Wednesday, February 23, 2011

அடையவே முடியாத மகாதேவிக்காக வாளைத் தூக்கி வீசிக் கொண்டிருப்பதைவிடவும் சாத்தியமான வழிமுறைகளைக் குறித்துச் சிந்தியுங்கள்-முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜப்பெருமாள்!
Wednesday, February 23, 2011
இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக ஏறக்குறைய ஏழு மாதங்களுக்கு முன்னர் வடக்கு கிழக்கு மாகாணங்களின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் சில அபிப்பிராயங்களை தெரிவித்திருந்தார்.

13வது திருத்தச்சட்;டத்தின் அடிப்படையில் முதற்கட்டமாக அதிகாரப் பகிர்வுகளை சாத்தியப்படுத்துதல், இநத அதிகாரப் பரவலாக்கல் சம்பந்தப்பட்ட விடயத்தை சரியான முறையில் செயற்படுத்துதற்கு உடனடியாக ஒரு ஆனைக்குழுவை ஏற்படுத்துதல். இந்த அதிகாரப் பரவலாக்கல் ஆனைக்குழுவில் அரசியல் யாப்பு சம்பந்தமான விடயங்களில் நிபுணத்துவமுடையவர்கள் விடயங்களைத் திறமையாக நிர்வகிக்கக்கூடிய திறனாளர்களைக் கொண்ட நிபுணர்குழுவொன்றை அதை;தல் அவசியமாகும் என்பது வரதராஜப்பெருமாளின் சாராம்சக் கருத்தாகும். அடையவே முடியாத மகாதேவிக்காக வாளைத் தூக்கி வீசிக் கொண்டிருப்பதைவிடவும் அடைய முடிந்த ஸ்ரீதேவிக்காக கைகளை நீட்டலாம் என்பதைப் போல் சாத்தியமான வழிமுறைகளைக் குறித்துச் சிந்தியுங்கள் என்பதாக வரதராஜப் பெருமாள் இந்தக் கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தார். தன்னுடைய இந்த நிலைப்பாட்டை அவர் இலங்கையில் பல்வேறு இடங்களிலும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றார். யாழ்ப்பாணம், கொழும்பு உள்ளிட்ட பல பிரதேசங்களில் நடைபெறும் கூட்டங்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பெருமாளின் பிரசன்னம் அதிகளவில் காணப்படுகிறது.

அத்துடன் அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று புலம்பெயர் மக்களையும் விடுதலைப் போராட்ட அமைப்புக்களில் திவிரமாக செயற்பட்டிருக்கும் முக்கிய உறுப்பினர்களையும் சந்தித்து தனது நிலைப்பாட்டை விளக்கியிருக்கிறார். வரதராஜப்பெருமாள் இலங்கை அரசியல் களத்தில் நன்றாக அறியப்பட்டவர். வடக்கு கிழக்கு மாகாண சபையின் முதல் அமைச்சர். முப்பது ஆண்டுகளுக்கு மேலான அரசியல் செயற்பாடு அனுபவங்களையுடையவர். கல்வியியலாளர். பொருளியல் சிந்தனையாளர். ஆயுதப் போராட்ட அரசியல் அனுபவத்தையும் ஆயுதமற்ற அரசியல் நடவடிக்கைகளின் அனுபவத்தையும் கொண்டவர். இந்தப் பின்புலத்தில் தனது கடந்தகால அரசியல் அனுபவத்தையும் இலங்கைத் தமிழர்களின் அரசியல் அனுபவத்தையும் தொகுத்து தனது இன்றைய நிலைப்பாட்டை அவர் உருவாக்கியிருக்கிறார். இதை அவர் பகிரங்கமாகத் தெரியப்படுத்தியும் வருகிறார்.

இதேவேளை வரதihப்பெருமாளை கடுமையாக விமர்சிப்போரும் உள்ளனர். குறிப்பாக இந்தியாவுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டவர் என்றும் இந்திய விரிவாக்கத்துக்கு ஆதரவளிப்பவர் என்றும் பெருமாளை இவர்கள் விமர்சிக்கின்றனர்.

ஆனால் பெருமாளோ தான் கடந்த கால அனுபவங்களின் வழியாகவும் இன்றைய உலக ஒழுங்கின் வழியாகவும் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கின்றேன் என்கின்றார். பிரச்சினைக்கான சூழல் அற்றுப்போனதென்றால் அடுத்த கட்டமாக எது சாத்தியமோ அதைப் பற்றித்தானே நாம் சிந்திக்க வேண்டும்? என்பதுதான் பெருமாளின் தீர்க்கமான நிலைப்பாடு.

இங்கே நாம் வரதராஜப்பெருமாளை முக்கியப்படுத்துவதை தவிர்த்து விட் அவருடைய கூற்றுக்களையும் நிலைப்பாடுகளையும் அவதானிக்கலாம்

தமிழர்கள் இன்று எத்தகைய நிலையில் இருக்கின்றனர்? தமிழ் பேசும் சமூகங்கள் இப்போது எவ்வாறுள்ளன? இந்த இரண்டு கேள்விகளும் முக்கியமானவை. அதாவது அரசியல் ரீதியாசும் சரி, பொருளாதார சமூக இருப்பு நிலையிலும் சரி தமிழர்களும் தமிழ் பேசும் மக்களும் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கின்றனர்.

தமிழ் பேசும் சமூகங்களை பிரதிநிதிதுவப்படுத்தும் அரசியல் சகதிகளில் பலவும் இன்று ஐக்கிய இலங்கைக்குள் தான் அரசியற் தீர்வு என்ற நிலைப்பாட்டுக்கு வந்துவிட்டன. இந்த நிலைப்பாட்டுடன்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பும் உள்ளது. நாடு கடந்த தமிழீழக் கோட்பாட்டாளர்களைத் தவிர ஏனையோர் அனைவரும் யதார்த்த அரசியலைப் பற்றி சிந்திக்க முற்பட்டுள்ளனர். இந்த யதார்த்த அரசியல் வெளிக்கு அப்பால் நிற்போரில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒரு சிறு பிரிவினரும் உள்ளடங்குவர். இத்தகைய பிரிவினர் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது கூட்டமைப்பிலிருந்து விலகிச் சென்று விட்டனர்.

கூட்டமைப்பில் ஓரளவுக்கு யதார்த்தமாகச் சிந்திப்பவர் சுரேஷ் பிரேமச்சந்திரன். ஆனால் அண்மையில் இவர் நாடாளுமன்றத்தில் ஆற்றும் உரைகளும் ஊடகங்களுக்கு விடுக்கும் அறிக்கைகளும் யதார்த்த சிந்தனை முறைக்கு அப்பாலானவையாக இருக்கின்றன. கூட்டமைப்புக்குள் இருக்கும் நெருக்கடியைச் சமாளிக்கவும், அந்தக் கட்சியின் அரசியல் இருப்பை உறுதி செய்யவும் சரேஷ் பிரேமச்சந்திரன் முனையலாம்.

ஆனால் அவ்வாறு அவர் முயற்சிப்பாராயின் அவருடைய அரசியல் வெற்றிகள் என்பதும் அடையாளம் என்பதும் எதிர்காலத்தில் கேள்விக்குறியாகவே அமையலாம். பல மந்தைகளில் ஒன்றாக நிற்பதை விடவும் தனித்து சிங்கமாக இருக்க வேண்டிய அரசியல் தலைமையாளரின் பண்புகளில முக்கியமானது என்பார்கள். இந்த் தனித்துத் தெரிதல் என்பது சிந்தனையையும் செயற்பாட்டாலுமே அமையும்.

சுரேஷ் பிரேமச்சந்திரன் நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமல்ல. ஆயுதப் போராட்ட முன்னோடிகளில் ஒருவர். நீண்டகால அரசியல் அனுபவத்தையுடையவர். சுக ஊடாடத்திலுள்ளனர். பல்வேறு நெருக்கடி பாதைகளால் பயணித்து வந்தவர். ஆகவே நடைமுறைக்குரிய திட்டங்கள் நிலைப்பாடுகள் என்பவற்றைப் பற்றி சிந்திக்க வேண்டிய பொறுப்பில் இன்று இவர் இருக்கின்றார். கூட்டமைப்பிலுள்ளோரில் அதிக ஆற்றலும் நம்பிக்கையும் தரக்கூடியவர் சுரேஷ் பிரேமச்சந்திரன்தான். தலைமைத்துவப் பண்பு நிறைய பெற்றவரும் அவர்தான்.

எனவே சுரேஷ் பிரேமச்சந்திரன் இன்று கூட்டமைப்பின் மையச் சுழற்சியைத் தீர்மானிக்க வேண்டிய பொறுப்பிலிருக்கிறார். கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நோய்வாய்ப்பட்டிருப்பதுடன் முதுமை நிலையில் இருக்கின்றார். இதேவேளை சம்பந்தனும் சுரேஷ் பிரேமச்சந்திரனும் அதிகம் முரண்பாடற்ற நிலைப்பாட்டை உடையவர்கள்.

எனவே இன்றுள்ள நிலையில் தமிழ் பேசும் சமூகங்களின் அரசியற் தீர்வைப் பற்றி சிந்திக்க வேண்டுமாயின் இன்னொரு யதார்த்தத்தையும் மனங்கொள்வது அவசியம். அதாவது தமிழ் பேசும் சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியற் கட்சிகளில் (மலையகம்- முஸ்லீம் தரப்பு மற்றும தமிழ் தரப்பு ஆகியவற்றில்) பெரும்பாலானவை அரசாங்கத்துடன் இணைந்திருக்கின்றன. அல்லது அரச ஆதரவை கொண்டிருக்கின்றன. டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி, பிள்ளையான் எனும் சிவனேசதுரை சந்திரகாந்தனின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ், ரிஷாத் பதியுதீனின் அணி, இ.தொ.கா, மலையக மக்கள் முன்னணி, இப்படி பல கட்சிகளும் புலிகளின் பரிவுகள் கே.பி அணியினர் வரையில் அரசு வட்டத்துக்குள் உள்ளடக்கப்பட்டு விட்டன.

ஆனாலும் இந்தத் தரப்பினரில் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும் தமிழ் பேசும் மக்களின அரசியல் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டு- அபிவிருத்தி நடவடிக்கைகள் வரையிலும் செயற்பட்டு வருகின்றன.

ஆகவே இனப்பிரச்சினைக்கான தீர்வு தமிழ் பேசும் சமூகங்களின் அபிவிருத்தி வடக்கு-கிழக்கு பிரதேச மேம்பாடு என்றெல்லாம் பேசப்படும் போது இந்தத் தரப்புக்களும் தமக்குரிய இடத்தைக் கோரும். அத்துடன் பெரும்பாலான தரப்புகள் அரச தரப்பு நிலைப்பாட்டுடன் இருக்கும போது வெளித்தரப்புக்களின் பலமும் நியாயப்பாடுகளும் கேள்விக்குரியதாகவே காணப்படும்.

புலிகள் பலமான நிலையில் இருந்தபோது முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் வேறு. அவர்கள் வெளிப்படுத்திய நிலைப்பாடுகள் வேறு. தாம் தெரிவித்த நிலைப்பாட்டை நோக்கி நகரும் செயற்பாடு முறையைப் புலிகள் கொண்டிருந்தனர். ஆனால் புலிகள் முன் முன்வைத்த தனிநாட்டுக் கோரிக்கை அதற்கான போராட்டம் என்பன இன்று தோல்வி கண்டிருப்பதற்கு புலிகளால் முன்வைத்த உப கோரிக்கைகளே நிறைவேற்றப்படவில்லை.

உதாரணமாக பொருளாதாரத்தடை நீக்கம், கடல் வலயச் சட்டம், சில குறிப்பிட்ட பாதைகளை பொதுமக்களுக்கு திறந்து விடுதல். அரசியல் கைதிகளின் விடுதலை, சுனாமியினால் ஏற்பட்ட பாதிப்புக்களை மீள் கட்டமைப்புச் செய்வதற்கான ஒருங்கிணைவு போன்றவற்றிலேயே வெற்றியை காண முடியவில்லை புலிகளால்.

இவ்வாறான ஒரு பின்னணியில் எடு;த்த எடுப்பிலேயே சிங்களத் தரப்பை மீண்டும் கலவரமடைய வைக்கும் இனவாதிகளுக்கு அதிக வாய்ப்பைக் கொடுக்கும் கோரிக்கைகளை தமிழர்கள் முன் வைக்க முடியுமா? அதாவது சமஷ்டி, சுயாட்சி, வடக்கு கிழக்கு இணைப்பு என்ற வகையிலான கோரிக்கைகள் மீண்டும் இனவாதத்தை வளர்க்கவே வாய்ப்பளிக்கும். பிரச்சினையைத் தீர்க்கவோ தமிழ் பேசும் மக்களுக்கு நன்மை பயக்கவோ மாட்டாது.

இதேவேளை தமிழ் பேசும் மக்களுக்கு இவை அடிப்படையானவை. எந்த நிலையிலும் விட்டுக்கொடுக்க முடியாதவை. எனவே இந்த இரு யதார்த்த நிலைமையில் விடயங்களை புத்திபூர்வமாக கையாள்வது மட்டுமே சாத்தியமான வெற்றிகளைத் தருவதாக இருக்கும்.

இதற்கு மாற்றுச் சொற்கள் மாற்று அணுகுமுறைகளைப் பற்றி சிந்திப்பது அவசியம். அதாவது அடைய முடியாத மகாதேவிக்காக வெற்றி வெளியில் வாளை வீசுவதை விடவும் அடையக்கூடிய ஸ்ரீதேவியை வரவேற்பது கட்டாயமானது.

இன்னும் இனப்பிரச்சினையை நீடிக்க முடியாது. இன்றும் தமிழ் பேசும் மக்களின் துயரங்களும் அவலங்களும் நீடிக்கக் கூடாது. அவ்வாறு அவை நீடிக்குமானால் அதற்குப் பொறுப்பு தமிழ் பேசும் சமூகங்களை பிரதிநிதித்துவபடுத்தும் கட்சிகளும் அவற்றின் தலைமையாளர்களும் இவற்றை வழி மொழியும் ஊடகங்களுமே

No comments:

Post a Comment

Followers

Blog Archive