Friday, April 23, 2010

ஜனநாயக மக்கள் முன்னணி ஐ.தே முன்னணியிலிருந்து விலகுகிறது?

Friday, April 23, 2010
ஐக்கிய தேசிய முன்னணியிலிருந்து விலகுவதற்கு ஜனநாயக மக்கள் முன்னணி தீர்மானித்துள்ளதாகப் பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய முன்னணி ஏற்கனவே வழங்கியிருந்த உறுதிமொழிக்கமைய தேசியப் பட்டியலில் ஆசனமொன்றைத் தமது கட்சிக்கு வழங்காமையே இதற்கான காரணமென அவர் சொன்னார்.
இவ்வாறான இணக்கப்பாடொன்றின் அடிப்படையிலேயே மனோ கணேசன் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டதாகவும் ஆனால் இணக்கப்பாட்டிற்கு அமைய ஐக்கிய தேசிய முன்னணி நடந்துகொள்ளாமையினால் தமது கட்சி இந்த முன்னணியிலிருந்து விலகி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருந்துகொண்டே சுயாதீனமாக இயங்கவுள்ளதாக அவர்எமக்குத் தெரிவித்தார்.
இதேவேளை நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற தொழிலாளர் தேசிய முன்னணியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் பி.திகாம்பரம் பாராளுமன்றத்தில் சுயாதீனமாகச் செயற்படத் தீர்மானித்துள்ளார்.
சில விடயங்களைக் கவனத்திற்கொண்டு இந்தத் தீர்மானத்தை எடுத்ததாகப் பாராளுமன்ற உறுப்பினர் பி. திகாம்பரம் கூறினார்.

No comments:

Post a Comment

Followers

Blog Archive