Wednesday, May 12, 2010

மேலதிக பாதுகாப்புடன் சரத் தொடர்ந்தும் இராணுவக் கட்டுப்பாட்டில் : நீதிமன்றம் உத்தரவு

Wednesday, May 12, 2010
அவசரகால சட்டத்தை மீறினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஜெனரல் பொன்சேக்காவுக்கு எதிராக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யப்பட்டது.
யுத்தம் வெற்றிக்காக உழைத்த இராணுவ வீரர்களில் சரத் பொன்சேகாவும் ஒருவர் என்பதால் இவ்விசாரனணயை துரிதப்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதிபதி சம்பா ஜானகி ராஜரட்ன, தெரிவித்தார்.
விடுதலைப் புலிகளுக்கெதிரான இறுதிக் கட்டப் போரின் போது வெள்ளைக்கொடிகளை ஏந்தி இராணுவத்தினரிடம் சரணடையவந்த விடுதலைப் புலிகளின் தலைவர்களை பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவிற்கமைய சுட்டுக்கொன்றதாக சண்டேலீடர் ஆங்கிலப் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் ஜெனரல் பொன்சேக்கா தெரிவித்திருந்தார்.
இந்தத் தகவல் தொடர்பான முறைப்பாட்டில் சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ள அவர் இன்று காலை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திடம் மனு தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Tuesday, May 11, 2010

நாட்டின் அபிவிருத்திக்கு அரச அதிகாரிகளின் அர்ப்பணிப்பு அவசியம்

TUESDAY, MAY 11, 2010
யுத்தமற்ற அமைதிச் சூழலை வாய்ப்பாக்கிக் கொண்டு நாட்டை பொருளாதாரத்திலும் அபிவிருத்தியிலும் கட்டியெழுப்புவதற்கு அரச அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் செயற்படுவது அவசியமென பிரதி நிதியமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்தார்.
ஆசியாவின் முன்னோடி நாடாக இலங்கையைக் கட்டியெழுப்பும் செயற்பாடுகளுக்கு முழுமையான பங்களிப்பை நிதியமைச்சின் மூலம் வழங்குவதாக தெரிவித்த அவர் நாட்டின் பொருளாதார கேந்திரமாகவுள்ள நிதியமைச்சின் செயற்பாடுகளை பாமர மக்களும் அறிந்து கொள்ளும் வகையில் நடவடிக் கைகளை மேற்கொள்ளப் போவ தாகவும் தெரிவித்தார்.
புதிய பிரதிநிதியமைச்சரான கலாநிதி சரத் அமுனுகம நேற்று நிதியமைச்சில் தமது பொறுப்புக்களை உத்தியோகபூர்வமாகக் கையேற்றார்.
நேற்றுக்காலை சுபவேளையில் மத அனுஷ் டானங்களுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் நிதியமைச்சின் செயலாளர் பி.பி. ஜயசுந்தர உட்பட அமைச்சின் உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். அமைச்சின் அதிகாரிகள் மத்தியில் உரையாற்றிய பிரதியமைச்சர் மேலும் தெரி வித்ததாவது,
நாட்டில் நிலவிய யுத்த சூழல் கார ணமாக சர்வதேச நாடுகள் எமக்கு உதவு வதற்கு முன்வராத காலம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
யுத்தம் நிலவிய காலத்தில் அரச அதிகாரிகளின் மனநிலையும் சரியானதாக இருக்கவில்லை. தற்போது சிறந்த சூழல் உருவாகியுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதற்கான வழி வகுத்துள்ளார்.
இன்றைய சூழல் நாட்டைப் பொரு ளாதாரத்திலும் அபிவிருத்தியிலும் கட்டி யெழுப்ப மிகவும் உகந்ததாகவுள்ளது. அரச அதிகாரிகள் தம் அர்ப்பணிப்புடனான சேவையினால் முழுமையான பங்களிப்பை வழங்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய நிதியமைச்சின் செயலாளர் பி.பி. ஜயசுந்தர நாட்டின் பொருளாதார ஏற்றத்தை நிர்ணயிக்கும் நிதியமைச்சில் சரத் அமுனுகம போன்ற நிர்வாகத்திறன் மிக்க அமைச்சர்கள் பங்கேற்பது மிகச் சிறந்ததொன்றாகும்.
நாடு சுனாமி பேரழிவினால் சிக்கித்தவித்த வேளையில், அப்போதும் பிரதி நிதி யமைச்சராகவிருந்து தேசிய சர்வதேச ரீதியில் உதவிகளைப் பெற்றுக்கொள்ள தமது திறமையைப் பயன்படுத்தியவர் அமைச்சர் சரத் அமுனுகம.
நிர்வாகத்திறன் கொண்ட அமைச்சர்களில் இவர் முக்கியம் பெறுபவர் எனவும் தெரிவித்தார்.

செனற்சபை, தேர்தல் முறை மாற்றம் 17வது திருத்தத்துக்குத் திருத்தம்

TUESDAY, MAY 11, 2010
அரசியல் யாப்பில் பல்வேறு திருத்தங்களை செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான திருத்த மசோதா இரு வாரங்களுக்குள் அமைச்சரவை அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படும். ஒரு மாதத்தினுள் அரசியல் யாப்பு திருத்த மசோதாவை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன கூறினார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று (10) மகாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்றது. அமைச்சர் மேலும் கூறியதாவது,
பொருளாதாரத்தை பலப்படுத்தவும் மஹிந்த சிந்தனை தொலைநோக்கின் பிரகாரம் ஆசியாவின் முன்னோடியாக இலங்கையை அபிவிருத்தி செய்யவும் ஏற்றவாறு அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக அமைச்சர் ஜீ. எல். பீரிஸின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் முறையில் மாற்றம், 17 ஆவது திருத்த சட்டத்தில் திருத்தம், செனட் சபை அடங்கலான பல திருத்தங்கள் அரசியலமைப்பில் மேற்கொள்ளப்படவுள் ளன. அரசியலமைப்பு திருத்த மசோதா தயாரிக்கப்பட்டு வருகிறது. திருத்த மசோதா இரு வாரங்களில் அமைச்சரவை யின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படும். ஜூன் மாதத்தில் திருத்த மசோதா பாராளுமன்றத்தில் சமர்ப் பிக்கப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளது.
பாராளுமன்ற தெரிவுக் குழுவில் இந்த திருத்த மசோதா சமர்ப்பிக்கப்படும்போது சட்ட திருத்தம் தொடர்பில் எதிர்க்கட்சி களுக்கு தமது யோசனைகளை முன்வைக்க முடியும். தற்பொழுதுள்ள தேர்தல் முறை யினால் பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உறுப்பினர்கள் தெரிவாவதில்லை. விருப்பு வாக்கு முறையினாலும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கிரா மத்திற்கு ஒரு உறுப்பினர் தெரிவாகும் வகையில் மாற்றப்படும். 17ஆவது திருத் தச் சட்டத்தை பலப்படுத்தவும் அதனூடாக சுயாதீன ஆணைக் குழுக்களை திறம்பட இயங்க வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
செனட் சபைக்கு 9 மாகாணங்களில் இருந்தும் ஒரு பிரதிநிதி தெரிவாக உள் ளார். குறைந்த பட்சம் 25 உறுப்பினர்கள் செனட் சபையில் அங்கம் வகிப்பர்.
இன ரீதியான பிரச்சினைகள், அர சியலமைப்பு அடிப்படையிலான பிரச் சினைகள் தொடர் பில் மாகாண சபைக் கும் மத்திய அரசாங்கத்திற்குமிடையில் தொடர்பு ஏற்படுத்தும் வகையில் செனட் சபை செயற்படும் என்றார்.
அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்த் கூறிய தாவது, ஏதும் இனத்தை பாதிக்கும் விடய த்தை அடிப்படையாகக் கொண்ட சட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டாலும் செனட் சபையில் அது குறித்து ஆராயப்பட்டு அதில் திருத்தம் செய்ய முடியும்.

Sunday, May 9, 2010

பிரித்தானிய கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய அரசாங்கத்துடன் இருத்தரப்பு உறவுகள் குறித்து விரைவில் பேச்சு ‐ இலங்கை

Sunday,May09, 2010

இலங்கை தொடர்பில் நட்பார்ந்த ரீதியில் செயற்படும் பிரித்தானிய கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய அரசாங்கத்துடன் இருத்தரப்பு உறவுகள் குறித்து விரைவில் பேச்சு நடத்த எண்ணியுள்ளதாக பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதுவர் நிஹால் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச பயங்கரவாதிற்கு எதிரான கொள்கைகளை கொண்டுள்ள கன்சர்வேட்டிவ் கட்சியுடன் தூதரகம் ஏற்கனவே தொடர்புகளை உறுதிப்படுத்தி கொண்டுள்ளது. பிரித்தானிய அரசாங்கத்துடன் பேச்சு நடத்த விரிவான அதிகாரங்களை கொண்டு தூதுக் குழுவொன்றை அனுப்பி வைக்குமாறு தான் ஜனாதிபதியிடமும் வெளிவிவகார அமைச்சரிடமும் கேட்டுக் கொள்ள உள்ளதாகவும் ஜயசிங்க கூறியுள்ளார்.

புலிகளின் சர்வதேச பிரச்சாரங்களை முறியடிப்பதே வெளிவிவகார அமைச்சின் முதன்மை கடமையாகும் ‐ ஜீ.எல.பீரிஸ்

Sunday,May09, 2010
புலிகளின்சர்வதேச பிரச்சாரங்களை முறியடிப்பதே தமது அமைச்சின் முதன்மைக் கடயைமாக அமைந்துள்ளதென வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களை விடவும் புலிகளின் சர்வதேச பிரச்சார வலயமைப்பு வலுப்பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர், இலங்கைக்கு எதிரான புலிகளின் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கண்டி மல்வத்து மற்றும் அஸ்கிரி பீடாதிபதிகளை சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டதன் பின்னர், நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை வெளிவிவகார அமைச்சில் கடமையாற்றும் ராஜதந்திரிகள் மற்றும் உயரதிகாரிகளுக்கு, புலிகளின் வலையமைப்பை முறியடிப்பது குறித்து விளக்கமளிக்கப்படவுள்ளது.
புலி ஆதரவாளர்களின் வெளிநாட்டு செயற்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யுத்தம் நிறைவடைந்துள்ள போதிலும் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு பல்வேறு முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட வேண்டியிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக இனங்களுக்கு இடையில் காணப்படும் தவறான புரிந்துணர்களை களைவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
யுத்த வெற்றியின் பின்னர் சகல இன மக்களினதும் இதயங்களை வென்றெடுக்கக் கூடிய பல்வேறு நடவடிக்கைகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

Saturday, May 8, 2010

விசாவின்றி 28 பேர் பிடிபட்டனர்

SATURDAY, MAY 08, 2010
நாட்டில் தங்கியிருப்பதற்கு உரிய விசாக்கள் இன்றி நாட்டில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த வெளிநாட்டுப் பிரஜைகள் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு டாம் வீதி, வாழைத் தோட்டம் ஆகிய பகுதிகளிலுள்ள விடுதிகளிலிருந்து கைதுசெய்யப்பட்ட இவர்கள் விசாவின்றி நாட்டில் நீண்டகாலம் தங்கியிருந்ததாகத் தெரியவந்துள்ளது.
கைதுசெய்யப்பட்டவர்களுள் இந்தியர்களும் நேபாளியர்களும் அடங்குகின்றபர் எனப் பொலிசார் தெரிவித்தனர்.

வன்னி உள்ளூராட்சி ஊழியருக்கு நடமாடும் சேவை

SATURDAY, MAY 08, 2010
முல்லைத் தீவிலும் கிளிநொச்சியிலும் இடப்பெயர்வினால் பாதிக்கப்பட்ட உள்ளூராட்சி அலுவலகர்கள் மற்றும் ஊழியர்களின் நன்மை கருதி விசேட நடமாடும் சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இம்மாதம் 13 ஆம், 14 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள இந்த நடமாடும் சேவையை வடமாகாண உள்ளூராட்சி அமைச்சும் உள்ளூராட்சித் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.
மே 13 ஆம் திகதி முல்லைத்தீவிலும், 14 ஆம் திகதி கிளிநொச்சியிலும் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த நடமாடும் சேவை நடைபெறவுள்ளது.

Friday, May 7, 2010

சா;வதேச தரத்தில் ஊடகவியலாளா;களுக்கான பயிற்சி நிலையம்!

May 7, 2010
இலங்கை ஊடகவியலாளா;களுக்கு நவீன பயிற்சிகள் வழங்குவதற்கு சா;வதேச மட்டத்திலான நிலையமொன்றை இன்னும் ஆறு மாத கலத்துக்குள் இலங்கையில் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு யூனெஸ்கோ தூதுக் குழுவிடம் ஊடகத்துறை மற்றும் பெருந்தெருக்கள் பிரதியமைச்சா; மோ;வின் சில்வா கோரிக்கை விடுத்தாh;.
நேற்று யூனெஸ்கோ பிரதிநதிகள் குழுவை அமைச்சா; சந்தித்துப் பேச்சுவாh;த்தை இச்சந்திப்பின்போதே பிரதியமைச்சா; இக்கோரிக்கையை முன்வைத்தாh;. நடத்தினாh;.
அரச மற்றும் தனியாh; வேறுபாடுகளின்றி சகல ஊடகவியலாளா;களுக்கும் இங்கு பயிறிசியளிக்கப்படவேண்டும் என பிரதியமைச்சா கோரியதுடன் அதற்கான கட்டடத்தை தாம் பெற்றுத் தருவதாகவூம் வாக்குறுதியளி;த்தாh;.
இதனைத்தொடா;ந்து பயிற்சியாளா;களையூம் தொழில்நுட்ப உதவிகளையூம் யூனெஸ்கோ வழங்கும் எனவூம் இச்சந்திப்பில் இணக்கம் தெரிவிக்கப்பட்டது

புலம்பெயர் புலிவிசுவாச தமிழர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டிய அவசியமில்லை – வரதராஜ பெருமாள்

May 7, 2010
புலம்பெயர் புலிவிசுவாச தமிழர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டிய
அவசியமில்லை என முன்னாள் வடக்கு கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் வரதராஜா பெருமாள் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் தமிழர்களின் கருத்துக்கள் அநாவசியமானவை எனவும், அவர்கள் ஒருபோதும் நாடு திரும்பப் போவதில்லை எனவும் வரதராஜா பெருமாள் அரசாங்கத்திற்கு சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் அபிவிருத்தி மற்றும் சமாதான முனைப்புக்களில் புலம்பெயர் தமிழர்கள் பங்களிக்கப் போவதில்லை என இந்திய ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியின் போது அவர் தெரிவித்துள்ளார்.
தமிழர் பிரதேசங்களை ஸ்திரமற்றத் தன்மையும், யுத்தமும் நிலவ வேண்டும் என்றே புலம்பெயர் சமூகம் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால், மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் புலம்பெயர் தமிழர்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பளிக்க வேண்டிய அவசியம் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை வாழ் தமிழர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டள்ளார்

Tuesday, April 27, 2010

வடக்கு கிழக்கு பொலிஸாருக்கு தமிழ் மொழிப் பயிற்சி!

Tuesday, 27 April 2010
வடக்கு கிழக்கு பிரதேசங்களில் சேவையாற்றும் ஆறாயிரம் பொலிஸாருக்கு தமிழ் மொழி பயிற்சிகளை வழங்க பொலிஸ் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவூம் இதன் மூலம் மக்களுக்குத் தேவையான சேவைகளை சிறந்த முறையில் வழங்க முடியூம் என்று எதிh;பாh;ப்பதாகவூம் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசு+ரிய தெரிவித்தார்.
புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள முதலாவது பொலிஸ் அகடமி திறப்பு விழாவில் உரையாற்றிய போதே பொலிஸ் மா அதிபா; மேற்கண்டவாறு கூறினாh;. அவா; தொடா;ந்து கூறுகையில்.
யாழ்ப்பாணம் வவூனியா மன்னார் மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் சேவையாற்றும் பொலிஸாருக்கு இந்த பயிற்சி வழங்கப்படவூள்ளது.
இவ்வாறான பயிற்சி வழங்குவதன் மூலம் பொலிஸாரால் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் வாழும் மக்களுக்குத் தேவையான சேவைகளை சிறந்த முiறியல் வழங்க முடியூம்.
மூன்று மாதங்களுக்கு 300 பேர் என்ற அடிப்படையில் ஐந்து வருடத்திற்கு ஆறாயிரம் பேருக்கு பயிற்சி வழங்கப்படும்.
பொலிஸாரின் தொழில் ரீதியான ஆளுமைகளை மேம்படுத்துவதே பிரதான நோக்கமாகும். இந்த பொலிஸ் அகடமியை இதற்கு உச்ச அளவில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
காளணி பல்கலைக்கழகத்துடன் இந்த பொலிஸ் அகடமியை இணைத்து செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

உலக வங்கி 100 மில்லியன் கடனுதவி

Tuesday, 27 April 2010
வடக்கின் புனரமைப்பு பணிகளுக்காக உலக வங்கி 100 மில்லியன் ரூபாவினை கடனுதவியாக வழங்கத் தீர்மானித்துள்ளது. தௌ்ளிப்பழை மற்றும் உடுவில் பிரதேசங்களில் 3000 குடும்பங்களை மீள் குடியேற்றுவதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது.
பலாலி உயர் பாதுகாப்பு வலயங்களை அண்மித்த பகுதிகளில் மக்கள் மீள்குடியேற்றப்படவுள்ளனர். வடிகாலமைப்பு திட்டங்களும் புனர்நிர்மாணம் செய்யப்பட உள்ளதாக வடக்கின் வசந்தம் திட்டத்தின் பிரதிப் பணிப்பாளா கே.விஸ்வலிங்கம் தெரிவித்துள்ளார். மீள்குடியேற்றப்படும் மக்களுக்கு கடனுதவிகளும் வழங்கப்பட உள்ளதாகத் தெரவிக்கப்படுகிறது.

Monday, April 26, 2010

வவுனியாவில் கடத்தப்பட்ட இளம் குடும்பஸ்தர் பொலிஸாரினால் மீட்பு

Monday, 26 April 2010
வவுனியாவில் கடத்தப்பட்டிருந்த இளம் குடும்பஸ்தர் இன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நேற்று முன்தினம் வவுனியா வைத்தியசாலைக்கு செல்லும்போது, கடத்தப்பட்டிருந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டிருந்த நிலையில், வவுனியா அலுவலக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கைதுசெய்யப்பட்ட குறித்த உறுப்பினர் வழங்கிய தகவலையடுத்தே, மேற்படி கடத்தப்பட்டிருந்த நபர் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள வீடொன்றிலிருந்து மீட்கப்பட்டார்.

ஜெனரலின் அடிப்படை உரிமை வழக்கு இன்று

Monday, 26 April 2010
கொழும்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஜெனரல் சரத் பொன்சேகா தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மனு, உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பிரதம நீதியரசர் அசோக என் டி சில்வா தலைமையில் காமினி அமரதுங்க, கே ஸ்ரீபவன் ஆகிய நீதியரசர்கள் குழு முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பிரதிவாதிகளால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆட்சேபனைகளுக்குப் பதிலளிக்கும் முகமாக மனுதாரர் சார்பில் விடயங்களை முன்வைப்பதற்கு மூன்று வாரகால அவகாசம் வழங்குமாறு ஜெனரல் பொன்சேகா சார்பில் பிரசன்னமாகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி ஷிப்லி அஸீஸ் உயர்நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.
ஜெனரலைக் கடந்த சில நாட்களாகச் சந்திக்கமுடியாமல் போனதால் உரிய பதிலை வழங்கமுடியாமல் போனதாக ஜனாதிபதி சட்டத்தரணி உயர் நீதிமன்றில் தெரிவித்தார்.
இதற்கிணங்க ஜெனரல் பொன்சேகா சார்பில் விடயங்களை முன்வைப்பதற்காக மூன்றுவார கால அவகாசத்தை உயர்நீதிமன்றம் வழங்கியது.
சட்டவிரோதமாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ளதால் தனது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக ஜெனரல் சரத் பொன்சேகா தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே கூடிய விரைவில் தம்மை விடுவிக்குமாறு பொன்சேகா நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மனுமீதான விசாரணை ஜூலை மாதம் 8 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது

பூட்டானில் எமது ஜனாதிபதிக்கு உற்சாகமான வரவேற்பு!

Monday, 26 April 2010
பூட்டான் தலைநகரான திம்புவில் நாளை மறுதினம் ஆரம்பமாகும் 16 ஆவது சாh;க் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காகச் சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவூக்கு பாரோ சா;வதேச விமன நிலையத்தில் பெரும் வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.
பூட்டான் ஜனாதிபதி ஜிக்மி யோசா; தின்லேயூம் மற்றும் அமைச்சா;கள் பலரும் விமான நிலையம் வந்து ஜனாதிபதிக்கும் அவா; தலைமையிலான இலங்கைத் தூதுக்குழுவூக்கும் உற்சாகமான வரவேற்பளித்தனா;.
பூட்டான் உச்சிமாநாட்டை பொறுப்பேற்று நடத்துவது இதுவே முதல் முறையாகும். சார்க் அமைப்பின் தலைமைப் பதவியை தற்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வகித்து வருகின்றார என்பது குறிப்பிடத்தக்கது

பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக மீண்டும் கோத்தாபய ராஜபக்ஷ!

Monday, 26 April 2010
புதிய அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சு செயலாளராக கோத்தாபய ராஜபக்ஷ மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளாh;. நேற்று அலரி மாளிகையில் நடைபெற்ற வைபவத்தில் இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழங்கினாh;.
கடந்த 2005 ஆம் ஆண்டு நவம்பா; மாதம் 25 ஆம் திகதி இவா; முதலில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டாh;.
கடந்த ஐந்து வருட காலப்பகுதியில் சிறப்பாகப் பணிபுரிந்த இவா; இலங்கையில் மூன்று தசாப்தங்கள் நிலவிய பயங்கரவாதத்தை முறியடித்து புலிகளை தோற்கடிக்க முப்படைகளின் சேனாதிபதியான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவூக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கினாh;.

Sunday, April 25, 2010

ஜெர்மன் மற்றும் சுவிஸ்லாந்துக்கான இலங்கையின் பதில் தூதுவர் கலந்துரையாடல்


SUNDAY APRIL 25, 2010
ஜெர்மன் மற்றும் சுவிஸ்லாந்துக்கான இலங்கையின் பதில் தூதுவரும், vaanniசமரின்பூத்57வது படைப்பிரிவிற்குத் தலைமை தாங்கிச் சென்றவருமான மேஜர்ஜெனரல் ஜகத் டயஸ் அவர்களுக்கும் சுவிஸிலுள்ள தமிழ் சிங்கள மக்களுக்குமிடையிலான கலந்துரையாடல்நேற்றையதினம் சூரிச் மாநகரில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலின் போது ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட் ,ஈ.பி.டி.பி,ஆகிய அமைப்புக்களின் பிரதிநிதிகளும் தமிழ் சிங்களப் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். இக்கலந்துரையாடலை ஆரம்பித்துக் கருத்துரைத்த மேஜர்ஜெனரல் ஜகத் டயஸ், வன்னிப் போரின் போது தம்மால் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான நடவடிக்கைகள் தொடர்பில் எடுத்து விளக்கியதுடன். புலிகள் இயக்கம் முற்றாக ஒழித்துக் கட்டப்பட்டுள்ள போதிலும் புலம்பெயர் வாழ் தமிழ்மக்கள் மத்தியில் உள்ள புலி ஆதரவாளர்கள் நாடு கடந்த தமிழீழம், வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்று கூறிக்கொண்டு இறந்த புலிகளுக்கு உயிர் கொடுக்கலாமென்று கனவு காண்கின்றனர். இவ்வாறானவர்களின் எண்ணம் ஒருபோதுமே நிறைவு பெறாது என்று தெரிவித்தார். அத்துடன் நாடு கடந்த தமிழீழம், வட்டுக்கோட்டை தீர்மானம் என்று கூறிக் கொண்டு மக்களைக் குழப்பும் விதத்திலும் மக்களின் அவலத்தில் குளிர்காயும் செயற்பாடுகளிலும் ஈடுபடும் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ளவர்கள் தொடர்பிலான தகவல்களை எமக்கோ அல்லது தூதுவராலயக பிரதிநிதிகளுக்கோ அன்றில் உங்கள் அருகிலுள்ள நீங்கள் சார்ந்த சுவிஸ் ஜேர்மன் நாடுகளின் பொலீசாருக்கோ தெரிவிக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இலங்கையில் கடத்தப்பட்டவர்கள், கைது செய்யப்பட்டவர்கள் வன்னிப் போரின் இறுதிக்கட்டத்தின் போது இடம்பெயாந்;த நிலையில் காணாமற் போனவர்கள், கைது செய்யப்பட்டவர்கள் உள்ளிட்ட தகவல்களை அறிய விரும்புவோர் என்னிடம் நேரடியாகவே அவர்கள் குறித்த தகவல்களை தரும்பட்சத்தில் அதுபற்றி உரிய கவனம் செலுத்தி அறிந்து அவ்வாறு கைது செய்யப்பட்டிருக்கும் பட்சத்தில் புலிகளால் பலாக்காரமாகவும், சிறுவர் போராளிகளாகவும் இணைக்கப்பட்ட யாவரையும் முடிந்தவரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். உங்களுக்கு தெரிந்தவர்கள் எவரும் இவ்வாறான நிலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தாலும் அதுகுறித்து உரியவிபரம் தெரிவிக்கப்படும் பட்சத்தில் அத்தகையவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென உத்தரவாதம் தருகிறேன் என்றும் கூறினார்.
இதனைத் தொடர்ந்து இக்கலந்துரையாடலின் போது தமிழ்பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பிலும், தீர்வினைப் பெற்றுக் கொள்ள எவ்வாறான முன்னெடுப்புக்களை மேற்கொள்ளலாம் பற்றியும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. ஈ.பி.டி.பி சார்பில் மகேந்திரன், ராஜ்மோகன், பரந்தாமன், ஜோசெப், மற்றும் நேசன், ஈசன் போன்றவர்களும் இக்கலந்துரையாடலில் பங்கேற்று தமது கருத்துக்களை முன்வைத்தனர்.
இதன்போது கருத்துரைத்த ஈ.பி.டி.பி சார்பில் கலந்து கொண்ட மகேந்திரன், அன்று புலிகளுக்காக பிரச்சாரம் செய்து அவர்களுக்காவே நிதி சேகரிப்பில் ஈடுபட்டு வந்ததுடன் மற்றும் அரசுடன் நெருங்கி செயற்பட்டு வரும் தமிழ் அமைச்சரைப் புலிகளுடன் சேர்ந்து பழிவாங்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வந்த பலரும்.. உதாரணமாக கனடாவின் வர்த்தக சங்கங்கள் போன்றோர் தற்போது ஜனாதிபதி ராஜபக்சவுடன் இணைந்து தாம் அரசுக்கு ஆதரவானவர்கள் என்று காட்டிக் கொண்டு அரசுடன் நெருங்கி செயற்பட்டு வருகின்றனர். இதுவரை காலமும் அரசுடன் இணைந்து செயலாற்றி வந்த எம்மையே இந்நடவடிக்கைகள் கேள்விக்குறியாக்கியுள்ளன என்று தெரிவித்தார்.
இது குறித்து கருத்துரைத்த மேஜர்ஜெனரல் ஜகத் டயஸ், இது தொடர்பில் தாங்கள் கூடுதல் கவனம் செலுத்துவதாகவும், குறித்த வர்த்தகர்கள் உண்மையாகவே மனம் விரும்பி, உண்மையில் மக்கள் நலனைக் கருத்திற் கொண்டு மக்களுக்காக சேவையாற்ற முன்வருவார்களாயின் நாம் அவர்களை அங்கீகரிக்க வேண்டுமென்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து கருத்துரைத்த பாசல் நேசன், புலிகள் என்று கூறி எவரையும் ஒதுக்கிவிடக் கூடாதென்றும், யாராவது மனமுவந்து அரசுடன் இணைந்து செயற்பட முன்வரும் பட்சத்தில் அவர்களையும் இணைத்துக் கொண்டு பணிகளைச் செய்ய வேண்டுமென்றும் குறிப்பிட்டதுடன், உதாரணமாக கனகரத்தினம் எம்பியை அரசு இணைத்து செயற்படுவது போன்றதே இந்நடவடிக்கையும் என்று சுட்டிக் காட்டினார்.
இதனைத் தொடர்ந்து ஈ.பி.டி.பி மகேந்திரன் மேலும் கருத்துரைக்கையில், கிளிநொச்சி மாவட்டத்தில் அரசாங்கத்தினால் கைப்பற்றப்பட்டுள்ள காணிகள் உரியவர்களுக்கு திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும். இடம்பெயர்ந்த மக்கள் அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்றங்கள் செய்யப்பட வேண்டுமென்றும் தெரிவித்ததுடன், இவ்விடயம் தொடர்பிலான பல்வேறு கருத்துக்களையும் முன்வைத்தார். இது குறித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென்று மேஜர்ஜெனரல் ஜகத் டயஸ் குறிப்பிட்டார்.
கலந்துரையாடலில் பங்கேற்றிருந்த மற்றொருவர் கருத்துரைக்கையில், ஜீரிவி தீபம் போன்ற ஊடகங்கள் தற்போது புலிசார்பான பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்த ஊடகங்களை ஏன் தடை செய்யக் கூடாதென்று? கேள்வியெழுப்பினார். இதற்குப் பதிலளித்த மேஜர் ஜெனரல், அவர்கள் புலிகளுக்காகத் தான் செயற்படுகிறார்கள் என்கிற விடயம் ஆதாரத்துடன் நிரூபிக்கப்படும் பட்சத்தில் நாம் உரிய நடவடிக்கையினை மேற்கொள்வோம். தவிர ஆதாரமில்லாத பட்சத்தில் இவ்விடயங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதென்பது மிகவும் கடினமான விடயமாகும் என்று தெரிவித்தார். ஈ.பி.டி.பியின் ராஜ்மோகன் கருத்துரைக்கையில், கீரிமலையில் உள்ள பாதுகாப்பு தரப்பினரின் கடல்கட்டுப்பாடு நீக்கப்பட வேண்டும். யாழ். வர்த்தகர்களுக்குள்ள பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இவ்விடயம் தொடர்பிலும் தான் கூடிய கவனம் செலுத்துவதாக மேஜர்ஜெனரல் ஜகத் டயஸ் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து கூட்டத்தினை நிறைவுசெய்யுமுன் தனது கருத்தினை வெளியிட்ட மேஜர்ஜெனரல் ஜகத் டயஸ் அவர்கள், வெளிநாடுகளில் தொடர்ந்தும் சிலர் புலிகளுக்கு உயிரூட்டுவதாக எண்ணி தங்கள் அறிவீனமான செயற்பாடுகளை தொடர்கின்றனர். அவர்களுக்கு உண்மை நிலைமைகளை தெளிவுபடுத்தி அவர்களையும் சமூக அக்கறையுடனான செயற்பாட்டுக்கு கொண்டு செல்ல வேண்டும். இதுவரை காலமும் எம்மோடு இணைந்து நாம் அனைவரும் இலங்கையர் என்ற அடிப்படையில் செயற்படும் அனைவருக்கும் எனது நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து மேஜர்ஜெனரல் ஜகத் டயஸ_க்கு நினைவுப் பரிசொன்றும் வழங்கப்பட்டது. மற்றும் மேஜர்ஜெனரல் ஜகத் டயஸ், தம் வருகையை நினைவுபடுத்தும் விதமாக தமிழ்ப் பாடப் புத்தங்கள் சிலவற்றையும் கையளித்தார். இதனைத் தமிழ் மக்கள் சார்பில் ஈ.பி.ஆர்.எல்.எவ் ராஜன் பெற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து மேற்படி கலந்துரையாடல் சுமுகமாக நிறைவுபெற்றது..!!!

மாறுபட்ட கருத்துகளுடைய தமிழ் கட்சிகள் பேச்சுவார்த்தையில்.

SUNDAY APRIL 25, 2010
தமிழ் பேசும் மக்களின் ஒற்றுமை மற்றும் எதிர்கால செயற்றிட்டங்கள் தொடர்பில் வடக்கு கிழக்கில் வெவ்வேறு கருத்துகளுடைய பிரதான கட்சிகளுக்கிடையே பேச்சுவார்த்தைகளுக்கான சமிக்ஞைகள் உருவாகியுள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்க் கட்சிகளுக்கிடையே ஒற்றுமை அவசியப்படுவதாக தமிழ் பேசும் மக்களிடையே கருத்துகள் நிலவி வருகின்றன. இதனால் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும்பொருட்டு மாறுபட்ட கருத்துகளுடைய தமிழ்க் கட்சிகளின் தலைமைத்துவங்கள் எதிர்வரும் வாரத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜி.எல்.பீரிஸ் பூட்டான் விஜயம்

SUNDAY APRIL 25, 2010
புதிய வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ஜி.எல்.பீரிஸ் 7 நாள் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பூட்டான் செல்லவுள்ளார்.
இவர் நாளைய தினம் பூட்டான் செல்லவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
பூட்டானில் நடைபெறவிருக்கும் சார்க் மாநாட்டில் கலந்துகொள்ளும் நோக்கிலேயே வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அங்கு செல்லவுள்ளார். இந்த விஜயத்தின் போது வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரோமேஷ் ஜயசிங்க மற்றும் இலங்கைக்கான சார்க் பணிப்பாளர் நாயகம் ஆகியோரும் பூட்டான் செல்கின்றனர்.
ஜி.எல்.பீரிஸ் புதிய வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டதன் பின்னர் அவரது முதலாவது வெளிநாட்டு விஜயம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

ஆறுமுகன் தொண்டமான் இன்று அல்லது நாளை அமைச்சர் பொறுப்பை ஏற்கவுள்ளதாக தகவல்

SUNDAY APRIL 25, 2010 இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஆறுமுகன் தொண்டமான் எம். பி இன்று அல்லது நாளை அமைச்சுப் பதவி ஏற்கவுள்ளாரெனத் தெரியவருவதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும் இது தொடர்பில் இன்னமும் முடிவுகள் எட்டப்படவில்லையெனக் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த அமைச்சரவையில் வகித்த அமைச்சுப் பொறுப்புகள் இந்தமுறை எவருக்கும் மீள வழங்கப்படாததால்,இளைஞர் வலுவூட்டல், சமூக பொருளாதார அமைச்சைப் பெறுவது சாத்தியமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆறுமுகன் தொண்டமான் எம். பிக்குக் கால் நடை அபிவிருத்தி அமைச்சு வழங்கப்பட்ட போதிலும் அதனை அவர் ஏற்கவில்லையெனத் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக காங்கிரஸின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.

Saturday, April 24, 2010

'மஹிந்த சிந்தனை' கீழ் இவ்வருடம் 20,000 குடும்பங்களுக்கு வீடு

SATURDAY, APRIL 24, 2010
மஹிந்த சிந்தனை எதிர்காலத் திட்டத்துக்கு அமைவாக 2010 ஆம் ஆண்டில் மேலும் 20 ஆயிரம் குடும்பங்களுக்கு வீடுகளை அமைத்துக்கொடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பொது முகாமையாளர் தெரிவித்தார்.
கடந்த நான்கு வருட காலத்தில் 91 ஆயிரம் குடும்பங்களுக்கு வீடமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாகவும் இதற்காக 4,127 மில்லியன் ரூபா செலவிடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஒரு வீட்டுக்கு அதிகபட்ச நிதியுதவியாக 50 ஆயிரம் ரூபா வழங்கப்படுவதாகவும் இதற்குப் புறம்பாக 2010 ஆம் ஆண்டு 'நகரத்தைக் கட்டி எழுப்புவோம்' திட்டத்தின் கீழ் 1500 அடுக்குமாடி வீடுகளை அமைக்க உத்தேசித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Followers

Blog Archive