை பாதுகாப்பு கேடயங்களாக எல். ரி. ரி. ஈ பயங்கரவாதிகள் பயன்படுத்தினார்கள்.

நாம் துப்பாக்கி பிரயோகம் செய்வதில்லை என்ற பிரதேசங்களை ஏற்படுத்தி மக்களுக்கு பாதுகாப்பாக வெளியேறுவதற்கான பாதைகளையும் அமைத்தோம். எனினும் எல். ரி. ரி. ஈ யினர் அவற்றின் மூலம் அரசாங்கத் தரப்புக்கு தப்பி வருவதற்கு தடை விதித்து, அவர்களை சுட்டுக் கொல்லும் கொடுமைகளைப் புரிந்தனர். இந்த எல். ரி. ரி. ஈக்கு எதிரான யுத்தத்தின் போது நவீன யுத்த தொழில்நுட்பங்களை கடைப்பிடித்து பொதுமக்களின் மரணத்தை தவிர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.

புலிகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் முதல்வர் அல்பிரெட் துரையப்பாவின் 36 ஆவது நினைவு தினம்!

Wednesday, June 01, 2011
படுகொலை செய்யப்பட்ட முன் னாள் முதல்வர் அல்பிரெட் துரை யப்பாவின் 36 ஆவது நினைவு தின நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அல்பிரெட் துரையப்பாவின் மகள் வைத்திய கலாநிதி ஈசா யாழ்ப்பாணத்திற்கு வருகைதரவுள்ளார். இவரை சுதந்திரக்கட்சியுடன் இணைத்து எதிர்காலத்தில் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க வைப்பதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் கட்சியின் யாழ். மாவட்ட பிரதான அமைப்பாளருமான தேசமான்ய கலாநிதி வேல் முருகு தங்கராசா தெரிவித் தார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதா வது, புலிகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் முதல்வர் அல்பிரெட் துரையப்பாவின் 36 ஆவது நினைவு தினம் எதிர்வரும ஜூலை மாதம் 27 ஆம் திகதி யாழ்ப் பாணத்தில் வெகு சிறப்பாக அனுஷ் டிக்கப்படவுள்ளது.

இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக அவருடைய மகள் வைத்திய கலாநிதி ஈசா இங்கு வருகைதரவுள்ளார். இவரை எதிர்காலத்தில் அரசியற் செயற்பாடுகளில் இணைத்து செயற்படுமாறு கோரியுள்ளோம். இவர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து அரசியற் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான வழிவகைகளைச் செய்து கொடுப்பதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளைச் செய்து வருகின்றோம்.


அல்பிரெட் துரையப்பா மக்களுக்கு சிறந்த சேவையினைச் செய்து மக்கள் மரியாதையினைப் பெற்ற சிறந்த தலைவராவார். அவரை புலிகள் ஈவிரக்கமின்றி சுட்டுக் கொன்றனர். இவருடைய இழப்பு தமிழ் பேசும் மக்களுக்கு பேரிழப்பாகியது. இவருடைய இழப்பினை நினைவுபடுத்தும் முகமாகவும் அவருடைய சேவையினைப் பாராட்டும் முகமாகவும் அவருடைய 36 ஆவது நினைவுதின நிகழ்வினை யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்படவுள்ளது என்றார்.

வெளிநாடுகளில் இருக்கும் இலங்கையர் அச்சமின்றி நாடு திரும்பலாம்-ரஜீவ விஜயசிங்க!

Wednesday, June 01, 2011
மோதல் காலத்தில் நாட்டைவிட்டு வெளியேறிய இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கு எந்தவிதமான அச்சமும் கொள்ளத் தேவையில்லையென பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஜீவ விஜயசிங்க தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கும் இலங்கையர்கள் அந்தநாடுகளில் அரசியல் புகலிடம் கோர வேண்டிய தேவை இல்லலையென்பதே இலங்கையின் நிலைப்பாடு என அவர் தினகரனுக்குத் தெரிவித்தார்.
இலங்கையில் இருந்து வெளியேறிய பலர் அவுஸ்திரே லியா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் அரசியல் தஞ்சம் கோருகின்றனர். இலங்கையில் பயங்கரவாதம் அழிக்கப் பட்டு அமைதி சூழல் உருவாக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில் அரசியல் புகலிடம் கோரவேண்டிய தேவை இல்லை என்றார் அவர்.

அவுஸ்திரேலியாவில் தடுத்துவைக்கப்பட்டு ள்ள தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் சிலர் நாடு திரும்புவதற்கு கடவுச் சீட்டைக் கோரியுள்ளனர். இவ்விடயத்தில் இலங்கை அரசாங்கம், அவுஸ்திரேலி யாவுடன் இணைந்து செயற்பட்டு வருகிறது.

எனவே, வெளிநாட்டிலுள்ள இலங்கையின் சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்கள் எந்தவிதமான அச்சமுமின்றி நாடு திரும்ப முடியும் என்றார்.

இதேவேளை, பயங்கரவாத அமைப்பான புலிகள் அமைப்பை தடைசெய்ய நடவடிக்கை எடுக்காமையானது வெட்கத்துக்கு உரியது என அவுஸ்திரேலிய ஊடகமான ஏ. பி. சி. வானோலி சேவைக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிடுள்ளார்.

Followers

Blog Archive