Thursday, August 12, 2010

வீழ்ச்சியும் எழுச்சியும் பெற்று எல்லாவற்றையும் மாற்றிப் போட்ட மே மாதம் (பகுதி 3)

Thursday, August 12, 2010
நாச்சிக்குடா வீழ்ந்தவுடன் புலித்தலைவன் பிரபாகரன் ஓட வெளிக்கிட்டதுதான் உண்மையான விடயம். ஆனால புலித் தலைவனின்; தாமதமான தீர்மானத்தால் தப்பி ஓடமுடியாமல் மறிக்கப்பட்டது தான் இலங்கை அரசுபடைகளின் வியூகம். மாவிலாற்றில் போர் தொடங்கப்படுவதற்கு முன்பு இலங்கை அரசபடைகள் செய்த போர் வியூகங்களில் முதன்மையானது கடல் பகுதியில் உள்ள புலிகளின் செயற்பாட்டை முற்று முழுதாக தடுத்து நிறுத்தல். இடைவிடாது தொடர்ந்து யுத்தத்தை புலிகளுக்கு எதிராக தொடர்தல் என்ற தாக்குதல் வியூகம். முந்திய அரசுகள் செய்த அடிதல் பின்பு பேசுதல் மீண்டும் அடித்தல் மீண்டும் பேசுதல் என்ற கண்ணாம் பூச்சி விளையாட்டை செய்வதில்லை என்ற தீர்மானத்துடன் தான் மாவிலாற்றில் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை ஆரம்பித்தது மகிந்த அரசு.

புலிகளால் பொதுமக்கள் முள்ளிவாய்கால்வரை வலுக்கட்டாயமாக சாய்த்துச் செல்லப்பட்டதுதான் உண்மை நிகழ்வு. இதில் சிறிய பகுதி மக்கள் விரும்பியே தவிர்க்க முடியாமல் அவர்களுடன் சென்றார்கள். தம் பிள்ளைகள் புலிகளிடம் உள்ளனர். சிலர் விருப்புடன், பலர் விருப்பின்மையுடன் செல்லவேண்டிய சூழ்நிலைப் பொறியில் இருந்தனர். யுத்தத்தின் போது கிழக்கு மக்கள் செய்த புதிசாலித்தனமாக புலிகளின் பிடியிலிருந்த பிரதேசத்திலிருந்து அரசு விடுவித்த பிரதேசங்களுக்கு இடம் மாறுதல் என்பதை மாவிலாறு தொடக்கம் வெருகல் ஊடாக மட்டக்களப்பு ஐத் தொடர்ந்து அம்பாறை வரை கடைப்பித்து வந்தனர். இவ்விடயத்தில் கிழக்கு மாகாண தமிழ் மக்கள் சமயோசித புத்திசாலித்தனமான செயற்பாட்டைக் கொண்டிருந்தனர். இதனால் தான் 50 இற்கும் குறைவான பொது மக்களின் உயிர் இழப்புடன் கிழக்கு மாகாணம் புலிகளின் கைகளில்? இருந்து இலங்கை அரசின் கைகளுக்கு முழுமையாக மாறியமைகான முக்கிய காரணியாக அமைந்தது. வேறு பல விடயங்களும் காரணமாக அமைந்திருந்தன. சிறப்பாக கருணாவின் வெளியேற்றமும் முஸ்லீம்மக்கள், தமிழ் மக்களுடன் இணைந்த இடம்பரம்பலுமாகும். இதனை வன்னி மக்கள் செய்யவில்லை, செய்யமுடியவில்லை.

கிழக்கு மாகாண தமிழ் மக்கள் பாவித்த இந்த தந்திரோபாய இடம்பெயர்வை வடக்கு மக்கள் சிறப்பாக வன்னி மக்கள் தன்னக்தே கொண்டிருக்கவில்லை. யாழ்பாணத்து மக்கள் 1995ம் ஆண்டு நடைபெற்ற தமது முதலாவது புலிகளுடனான வலிந்த இடம் பெயர்வில் கிடைத்த அனுபவத்தில் இருந்து கற்ற பாடத்தினால் இப் பொறியினுள் தடக்கி விழாமல் தப்பிக் கொண்டனர். மன்னார் மக்களில் ஒரு பகுதியினரும் இது போன்ற நிலமையில் இருந்தமையினால் தம்மை காத்துக்கொள்ள முடிந்தது. ஆனால் துணுக்காயில் ஆரம்பித்து இதனைத் தொடர்ந்த பிரதேசங்கள் ஊடாக கிளிநொச்சி வரையிலான மக்கள் இது போன்ற செயற்பாட்டை கொண்டிருக்கவில்லை. கிளிநொச்சியின் வீழ்ச்சிக்குப் பின்பு விழித்தெளிந்த மக்கள் புலிகளின் பொறிக்குள் தாம் முழுமையாக வீழ்ந்து விட்டதை உணர்ந்து சுதாகரித்து தப்பிக்கும் செயற்பாட்டை செய்யமுடியாதவாறு புலிகளாலும், இலங்கை அரசாங்கத்தின் படைகளினாலும் பின்னப்பட்ட வலைப்பின்னலுக்குள் வீழ்ந்து விட்டதுதான் பரிதாபத்திலும் பரிதாபம்.

ஏ 9 பாதைக்கு கிழக்காக புலிகளால் இழுத்துச் செல்லப்பட்ட நிலமைகள் ஏற்பட்டதும் பொதுமக்கள், புலிகள், புலி ஆதரவாளர்கள் யாபேருக்கும் தெரியும் பொறிக்கும் மாட்டிவிட்ட நிலமை ஏற்பட்டு விட்டது என்று. இந் நிலையில் புலிகள் இராணுவத்தின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் தப்பி வர முடியாது. ஆனால் பொது மக்கள் அவ்வாறு செய்ய முற்பட்டனர். ஆனால் புலிகள் பொது மக்களை அவ்வாறு செயற்பட அனுமதிக்கவில்லை என்பதே முதன்மையானது. இதற்கு எவ்வளவோ குறைந்த அளவிலேயே இராணுவத்தின் பகுதிக்கு வந்தால் தாம் எவ்வாறு இலங்கை இராணுவத்தால் கையாளப்படுவோம் என்ற பயப்பிராந்தியம் பொதுமக்களிடம் இருந்தன. புலிகளின் துப்பாக்கிகள் இக்காலப்பகுதியில் துப்பாக்கி வைத்திருந்த இராணுவத்திற்கு எதிராக செயற்பட்டதை விட துப்பாக்கி இல்லாத பொதுமக்களுக்கு எதிராக பலமாக செயற்பட்டது. மே 18 இற்கு பின்னான மக்கள் வாக்கு மூலங்கள் இவற்றை மேலும் நிறுவி நிற்கின்றன.

இதேவேளை புலிகளின் தலைமை மேற்குலக மீட்போன் தம்மை பிணை எடுப்பான் என்பதில் மட்டும் மிகவும் நம்பிக்கை வைத்திருந்த சரணாகதி நிலையில் இருந்தனர். சரணாகதி நிலையில் மட்டும் இருந்து கொண்டு புலம் பெயர் மக்ளின் துணையுடன் புதிக் குடியிருப்பு ஒரு லெனின் கிராட்டாக மாறும் என்ற வரையிலான வீரதாபங்களை பரப்புரை செய்து வந்தனர். மேற்குலகம் ஆகாயத்திலிருந்து குதித்து தம்மை மரியாதையுடன் மீட்கும் என புலம் பெயர் புலித் தலைமைகளும், புலம் பெயர் புலி ஆதரவாளர்களும் ஏற்படுத்தியே இருந்தனர். இதனை நம்பும் அளவிலேயே நிலத்தில் உள்ள புலிகள் சிறப்பாக பிரபாகரன் நம்பி இருந்தான். இதனைத் தவிர வேறு மார்க்கம் அவர்களுக்கு இருக்கவில்லை என்பதுவும் இங்கு உண்மைதான். புலிகளின் இராணுவ பலம் அவ்வாறே இருந்தது. ஆனால் புலிகளின் அரசியல் பலம் சர்வ தேசத்தில் வேறுவிதமாக இருந்தது. புலிகள் தமது ஆயுத நடவடிக்கைகளுக்கான தார்மீக ஆதரவை சர்வதேசத்தில் இழந்தே இருந்தனர். புலிகளுக்கு அரசியல் பலம் எப்போதுமே சர்வ தேச சமூகத்திடம் இருந்தது இல்லை. இதனால் சர்வ தேசம் பொது மக்களை காப்பாற்றும் காத்திரமான புத்திசாலித்தனமான செயற்பாட்டை இறுதிக்கட்டப் போரில் கொண்டிருக்கவும் இல்லை, செயற்படுத்த முயலவும் இல்லை என்பதே இறுதித் தினங்களில் பொது மக்களின் பரிதாப நிலைகளுக்கு காரணமாக இருந்தன.

வெளிநாடுகளைப் பொறுத்தவரையில் புலிகள் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதைவிட இல்லாமல் செய்யப்படவேண்டும் என்பதை இந்தியா மட்டும் அல்ல சோசலிச நாடுகளும் ஏன் மேற்குலக நாடுகளும் விரும்பின. ஆனால் இலங்கை அரசை தமது செ(h)ல்வாக்கிற்குள் உள்ள நாடாக வைத்திருப்பதற்காக பொதுமக்கள் பாதிப்பு, போர்நிறுத்தம் போன்றவற்றைத் தூக்கிப்பிடித்தன மேற்குலக நாடுகள். இன்றும் தூக்கிப் பிடிக்கின்றன. மற்றபடி யாரும் புலிகளை காப்பாற்றத் தயாராக இருக்கவில்லை. புலிகள் வேண்டப்படாத சக்தி, நம்ப முடியாதவர்கள், பயங்கரவாதிகள் என்பதில் எல்லேர்ருக்கும் ஒருமித்த கருத்தே இருந்தது. அப்படியொரு அனுபவத்தை புலிகள் தமது செயற்பாடுகளினூடாக சிறப்பாக ரணில் பிரபா சமாதான ஒப்பந்த காலத்தில் தோலுருத்திக் காட்டிவிட்டனர். அப்படியொரு அரசியல் சாணக்கியம் பிரபாகரனுக்கும் அவர் குழுவிற்கும்.

கிட்லர்; பாவித்த தேசியம் என்ற அரசியல் தந்திரோபாயத்தைத் தவிர வேறு எந்த அரசியல் தந்திரோபாயத்தையும் புலிகள் கொண்டிருக்கவில்லை மக்களில் ஒரு பகுதியினர் வெறித்தனமாக புலிகளை அன்றும் ஏன் இன்றும் நம்புவதற்கு இது ஏதுவாக இருந்திருக்கின்றது, இன்றும் இருக்கின்றது. இதுவே கிட்லருக்கு ஏற்பட்ட எழுசிக்கும் தோல்விக்கும் காரணமாக அமைந்ததைப் போல் ஒரு படிமேல் போய் புலிகளுக்கும் எற்பட்டிருக்கின்றது. இனியும் ஏற்படப் போகின்றது.

1980 களின் நடுப்பகுதியில் புலிகள் தன்னோடு கை கோர்த்து நின்றவர்களின் ஒவ்வொரு கரமாக அறுக்க முற்பட்டபோதே பொது மக்கள் விழித்திருக்க வேண்டும். சோடா உடைப்பதற்கு பதிலாக விழித்திருந்க் வேண்டும் அன்று விழித்திரந்தால் முள்ளிவாய்காலில் நடைபெற்ற மனிதப் பேரலவலங்ளை தவிர்திருக்க முடியும். நாம் இங்கு கூறுவது புலிகளுக்கு நடைபெற இருந்த பேரவலத்தை அல்ல. பொது மக்களுக்கு ஏற்பட்ட பேரவலத்தை. புலிகளுக்க எற்பட்ட பேரவலம் தவிர்கப்படமுடியாததும், தவிர்கப்பட வேண்டியதும் அல்ல.

ஒடுக்கு முறைக்குள்ளாகும் எந்த ஒரு இனமும், இனக் குழுமமும் அது தேசிய இனமாக இருந்தால் என்ன இல்லாவிட்டால் தனது உரிமைகளை நிலைநாட்ட, நிறுவிக் கொள்ள போராடும் உரிமை உண்டு. அவை மறுக்கப்படும் போது அதற்கான தீர்வை முன்வைத்து போராடுவது இயல்பானது, தார்மீகமானதும் ஆகும். அந்த வகையில் இலங்கை தமிழ் மக்களின் போராட்டமும் 50 இற்கு 50, சமஷ்டி, தனிநாடு, ஆயுதப் ஆயுதப் போராட்டம், மாகாணசபை என்ற பரிமாணத்திற்கூடதாக பயணித்ததற்கு நியாயங்கள் நிறையவே உண்டு.
(தொடரும்...)

Sunday, August 8, 2010

வீழ்ச்சியும் எழுச்சியும் பெற்று எல்லாவற்றையும் மாற்றிப் போட்ட மே மாதம் (சாகரன்) (பகுதி 2)

Sunday, August 8, 2010
இதனை கனக்கச்சிதமாக செய்து முடித்தனர் புலிகள். ஆமாம் ஏற்கனவே உருவாக்கப்பட்டிருந்து முன்னோக்கி பலமாக நகரத் தொடங்கியிருந்த ஈபிஆர்எல்எவ், ரெலோ, ஈரோஸ் ஆகிய மூன்று இயங்கங்களின் ஈழத் தேசிய விடுதலை முன்னணி (ENLF) இல் திடீரென ஒருநாள் தானும் இணைந்து செயற்படப் போவதாக அறிவித்து இணைந்து கொண்டது புலிகள் அமைப்பு. தந்திரோபாய ரீதியில் முற்போக்குச் சிந்தனை கொண்ட இளைஞர்கள் பலரை தன்னகத்தே கொண்ட புளொட் அமைப்பை ஐக்கிய முன்னணிக்குள் இணைத்தல் மூலம் புலிகளைத் தனிமைப்படுத்தி பலவீனப் படுத்தலாம் என்பதில் தோற்றுப்போனது ENLF. ஆனால் முந்திக் கொண்ட புலிகள் ஐக்கிய முன்னணியில் இணைந்தது மட்டும் அல்லாமல், ஐக்கிய முன்னணியை இல்லாமல் செய்யும் செயற்பாட்டையே தமது பிரதான செயற்பாடாக கொண்டு செயற்பட்டனர். ஏற்கனவே உடன்பாட்டிற்கு வந்திருந்த பொதுவான செயற்பாட்டிற்கான முடிவுகளை (பொது நிதி, பொதுவான பிரச்சாரம், பொதுவான தாக்குதல் போன்றவை இவற்றில் சில) முதலில் இல்லாமல் செய்தனர். இதற்கு ஐக்கியத்தை பலமாக்க ஐக்கிய முன்னணியிற்குள் கடைப்பிடித்து வந்த ஜனநாயக மத்தியத்துவத்திற்கு பதிலான ஏகோபித்த முடிவு என்ற வகையிலான செயற்பாட்டை புலிகள் தமது 'வீற்ரோ' பவர் ஐ பாவித்து சிதைத்தது வந்தனர்.

கூடவே ஐக்கிய முன்னணியிற்குள் இருந்த சகோதர அமைப்பு போராளிகளை அவ் அமைப்புக்களுடன் பேசிக்கொண்டும், கை கோர்த்துக் கொண்டும் முரண்பாடுகளை தாமே செயற்கையாக உருவாக்கி அவற்றைப் பேசித்தீர்க்;காமல் சகோதரப் படுகொலை செய்யத் தொடங்கினர். இது வன்னியில் ஈபிஆர்எல்எவ் இன் ரீகனில் மாத்தையாவால் ஆரம்பித்து வைக்கப்பட்டு, யாழ்பாணத்தில் ஈபிஆர்எல்எவ் இன் அமீன் என பிரகடனப்படுத்தாத சகோதரப் படுகொலைகள் கிட்டுவினால் தொடர் பரிணாமம் அடைந்து ரெலோ என்ற அமைப்பின் மீது பிரகடனப்படுத்திய சகோதர யுத்தத்துடன் அகோர நிலையை அடைந்தது. இது ஏற்கனவே புலியாக வாழ விரும்பிய பாலகுமாரை அவர் தம் இயக்கத்திடம் கூடக் கேட்காமலே பிரபாகரன் காலடியில் விழுந்து சேவகம் செய்ய வைத்தது. இறுதியில் 1986 டிசம்பர் மாதம் ஈபிஆர்எல்எவ் உடன் ஈழவிடுதலைப் போராட்ட அமைப்புக்கள் யாவற்றினதும் செயற்பாட்டை முழுமையாக தடை செய்து இலங்கை அரசின் விருப்பை நிறைவேற்றி ஈழவிடுதலைப் போராட்டத்தை இல்லாமல் செய்வதற்குரிய அத்திவாரத்தை உறுதியாகப் போட்டது புலிகள் அமைப்பு. எதனை ஏகாதிபத்தியங்களின் அடிவருடி ஐதேக கட்சி விரும்பியதோ அதற்கு செயல் வடிவம் கொடுத்து பெயர் வாங்கிக் கொண்டது தமிழீழ விடுதலைப் புலிகள். இதன் மூலம் புலிகள் தமது ஏகபோகத்தையும் நிறுவி விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதச் செயற்பாடு என்ற வடிவத்திற்குள் கொண்டு வந்து ஒரு மாபியா கும்பலாக வடிவெடுத்தது. இதன் தொடர்ச்சியாக பாசிச அமைப்பாக பரிணாமம் அடைந்து முள்ளிவாய்காலுடன் அடிமைப்பட்டு, சரணாகதியடைந்து, தனக்கு தானே மரணசாசனத்தை எழுதிக் கொண்டது.

ஈழவிடுதலைப் போராட்டத்தில் 1986 ம் ஆண்டு ரெலோ இயக்கத்தின் மீது புலிகள் போர் தொடுத்து தமது ஸ்தாபன மயப்படுத்தபட்ட சகோதரப் படுகொலை யுத்தத்ததை ஆரம்பித்தனர். இதனைத் தொடர்ந்து ரெலோவின் தலைவர் சிறீ சபாரத்தினம் மே 06 ம் நாள் கொல்லப்பட்டார்;. இவ் நிகழ்வே ஆயுதம் தாங்கிய ஈழவிடுதலைப் போராட்டத்தின் மீது மக்கள் நம்பிக்கையை இழக்க வைப்பதற்கு பிரதான காரணமாக அமைந்து. அதுவரைக்கும் தம் பிள்ளைகளை ஏதாவது ஒரு விடுதலை அமைப்பில் இணைந்து செயற்படுதலை பெருமையுடன் ஏற்று வந்த தமிழ் பேசும் சமூகம் மெதுவாக தம் பிள்ளைகளை இதில் இருந்து கழட்டிவிடும் செயற்பாட்டில் ஈடுபடத் தொடங்கினர். அன்று முடிவுக்கு வந்தது ஆயுதம் தாங்கிய ஈழவிடுதலைப் போராட்டத்தின் ஏறுமுகம். இதன்பின்பு நடைபெற்றவை எல்லாம் ஈழவிடுதலைப் போராட்டத்தின் இறங்கு முகச் செயற்பாடுகளே.

2009 ஆண்டு மே திற்கான தனது அழிவிற்கு 1986 மே மாதம் பிள்ளையார் சுழியை பகிரங்கமாக புலி தனக்கு தானே போட்டுக் கொண்டது. 1986 மே மாதம் ஆரம்பித்து தொடர்ந்த 23 வருடங்களிலான புலிகளின் யுத்தம் பல ஆயிரம் பொதுமக்களையும் (தமிழ், முஸ்லீம், சிங்களவர்) மாற்றுக் கருத்தாளர்களையும், தமது இயக்கத்திற்குள் இருந்த மாத்தையா, கருணா போன்றவர்களின் அணிகளையும் வகை தொகையில்லாமல் கொன்று குவித்தது புலிகள் அமைப்பு. இதற்கு பிரபாகரன், அவர்களின் குழுவினரின் வழி நடத்தல், சிந்தனையே காரணமாக இருந்து. மேலும் வெளிநாட்டு அரசியல் தலைவர்கள், உள்ளநாட்டு அரசியல் தலைவர்கள், புத்திஜீவிகள் என்று யாரையும் கொல்லுவதில் விடவில்லை. இறுதியில் தன்னை மட்டும் காத்துக் கொள்ள 2009 மே மாதம் முள்ளிவாய்காலில் பாரிய மனித அவலத்தை ஏற்படுத்த பொதுமக்களைப் பொறிக்குள் தள்ளி இறுதியில் முழம்தாள் இட்டு தானும் சரணாகதியடைந்து தானே அழிந்து கொண்டது. இந்த இறுதி மனிதப் பேரவலம் தன்னை எவ் வழியிலாவது காப்பாற்றும் என்று வழமைபோல் பொது மக்களைப் பொறிக்குள் சிக்க வைத்த பாசிசம் இம்முறை தோற்றுப் போனது. ஏகாதிபத்தியங்கள் புலித் தலைமையைக் காப்பாற்ற எவ்வளவோ முயன்றன. இம்முறை இலங்கை அரசின் ஏகாதிபதியத்திற்கு எதிரான உறுதியான கூட்டு வெற்றி பெற்றது. புலிகளும், அவர்களின் இருப்பை விரும்பிய ஏகாதிபத்திய சக்திகளும் தோற்றுப் போயின.

1980 களிலேயே புலிகள் வெல்லும் என்பதைவிட புலிகள் கொல்லும் என்பதை புலிகளின் தலைவர்கள் பலரும், புலி உறுப்பினர் பலரும் அறிந்தே இருந்தனர். இதனை ஏனைய விடுதலை அமைப்பு போராளிகளுக்கும், தமிழர் விடுதலைக் கூட்டணி போன்றவர்களும் உணர்ந்தே இருந்தனர். 1990 களில் ஏன் ஏனைய விடுதலை அமைப்புக்களில் இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைந்த சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சம்மந்தர் உட்பட பல பிற்போக்கு, காட்டிக் கொடுக்கும் தலைவர்களும் உணர்ந்திருந்தும் சேவகம் செய்யக் காத்திருந்தனர். இது புலிகளுக்கு கொடி பிடித்த புலிப்பினாமிகளுக்கும் தெரியும். உருத்திரகுமாரன் முதல் கேபி வரை யாவருக்கும் தெரியும். இதுவே புலிகளை நோக்கி இவர்களை நகர்த்தி கொடி, ஆலவட்டங்களை பிடிக்க வைத்தது. இந்த யுத்தத்தில் கொல்லப்பட்ட, பாதிக்கப்பட்ட மக்களுக்கு இவர்களும் புலியளவில் காரணமானவர்களே.

பிரபாகரன் வெல்வானோ தெரியாது, ஆனால் பிரபாகரன் கொல்வான் என்பதை பற்குணத்தில் ஆரம்பித்து கருணாவரையும், அமிர்தலிங்கம் இருந்து சம்மந்தர் வரைக்கும், பாலகுமார் தொடக்கம் சுரேஸ் பிரேமச்சந்திரன் வரைக்கும், பத்மநாபா முதல் வரதராஜப்பெருமாள் வரைக்கும், ஹமீத் முதல் ஹக்கீம் வரைக்கும், மதவாச்சி அப்புகாமி தொடக்கம் அம்பாறை சிறியானி வரைக்கும், தொண்டமான் முதல் மனோகணேசன் வரைக்கும் கருணாநிதி முதல் வைகோ வரைக்கும் வாஜ்பேயி முதல் சோனியா காந்திவரையும் பருத்தித்துறை பொன்னம்மா முதல் அம்பாறை சட்டநாதர் போடியார் வரைக்கும் யாவரும் அறிந்தே இருந்திருக்கின்றார்கள். இந்தனை புலிகள் எப்போதும் தமக்கு பெருமையாகவும், சாதகமாகவும் பயன்படுத்தி வந்தனர். புலிகளால் ஏற்படுத்தப்பட்ட இந்த மரணப் பிராந்திக்கு பலர் பயந்து அடி பணிந்தனர். இதனை தமது பிழைப்புகளுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பாராளுமன்ற நாற்காலிகளை நிரப்பிப் கொண்டனர். மிகச் சிலர் தொடர்ந்தும் விடாப்பிடியாக புலிகளின் மக்கள் விரோத செயற்பாட்டிற்கு எதிராக போராடி வந்தனர். உயிர்த் தியாகம் செய்தனர். இன்றும், இன்னமும் போராடிக் கொண்டு இருக்கின்றனர்.

பிரபாகரன் வெல்வானோ தெரியாது, ஆனால் பிரபாகரன் கொல்வான் என்பதை அறிந்திருந்த பலரும் வாய்பொத்தி, வாயுடன் கூடவே எல்லாவற்றையும் பொத்தி மௌனித்து இருந்தார்கள். இதுவே இறுதியில் முள்ளிவாய்காலில் மரணித்த பொதுமக்களுக்கு ஏற்பட்ட நிலமைகளுக்கு காரணமாக அமைந்திருக்கின்றது. ஆனால் இதுதான் நடைபெறப் போகின்றது என்பதை பலரும் 25 வருடங்களுக்கு முன்பே தெரியும். இதனை பல இடங்களிலும் பல சந்தர்ப்பத்தில் எழுத்திலும், பேச்சிலும், செயற்பாட்டிலும் சொல்லியே வந்திருந்திருக்கிறார்கள். மனிதனுக்கும், மிருகத்திற்கும் உள்ள வித்தியாசம் மனிதன் பகுத்தறிவு உள்ளவன். மிருகங்கள் பகுத்தறிவற்றவை. ஆனால் ஈழவிடுதலைப் போராட்டத்தின் பிழையான போக்கை பொது மக்களும் பகுத்தறிந்து பார்த்திருக்க வேண்டும். ஆனால் அது நடைபெறவில்லை. தற்போது ஒரு வகையான பகுத்தறிவினால் மிருகங்கள் கூட சுனாமி போன்றவற்றை பகுந்துணர்ந்து தம்மை தற்காத்துக் கொள்கின்றன. இவ்விடயத்தில் மக்களைவிட மிருகங்கள் சிறப்பான நிலையில் இருக்கின்றன. ஆனால் ஈழ விடுதலைப் போராட்டத்தின் போக்கை பகுத்தறிவு செய்து பார்ப்பதில் பெரும்பான்மையான தமிழ் பேசும் பொது மக்கள் தோற்றே இருக்கின்றன என்பது கசப்பான உண்மை.
(தொடரும்.....)

ஐ.தே.கவில் இணைய பொன்சேகா தீர்மானம்,

Sunday, August 8, 2010
சரத் பொன்சேகா ஐக்கிய தேசியக் கட்சியில் இணையத் தீர்மானித் துள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதி புதிய சிஹல உறுமைய கட்சியின் தலைவர் சரத் மனமேந்திர தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்புக் கட்சித் தலைவர் கூட்டத்தின்போது இந்த யோச னையை முன்வைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கூட்டமைப்பில் அங்கம்வகிக்கும் சகல கட்சித்தலைவர்களினதும் கருத்துக்கள் கேட்டறியப்பட்டதன் பின்னர் இறுதித்தீர்மானம் எடுக்கப் படுமென அவர் தெரிவித்துள்ளார்.இதேவேளை இந்தச் செய்தி தொடர்பில் ஜெனரல் சரத் பொன்சேகா இது வரையில் எவ்வித கருத்துக்களையும் முன்வைக்கவில்லை.

அமெரிக்க உயர் அதிகாரிகள் அடுத்த வாரம் இலங்கை விஜயம் - 22ஆம் திகதிவரை இங்கு தங்கியிருப்பார்கள்.

Sunday, August 8, 2010
அமெரிக்காவின் இராணுவம், கடற்படை மற்றும் விமானப் படை ஆகியவற்றைச் சேர்ந்த 40 அதிகாரிகள் எதிர்வரும் 14ஆம் திகதி இலங்கை வரவுள்ளதாக தெரியவருகிறது. இந்த அமெரிக்கப்படையினர் எதிர்வரும் 22ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பர் என தூதரக தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் மனிதாபிமானப் பணிகளை மேற்கொள்ள வென உயர் அதிகாரிகள் 40 பேர் இலங்கைக்கு வருகைதரவுள்ளனர்.

இவர்களில் இராணுவம், கடற் படை மற்றும் விமானப்படை ஆகிய பாதுகாப்பு தரப்பினர் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர். இதேவேளை இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு உதவ அமெரிக்கா முன்வந்துள்ளது. இந்தப் பணிகளுக்காக அமெரிக்கா 581 மில்லியன் ரூபாயை வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே ஒரு கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட தொகையை கண்ணி வெடி அகற்றும் பணிகளுக்காக அமெரிக்கா வழங்கியுள்ளது. இதனைத்தவிர மீள் குடியேற்றப்பட்டுள்ள மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த உதவிகளை வழங்கவுள்ளதாக இலங் கைக்கான அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.

வீழ்ச்சியும் எழுச்சியும் பெற்று எல்லாவற்றையும் மாற்றிப் போட்ட மே மாதம் (சாகரன்) (பகுதி 1)

Sunday, August 8, 2010
புலி வெல்லும் என்பதைவிட அது கொல்லும் என்பதை பலரும் உணர்ந்திருந்தனர். இதனாலேவே நிலத்திலும் புலத்திலும் பலர் அவர்களை ஆதரிப்பது போல் பாசாங்கு காட்டி வந்தனர், சிலர் துணிந்து புலிகளின் மக்கள் விரோத பாசிச செயற்பாட்டிற்கு எதிராக விடாப்பிடியாக 30 வருடங்களுக்கு மேலாக போராடி வந்தனர், பல தியாகங்களையும் செய்தனர். புலிகளை எதிர்ப்பவர்களுக்கும் ஆதரவழிப்பவர்களுக்கு ஒன்று பொதுவானது அதுதான் புலிகளால் ஏற்படுத்தப்பட்ட மரணப்பயம். புலிகளின் குறி எதிலும் தவறலாம். ஆனால் தான் கொல்ல வேண்டும் என நினைப்பவர் இமயத்தில் இருந்தால் என்ன, இங்கிலாந்தில் இருந்தால் என்ன, இலுப்பைக் குளத்தில் இருந்தாலென்ன, குழாய் கிணற்றிற்குள் ஒளித்திருந்தாலும், பிரமிட்டிற்குள் மறைந்து இருந்தாலும் ஏன் வேறு ஒரு கிரகத்தில் மறைந்து குடியிருந்தாலும் குறி தப்பாது வெறியுடன் கொல்வர்;. இதற்கு அவர்கள் கற்பிணி வேடம் என்ன, கருமாதி வீட்டில் பிணமாகவென்ன, விருந்தோம்பல் வேடமென்ன, சிறுவர், சிறுமி என வேடமிட்டு யாரையும் பலயெடுக்கவும் பலிகொடுக்கவும் தயாராக இருந்தனர். இவை எல்லாவற்றையும் மாற்றிப் போட்ட நிகழ்வு மே 18 இல் நிகழ்ந்தது என்றால் மிகையாகாது.

பிரபாகரனைவிட இராணுவ அறிவில் பலம் பொருந்திய கருணா கூட அரச படைகளின் பாதுகாப்பில் முழுவதுமாக இருந்தாலும் மே 18 இற்கு பிறகுதான் புலிகளின் எல்லைக்குள் பிரவேசித்தார். அரசியல் சாணக்கியரும், போரட்டத்தில் பல வருட அனுபவமுள்ள வரதராஜப்பெருமாள் தனது மக்களை நேரடியாகச் சந்திக்கலாம் என்று தீர்மானித்த நாள் மே 18 அன்றுதான். புலிகளின் பல பொறிகளில் தப்பி உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் மக்களை பொது இடங்களில் சந்திக்கலாம் என தீர்மானித்த நாள் மே 18. சம்மந்தர் முதல் மாவை வரை புலிகளின் பாதை பிழையானது என நழுவின மீன் போல் கதைக்கலாம் என்று முடிவெடுத்த நாள் மே 18. இலங்கை அமைச்சர்களும் அவர் தம் மனைவியரும் வடக்கு கிழக்கு தமிழ் பிரதேசங்களுக்கு தொண்டு செய்வதற்காக, நாடா வெட்டப் புறப்படலாம் என தீர்மானித்த நாள் மே 18. 'துவக்குடன் எந்த அறுவானும் போராட்டம் என்று இனி வந்தால் முறத்தல் அடித்து விரட்டுவோம்' என்று வீரத்தாயாக தமிழ்த் தாய் வன்னியில் மாறிய நாள் மே 18. யாழ் நாக விகாரையும், நயினா தீவு நாகதீப விகாரையையும் இனித் தரிசிக்கலாம் என்று அடிமட்ட பௌத்தன் முடிவெடுத்த நாள். யாழ் பொம்மை வெளியில் உள்ள தமது பள்ளி வாசலை சென்று பார்வையிடலாம் என்று முஸ்லீம் சகோதரர்கள் முடிவெடுத்த நாள். ஏன் கொழும்பில் மட்டும் முதலீடு செய்த தமது சொத்துக்களை சென்று பார்வையிடலாம் என்று புலிகளின் ஆதரவாளர்கள் முடிவு எடுத்த நாளும் இதே மே 18 தான்.

ஏன் கூவ மறந்த குயில்களும், ஆடலை நிறுத்திய மணில்களும் பாடவும் ஆடவும் ஆரம்பித்த நாள். பூக்க, காய்க மறுக்கப்பட்ட செடிகளும், மரங்களும் பூக்கவும் காய்கவும் அனுமதிக்கப்பட்ட நாள். வடக்கிலிருந்து தெற்கிற்கு, கிழக்கிலிருந்து வடக்கிற்கும், மேற்கிற்கும் சுதந்திரமாக செல்லலாம் என தமிழ் மக்கள் தீர்மானித்த நாள்.

தமிழர் தலைவர் கலைஞர் புலிகளை முழுமையாக விமர்சித்து அறிக்கைகள் விடலாம் என முடிவு செய்த நாள்.

புலம் பெயர் நாடுகளில் புலிச் சண்டியர்களின் மிரட்டல்களுக்கு பயப்படாமல் வியாபார ஸ்தலங்களை பூட்ட மறுக்கலாம் என தீர்மானித்த நாள். புலிகளின் வலிந்த ஊர்க் கோலங்களுக்கு செல்வதில்லை என மக்கள் தீர்மானித்த நாள். புலம் பெயர் நாடுகளில் புலிகளின் முதலீட்டாளர்கள் புலிகளின் பணத்தை எவ்வளவும், எவ்வாறும் சுருட்டலாம் இனி வன்னிக்கு அழைத்து விரட்ட யாரும் இல்லை என 'தைரியமாக' முடிவெடுத்து திடீர் மில்லியனராக மாறிய நாள். புலம் பெயர் நாடுகளில் வங்கி கணக்கு மூலம் மாதப்படி வழங்கி வந்த பலர் 'ளவழி pயலஅநவெ' அடித்த நாள்.

எங்களுக்கு அப்பவே தெரியும் இவ்வாறு நடக்கும் என புலிகளின் புகழ்பாடிய அரசியல் ஆய்வாளர்கள் குத்துக்கறணம் அடித்த நாள். ஒலிபரப்பில் புலி புராணம் பாடத் தேவையில்வையென முடிவெடுத்து டக்ளஸை பேட்டியெடுக்கலாம் என முடிவு செய்த நாள்.

புலிகளுக்கு சரத் பொன்சேகா உட்பட கேபி, உருத்திரகுமார், நெடியவன் என பலர் தலைவர்கள் தேசியத் தலைவர்களாக பிரகடனப்படுத்திய நாள். சுரேஸ், சேரன் வகையறாக்களின்; புலித் தலைமை ஆசைகள் நிராசையான தினம். ஆனால் தொடர்ந்தும் வேறு எவ் வழியில் பிழைப்பை தொடர்ந்து நடத்தலாம் என சிந்திக் தூண்டிய நாள்.

இவையெல்லாம் எவ்வாறு நடந்தன என்ற சற்று பார்ப்போம்.....

1970 களில் தனி நபர்களாகவும், தொடர்ந்த தமிழ் மாணவர் பேரவை என்ற அமைப்பு வடிவங்கள் ஊடாகவும் ஈழவிடுதலைக்கான ஆயுதப் போராட்டம் முனைப்பு பெற்றது. தமிழ் இளைஞர் பேரவை தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு ஆள்திரட்டும், வாக்குகள் திரட்டும் ஒரு அமைப்பாக தமக்குள் முழுமையாக கட்டுப்பட்டு செயற்படவேண்டும் என்ற எதிர்பார்ப்பை மீறி அதிலிருந்து பிரிந்து சென்ற பலர் பல்வேறு ஈழவிடுதலை அமைப்புக்களை உருவாக்கி செயற்படத் தொடங்கினர். இவ் அமைப்புக்கள் 1970 களின் பிற்பகுதிகளில் ஆயுதப் போராட்ட அமைப்புகளாக வளர்ச்சி பெற்றன. இதனைத் தொடர்ந்து 1980 களின் ஆரம்ப பகுதியில் பலம் மிக்க ஆயுத அமைப்புக்களாக ஊதிப் பெருத்தன, பெருக்க வைக்கப்பட்டன. இன விடுதலைக்கான ஆயுதப் போராட்டம், வர்க்க விடுதலைக்கான முதற் கட்டமாக சுயநிர்ணய உரிமைக்கான சகதேசிய விடுதலைப் போராட்டம் என்ற இரு பிரிவான வித்தியாசமான பரிணாமத்தில் விடுதலை அமைப்புக்கள் உருவாகி இருந்தன. தேசிய விடுதலைப் போராட்ட அமைப்புகளுடையே ஐக்கிய முன்னணிக்கான தேவையை விடுதலை அமைப்புக்களும், பொதுமக்களும் வேண்டி நின்றனர்.

1984 களில் இதன் அடிப்படையில் ஈபிஆர்எல்எவ், ரெலோ, ஈரோஸ் ஆகிய மூன்று விடுதலை அமைப்புக்கள் இணைந்து ஈழத் தேசிய விடுதலை முன்னணி (நுNடுகு) தோற்றம் பெற்றது. இதனை உருவாக்குவதில் தோழர் பத்மநாபாவின் பங்களிப்பு மகத்தானதாக அமைந்து. இந்த பரிணாம வளர்ச்சியை அவதானித்த அன்றய ஐதேக இலங்கை அரசும், ஏகாதிபத்தியமும் ஈழவிடுதலை அமைப்புகளின் ஐக்கியம் ஈழவிடுதலைப் போராட்டத்தின் வெற்றியை நிச்சயப்படுத்தும் காரணியாக அமையப் போகின்றது என்பதை நன்கே புரிந்திருந்தனர். இடதுசாரி நிலப்பாட்டுடன் ஏகாதிபத்திய எதிர்ப்பு செயற்பாட்டுடன் ஈழத் தேசிய விடுதலை முன்னணி என்ற ஐக்கிய முன்னணி தனது செயற்பாடுகளை முனைப்புடன் செயற்படுத்தத் தொடங்கியது. இதனால் ஏகாதிபத்தியத்தின் ஆலோசனையுடன் இவ் ஐக்கிய முன்னணியை இல்லாமல் செய்தல் என்ற பிரதான வேலைத்திட்டத்தின் அடிப்படையில் செயற்பட்டனர் ஐதேக அரசாங்கத்தினர். இதனை அன்றைய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலி பாராளுமன்றத்திலும், ஜேஆர் ஜெயவர்த்தன பல கூட்டங்களிலும் பேசியிருந்தனர். 'இயங்கங்களுடையே முரண்பாட்டை ஏற்படுத்துவேன்'. 'பகைமையை வளர்ப்பேன்'. 'அவர்களை மோதவிடுவேன்' 'இதன் மூலம் அவர்களை தனிமைப்படுத்துவேன்.' பலவீனப்படுத்துவேன்.' 'பின்பு இல்லாமல் செய்வேன்' என்று பேசித் திரிந்தனர்.
(தொடரும்....)

மீள் குடியேற்றப்பட்ட மக்கள் விவசாய நடவடிக்கையில் ஈடுபடுவதில் சிக்கல் நிலைமைஅமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ.

Sunday, August 8, 2010
மீள் குடியேற்றப்பட்ட மக்கள் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வடக்கில் மீள் குடியேற்றப்பட்ட மக்கள் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேவையான நீர் வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை என மீள் குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

மீள் குடியேற்றப்பட்ட மக்களில் 90 வீதமானவர்கள் இந்தப் பிரச்சினையை எதிர்நோக்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆண்டின் பெரும் பகுதியில் வரட்சியான காலநிலை காணப்படுவதனால் நீர்ப்பாசன வசதிகள் மிகவும் இன்றியமையாதது.

எனினும் மீள் குடியேற்ற மக்கள் தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்த போதியளவு வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை எனக் குறிப்பிடப்படுகிறது. விவசாய நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு தேவையான கிணறு வசதிகளை விரைவில் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Thursday, August 5, 2010

பிரபா கணேசன். திகாம்பரம் அரசாங்கத்துடன் இணைந்தனர்.

Thursday, August 05, 2010
ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான பிரபா கணேசன் மற்றும் திகாம்பரம் ஆகியோர் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்து ஆளுங் கட்சியூடன் இணைந்துள்ளனர்.

இதேவேளை ஐக்கிய தேசிய கட்சி கண்டிப் பிரதேச பாராளுமன்ற உறுப்பினரான அப்துல் காதா; ஏற்கனவே அரசாங்கத்துக்கு தமது ஆதரவைத் தெரிவித்துள்ளார்

பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அரசாங்கம் பெற்றுக்கொள்ள இன்னும் மூன்று அங்கத்தவா;களே தேவைப்படுகின்றனா; எனவூம் அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்த வரலாற்றில் முதற் தடவையாக 63 நீதிமன்றங்களை புதிதாக உருவாக்கியூளளதாக நீதியமைச்சர் அதாவூத செனவிரத்ன நேற்றுப் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்¨
Thursday, August 5, 2010
வழக்கு விசாரணைகளை வரலாற்றில் முதற் தடவையாக 63 நீதிமன்றங்களை புதிதாக உருவாக்கியூளளதாக நீதியமைச்சர் அதாவூத செனவிரத்ன நேற்றுப் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளு மன்றத்தில் நேற்று நீதித்துறை திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே நீதியமைச்சர் அதாவூத செனவிரட்ன இவ்வாறு தெரிவி த்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்;

நீதிமன்றங்களில் பெருந்தொகையாகக் குவிந்து கிடக்கின்ற வழக்குகளை இரண்டு வருடத்திற்குள் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலதிக நீதிமன்றங்களை இரண்டு வருடங்களுக்கென மாவட்ட ரீதியில் அமைத்து தேங்கிக் கிடக்கின்ற வழக்குகளின் விசாரணைகளைத் துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுவரை காலம் உச்ச நீதிமன்றங்களில் மாத்திரமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட மனித உரிமை தொடர்பான வழக்குகளை எதிர்வரும் காலங்களில் மாகாண மேன் முறையீட்டு நீதிமன்றங்களிலும் விசாரிப்பதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும்.

வழக்கு விசாரணைகளின் தாமதம் மற்றும் தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் விசாரணைகளைத் துரிதப்படுத்தும் வகையில் 60 மேல் நீதிமன்ற நீதியரசர்களை நியமிப்பதற்கு அரசாங்கத்தின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

எனினும் இத்தொகையை 75 ஆக அதிகரிப்பதற்கான திருத்தமே இச்சட்டமூலத்தினால் கோரப்படுகிறது. குவிந்து கிடக்கின்ற வழக்குகளைத் தீர்ப்பதற்காக வரலாற்றில் முதற் தடவையாக 63 நீதிமன்றங்களை புதிதாக உருவாககப்பட்டுள்ளது.

தொழில் நியாயாதிக்கச் சபைகளை சகல நகரங்களுக்கும் விஸ்தரிப்பதற்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

நீதவான்; நீதிமன்றங்கள் தற்போது அரை நாட்களே நடைபெறுகின்றன. இதன் நேரத்தை அதிகரிக்கவூம் நடவடிக்கை எடுக்கப்படும்.

எவ்வாறாயினும் சட்டமா அதிபர் சட்டத்தரணிகள் நீதிபதிகள் பொலிஸ் மா அதிபர் ஆகியோரின் ஒத்துழைப்புடன் தேங்கிக் கிடக்கும் வழங்குகளை இரண்டு வருடங்களுக்குள் முடிவூக்குக் கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்கப்படுமெனவூம் அமைச்சர் தெரிவித்தார்

Sunday, August 1, 2010

பாடசாலை மாணவர் மத்தியில் அதிகரிக்கும் போதைப் பழக்கம்!

Sunday, August 1, 2010
இலங்கையில் தற்போது போதைப் பொருள் பாவனையின் வீதம் அதிகரித்தவண்ணமே உள்ளது. போதைப் பொருளை தடுக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் முன்வைக்கப்படினும் பல்வேறு சட்டங்கள் இருப்பினும் அதனை முற்றாக ஒழித்துக்கட்ட முடியாதுள்ளது.

அதேவேளை பாடசாலை மாணவர்களும் இப் போதை பாவனைக்கு அடிமையாகியுள்ளனர். இதன் வீதம் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

கொழும்பு நகரில் மாத்திரமல்லாது அதிகளவில் பொலன்னறுவை மாவட்டத்திலும் பாடசாலை மாணவர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாகயுள்ளமை தெரிய வந்துள்ளது.

பொலன்னறுவயில் கடந்த 17ஆம் திகதி 3 மாணவர்கள் பாடசாலை சீருடையுடன் போதைப் பொருளை வைத்திருந்தார்கள் என்பதன் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு பாடசாலை செல்லும் இளம் வயது சிறார்கள் சிகரட் மற்றும் போதை ஏற்படுத்தும் பொருட்களுக்கு அடிமையாகி வருகின்றனர்.

இளம் வயதினரில் 13 தொடக்கம் 20 வயதிற்கிடைப்பட்ட மாணவர்கள் பலர் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி உள்ளனர் என போதைப் பொருள் தடுப்புப் பிரிவு தெரிவிக்கின்றது.

இவ்வாறு இளம் வயதினர் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாவதற்கு அவர்களின் நண்பர்களே முக்கிய காரணம் எனத் தெரியவந்துள்ளது.

இவ்வாறானவர்களில் 88.2 வீதமானவர்கள் நண்பர்கள் மூலமும் 10 வீதமானவர்கள் உறவினர்கள் மூலமும் 1.8 வீதமானவர்கள் உல்லாசப் பயணிகள் மூலமும் போதைக்கு அடிமையாகின்றனர்.

நாட்டின் எதிர்காலம் வளரும் சமுதாயத்தின் கரங்களில் உண்டு என்பார்கள். ஆனால் இவ்வாறான நிலைமை தொடருமானால் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்பதில் சந்தேகமில்லை.

ஆதலால் இளம் மாணவர்கள் போதைக்கு அடிமையாவது தடுக்கப்பட வேண்டியது அவசியமாகும். இதற்கான பொறுப்பு எம் அனைவரையுமே சாரும் என்பதால் அனைவருடைய ஒத்துழைப்புடனும் சமுதாயத்தைக் காப்போம்.

சர்வதேச ரீதியில் இயங்கும் புலிகளை கைது செய்ய அரசு தயாராகவுள்ளது!

Sunday, August 1, 2010
புலிகள் இயக்கத்து டன் இணைந்து சர்வதேச ரீதியாக இயங்கும் எவரையும் கைது செய்வதற்கு தயாராக இருப்பதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
புலிகள் உள் நாட்டில் அழிக்கப்பட்டிருப்பினும் சர்வதேச ரீதியாகத் தொடர்ந்து இயங்கி வருவதாக அரசாங்கம் அண்மையில் தெரிவித்திருந்தது.இது தொடர்பில் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக் ஸ்மன் குலுகல்ல தெரிவிக்கையில்,

புலிகளின் சர்வதேச செயற் பாடுகளைக் கட்டுப்படுத்த அவசியம் ஏற்படின் இன்ரல்போல் எனப்படும் சர்வதேச பொலி ஸாரையும் பயன்படுத்தவிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் சர்வதேச ரீதியில் புலிகள் தடை செய்யப்பட்ட இயக்கம் என்ற வகையில் அதனுடன் இணைந்து இயங்கும் எவரையும் கைது செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Saturday, July 31, 2010

இலங்கை யாழ்ப்பாணத்தில் இந்திய துணை தூதரகம்: மத்திய மந்திரிசபை முடிவு.

Saturday, July 31, 2010
பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் மூத்த மந்திரிகள் பிரணா? முகர்ஜி, ப. சிதம்பரம், ஏ.கே. அந்தோணி, எஸ்.எம். கிருஷ்ணா, சீடு. ராசா மற்றும் கேபினட் மந்திரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் இலங்கையில் தமிழர் பகுதியான யாழ்ப்பாணம் நகரில் துணை தூதரகம் அமைப்பது என்று முடிவு எடுத்தனர்.

இதன் மூலம் இலங்கை தமிழர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய முடியும் என்பதால் அங்கு துணை தூதரகம் அமைக்க முடிவு செய்தனர்.

ஐகோர்ட்டு நீதிபதிகள் ஓய்வு வயதை 62-ல் இருந்து 65 ஆக உயர்த்துவது என்றும் மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இலங்கையில் ‘ரூனா’ டின்மீன் தொழிற்சாலை.

Saturday, July 31, 2010
மாலைதீவூ ரூனா’ டின்மீன் தொழிற்சாலை யொன்றை இலங்கையில் ஆரம்பிப்பதற்கு மாலைதீவூ அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்த மாலைதீவூ மீன்பிடி மற்றும் விவசாய அமைச்சர் ஷுஹஸைன் ரசீட் ஹசன்இ மீன்பிடி அமைச்சர் ராஜித சேனாரத்னவூடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போதே இந்த இணக்கப்பாடு காணப்பட்டது.

மாலைதீவிலுள்ள மூன்று பிரதான டின் மீன் கம்பனிகளில் ஒன்றை இலங்கையில் ஆரம்பிப்பதற்கு மாலைதீவூ ஜனாதிபதி இலங்கை ஜனாதிபதியிடம் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இதன் படிஇ மாலைதீவூ அரசின் ஒத்துழைப்புடன் ரூனா டின் மீன் கம்பனி அமைக்கப்படும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறினார்.

சார்க் நாட்டு மீன்பிடி அமைச்சர்கள் பேச்சு நடத்தி வலய கடற் பரப்பில் மீன் வளத்தை முகாமைத்துவம் செய்யவூம் மீன் வளத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க உள்ளதாகவூம் அவர் குறிப்பிட்டார்.

மேலைத்தேய நாட்டு மீனவர்கள் எமது கடற் பிராந்தியத்தில் சட்ட விரோதமான முறைகளில் மீன் பிடிப்பதை தடுக்க வலய நாடுகள் இணைந்து செயற் பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இலங்கையிலுள்ள நாரா நிறுவனத்தினூடாக மாலைதீவூ மீன்பிடித்துறை சார் ஆய்வூகளில் தொடர்புபட்டுள்ளவர்களுக்கு பயிற்சி வழங்க எதிர்பார்ப்பதாக மாலைதீவூ அமைச்சர் கூறினார்

Thursday, July 29, 2010

இலங்கையின் அபிவிருத்திப் பணிகளுக்கு தொடர்ச்சியாக ஆதரவளிக்கப்படும் ‐ யசூசி அக்காசி ‐ அரசியல் சாசன திருத்தங்கள் தொடர்பில் இலங்கை, ஜப்பானுக்கு விளக்கம்.

Thursday, July 29, 2010
இலங்கையின் அபிவிருத்திப் பணிகளுக்கு தொடர்ச்சியாக ஆதரவளிக்கப்படும் என இலங்கைக்கான ஜப்பானின் விசேட பிரதிநிதி யசூசி அக்காசி தெரிவித்துள்ளார்.
ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ ஆகியோருடனான பேச்சுவார்த்தையின் போது அக்காசி இந்த உறுதிமொழியை அளித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு ஜப்பான் தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இடம்பெயர் மக்கள் நிலைமை, புனர்நிர்மாணப் பணிகள், அவசரகாலச் சட்டத்தில் தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளமை, உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு நியமனம் போன்ற விடயங்கள் குறித்து இரண்டு அமைச்சர்களும், யசூசி அக்காசிக்கு விளக்கமளித்துள்ளனர்.

யுத்தத்தின் பின்னரான இலங்கையை கட்டியெழுப்புவதற்கு பூரண ஆதரவளிக்கப்படும் எனவும், தற்போதைய சூழ்நிலை மகிழ்ச்சி அளிப்பதாகவும் அக்காசி தெரிவித்துள்ளார்.


அரசியல் சாசனத் திருத்தங்கள் தொடர்பில் இலங்கை இமைச்சர்கள், ஜப்பானிய அதிகாரிகளுக்கு விளக்கியுள்ளனர்.
எதிர்வரும் காலங்களில் நடைமுறைப்படுத்தப்பட உள்ள அரசியல் சாசனத் திருத்தங்கள் தொடர்பில் ஜப்பானிய முக்கியஸ்தர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ ஆகியோர் தலைமையிலான குழுவினர் தற்போது ஜப்பானில் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும், இடம்பெயர் மக்களை மீள் குடியேற்றும் நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இயல்பு நிலைமையை ஏற்படுத்துவதற்காக அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் ஜப்பானிய முக்கியஸ்தர்களுக்கு விளக்கியுள்ளனர்.

தமிழ்க் கட்சிகள் சந்தித்துப் பேச்சுவார்த்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு கட்சிகளின் தலைவர்கள் கையொப்பம் இட்ட கடிதம் அனுப்பி வைப்பு!

Thursday, July 29, 2010
தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் வகையில் தமிழ் கட்சிகள் இன்றுபிற்பகல் கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளன. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், கிழக்கு மாகாண முதலமைச்சருமான சி.சந்திரகாந்தன், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகத்தின் தலைவர் செ.சந்திரகாசன், ஜனநாயக மக்கள் முன்னணியின் செயலரும், மேல் மாகாணசபை உறுப்பினருமான ந.குமரகுருபரன், சிறீ தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் ப.உதயராசா, பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பொதுச்செயலர் தி.சிறீதரன், தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் பொதுச்செயலர் எம்.கே.சிவாஜிலிங்கம், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் த.சித்தார்த்தன் ஆகியோரும், இக்கட்சிகளின் முக்கியஸ்தர்கள் பலரும்; இச்சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது தமிழ்பேசும் மக்கள் எதிர்நோக்கும் துயரங்களையும், அவலங்களையும் கருத்திற்கொண்டு தமிழ்பேசும் மக்களின் அரசியல் தலைமைகள் இணைந்து செயற்பட வேண்டுமென்ற மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டியது தமிழ்க் கட்சிகள் அனைத்தினது கடமையென்றும், இந்தவகையில் நீண்டகால பிரச்சினையான இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கும், உடனடியாக எமது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் ஆக்கபூர்வமாக உதவுவதற்கும் தமிழ்பேசும் அரசியல் சக்திகள் ஒரு கருத்தொருமைப்பாட்டுக்கு வரவேண்டுமென்றும் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளும்; ஒருமித்த குரலில் தெரிவித்தனர்.
இது விடயமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடனும் கலந்துரையாடி ஒருமித்த நிலைப்பாட்டை அடைய வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டது.

இதன்படி இதுவிடயமான சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் கலந்துகொள்ளச் செய்வதற்காக, கூட்டத்தில் பங்கேற்றிருந்த கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் கையொப்பமிட்ட கடிதமொன்றையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அனுப்பி வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Sunday, July 25, 2010

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் முக்கிய விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை.

July 26, 2010
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் முக்கிய விடயங்கள் குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ தலைமையிலான உயர்மட்ட குழுவொன்று எதிர்வரும் மாதம் புதுடெல்லிக் விஜயம் செய்ய உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

இரு தரப்பு உறவுகள், சர்வதேச விவகாரம் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து இந்த விஜயத்தின் போது ஆராயப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் அமைச்சர் பெசில் ராஜபக்ஷவுடன் விஜயம் செய்ய உள்ளனர்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு எவ்வாறான தீர்வுத் திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன என்பது குறித்து இலங்கை உயர்மட்ட இராஜதந்திரிகள் இந்திய அதிகாரிகளுக்கு விளக்கம் அளிக்க உள்ளனர். இடம்பெயர் மக்கள் மீள் குடியேற்றம் ஏனைய புனர்வாழ்வு நடவடிக்கைகள் குறித்து இந்திய அரசாங்கத்திற்கு தெளிவுபடுத்தப்பட உள்ளது.

ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழு தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு தொடர்பிலும் இந்த சந்திப்பின் போது கலந்துயாடப்படவுள்ளது. ஆகஸ்ட் மாத நடுப்பகுதியளவில் இந்த விஜயம் நடைபெறலாம் என வெளிவிவகார அமைச்சு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் தற்போது ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ள அதேவேளை, பாதுகாப்புச் செயலாளர் அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ளார். பெசில் ராஜபக்ஷ தலைமையிலான இதே இராஜதந்திர குழு கடந்த வருடம் டிசம்பர் மாதத்திலும் இந்தியாவிற்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அகதி அந்தஸ்து வழங்குவது குறித்து சர்வதேசத்திற்கு இலங்கை எச்சரிக்கை.

July 26, 2010
துன்புறுத்தல்களுக்கு உள்ளாகிறோம் என்ற உணர்வு ரீதியான கோரிக்கைகளின் அடிப்படையில் புகலிடம் அல்லது அகதி அந்தஸ்து வழங்கப்படுவது சட்டவிரோத குடியேற்றத்தையே ஊக்குவிக்கும் என சர்வதேச சமூகத்தை இலங்கை அரசாங்கம் எச்சரித்துள்ளது.

வியட்நாமில் நடைபெற்ற ஆசியான் பிராந்திய அமைப்பின் 17 ஆவது மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய இலங்கையின் பிரதி வெளிவிவகார அமைச்சர் கீதாஞ்சன குணவர்தன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஆழ்கடலில் கடத்தல்களை - குறிப்பாக சிறிய படகுகளில் ஆட்களையும் பொருட்களையும் கடத்துவதை - முறியடிப்பதற்கு இலங்கை கண்காணிப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

துன்புறுத்தப்படுவதான உணர்வின் அடிப்படையில் அகதி அந்தஸ்து வழங்குவது சட்டவிரோத குடியேற்றத்தையே குடியேற்றத்தையே ஊக்குவிக்கும். எனவே பாதுகாப்பு வலையமைப்பு, பிராந்திய கடற்பரப்புகளில் காவலில் ஈடுபடுதல் ஆகியவற்றினால் சட்டவிரோத இடப்பெயர்வுகளையும் சட்டவிரோத வர்த்தகத்தையும் தடுக்க முடியாது எனவும் அவர்பிரதியமைச்சர் குணவர்தன கூறினார்.

பயங்கரவாத அமைப்புகளிடம் எல்லைகளை ஊடறுத்துச் செல்லும் ஆற்றலும் நவீன தொழில்நுட்பங்களும் இருப்பதாகக் கூறிய அவர் புலம்பெயர்ந்தவர்களின் குழுக்கள் மற்றும் அனுதாபிகளின் நிதியளிப்புச் செயற்பாடுகள் உட்பட பயங்கரவாதிகளின் நாடுகடந்த செயற்பாடுகளை தடுப்பதற்கு கூட்டு முயற்சிகள் அவசியம் எனக் கூறினார்.

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் முக்கிய விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை!

July 26, 2010
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் முக்கிய விடயங்கள் குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ தலைமையிலான உயர்மட்ட குழுவொன்று எதிர்வரும் மாதம் புதுடெல்லிக் விஜயம் செய்ய உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

இரு தரப்பு உறவுகள், சர்வதேச விவகாரம் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து இந்த விஜயத்தின் போது ஆராயப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் அமைச்சர் பெசில் ராஜபக்ஷவுடன் விஜயம் செய்ய உள்ளனர்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு எவ்வாறான தீர்வுத் திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன என்பது குறித்து இலங்கை உயர்மட்ட இராஜதந்திரிகள் இந்திய அதிகாரிகளுக்கு விளக்கம் அளிக்க உள்ளனர்.

இடம்பெயர் மக்கள் மீள் குடியேற்றம் ஏனைய புனர்வாழ்வு நடவடிக்கைகள் குறித்து இந்திய அரசாங்கத்திற்கு தெளிவுபடுத்தப்பட உள்ளது.

ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழு தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு தொடர்பிலும் இந்த சந்திப்பின் போது கலந்துயாடப்படவுள்ளது.

ஆகஸ்ட் மாத நடுப்பகுதியளவில் இந்த விஜயம் நடைபெறலாம் என வெளிவிவகார அமைச்சு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் தற்போது ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ள அதேவேளை, பாதுகாப்புச் செயலாளர் அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ளார்.

பெசில் ராஜபக்ஷ தலைமையிலான இதே இராஜதந்திர குழு கடந்த வருடம் டிசம்பர் மாதத்திலும் இந்தியாவிற்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Wednesday, July 21, 2010

தோழர் வரதராஐப்பெருமாள் அளவெட்டி கச்சாய் சாவகச்சேரி கிளாலி மக்களோடு மக்களாய்

Wednesday, July 21, 2010

இலங்கைக்கு அளித்த நிதியை கண்காணிக்க குழு.

Wednesday, July 21, 2010
இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுக்காக இந்திய அரசு அளித்த நிதி முறையாகச் செலவிடப்படுகிறதா என்பதை அறிய அதிகாரிகள் குழு அங்கு பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்தத் தகவலை ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் மழைக் கால கூட்டத் தொடர் திங்கள்கிழமை தொடங்க உள்ளது. இதையொட்டி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களுடன் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி திங்கள்கிழமை ஆலோசனை மேற்கொண்டார்.

கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம், தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் டி.ஆர்.பாலு பேசியதாவது,

இலங்கையில் இடம்பெயர்ந்து வாழும் தமிழர்களை உடனடியாக அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்தும் பணியை விரைவாக கால தாமதம் இன்றி நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கைத் தமிழர்களின் மறு குடியேற்றத்துக்காக அவர்களுக்கு வீடு கட்டித் தரவும் பல்வேறு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும் மத்திய அரசு மூலம் ரூ.500 கோடி அளித்ததுடன், 50 ஆயிரம் வீடுகள் கட்டித் தரவும் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது.

இந்திய அரசால் வழங்கப்பட்ட இந்தத் தொகை எந்த அளவுக்கு முறையாக செலவழிக்கப்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ள முடியவில்லை. இலங்கையில் மறுவாழ்வுப் பணிகளையும், பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள உண்மையான நிலைமையைக் கண்டறியவும் தூதரகம் மூலமாகவோ அல்லது சிறப்புத் தூதரை அனுப்புவதன் மூலமாகவோ நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்று முதல்வர் கருணாநிதி ஆலோசனை கூறியிருந்தார்.

இதை உடனடியாக செயல்படுத்த தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று டி.ஆர்.பாலு கூறியிருந்தார். இதற்கு பதிலளித்து பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது,

இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுக்காக வழங்கப்பட்ட நிதி முறையாக செலவிடப்படுகிறதா என்பதை அறிந்திட, அதிகாரிகள் குழு நியமிக்கப்படும். இந்தக் குழுவை அங்கு அனுப்புவதற்கு முறைப்படியான அனுமதி பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று மன்மோகன் சிங் தெரிவித்தார்.

இலங்கையில் போர் முடிந்து ஓராண்டுக்கு மேல் ஆகியும் இன்னமும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள், அடிப்படை வசதிகள் அற்ற இடைக்கால முகாம்களிலேயே வசிப்பதாக கூறப்படுகிறது. அத்துடன் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வடக்குப் பகுதியில் சிங்களர் குடியேற்றத்தை விரைவுபடுத்தவும் மகிந்த ராஜபட்ச அரசு திட்டமிட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழர் பகுதியில் மீன் பிடிக்கும் உரிமையையும் சீனாவுக்கு இலங்கை தாரை வார்த்துள்ளது. இலங்கைக்கு உதவி செய்கிறோம் என்ற போர்வையில் சீனா ஆழமாக காலூன்றி வருகிறது. இது எதிர்காலத்தில் இந்தியாவுக்கு பேராபத்தாக முடிய வாய்ப்புள்ளது.

இந்நிலையில், இந்த மாதத் தொடக்கத்தில் பிரதமர் மன்மோகன் சிங், முக்கியமான மத்திய அமைச்சர்களை சந்தித்த இலங்கை தமிழ் எம்.பி.க்கள் குழு இந்தியா தலையிட்டால்தான் தமிழர் பிரச்னைக்குத் தீர்வு காண முடியும் என வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா - இலங்கை இரு தரப்பு உறவு பலப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை.

Wednesday, July 21, 2010
அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை பலப்படுத்துவது குறித்து இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் பிளெக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஜனாதிபதி மாளிகையில் இன்று காலை இடம்பெற்ற ஜனாதிபதியுடனான ரொபர்ட் பிளெக்கின் சந்திப்பின் போதே இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதில், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் திறைசேரி செயலாளர் பி.பீ.ஜயசுந்தர ஆகியோரும் கலந்துகொண்டனர் என்று ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்தது.

இதேவேளை, இலங்கை அதிகாரிகளுக்கும் ஏனையோருக்கும் அமெரிக்காவில் பயிற்சிகளை பெறுவதற்கான வாய்ப்புக்களை அதிகரிப்பது தொடர்பிலும் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி அலுவலகம் மேலும் கூறியது.

Followers

Blog Archive