Friday, April 16, 2010

அணுசக்தி உபயோகத்தைச் சிங்கப்பூர் தொடர்ந்து பரிசீலிக்கும்: பிரதமர் லீ

FRIDAY, APRIL 16, 2010

அணுவாயுதப் பாதுகாப்பைப் பலப் படுத்தும் உலகளாவிய முனைப்பால், சிங்கப்பூரின் அணுசக்தி உபயோகப் பரிசீலனையில் மாற்றமேதும் இருக்காது என்று பிரதமர் லீ சியன் லூங் வாஷிங்டனில் கூறியிருக்கிறார். அங்கு நடைபெற்ற இரண்டு அணுவாயுதப் பாதுகாப்பு மாநாட்டுக்குப் பின் திரு லீ, சிங்கப்பூர் செய்தியாளர்களிடம் பேசினார்.
இந்நடவடிக்கைகளால், அணுசக்தியை எரிபொருளாகப் பயன்படுத்தும் சிங்கப் பூரின் திட்டம் பாதிக்கப்படுமா என்று பிரதமர் லீயிடம் கேட்கப்பட்டது.
“இல்லை, எந்தப் பாதிப்பும் கிடையாது. பல நாடுகள் அணுசக்தியைப் பயன் படுத்துகின்றன, மேலும் பல நாடுகள் அணுசக்தியைப் பயன்படுத்தும் சாத்தியத்தை ஆராய விரும்புகின்றன. ஆனால், அணுசக்தி உலைகள் எவ்வாறு செயல்படுகின்றன, மூலப்பொருட்கள் எவ்வாறு பெறப்படுகின்றன, எத்தகைய பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பதை நிர்ணயிக்க முறையான பாதுகாப்பு விதிகள் இருக்கவேண்டும்.
உதாரணமாக, அணு உலைகள், மூலப் பொருட்கள் போன்றவற்றைச் சேகரித்து வைப்பதிலும் கையாளுவதிலும் மிகுந்த கவனம் தேவை.
“எனவே, இவையனைத்தையும் நாம் கவனமாகப் பரிசீலிக்கவேண்டும். ஆனால் இக்காரணங்களால் திட்டத்தில் மாற்றம் ஏதும் இருக்காது,” என்றார் பிரதமர் லீ.
FRIDAY, APRIL 16, 2010
ஏழாவது நாடாளுமன்றத்திற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் தெரிவான சகல உறுப்பினர்களையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சந்திக்கவிருக்கின்றார்.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவிருக்கின்ற இந்த சந்திப்பிற்கான அழைப்பிதழ் சகல உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அடுத்த அமைச்சரவை தொடர்பில் தெளிவுப்படுத்துவதற்கே ஜனாதிபதி அழைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ்th தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்றத்திற்குத் தெரிவான உறுப்பினர்களும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஒன்றுகூடி கலந்துரையாடவிருக்கின்றனர்.

இலங்கையில் சமாதானம்-ஆஸி. பிரதமர்

Friday, 16 April 2010
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் தற்போது சமாதானம் நிலவுவதாக ஆஸ்திரேலியப் பிரதமர் கெவின் ருட் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், புகலிடம் கோரி விண்ணப்பிப்பிக்கும் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் நிலைமைகள் கவனத்திற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறினார்.

பாதுகாப்பு நிலைமைகள் முன்னேற்றமடைந்திருக்கும் நிலையில், அரசியல் புகலிடம் கோரி விண்ணப்பித்தவர்களின் பல விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருப்பதாகவும் கெவின் ருட் குறிப்பிட்டார்.

இலங்கையில் பெரும்பாலான இடங்களில் தற்போது பாதுகாப்பு சூழ்நிலையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும், அண்மையில் ஜனநாயகத் தேர்தல் நடைபெற்றிருப்பதாகவும் கெவின் ருட் சுட்டிக்காட்டினார்.

வாக்களிப்பு நிலையத்திலேயே வாக்குகள் எண்ணும் பணி!

FRIDAY, APRIL 16, 2010
வாக்களிப்பு நிலையத்திலேயே வாக்கு எண்ணும் பணி எதிh;வரும் 20 ஆம் திகதி நடைபெறவூள்ள மீள் வாக்குப் பதிவூ நிலையத்தில் இடம்பெறவூள்ளது.
எதிர்வரும் 20ம் திகதி மீள் வாக்களிப்பு திருகோணமலை கும்புறுப்பிட்டியலில் உள்ள வாக்குச்சாவடியில் மட்டும் நடைபெற உள்ளதோடு அந்த வாக்குகளை எண்ணும் பணிகளும் அதே இடத்திலேயே நடத்தப்பட உள்ளதாக திருகோணமலை உதவித் தேர்தல் ஆணையாளர் எச்.எம்.என். தெனிபிரிய
கும்புறுபிடியவிலுள்ள ஒருவாக்குச் சாவடியின் வாக்குகள் மோசடிகள் இடம்பெற்றதையடுத்து ரத்துச் செய்யப்பட்டு மீள வாக்களிப்பு நடைபெற உள்ளது.
இங்கு 977 பேரே வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இவர்களுக்கான வாக்களிப்பு ஒரே வாக்களிப்பு நிலையத்தில் நடைபெற்று அதே நிலையத்தில் வாக்குகளை எண்ணவூம் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
வாக்களிப்பு நிலையத்திற்கும் வாக்குகள் எண்ணும் பணிகளுக்கும் 50ற்கும் குறைவான உத்தியோகத்தர்களே ஈடுபடுத்தப்படவூள்ளனர்

Followers

Blog Archive