Sunday, April 3, 2011

ராகுல் பிரசாரம் ஒருநாள் மட்டும் ; தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.

Sunday, April 3, 2011

தமிழக சட்டசபை தேர்தலில் காங்., தரப்பில் சோனியா, வருவாரா என்ற கேள்விக்கு 5 ம் தேதி பிரசாரம் என்று முடிவு வந்தது. இந்நிலையில் காங்., பொதுசெயலர் ராகுல் வருவாரா என்ற கேள்விக்கும் முற்றுப்புள்ளி வைத்து விட்டது காங்கிரஸ் மேலிடம் ஆனால் தமிழகத்தில் ஒருநாள் மட்டும் பிரசாரம் எந்தளவிற்கு பயன்தரும் என்று காங்கிரஸ் இளஞைர் காங்கிரசார் சற்று உள்ளம் சோர்ந்து போய் உள்ளனர். வரும் 6ம் தேதி ஈர‌ோட்டில் பிரசாரம் செய்கிறார். தமிழக சட்டசபை தேர்தல் வரும் 13ம் தேதி நடக்கவுள்ளது. இதற்கான பிரசாரம் சூடுபிடித்துள்ளது. இம்முறை, சென்னையை விட்டு வெளி மாவட்டங்களிலேயே முக்கிய தலைவர்கள் அதிக பிரசாரம் மேற்கொண்டுள்ளனர். தி.மு.க.,வின் கோட்டை என கூறப்பட்ட சென்னையில், கடந்த முறை ஏழு தொகுதிகளை அ.தி.மு.க., கைப்பற்றியது. லோக்சபா தேர்தலிலும் மூன்றில் ஒரு இடத்தை அ.தி.மு.க., பெற்றது. இந்நிலையில், தி.மு.க., வேட்பாளர்கள் வெளிமாவட்டங்களில் போட்டியிடுகின்றனர். சென்னையில் ஐந்து தொகுதிகளில் காங்., வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். பிரசாரம் முடிய இன்னும் 10 நாட்கள் உள்ளதால், சென்னையில் பிரமாண்ட பிரசார கூட்டம் நடத்த தி.மு.க., முடிவு செய்துள்ளது. இதில், கூட்டணி தலைவர்கள் ஒரே மேடையில் பங்கேற்று பேச உள்ளனர். குறிப்பாக, காங்கிரஸ் தலைவர் சோனியாவை பங்கேற்க வைக்க மத்திய அமைச்சர் சிதம்பரம் மூலம் தீவிர ஏற்பாடுகள் நடக்கின்றன. புதுச்சேரி மற்றும் திருவனந்தபுரத்தில் நடக்கவுள்ள தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்க சோனியா ஒப்புதல் அளித்துள்ளார். அதேநாளில், சென்னை பிரசார கூட்டத்தில் பேச அவருக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதற்காக, தி.மு.க., நிர்வாகிகள் வேண்டுகோளின்படி, புதுவையைச் சேர்ந்த மத்திய அமைச்சர் நாராயணசாமி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் ஆதரவாளர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர். வரும் 5ம் தேதி தீவுத்திடலில் கூட்டம் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி, மத்திய உள்துறையைச் சேர்ந்த பாதுகாப்பு அதிகாரிகளான ஏ.எஸ்.எல்., படையினர், கடந்த சில தினங்களுக்கு முன், சென்னை வந்தனர். தி.நகர் பனகல் பார்க் அருகே தி.மு.க., கூட்டம் நடத்த முடிவு செய்துள்ள இடம், தீவுத்திடல் ஆகியவற்றை பார்வையிட்டு நேற்று டில்லி சென்றனர்.கடந்த லோக்சபா தேர்தலில் தி.மு.க., கூட்டணியின் பிரசார கூட்டம் தீவுத்திடலில் நடந்தது. இந்த கூட்டம் சென்டிமென்டாக வெற்றி பெற்றதால், இம்முறையும் அதே இடத்தில் கூட்டணி தலைவர்களுடன் கரம் கோர்த்து பிரசாரம் செய்யவும், காங்கிரசுக்கும், எங்களுக்கும் எந்த பிரச்னையும் இல்லை, ஒற்றுமையுடன் இருக்கிறோம்' என மக்களுக்கு உணர்த்தும் வகையிலும் இக்கூட்டத்தை நடத்த, தி.மு.க., முடிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து, ராகுலை வரவழைக்க வாசன் அணியில் உள்ள இளைஞர் காங்கிரசுக்கு பொறுப்பு தரப்பட்டுள்ளது. வரும் 6, 7 ஆகிய தேதிகளில் ஈரோடு, திருச்சி போன்ற பகுதிகளில் ராகுல் பிரசாரம் செய்வார் என தெரிகிறது. ஆனால், "அவர் சென்னைக்கு வந்து தி.மு.க., தலைவருடன் ஒரே மேடையில் பேசுவாரா? என்பது தெரியாது' என காங்., வட்டார தகவல்கள் கூறுகின்றன. புதுச்சேரியிலும் பிரசாரம் : காங்., தலைவர் சோனியா, வரும் 5ம் தேதி சென்னை கூட்டத்தை முடித்துவிட்டு, அங்கிருந்து புதுச்சேரி செல்கிறார். அங்கு நடக்கும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று, தி.மு.க., - காங்., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார். அதுபோல், காரைக்காலில் காங்., கூட்டணி கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி, பிரதமர் மன்மோகன் சிங் பேசுகிறார். இதற்கான தேதி முடிவு இன்னும் செய்யப்படவில்லை.

இலங்கை வாழ் தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளனர் திருப்பதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

Sunday, April 3, 2011

இலங்கையில் தமிழர்களுக்கு தற்போது எந்த பாதிப்பும் இல்லை. அவர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்று திருப்பதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித் துள்ளார். மும்பையில் இந்தியா - இலங்கை அணிகள் மோதும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தைக் காண ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியா வந்துள்ளார். அவர் தனது குடும்பத்துடன் சென்னையில் இருந்து கார் மூலம் திருப்பதி சென்றார். அவருக்கு வழி நெடுகிலும் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. திருப்பதி மலைப் பாதையில் அதிரடிப்படை பொலிஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திருப்பதி கோவிலில் மத்திய பொலிஸ் படையினர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர். திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். வேத பண்டிதர்கள் அவரை நுழைவு வாயிலில் இருந்து கருவறைக்கு அழைத்து சென்றனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நன்றாக சாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக சாதாரண பக்தர்கள் தரிசனத்தை தேவஸ்தான அதிகாரிகள் நிறுத்தி வைத்தனர். மஹிந்த ராஜபக்ஷ சுமார் 45 நிமிடம் வரை கருவறையில் சாமிதரிசனம் செய்தார். அப்போது எழுமலையானுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தரிசனத்திற்கு பிறகு ஜனாதிபதிக்கு வேத பண்டிதர்கள் பட்டு வஸ்திரம் அணிவித்து லட்டுகள் மற்றும் அனைத்து விதமான பிரசாதங்களையும் கொடுத்து ஆசி வழங்கினர். ஏழுமலையான் கோவிலில் தனது எடைக்கு எடையாக ரூ. 55 ஆயிரத்து நாணயங்களை துலாபாரம் செலுத்தினார். பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிருபர்களிடம் கூறியதாவது, இலங்கையில் உள்ள தமிழர்கள் தற் போது பாதுகாப்பாக உள்ளனர். அவர்க ளுக்கு எந்தவித பாதிப்போ, பிரச்சினையோ இல்லை. இலங்கை மக்கள் அனைத்து துறையிலும் முன்னேறவும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெறவும் ஏழுமலை யானை வேண்டினேன் என்று தெரிவித்தார். பின்னர் அவர் ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டியை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.

Followers

Blog Archive