Friday, 11 June 2010சபாநாயகர்.சமல்.ராஜபக்ஸவினால்.கோரிக்கைக்.கடிதமொன்று கையளிக்கப்படும் பட்சத்தில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் கென்யாவில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற சங்கத்தின் பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வதற்கான அனுமதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது.
குறித்த கோரிக்கை விடுக்கப்படாத பட்சத்தில் இராணுவ பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ தளபதியும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினறுமான ஜெனரல் சரத் பொன்சேகாவை, குறித்த மாநாட்டில் கலந்துகொள்வதற்கான அனுமதி வழங்குவதா? இல்லையா என்பது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சே தீர்மானிக்கும் என்று அமைச்சின் பேச்சாளரான லக்ஷ்மன் ஹுலுகல்ல தெரிவித்தார்.
No comments:
Post a Comment