Sunday, May 9, 2010

புலிகளின் சர்வதேச பிரச்சாரங்களை முறியடிப்பதே வெளிவிவகார அமைச்சின் முதன்மை கடமையாகும் ‐ ஜீ.எல.பீரிஸ்

Sunday,May09, 2010
புலிகளின்சர்வதேச பிரச்சாரங்களை முறியடிப்பதே தமது அமைச்சின் முதன்மைக் கடயைமாக அமைந்துள்ளதென வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களை விடவும் புலிகளின் சர்வதேச பிரச்சார வலயமைப்பு வலுப்பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர், இலங்கைக்கு எதிரான புலிகளின் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கண்டி மல்வத்து மற்றும் அஸ்கிரி பீடாதிபதிகளை சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டதன் பின்னர், நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை வெளிவிவகார அமைச்சில் கடமையாற்றும் ராஜதந்திரிகள் மற்றும் உயரதிகாரிகளுக்கு, புலிகளின் வலையமைப்பை முறியடிப்பது குறித்து விளக்கமளிக்கப்படவுள்ளது.
புலி ஆதரவாளர்களின் வெளிநாட்டு செயற்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யுத்தம் நிறைவடைந்துள்ள போதிலும் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு பல்வேறு முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட வேண்டியிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக இனங்களுக்கு இடையில் காணப்படும் தவறான புரிந்துணர்களை களைவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
யுத்த வெற்றியின் பின்னர் சகல இன மக்களினதும் இதயங்களை வென்றெடுக்கக் கூடிய பல்வேறு நடவடிக்கைகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

No comments:

Post a Comment

Followers

Blog Archive