Sunday, February 27, 2011

முஸ்லிம் காங்கிரஸின் பலம் தேர்தலில் வெளிப்படும்.

Sunday, February 27, 2011
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸி டமிருந்து பறித்தெடுக்கப்பட்ட பேரம் பேசும் அரசியல் பலத்தை மீளப் பெறுவதற்கானதோர் சந்தர்ப்பமே எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலாகும்.

இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும், உள்நாட்டு வர்த்தக, கூட்டுறவுத்துறை பிரதி அமைச்சருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்தார். எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலில், நிந்தவூர் பிரதேச சபைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையி லேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஸ்ரீல. மு. காங்கிரஸ் நிந்தவூர் மத்திய குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இக் கூட்டத்தில் (2011-02-25) திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். சி.பைசால் உட்பட பெருந்தொகை யான பொது மக்களும் கலந்து கொண்டனர்.

பிரதி அமைச்சர் பசீர் சேகுதாவூத் மேலும் பேசியதாவது, கிழக்கு மாகாண சபைக்கான அடுத்த தேர்தலில் முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரை பெற்றுக் கொள்வதற்கான முதற்கல்லை நடுகின்ற நாளாக எதிர்வருகின்ற மார்ச் 17 ஆம் திகதி அமையப் போகின்றது. இதற்காக முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மரச் சின்னத்திற்கு இந்த உள்ளூராட்சி சபைத் தேர் தலில் வாக்களிக்க கடமைப்பட்டுள் ளனர். கிழக்கு மாகாண சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்போ, அரசாங்கக் கட்சியோ அடுத்து வரும் தேர்தலில் தனித்து வெல்ல முடியாத ஒரு சூழலில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசுடனோ தமிழ் தேசிய கூட்டமைப்புடனோ சேர்வதன் மூலம் ஆட்சியமைப் பதற்கான காலம் நிச்சயம் வரும்.

முஸ்லிம்களுக்கென்று தனி யலகு கோரிக்கைக்கான அரசியல் போராட்டம் கைவிடப்படாத நிலையில் கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரை பெற்றுக் கொள்வதற்கான வியூகங்களுக்கு வலுச் சேர்க்க வேண்டிய காலம் இது. இச்சந்தர்ப் பத்தில் தமிழ் மக்களுக்கும் நீதியான நேர்மையான தீர்வு கிடைக்க வேண்டும் என பிரார்த் திக்கின்றோம்.

எனவே தான் முஸ்லிம்களின் அரசியல் அபிலாஷைகளை அடைந்து கொள்வதற்கான போராட்ட வியூகத்திற்கு வழிசேர்க் கின்ற தேர்தலாக இந்த தேர்தலை முஸ்லிம் மக்கள் பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் செல்வாக்கை தேசிய அரசியலில் இருந்தும், சமூக அரசியலில் இருந்தும் ஒரு போதும் ஓரங்கட்ட முடியாது என்ற செய்தியை வெளிக்காட்ட முடியும் எனக் கூறினார்.

இக் கூட்டத்தில் மு.கா. வேட்பாளர் களான எம்.ஏ.எம். தாஹிர், ஏ.ஏ.எம். நெளசாத், எம்.ரீ. ஜப்பார் அலி, எம்.எம். அன்சார், றியாஸ் உட்பட பலரும் உரையாற்றினர்.

No comments:

Post a Comment

Followers

Blog Archive