Wednesday, June 1, 2011

புலிகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் முதல்வர் அல்பிரெட் துரையப்பாவின் 36 ஆவது நினைவு தினம்!

Wednesday, June 01, 2011
படுகொலை செய்யப்பட்ட முன் னாள் முதல்வர் அல்பிரெட் துரை யப்பாவின் 36 ஆவது நினைவு தின நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அல்பிரெட் துரையப்பாவின் மகள் வைத்திய கலாநிதி ஈசா யாழ்ப்பாணத்திற்கு வருகைதரவுள்ளார். இவரை சுதந்திரக்கட்சியுடன் இணைத்து எதிர்காலத்தில் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க வைப்பதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் கட்சியின் யாழ். மாவட்ட பிரதான அமைப்பாளருமான தேசமான்ய கலாநிதி வேல் முருகு தங்கராசா தெரிவித் தார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதா வது, புலிகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் முதல்வர் அல்பிரெட் துரையப்பாவின் 36 ஆவது நினைவு தினம் எதிர்வரும ஜூலை மாதம் 27 ஆம் திகதி யாழ்ப் பாணத்தில் வெகு சிறப்பாக அனுஷ் டிக்கப்படவுள்ளது.

இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக அவருடைய மகள் வைத்திய கலாநிதி ஈசா இங்கு வருகைதரவுள்ளார். இவரை எதிர்காலத்தில் அரசியற் செயற்பாடுகளில் இணைத்து செயற்படுமாறு கோரியுள்ளோம். இவர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து அரசியற் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான வழிவகைகளைச் செய்து கொடுப்பதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளைச் செய்து வருகின்றோம்.


அல்பிரெட் துரையப்பா மக்களுக்கு சிறந்த சேவையினைச் செய்து மக்கள் மரியாதையினைப் பெற்ற சிறந்த தலைவராவார். அவரை புலிகள் ஈவிரக்கமின்றி சுட்டுக் கொன்றனர். இவருடைய இழப்பு தமிழ் பேசும் மக்களுக்கு பேரிழப்பாகியது. இவருடைய இழப்பினை நினைவுபடுத்தும் முகமாகவும் அவருடைய சேவையினைப் பாராட்டும் முகமாகவும் அவருடைய 36 ஆவது நினைவுதின நிகழ்வினை யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்படவுள்ளது என்றார்.

No comments:

Post a Comment

Followers

Blog Archive