Wednesday, March 30, 2011

நான் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளேன். அந்தக் காட்சிகள் நம்ப முடியாதனவையாக இருந்தன - இயன் பொத்தம்!

Wednesday, March 30, 2011.

யாழ் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக வசந்தி அரசரத்தினம் நியமிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான நியமனக் கடிதம் இன்று யாழ் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தருக்கான தேர்தல் நடைபெற்றிருந்த பொழுதும் அடுத்த துணைவேந்தரை தெரிவு செய்யாததினால் தொடர்ந்தும் துணைவேந்தராக பேராசிரியர் என்.சண்முகலங்கன் பணியாற்றினார். துணைவேந்தர் தெரிவில் தொடர்ச்சியாக இழுபறிநிலை நடந்தது. இதனிடையில் தன்னை துணைவேந்தராக ஜனாதிபதி நியமித்தாக போராசியர் இரட்ணஜீவன்ஹீல் தெரிவித்திருந்தார். அந்தச் செய்தில் உண்மையில்லை என்றும் தொடர்ந்தும் என். சண்முகலிங்கனே துணைவேந்தர் என்றும் உத்தியோக பூர்வ தகவல்கள் தெரிவித்தன. இதனிடையில் இன்றைய தினம் (29.03.2011) மருத்துவப் பேராசிரியர் செல்வி வசந்தி அரசரத்தினம் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த தகவலை பல்கலைக்கழக வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. அவர் நாளை முதல் கடமை ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேராசிரியர் வசந்தி அரசரத்தினத்தை துணைவேந்தராக நியமிக்க வேண்டும் என தொடர்ச்சியாக அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தா ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்து வந்தார். அவரது கோரிக்கைக்கு ஏற்பவே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பேராசிரியர் இரட்ணஜீவன்ஹீலை துணைவேந்தராக நியமிக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் ஜனாதிபதிக்கு நெருக்கமான அங்கஜன் இராமநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் ரங்கா போன்றவர்களும் கோரிக்கை விடுத்து வந்தார்கள் என ஜனாதிபதி அலுவலகம் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆனைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த மூன்று வருடங்களாக யாழ் பல்கலைக்கழக சமூகவியல் பேராசிரியர் என். சண்முகலிங்கன் யாழ் பல்கலைக்கழகத்தின் ஏழாவது துணைவேந்தராக பணியாற்றியுள்ளார். இந்நிலையில் யாழ் பல்கலைக்கழக எட்டாவது துணைவேந்தராக வசந்தி அரசரத்தினம் நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Followers

Blog Archive