Monday, February 13, 2012இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள தெற்காசியப் பிராந்தியங்களுக்கான வெளிவிவகார அமைச்சர் ரொபர்ட் ஓ பிளேக் , அமெரிக்காவின் பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் ஜனநாயக உரிமைகள் தொடர்பான உதவிச் செயலாளர் மரி ஒட்டே குழுவினர் நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீமை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது, நாட்டின் தற்போதைய அரசியல், பொருளாதாரம் நிலைம உட்பட பலதரப்பட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment