Friday, April 16, 2010

அணுசக்தி உபயோகத்தைச் சிங்கப்பூர் தொடர்ந்து பரிசீலிக்கும்: பிரதமர் லீ

FRIDAY, APRIL 16, 2010

அணுவாயுதப் பாதுகாப்பைப் பலப் படுத்தும் உலகளாவிய முனைப்பால், சிங்கப்பூரின் அணுசக்தி உபயோகப் பரிசீலனையில் மாற்றமேதும் இருக்காது என்று பிரதமர் லீ சியன் லூங் வாஷிங்டனில் கூறியிருக்கிறார். அங்கு நடைபெற்ற இரண்டு அணுவாயுதப் பாதுகாப்பு மாநாட்டுக்குப் பின் திரு லீ, சிங்கப்பூர் செய்தியாளர்களிடம் பேசினார்.
இந்நடவடிக்கைகளால், அணுசக்தியை எரிபொருளாகப் பயன்படுத்தும் சிங்கப் பூரின் திட்டம் பாதிக்கப்படுமா என்று பிரதமர் லீயிடம் கேட்கப்பட்டது.
“இல்லை, எந்தப் பாதிப்பும் கிடையாது. பல நாடுகள் அணுசக்தியைப் பயன் படுத்துகின்றன, மேலும் பல நாடுகள் அணுசக்தியைப் பயன்படுத்தும் சாத்தியத்தை ஆராய விரும்புகின்றன. ஆனால், அணுசக்தி உலைகள் எவ்வாறு செயல்படுகின்றன, மூலப்பொருட்கள் எவ்வாறு பெறப்படுகின்றன, எத்தகைய பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பதை நிர்ணயிக்க முறையான பாதுகாப்பு விதிகள் இருக்கவேண்டும்.
உதாரணமாக, அணு உலைகள், மூலப் பொருட்கள் போன்றவற்றைச் சேகரித்து வைப்பதிலும் கையாளுவதிலும் மிகுந்த கவனம் தேவை.
“எனவே, இவையனைத்தையும் நாம் கவனமாகப் பரிசீலிக்கவேண்டும். ஆனால் இக்காரணங்களால் திட்டத்தில் மாற்றம் ஏதும் இருக்காது,” என்றார் பிரதமர் லீ.

No comments:

Post a Comment

Followers

Blog Archive