Thursday, August 12, 2010

வீழ்ச்சியும் எழுச்சியும் பெற்று எல்லாவற்றையும் மாற்றிப் போட்ட மே மாதம் (பகுதி 3)

Thursday, August 12, 2010
நாச்சிக்குடா வீழ்ந்தவுடன் புலித்தலைவன் பிரபாகரன் ஓட வெளிக்கிட்டதுதான் உண்மையான விடயம். ஆனால புலித் தலைவனின்; தாமதமான தீர்மானத்தால் தப்பி ஓடமுடியாமல் மறிக்கப்பட்டது தான் இலங்கை அரசுபடைகளின் வியூகம். மாவிலாற்றில் போர் தொடங்கப்படுவதற்கு முன்பு இலங்கை அரசபடைகள் செய்த போர் வியூகங்களில் முதன்மையானது கடல் பகுதியில் உள்ள புலிகளின் செயற்பாட்டை முற்று முழுதாக தடுத்து நிறுத்தல். இடைவிடாது தொடர்ந்து யுத்தத்தை புலிகளுக்கு எதிராக தொடர்தல் என்ற தாக்குதல் வியூகம். முந்திய அரசுகள் செய்த அடிதல் பின்பு பேசுதல் மீண்டும் அடித்தல் மீண்டும் பேசுதல் என்ற கண்ணாம் பூச்சி விளையாட்டை செய்வதில்லை என்ற தீர்மானத்துடன் தான் மாவிலாற்றில் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை ஆரம்பித்தது மகிந்த அரசு.

புலிகளால் பொதுமக்கள் முள்ளிவாய்கால்வரை வலுக்கட்டாயமாக சாய்த்துச் செல்லப்பட்டதுதான் உண்மை நிகழ்வு. இதில் சிறிய பகுதி மக்கள் விரும்பியே தவிர்க்க முடியாமல் அவர்களுடன் சென்றார்கள். தம் பிள்ளைகள் புலிகளிடம் உள்ளனர். சிலர் விருப்புடன், பலர் விருப்பின்மையுடன் செல்லவேண்டிய சூழ்நிலைப் பொறியில் இருந்தனர். யுத்தத்தின் போது கிழக்கு மக்கள் செய்த புதிசாலித்தனமாக புலிகளின் பிடியிலிருந்த பிரதேசத்திலிருந்து அரசு விடுவித்த பிரதேசங்களுக்கு இடம் மாறுதல் என்பதை மாவிலாறு தொடக்கம் வெருகல் ஊடாக மட்டக்களப்பு ஐத் தொடர்ந்து அம்பாறை வரை கடைப்பித்து வந்தனர். இவ்விடயத்தில் கிழக்கு மாகாண தமிழ் மக்கள் சமயோசித புத்திசாலித்தனமான செயற்பாட்டைக் கொண்டிருந்தனர். இதனால் தான் 50 இற்கும் குறைவான பொது மக்களின் உயிர் இழப்புடன் கிழக்கு மாகாணம் புலிகளின் கைகளில்? இருந்து இலங்கை அரசின் கைகளுக்கு முழுமையாக மாறியமைகான முக்கிய காரணியாக அமைந்தது. வேறு பல விடயங்களும் காரணமாக அமைந்திருந்தன. சிறப்பாக கருணாவின் வெளியேற்றமும் முஸ்லீம்மக்கள், தமிழ் மக்களுடன் இணைந்த இடம்பரம்பலுமாகும். இதனை வன்னி மக்கள் செய்யவில்லை, செய்யமுடியவில்லை.

கிழக்கு மாகாண தமிழ் மக்கள் பாவித்த இந்த தந்திரோபாய இடம்பெயர்வை வடக்கு மக்கள் சிறப்பாக வன்னி மக்கள் தன்னக்தே கொண்டிருக்கவில்லை. யாழ்பாணத்து மக்கள் 1995ம் ஆண்டு நடைபெற்ற தமது முதலாவது புலிகளுடனான வலிந்த இடம் பெயர்வில் கிடைத்த அனுபவத்தில் இருந்து கற்ற பாடத்தினால் இப் பொறியினுள் தடக்கி விழாமல் தப்பிக் கொண்டனர். மன்னார் மக்களில் ஒரு பகுதியினரும் இது போன்ற நிலமையில் இருந்தமையினால் தம்மை காத்துக்கொள்ள முடிந்தது. ஆனால் துணுக்காயில் ஆரம்பித்து இதனைத் தொடர்ந்த பிரதேசங்கள் ஊடாக கிளிநொச்சி வரையிலான மக்கள் இது போன்ற செயற்பாட்டை கொண்டிருக்கவில்லை. கிளிநொச்சியின் வீழ்ச்சிக்குப் பின்பு விழித்தெளிந்த மக்கள் புலிகளின் பொறிக்குள் தாம் முழுமையாக வீழ்ந்து விட்டதை உணர்ந்து சுதாகரித்து தப்பிக்கும் செயற்பாட்டை செய்யமுடியாதவாறு புலிகளாலும், இலங்கை அரசாங்கத்தின் படைகளினாலும் பின்னப்பட்ட வலைப்பின்னலுக்குள் வீழ்ந்து விட்டதுதான் பரிதாபத்திலும் பரிதாபம்.

ஏ 9 பாதைக்கு கிழக்காக புலிகளால் இழுத்துச் செல்லப்பட்ட நிலமைகள் ஏற்பட்டதும் பொதுமக்கள், புலிகள், புலி ஆதரவாளர்கள் யாபேருக்கும் தெரியும் பொறிக்கும் மாட்டிவிட்ட நிலமை ஏற்பட்டு விட்டது என்று. இந் நிலையில் புலிகள் இராணுவத்தின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் தப்பி வர முடியாது. ஆனால் பொது மக்கள் அவ்வாறு செய்ய முற்பட்டனர். ஆனால் புலிகள் பொது மக்களை அவ்வாறு செயற்பட அனுமதிக்கவில்லை என்பதே முதன்மையானது. இதற்கு எவ்வளவோ குறைந்த அளவிலேயே இராணுவத்தின் பகுதிக்கு வந்தால் தாம் எவ்வாறு இலங்கை இராணுவத்தால் கையாளப்படுவோம் என்ற பயப்பிராந்தியம் பொதுமக்களிடம் இருந்தன. புலிகளின் துப்பாக்கிகள் இக்காலப்பகுதியில் துப்பாக்கி வைத்திருந்த இராணுவத்திற்கு எதிராக செயற்பட்டதை விட துப்பாக்கி இல்லாத பொதுமக்களுக்கு எதிராக பலமாக செயற்பட்டது. மே 18 இற்கு பின்னான மக்கள் வாக்கு மூலங்கள் இவற்றை மேலும் நிறுவி நிற்கின்றன.

இதேவேளை புலிகளின் தலைமை மேற்குலக மீட்போன் தம்மை பிணை எடுப்பான் என்பதில் மட்டும் மிகவும் நம்பிக்கை வைத்திருந்த சரணாகதி நிலையில் இருந்தனர். சரணாகதி நிலையில் மட்டும் இருந்து கொண்டு புலம் பெயர் மக்ளின் துணையுடன் புதிக் குடியிருப்பு ஒரு லெனின் கிராட்டாக மாறும் என்ற வரையிலான வீரதாபங்களை பரப்புரை செய்து வந்தனர். மேற்குலகம் ஆகாயத்திலிருந்து குதித்து தம்மை மரியாதையுடன் மீட்கும் என புலம் பெயர் புலித் தலைமைகளும், புலம் பெயர் புலி ஆதரவாளர்களும் ஏற்படுத்தியே இருந்தனர். இதனை நம்பும் அளவிலேயே நிலத்தில் உள்ள புலிகள் சிறப்பாக பிரபாகரன் நம்பி இருந்தான். இதனைத் தவிர வேறு மார்க்கம் அவர்களுக்கு இருக்கவில்லை என்பதுவும் இங்கு உண்மைதான். புலிகளின் இராணுவ பலம் அவ்வாறே இருந்தது. ஆனால் புலிகளின் அரசியல் பலம் சர்வ தேசத்தில் வேறுவிதமாக இருந்தது. புலிகள் தமது ஆயுத நடவடிக்கைகளுக்கான தார்மீக ஆதரவை சர்வதேசத்தில் இழந்தே இருந்தனர். புலிகளுக்கு அரசியல் பலம் எப்போதுமே சர்வ தேச சமூகத்திடம் இருந்தது இல்லை. இதனால் சர்வ தேசம் பொது மக்களை காப்பாற்றும் காத்திரமான புத்திசாலித்தனமான செயற்பாட்டை இறுதிக்கட்டப் போரில் கொண்டிருக்கவும் இல்லை, செயற்படுத்த முயலவும் இல்லை என்பதே இறுதித் தினங்களில் பொது மக்களின் பரிதாப நிலைகளுக்கு காரணமாக இருந்தன.

வெளிநாடுகளைப் பொறுத்தவரையில் புலிகள் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதைவிட இல்லாமல் செய்யப்படவேண்டும் என்பதை இந்தியா மட்டும் அல்ல சோசலிச நாடுகளும் ஏன் மேற்குலக நாடுகளும் விரும்பின. ஆனால் இலங்கை அரசை தமது செ(h)ல்வாக்கிற்குள் உள்ள நாடாக வைத்திருப்பதற்காக பொதுமக்கள் பாதிப்பு, போர்நிறுத்தம் போன்றவற்றைத் தூக்கிப்பிடித்தன மேற்குலக நாடுகள். இன்றும் தூக்கிப் பிடிக்கின்றன. மற்றபடி யாரும் புலிகளை காப்பாற்றத் தயாராக இருக்கவில்லை. புலிகள் வேண்டப்படாத சக்தி, நம்ப முடியாதவர்கள், பயங்கரவாதிகள் என்பதில் எல்லேர்ருக்கும் ஒருமித்த கருத்தே இருந்தது. அப்படியொரு அனுபவத்தை புலிகள் தமது செயற்பாடுகளினூடாக சிறப்பாக ரணில் பிரபா சமாதான ஒப்பந்த காலத்தில் தோலுருத்திக் காட்டிவிட்டனர். அப்படியொரு அரசியல் சாணக்கியம் பிரபாகரனுக்கும் அவர் குழுவிற்கும்.

கிட்லர்; பாவித்த தேசியம் என்ற அரசியல் தந்திரோபாயத்தைத் தவிர வேறு எந்த அரசியல் தந்திரோபாயத்தையும் புலிகள் கொண்டிருக்கவில்லை மக்களில் ஒரு பகுதியினர் வெறித்தனமாக புலிகளை அன்றும் ஏன் இன்றும் நம்புவதற்கு இது ஏதுவாக இருந்திருக்கின்றது, இன்றும் இருக்கின்றது. இதுவே கிட்லருக்கு ஏற்பட்ட எழுசிக்கும் தோல்விக்கும் காரணமாக அமைந்ததைப் போல் ஒரு படிமேல் போய் புலிகளுக்கும் எற்பட்டிருக்கின்றது. இனியும் ஏற்படப் போகின்றது.

1980 களின் நடுப்பகுதியில் புலிகள் தன்னோடு கை கோர்த்து நின்றவர்களின் ஒவ்வொரு கரமாக அறுக்க முற்பட்டபோதே பொது மக்கள் விழித்திருக்க வேண்டும். சோடா உடைப்பதற்கு பதிலாக விழித்திருந்க் வேண்டும் அன்று விழித்திரந்தால் முள்ளிவாய்காலில் நடைபெற்ற மனிதப் பேரலவலங்ளை தவிர்திருக்க முடியும். நாம் இங்கு கூறுவது புலிகளுக்கு நடைபெற இருந்த பேரவலத்தை அல்ல. பொது மக்களுக்கு ஏற்பட்ட பேரவலத்தை. புலிகளுக்க எற்பட்ட பேரவலம் தவிர்கப்படமுடியாததும், தவிர்கப்பட வேண்டியதும் அல்ல.

ஒடுக்கு முறைக்குள்ளாகும் எந்த ஒரு இனமும், இனக் குழுமமும் அது தேசிய இனமாக இருந்தால் என்ன இல்லாவிட்டால் தனது உரிமைகளை நிலைநாட்ட, நிறுவிக் கொள்ள போராடும் உரிமை உண்டு. அவை மறுக்கப்படும் போது அதற்கான தீர்வை முன்வைத்து போராடுவது இயல்பானது, தார்மீகமானதும் ஆகும். அந்த வகையில் இலங்கை தமிழ் மக்களின் போராட்டமும் 50 இற்கு 50, சமஷ்டி, தனிநாடு, ஆயுதப் ஆயுதப் போராட்டம், மாகாணசபை என்ற பரிமாணத்திற்கூடதாக பயணித்ததற்கு நியாயங்கள் நிறையவே உண்டு.
(தொடரும்...)

No comments:

Post a Comment

Followers

Blog Archive