Wednesday, June 1, 2011

வெளிநாடுகளில் இருக்கும் இலங்கையர் அச்சமின்றி நாடு திரும்பலாம்-ரஜீவ விஜயசிங்க!

Wednesday, June 01, 2011
மோதல் காலத்தில் நாட்டைவிட்டு வெளியேறிய இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கு எந்தவிதமான அச்சமும் கொள்ளத் தேவையில்லையென பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஜீவ விஜயசிங்க தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கும் இலங்கையர்கள் அந்தநாடுகளில் அரசியல் புகலிடம் கோர வேண்டிய தேவை இல்லலையென்பதே இலங்கையின் நிலைப்பாடு என அவர் தினகரனுக்குத் தெரிவித்தார்.
இலங்கையில் இருந்து வெளியேறிய பலர் அவுஸ்திரே லியா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் அரசியல் தஞ்சம் கோருகின்றனர். இலங்கையில் பயங்கரவாதம் அழிக்கப் பட்டு அமைதி சூழல் உருவாக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில் அரசியல் புகலிடம் கோரவேண்டிய தேவை இல்லை என்றார் அவர்.

அவுஸ்திரேலியாவில் தடுத்துவைக்கப்பட்டு ள்ள தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் சிலர் நாடு திரும்புவதற்கு கடவுச் சீட்டைக் கோரியுள்ளனர். இவ்விடயத்தில் இலங்கை அரசாங்கம், அவுஸ்திரேலி யாவுடன் இணைந்து செயற்பட்டு வருகிறது.

எனவே, வெளிநாட்டிலுள்ள இலங்கையின் சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்கள் எந்தவிதமான அச்சமுமின்றி நாடு திரும்ப முடியும் என்றார்.

இதேவேளை, பயங்கரவாத அமைப்பான புலிகள் அமைப்பை தடைசெய்ய நடவடிக்கை எடுக்காமையானது வெட்கத்துக்கு உரியது என அவுஸ்திரேலிய ஊடகமான ஏ. பி. சி. வானோலி சேவைக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிடுள்ளார்.

No comments:

Post a Comment

Followers

Blog Archive