Sunday, August 8, 2010மீள் குடியேற்றப்பட்ட மக்கள் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வடக்கில் மீள் குடியேற்றப்பட்ட மக்கள் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேவையான நீர் வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை என மீள் குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மீள் குடியேற்றப்பட்ட மக்களில் 90 வீதமானவர்கள் இந்தப் பிரச்சினையை எதிர்நோக்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆண்டின் பெரும் பகுதியில் வரட்சியான காலநிலை காணப்படுவதனால் நீர்ப்பாசன வசதிகள் மிகவும் இன்றியமையாதது.
எனினும் மீள் குடியேற்ற மக்கள் தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்த போதியளவு வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை எனக் குறிப்பிடப்படுகிறது. விவசாய நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு தேவையான கிணறு வசதிகளை விரைவில் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment