Friday, March 26, 2010

பாராளுமன்றப் பொதுத்தேர்தல்2010பத்மநாபா ஈபிஆர்எல்எப்


தமிழரின் நலன்களுக்காகத் தன்னலமின்றிப் பாடுபடும்எமது கட்சிக்கே உங்கள் வாக்குகள்......
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (பத்மநாபா)
நடைபெற இருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு -கிழக்கில் ஈபிஆர்எல்எவ் (பத்மநாபா). புளொட் ஆகிய அமைப்புக்கள் இணைந்து போட்டியிடுகின்றன.
யாழ்பாணம் திருகோணமலையில் ஈபிஆர்எல்எவ் இன் சின்னம் மெழுகுதிரியிலும் வன்னி மட்டக்களப்பில் புளொட்டின் நங்கூரம் சின்னத்திலும் போட்டியிடுகின்றனர்.
பாராளுமன்றப் பொதுத்தேர்தல்2010 திருகோணமலை
மக்களே! திருகோணமலையில் நீங்கள் கௌரவமாகவும் சுய மரியாதையுடனும் அச்சமின்றி வாழ்வதற்காக இணைந்த வடக்கு கிழக்கில் மாகாணசபையை உருவாக்கி திருகோணமலையைத் தலைநகரமாக்கியவர்கள் நாங்கள். அந்த சரித்திரம் படைத்த மாகாண சபையைத் தலைமையேற்ற முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் ஒரு சிறந்த கல்விமான் என்பதும் புத்திசாலித்தனமும் தீர்க்க தரிசனமும் மிக்க தலைவர் என்பதும் நீங்கள் அறிந்ததே. அவர் எமது பத்மநாபா ஈபிஆர்எல்எப் கட்சியின் தலைவர்களில் ஒருவர்.அறிவும் ஆற்றலும் அர்ப்பண உணர்வும் கொண்ட தோழர்கள் எம்முடன் இருக்கிறார்கள். எதையும் செயலுருவில் செய்து காட்டும் செயல் வீரர்கள்.நீங்கள் சந்;தித்த துன்பங்கள் இழப்புக்கள் எல்லாவற்றுக்குமே ஒரு விடிவு வேண்டும். நீதி நியாயம் வேண்டும்.
பாராளுமன்றப்; பொதுத் தேர்தல் 2010மக்களே!மாற்றத்திற்கு தயாராகுங்கள். மாற்றமொன்றே உங்கள் விமோசனத்திற்கு வழி
எமது அன்பிற்கினய திருகோணமலை மக்களே!நீங்கள் பட்ட வேதனைகள் துன்பங்கள் இந்த உலகம் அறியாததல்ல. உங்களுக்கு ஏற்பபட்ட இழப்புக்களும் வேதனைகளும் மனச்சாட்சியை நெருடியவை.மக்களே! திருகோணமலையில் நீங்கள் கௌரவமாகவும் சுய மரியாதையுடனும் அச்சமின்றி வாழ்வதற்காக இணைந்த வடக்கு கிழக்கில் மாகாணசபையை உருவாக்கி திருகோணமலையைத் தலைநகரமாக்கியவர்கள் நாங்கள். அந்த சரித்திரம் படைத்த மாகாண சபையைத் தலைமையேற்ற முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் ஒரு சிறந்த கல்விமான் என்பதும் புத்திசாலித்தனமும் தீர்க்க தரிசனமும் மிக்க தலைவர் என்பதும் நீங்கள் அறிந்ததே. அவர் எமது பத்மநாபா ஈபிஆர்எல்எப் கட்சியின் தலைவர்களில் ஒருவர்.அறிவும் ஆற்றலும் அர்ப்பண உணர்வும் கொண்ட தோழர்கள் எம்முடன் இருக்கிறார்கள். எதையும் செயலுருவில் செய்து காட்டும் செயல் வீரர்கள்.நீங்கள் சந்;தித்த துன்பங்கள் இழப்புக்கள் எல்லாவற்றுக்குமே ஒரு விடிவு வேண்டும். நீதி நியாயம் வேண்டும்.உங்கள் நிலம் ,பொருளாதாரம் ,மனித உரிமை என்பன பாதுகாக்கப்பட வேண்டும். மேம்படுத்தப்படவேண்டும்.இலங்கையின் ஏனைய பகுதிகளில் பாரிய அபிவிருத்திப் பணிகள் நடைபெறும் போது கடந்த 25 வருடங்களுக்கு மேலாக எந்த விதமான முன்னேற்றமோ அபிவிருத்தியோ இன்றி திருமலை ஸ்தம்பிதமடைந்து காணப்படுகிறது.எமது பாரம்பரிய தொழில் துறையான விவசாயமும், மீன் பிடியும், சுற்றுலாத்துறையும் புத்துயிர் பெறவேண்டும்.தொழில் துறைநகரமாக திருமலை நிர்மாணிக்கப்படவேண்டும். இளைஞர்கள் பெண்கள் எதிர் நோக்கும் பாரிய வேலை இல்லாப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும்.கல்விச்சாலைகள் பரவலாக நிர்மாணிக்கப்படவேண்டும்.எமது வீதிகள் வீட்டு வசதிகள் விஸ்தரிக்கப்படவேண்டும்.எல்லாவற்றுக்கும் மேலாக பீதியும் பதட்டமும் இல்லாதொழிக்கப்படவேண்டும்.நிலம், நிதி, காவல்துறை மீது அதிகாரம் கொண்டதாக மாகாணத்திற்கு அதிகாரப்பகிர்வு வேண்டும்.வழமையாக நீங்கள் தெரிவு செய்தவர்கள் உங்களுக்காக என்ன செய்தார்கள். உங்கள் வாக்குகளைப் பெற்று விட்ட திருமலையை எட்டிப்பாக்காதவர்களாகத்தானே அவர்கள் இருந்தார்hகள்.தற்போது உங்களுக்காக உங்கள் இன்பதுன்பங்களில் பங்கெடுத்து வாழ்பவர்களைத் தெரிவு செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது.மக்களே!மாற்றத்திற்கு தயாராகுங்கள். மாற்றமொன்றே உங்கள் விமோசனத்திற்கு வழி
மாற்றத்தை செயற்படுத்த ஆற்றலும், தீர்க்கதரிசனமும், அரசியல் ஞானமும் கொண்ட இந்தியாவின் நட்பை நேசிக்கும் பத்மநாபா ஈபிஆர்எல்எப் இன் தோழர்களுக்கு வாக்களியுங்கள்.எமது சின்னம் மெழுகுதிரி பத்மநாபா ஈபிஆர்எல்எப்

No comments:

Post a Comment

Followers

Blog Archive