Tuesday, June 5, 2012

நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து அமெரிக்காவிற்கும், இந்தியாவிற்கும் விளக்கம்!

Tuesday, June 05, 2012
நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து அமெரிக்காவிற்கும், இந்தியாவிற்கும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

யுத்தம் இடம்பெற்ற பகுதிகள் உள்ளிட்ட நாட்டின் சகல பகுதிகளிலும் அரசாங்கம் மேற்கொண்டு வரும் நல்லிணக்கப் பணிகள் குறித்து இரு நாடுகளுக்கும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாடு ஒன்றின் போது இந்திய மற்றும் அமெரிக்கப் பிரதிநிதிகளுக்கு இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ ஆகியோர் இவ்வாறு விளக்கமளித்துள்ளனர்.

இந்திய பாதுகாப்புச் செயலாளர் ஏ.கே. ஆன்டனி மற்றும் அமெரிக்காவின் கூட்டுப்படைகளின் தளபதி ஜெனரல் மார்டீன் டெம்ஸ்கீ ஆகியோரை இலங்கைப் பிரதிநிதிகள் தனித்தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இலங்கைப் படையினருக்கு எதிர்காலத்தில் பயிற்சிகளை வழங்குவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இரு நாட்டு பிரதிநிதிகளிடமும், பாதுகாப்புச் செயலாளர் கோரியுள்ளார்.

இந்தக் கோரிக்கை தொடர்பில் இரு நாடுகளும் சாதகமான பதிலை அளித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் இணைய தளம் தகவல் வெளியிட்டுள்ளது.

யுத்தத்தின் பின்னரான இலங்கையில் அரசாங்கம் மேற்கொண்டு வரும் நல்லிணக்க முனைப்புக்கள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

Followers

Blog Archive